Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள் !

Posted: 11 Mar 2017 11:27 AM PST

மகாலட்சுமி இருக்கும் 26 இடங்கள் ! மகாலட்சுமி இருக்கும் இடங்களை அறிந்து அவற்றை வழிபட்டால் திருவருளைப் பெறலாம். 1. திருமால் மார்பு திருமகள் திருமாலின் மார்பில் உறைகிறாள். ஆதலின் திருவுறைமார்பன் -ஸ்ரீநிவாசன் என்று திருமாலுக்குப் பெயர். திருமகளின் அருளைப் பெறத் திருமாலையும் வழிபட வேண்டும். திருமாலை விடுத்துத் திருமகளை மட்டும் வணங்கக் கூடாது. திருமகளைப் புருஷாகாரம் என்பர். அடியாருக்கு அருள்புரியும்படித் திருமாலைத் தூண்டுபவள் திருமகளே. 2. பசுவின் பின்புறம் பசு தேவராலும், மூவராலும், ...

தோசை தோன்றிய விதம் !

Posted: 11 Mar 2017 11:24 AM PST

தோசை தோன்றிய விதம்: *ஓர் ஆன்மிக ஜோதிட பார்வையில் இன்று நாம் எடுத்து இருக்கும் விஷயம் தோசை. நாம் அன்றாட உண்ணும் தோசையும் அதன் பின்னால் இருக்கும் ஆன்மிகமும், ஜோதிடமும், அக்னி -சூரியன் அரிசி-சந்திரன் உளுந்து -ராகு-கேது வெந்தயம் -புதன் தோசை கல் (இரும்பு)-சனி தோசையின் நிறம்-செவ்வாய் அதை உண்பவர்கள் குரு(ஆண்) ,சுக்கிரன்(பெண்) இதன் உருவம் (Galaxy) பிரபஞ்சமே தோசையை Clock vice சுட்டால் தான் வரும், பிரபஞ்சம் சுற்றுவதும் அப்படித்தானே இந்த தோசையை ஒரு ஜோதிட பரிகாரமாக இருந்திருக்க ...

பழமொழிகளும் ரீமிக்ஸ் புதுமொழிகளும் !

Posted: 11 Mar 2017 11:21 AM PST

பழைய பாட்டை ரீமிக்ஸ் பண்றாங்க,
பழைய படத்த ரீமேக் பண்றாங்க,
அப்புறம் எதுக்கு பழமொழிய மட்டும் அப்படியே விட்டு வைக்கணும்?

அதான் நாங்களும் பழமொழிகளை புதுமொழிகளா மாத்திட்டோம்.
அதையும் இன்னைக்கு கரன்ட் டிரெண்டான செல்போனை வச்சே ரீமிக்ஸ் பண்ணிட்டோம்.

ஏன்னா அப்போ பல் போனாத்தான் சொல் போச்சு,
இன்னைக்கு 'cell' போனாலே சொல் போச்சு'.

பழசு: காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!!

புதுசு: பேலன்ஸ் இருக்கும்போதே பேசிக்கொள்..

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

Posted: 11 Mar 2017 11:19 AM PST

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது? பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான். 'கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா? கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?' பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன. அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த ...

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

Posted: 11 Mar 2017 11:17 AM PST

மனித உடம்பின் 99 இரகசியங்கள் ! 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது… 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்… 3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம் கருவில் சிசு வளரும் ...

மீத்தேன்.....பற்றிய பதிவுகள் !

Posted: 11 Mar 2017 11:11 AM PST

மீத்தேன் .பற்றிய பதிவுகள் ... சாதக பாதகங்களை விளக்கும் பதிவுகளை இந்த திரி இல் பதிவிடுங்கள் நண்பர்களே!...........இது ஒரு விழிப்புணர்வு திரி யாக இருக்கட்டும் அன்புடன், கிருஷ்ணாம்மா தமிழகத்தை யாராலும் காப்பாற்ற  இயலாது..... அதிர்ச்சி அடையாமல் படிக்கவும் இது ஒரு உண்மை ஸ்டேட்டஸ்... மீத்தேன் என்னும் எமன் இன்று காலை தஞ்சையில் காவேரி பாசன பகுதிகளை பாலைவனமாய் மாற்ற கூடிய மீத்தேன் எடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கத்திற்கு ...

மகளிர் தின நல்வாழ்த்துகள்

Posted: 11 Mar 2017 11:09 AM PST


-

-

பேடிஎம், ஜியோ நிறுவனங்கள் மன்னிப்பு கோரின.

Posted: 11 Mar 2017 10:53 AM PST

- புதுடில்லி: பிரதமர் மோடியின் புகைப்படத்தை தங்களது விளம்பரங்களில் பயன்படுத்தியதற்கு பேடிஎம், ஜியோ நிறுவனங்கள் மன்னிப்பு கோரின. - விளம்பரம்: -- ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‛ஜியோ' நிறுவனமும், பேடிஎம் நிறுவனமும் தங்களுடைய நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு பிரதமர் மோடியின் படத்தை பயன்படுத்தினர். இதற்கு நாடு முழுவதும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. - நோட்டீஸ்: - பார்லி.,யிலும் இந்த பிரச்சனையை ஏதிர்கட்சிகள் எழுப்பின. இதனைத் தொடர்ந்து பேடிஎம் மற்றும் ஜியோ நிறுவனங்களுக்கு விளம்பரத்தில் ...

காமம் எதனால் உண்டாகிறது?

Posted: 11 Mar 2017 10:35 AM PST

ஒருவன் வண்டியை திறந்த வெளியில் அல்லது தனது வீட்டில் எப்படியெல்லாமோ ஓட்டி மகிழ்கிறான். விபத்து ஏற்பட்டாலும் அவனுடன் முடிகிறது. அதுவே வீதிக்கு வந்தால் எத்தனை அப்பாவி உயிர்கள் பாதிக்கப்படும். அதே போல் காதல் காமம் ஒரு உயிரினத்தின் உன்னதமான உணர்வாகும். காமம் அவனளவில்-அவளளவில் இருந்து விட்டால் அது இன்பம்,உன்னதமான உணர்வுமாகும். காமம் பற்றி வள்ளுவன் சொல்கிறான்......... உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். அது ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 11 Mar 2017 10:20 AM PST

என் முகவரி

muthusimpu@gmail.com

முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப்' மூலம் ‛தலாக்' அனுப்பிய கணவர்கள்

Posted: 11 Mar 2017 10:06 AM PST

ஐதராபாத்: ஐதராபாத்தை சேர்ந்த 2 முஸ்லீம் பெண்களுக்கு வெளிநாட்டில் வாழும் கணவர்கள் வாட்ஸ் அப் -பில் ‛தலாக்' அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐதாரபாத்தை சேர்ந்த அப்துல் ஹபீஸின் மகன்கள் செய்யது பயாசுதீன், மற்றும் உஸ்மான் குரைசி ஆகியோர் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி மனைவிகள் பாத்திமா மற்றும் பக்ரைன் நூர் ஆகியோர் தங்கள் குழந்தைகளோடு இந்தியாவில் அப்துல் ஹபீஸின் குடும்பத்துடன் இருக்கின்றனர். வாட்ஸ் அப்-பில் ‛தலாக்': இந்நிலையில் இவர்கள் ...

வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த

Posted: 11 Mar 2017 08:51 AM PST

 கணிணியில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்.இணையதள முகவரிகள்.பைல்களை டெக்ஸ்டாப்பில் வைக்காமல் ஒரே இடத்தில் வைக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.6 எம்.பி.கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் உள்ள Add item கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் இணைய முகவரியையோ அப்ளிகேஷனையோ தேர்வு செய்யவும். நீங்கள் பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையிலும் ...

கூவத்தூரில் ஜாமர் கருதி பொருத்தப்பட்ட விவகாரம் - உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

Posted: 11 Mar 2017 08:32 AM PST

அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்படிருந்த கூவத்தூர் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம், தமிழக உயர் அரசு அதிகாரிகளுக்கு உதறலை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியதை அடுத்து, அதிமுக எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்து செல்லப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலை, கூவத்தூரில் அமைந்துள்ள கோல்டன் பே ஹபுஸ் ரிசார்ட்டில் கடந்த மாதம் 8ம் தேதி தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. ...

#ஆர்வமாய்_கற்கும்_ஆவல்_வேண்டும்.

Posted: 11 Mar 2017 06:28 AM PST

மன்னர் திருதராஷ்டிரன் அரண்மனையில் தனது சிம்மாசனத்தில் வீற்றிருந்தார் ! ''துரோணாச்சார்யரே…! எனக்கு ஒரு சந்தேகம்!'' என்று ஆரம்பித்தார் ! ''கேளுங்கள் மன்னா!'' ''சீடர்களிடம் பாரபட்சம் காட்டாமல், வித்தை கற்பிப்பதுதானே நல்ல ஆசானின் இலக்கணம்?'' _ திருதராஷ்டிரன் கேட்டார். ''ஆம், மன்னா!'' _ பதிலளித்தார் துரோணர். ''தாங்கள் நல்லதோர் ஆசானாகத் திகழ வேண்டும் என்பதே எனது விருப்பம்!'' ''மன்னா… என்ன கூறுகிறீர்கள்?'' _ திடுக்கிட்டார் துரோணர். ''துரோணரே… ...

அறுவடை திருநாள் அஞ்சலி.

Posted: 11 Mar 2017 06:06 AM PST

கருகிய பயிர் கண்டு உடல் கருக்கிய உழவர்களுக்கு அஞ்சலி.

தொடத் தொடத் தொல்காப்பியம்(453)

Posted: 11 Mar 2017 06:01 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும்

Posted: 11 Mar 2017 05:27 AM PST

நகைச்சுவை கவிதை - +2 பையனும் பிதற்றும் அப்பனும் நாலு மணிக்கு எழுப்பச் சொல்வான் நானும் பாடம் படிக்கணும்பான் நாலு மணிக்கு எழுப்பிவிட்டா நடு ஹால்ல தூங்கிவிழுவான் அஞ்சு மணிக்கு எழுப்பச் சொல்வான் அனைத்துப் பாடமும் படிக்கணும்பான் அஞ்சு மணிக்கு எழுப்பிவிட்டா அப்புறமா எழுப்பு என்பான் ஆறு மணிக்கு எழுப்பச் சொல்வான் அல்ஜீப்ரா போடணும் என்பான் ஆறு மணிக்கு எழுப்பி விட்டா அப்பக் கூட படிக்க மாட்டான் மாலை நேரம் படிக்கச் சொல்லி மரியாதையாய் சொன்னாக் கூட மணிக்கணக்கா புத்தகத்தை ...

அரசியல்

Posted: 11 Mar 2017 05:24 AM PST

சாதி,மதம்,பணம் இதை அனைத்தும் மறந்து அணைத்து மக்களும் சமம்
என்ற எண்ணம் அரசியலாட்சி ஆளுநர்களின் மனதில் என்று தோன்றுகிறதோ
அன்றுதான் அரசியல் முழுமை பெரும்.......
அரசியல் ஆளுநர்கள் தவறு செய்தால் எந்த ஒரு வேண்டுகோளும் இன்றி
அவர்களை தண்டிக்கும் உரிமை மக்களிடையே வர வேண்டும்.... இந்தியன்

மெக்காவில் ஒரு யாசகர்

Posted: 11 Mar 2017 05:22 AM PST

மெக்காவுக்குச் செல்லும் சாலையில் ஒரு பார்வையற்ற யாசகர், யாத்ரீகர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த இடத்திற்கு வந்த முஸல்மான் ஒருவர், குரானின் வழிகாட்டுதல்களின் படி தாராளமாக தர்மம் செய்கிறார்களா என்று அந்த யாசகரிடம் கேட்டார். அந்த யாசகர் தனது தட்டைக் காண்பித்தார். ஒரு நாணயம் கூட தட்டில் விழுந்திருக்கவில்லை. அந்தக் கருணையுள்ள முஸல்மான், அந்தப் பார்வையற்ற யாசகரின் அனுமதியுடன் அவர் கழுத்தில் ஒரு அட்டையை எழுதித் தொங்கவிட்டு தன் வழியில் போனார். நேரம் கடந்தது. ...

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலர்ந்த தாமரை!

Posted: 10 Mar 2017 11:52 PM PST

டேராடூன்: மலைவாசஸ்தலங்கள் நிறைந்த மாநிலமான உத்தரகாண்ட்டில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றியுள்ளது.   நாட்டின் வடமேற்கு மாநிலமான உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் தலைமயிலான ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக ஹரீஷ் ராவத் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு இறுதியில் அங்கு எம்.எல்.ஏக்கள் சிலர் ஆட்சிக்கு எதிர்க்குரல் எழுப்பியதால் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது. பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது. இந்நிலையில் ...

உ.பி.,யில் சாதித்தது பா.ஜ.,

Posted: 10 Mar 2017 11:22 PM PST

-- லக்னோ: உ.பி.,க்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலையில், பா.ஜ., 307 தொகுதிகளிலும், சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 71 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 17 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர் - தனிப்பெரும்பான்மை பலத்தடன் பா.ஜ., ஆட்சியமைக்கும் சூழ்நிலை உள்ளது. இதனையறிந்த அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் ...

மணிப்பூர் முதல்வரிடம் இரோம் ஷர்மிளா தோல்வி

Posted: 10 Mar 2017 11:19 PM PST

- மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இரோம் ஷர்மிளா தோல்வி அடைந்தார். தவ்பால் சட்டமன்றத் தொகுதியில் இரோம் ஷர்மிளா முதல்வர் ஓக்ராம் இபோபியிடம் தோல்வியடைந்தார். இபோபி 15,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்றார். இரோம் ஷர்மிளாவுக்கு நூற்றுக்கணக்கான வாக்குகளே கிடைத்தன. பாஜக வேட்பாளர் வசந்த சிங் இரண்டாவது இடம் பிடித்தார். முதல்வராவேன் என்று கூறிய போராளி இரோம் ஷர்மிளாவுக்கு இது மிகப்பெரிய பின்னடைவே. - --------------------------------------- தி ...

பஞ்சாபில் காங்கிரஸ் முன்னிலை

Posted: 10 Mar 2017 10:35 PM PST

சண்டிகர்:
பஞ்சாபில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது.
இங்கு ஓட்டு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு காங்கிரஸ் 63 தொகுதிகளிலும்,
ஆம் ஆத்மி கட்சி 26 தொகுதியிலும்,
அகாலிதளம் 28 தொகுதியிலும், முன்னிலையில்
உள்ளன.
-
--------------------------------------

எல்லாரும் அமைதியாக இருங்கள்

Posted: 10 Mar 2017 09:46 PM PST

ஒரு பிராடஸ்டண்ட் பாதிரியார், வீட்டிலுள்ள குழந்தைகள் போடும் சத்தத்தால் தினசரி பிரார்த்தனைகள் கெடுகிறதென்று நினைத்தார். ஒரு நாள் இரவு, அவரது பொறுமை எல்லைமீறிப் போக, "எல்லாரும் அமைதியாக இருங்கள்" என்று ஆவேசத்தோடு கூறினார். குழந்தைகளும் அவர் மனைவியும் அவரது ஆணையால் நடுங்கிப் போனார்கள். அடுத்த நாள் பாதிரியார் வீட்டுக்குள் நுழையும் போதே வீடு அமைதியாக இருந்தது. அவரும் ஆனந்தமாகத் தனது பிரார்த்தனையைத் தொடங்கினார். ஆனால் தனது பிரார்த்தனைக்குக் கடவுள் செவிகொடுக்கவில்லை என்று தோன்றியது. ...

குழந்தையின் வழியைப் பின்பற்றினால் போதும்...!!

Posted: 10 Mar 2017 09:45 PM PST

யூத மரபு என்ன சொல்கிறது? டோ பீர் டி மெஜரிச்சிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணம் செய்பவர்களை ஒருவர் பின்தொடர வேண்டுமா? கடவுளின் விருப்பத்தைத் தெரிந்துகொள்வதற்கான தேடலை நிகழ்த்தும் அறிஞர்களைப் பின்பற்ற வேண்டுமா?" குழந்தையின் வழியைப் பின்பற்றி னால் போதுமென்று பதில் கிடைத்தது. "குழந்தைக்கு என்ன தெரியும். அது எதார்த்தம் என்பதையே புரிந்துகொள்ளாத நிலையில் அல்லவா இருக்கிறது?" என்று சந்தேகம் எழுப்பப்பட்டது. "நீங்கள் சொல்வது தவறு. குழந்தையைப் ...

கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு

Posted: 10 Mar 2017 04:46 PM PST

வாஷிங்டன் : இஸ்ரோ கடந்த 2008ம் ஆண்டு அனுப்பிய சந்திராயன்-1 விண்கலம் நிலவை இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நிலவை பற்றிய ஆராய்ச்சிக்காக சந்திராயன்-1 என்ற விண்கலத்தை இஸ்ரோ கடந்த 2008ம் ஆண்டு அக்டோர் 22ம் தேதி அனுப்பியது. இது நிலவை படம் பிடித்து பல போட்டோக்களை அனுப்பியது. கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி முதல் இதன் தகவல் தொடர்பு துண்டானது. இதனால் இது தொலைந்து போனதாக கருதப்பட்டது. ஈர்ப்பு விசையால் நிலவில் விழுந்து உடைந்திருக்கலாம் ...

அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு

Posted: 10 Mar 2017 04:44 PM PST

அடுத்த ஆண்டு முதல் அமல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் தொழிற்கல்வி கட்டாய பாடம்: 6 பாடமாக உயர்வு 2017-03-11@ 01:24:24 புதுடெல்லி : சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதும் 10ம் வகுப்பு மாணவர்கள் அடுத்த ஆண்டு முதல் 6 பாடங்களில் எழுத வேண்டும். தொழிற்கல்வி பாடம் கட்டாயமாகிறது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தற்போது 2 மொழிப்பாடங்கள், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் என 5 பாடங்களை படித்து வருகின்றனர். இது தவிர மாணவர்கள் தொழிற்கல்வி பாடத்தையும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™