Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


நடிகை பாவனா செய்திக்கு ஒரு விளக்கம்

Posted: 10 Mar 2017 04:15 AM PST

நடிகை பாவனாவுக்கு நடந்த நிச்சயதார்த்தம் குறித்து, தினமலர் ஈரோடு பதிப்பில் சர்ச்சைக்குரிய தலைப்பில், இன்று (மார்ச் 10) செய்தி வெளியானது. இது குறித்து, வாசகர்களும் தமிழக மக்களும், கடுமையான சொற்களால் தங்கள் எதிர்ப்பையும் விமர்சனத்தையும், வருத்தத்தையும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தெரிவித்து வருகின்றனர்.

தினமலர் ஈரோடு பதிப்பு, டாக்டர் ஆர்.சத்தியமூர்த்தியை ஆசிரியர், வெளியீட்டாளர் மற்றும் பிரின்டராகக் கொண்டு வெளி வருகிறது.அந்த பதிப்பை முழுமையாக நிர்வகிப்பதும் அவரே.அந்த பதிப்பிற்கும் தினமலர் நாளிதழின் சென்னை, மதுரை, கோவை,புதுச்சேரி ...

ஆர்.கே.நகரில் களமிறங்குகிறது பன்னீர் அணி : வேட்பாளர் தேர்வு குறித்து தீவிர ஆலோசனை

Posted: 10 Mar 2017 08:46 AM PST

சசிகலா குடும்பத்தினரை, அ.தி.மு.க.,வை விட்டு ஒதுக்குவதற்கு கிடைத்த வாய்ப்பாக, ஆர்.கே.நகர் தேர்தலை பயன்படுத்த, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்து உள்ளனர்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், அ.தி.மு.க., வில் இருப்பதை, அக்கட்சி யின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்பவில்லை. எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் போன்றோர் தான், தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்வதற் காக, சசி தரப்பை ஆதரிக்கின்றனர். அவர்களும், இரட்லை இலை சின்னம் பன்னீர்செல்வம் அணியினருக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட் டால், அந்த பக்கம் தாவ தயார் நிலையில் உள்ளனர். ஜெ., ...

பார்லி.,யில் பன்னீர் அணி எம்.பி.,க்கள்... அசத்தல்!: தடுக்க முடியாமல் சசி அணியினர் தவிப்பு

Posted: 10 Mar 2017 08:48 AM PST

ஒத்திவைப்பு தீர்மானம், கோஷங்கள், வெளிநடப்பு, போஸ்டர்கள் என, ஓ.பி.எஸ்., அணி, எம்.பி.,க்கள் ஏற்படுத்திய கடும் சூறாவளியில், சசிகலா அணி சிக்கியதால், பார்லிமென்டில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விவகாரத்தை, ஓ.பி.எஸ்., அணி, எம்.பி.,க்கள் பார்லிமென்டில் கிளப்ப திட்ட மிட்டு, காலையில், சபாநாயகரிடம் ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீசை அளித்தனர். துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு விஷயம் தெரிய வர, உடனடியாக பார்லிமென்ட், அ.தி.மு.க., தலைவர் வேணுகோபால் வரவழைக்கப்படவே நிலைமை பரபரப்பானது.
சமாதான பேச்சு
தங்களது திட்டம் ...

கடனை செலுத்த தயார்! : விஜய் மல்லையா அதிரடி

Posted: 10 Mar 2017 09:01 AM PST

புதுடில்லி: 'கடனை திரும்ப செலுத்துவது குறித்து, வங்கிகளுடன் பேச்சு நடத்த தயார். சலுகை அடிப்படையில் கடன் தொகை குறைக்கப்பட்டால், ஒரே தவணையில் அதை செலுத்தவும் தயார்' என, பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளான்.

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, 'கிங்பிஷர்' நிறுவன அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல், பிரிட்டன் சென்று தலைமறை வானான். இதையடுத்து, அமலாக்கத் துறை,
சி.பி.ஐ.,அதிகாரிகள் தரப்பில், அவன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது; இந்திய அரசின் சார்பில், ...

நீதிபதி கர்ணனுக்கு எதிராக கைது வாரன்ட்

Posted: 10 Mar 2017 09:11 AM PST

புதுடில்லி:கோர்ட் அவமதிப்பு வழக்கில், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதியாக பணியாற் றும் நீதிபதி கர்ணனை, வரும், 31ம் தேதி நேரில் ஆஜர்படுத்த, கைது வாரன்டை பிறப்பித்து, சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி கர்ணன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதற்கிடையே, கோல்கட்டா ஐகோர்ட்டுக்கு பணியிடமாற்றம் செய்து கடந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் உத்தரவு பிறப்பித்தது. அதை ஏற்க மறுத்த அவர், அந்த உத்தரவுக்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில், சுயமாக வழக்கு பதிவு செய்தார்.இந்த ...

ரயில் கட்டணத்தை உயர்த்த சி.ஏ.ஜி., பரிந்துரை

Posted: 10 Mar 2017 09:14 AM PST

புதுடில்லி:செயல்பாட்டு செலவினங்களை ஈடு செய்யும் வகையில், ரயில் கட்டணத்தை படிப்படியாக உயர்த்தலாம் என, ரயில்வே அமைச்சகத்துக்கு, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இது தொடர்பாக, பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள, சி.ஏ.ஜி.,யின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ரயில்வேயின் செயல்பாட்டு செலவை ஈடுகட்டும் வகையில், பயணிகள் ரயில் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை படிப்படியாக உயர்த்த லாம். அதுபோலவே, புறநகர் ரயில் சேவைக்கான கட்டணங்களிலும் மாற்றம் செய்யவேண்டும்.மேலும், கட்டண சலுகை ...

தமிழகத்தில் 35 ஆயிரம் போலி டாக்டர்கள்; மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை

Posted: 10 Mar 2017 09:43 AM PST

சென்னை:'தமிழகத்தில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி டாக்டர்கள் உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்தினால் தான், பல்வேறு நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும்' என, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் எச்சரித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் செயற்குழு உறுப்பினர்கள் பிரகாசம், பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது: தமிழகம்,புதுச்சேரியில் 1.18 லட்சம் டாக்டர்கள், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ளனர். முறையாக மருத்துவம் படிக்காதோர், ஆங்காங்கே பெட்டிக்கடை போல, கிளினிக் துவக்கி உள்ளனர். அந்த வகையில், தமிழகத்தில், 35 ...

சட்டசபை ஓட்டெடுப்பில் விதி மீறல்கள்: உச்ச நீதிமன்றத்தில் பன்னீர் அணி மனு

Posted: 10 Mar 2017 09:46 AM PST

'தமிழக சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில், 26 விதி மீறல்கள் நடந்துள்ளன. எனவே, நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்து, ரகசிய ஓட்டெடுப்பிற்கு உத்தரவிட வேண்டும்' என வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில், பன்னீர்செல்வம் அணியினர் மனு செய்து உள்ளனர்.

முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றதும், பிப்., 18ல், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரினார். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 122 பேர் வேறு பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக, கூவத்துார் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். எனவே, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, பன்னீர் அணி மற்றும் எதிர்க்கட்சிகள் ...

ரகசிய ஓட்டெடுப்புக்கு விதிகளில் இடமில்லை; ஸ்டாலின் வழக்கில் சட்டசபை செயலர் பதில்

Posted: 10 Mar 2017 09:51 AM PST

சென்னை:'நம்பிக்கை தீர்மானத்தின் மீது, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த, சட்டசபை விதிகளில் இடமில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டசபை செயலர் பதிலளித்து உள்ளார். சபை நிகழ்வுகள் தொடர்பான, 'வீடியோ' பதிவை, ஸ்டாலினுக்கு அளிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசின் மீது, சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு, பிப்., ௧௮ல் நடந்தது. ரகசிய ஓட்டெடுப்பு நடத்தக்கோரி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ரகளையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து, அவர்களை வெளியேற்றி விட்டு, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக, 122; ...

உ.பி., உட்பட 5 மாநில தேர்தலில் ஆட்சியை பிடிக்கப் போவது... யாா்?

Posted: 10 Mar 2017 09:54 AM PST

புதுடில்லி:நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும், உ.பி., உட்பட, ஐந்து மாநில சட்டசபை தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின்றன. மூன்றடுக்கு பாதுகாப்புடன், ஓட்டு எண்ணிக்கை, காலையில் துவங்குகிறது; மதியம், ௧௨:௦௦ மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகி விடும் என்பதால், ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும்.

தேர்தல் தொடர்பாக வெளியான கருத்துக் கணிப்புகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக இருப்ப தால், அந்தக் கட்சியினர் மகிழ்ச்சியாகவும், மற்ற கட்சியினர் எல்லாம், திக்... திக்... மனநிலையிலும் உள்ளனர்.உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, ...

ரொக்கமில்லா பரிவர்த்தனை; தேர்தல் ஆணையம் பரிந்துரை

Posted: 10 Mar 2017 10:57 AM PST

புதுடில்லி: ''தேர்தலில் கறுப்பு பணம் புழங்குவதை தடுக்கும் பொருட்டு, ரொக்கமில்லா பண பரிவர்த்தனையை நடைமுறைபடுத்த வேண்டும்,'' என, தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி கூறினார்.
நன்கொடை அளவு குறைப்பு:
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: தேர்தலில் முறைகேடு நடப்பதற்கு, கறுப்பு பணம் புழங்குவது முக்கிய காரணம். தேர்தலில் கறுப்பு பண புழக்கத்தை ஒழிக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தனிநபர்களிடம் இருந்து, அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை அளவு, 20 ஆயிரத்தில் இருந்து, 2,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ...

அ.தி.மு.க.,வில் பிளவு இல்லை; தம்பிதுரை

Posted: 10 Mar 2017 11:48 AM PST

சென்னை: ‛அ.தி.மு.க.,வில் பிளவு எதுவும் இல்லை' என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

பிளவு இல்லை:
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: அ.தி.மு.க.,வினரிடையே பிளவு இருப்பதாக கூறுவதில் உண்மை இல்லை. அ.தி.மு.க.,வில் எந்த பிளவும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். சிலர் பிரித்தாலும் ஓட்டுக்கள் சிதறாது என டி.டி.வி.,தினகரன் தெரிவித்தது உண்மை. கட்சியின் கருத்தையே தினகரன் வெளிப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் ...

காணாமல் போன 'சந்திராயன்' விண்கலத்தை கண்டுபிடித்தது நாசா

Posted: 10 Mar 2017 01:12 PM PST

வாஷிங்டன்: நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி, காணாமல் போனதாக கருதப்படும், 'சந்திராயன்' விண்கலத்தை, அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்துள்ளது.

சந்திராயன்:
நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'இஸ்ரோ' சார்பில், 2008, அக்டோபர், 22ல் அனுப்பப்பட்டது, 'சந்திராயன்' விண்கலம். கடந்த, 2009, ஆகஸ்ட், 29 முதல், இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையுடனான அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, காணாமல் போன, 'சந்திராயன்' விண்கலத்தை தேடும் பணி நடந்தது; ஆனால் பலனளிக்கவில்லை.
தேடும் பணி:
இந்த ...

ஆர்.கே.நகரில் போட்டியிடுவேன்: தினகரன் சூசகத் தகவல்

Posted: 10 Mar 2017 02:00 PM PST

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட தயங்கவில்லை என, அ.தி.மு.க., துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில், கோவை மாநகர், புறநகர்; ஈரோடு மாநகர், புறநகர்; திருப்பூர் மாநகர், புறநகர்; நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த, தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை, மாவட்ட வாரியாக நேரில் சந்தித்து, கட்சிப் பணிகள் குறித்து, துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன், நேற்று(மார்ச், 10) ஆலோசித்தார்.
கட்டாயம் போட்டி:
பின் அவர் அளித்த பேட்டி: ஆர்.கே.நகரில் ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™