Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஐ.நா.,வில் மகளிர் தின சிறப்பு நிகழ்வு ; ஐஸ்வர்யாவின் நடனம்

Posted: 10 Mar 2017 12:13 PM PST

- நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும், தனுஷின் மனைவியும், இயக்குநருமான ஐஸ்வர்யா, கடந்த ஆகஸ்ட் மாதம் ஐ.நா., சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா. சபையில் மகளிர் தின சிறப்பு விழாக்கள் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் ஒருபகுதியாக, ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. இதற்காக தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஐஸ்வர்யா. ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (191)

Posted: 10 Mar 2017 10:10 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

படித்ததில் பிடித்தது-தமிழ் வாழ்க.

Posted: 10 Mar 2017 08:19 AM PST

"தமிழ் வாழ்க வென்பதிலும் தமிழ்வா ழாது தமிழ்ப் பெயரை வைப்பதிலும் தமிழ்வா ழாது! குமிழ் சிரிப்பைப் பெருஞ்சிரிப்பாய் அவிழ்த்துக் கொட்டுங் கொக்கரிப்புப் பேச்சாலுந் தமிழ் வாழாதே! அமிழ் கின்ற நெஞ் செல்லாம் குருதியெல்லாம் ஆர்த்தெழும் உள் உணர்வெல்லாம் குளிரு மாறே இமிழ் கடல்சூழ் உலகமெல்லாம் விழாக்கொண்ட டாடி ஏற்றமிகச் செய்வதிலும் தமிழ்வா ழாதே! பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி ...

ஆசையே துன்பத்துக்குக் காரணம்!

Posted: 10 Mar 2017 08:11 AM PST

ஆசையே துன்பத்துக்குக் காரணம்! அறியாமையும், சாதிப்பிரிவுகளுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்! மனிதவாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது! அத்துன்பத்துக்குக் காரணம் தன்னலமும் ஆசையும்! மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கமுடியும்! மனிதன் தன்னலம்,ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க எட்டுவகை பாதை உண்டு நேர்மையான கருத்து நேர்மையான எண்ணம் நேர்மையான பேச்சு நேர்மையான செயல் நேர்மையான வாழ்க்கை நேர்மையான முயற்சி நேர்மையான சித்தம் நேர்மையான தியானம் எனப்பாதைகளை வகுத்து, புத்திக்கு முதலிடம்கொடு தர்மம் ...

பொது இடத்தில் மாணவர்கள் கிஸ் போராட்டம். கேரளாவில் பரபரப்பு

Posted: 10 Mar 2017 08:07 AM PST

-கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சிவசேனாவுக்கும் இடையே சர்ச்சைகள் நீண்டு கொண்டிருக்கும் நிலையில் சிவசேனாவை கண்டித்து கேரள மாணவர்கள் கிஸ் செய்யும் போராடம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. - கடந்த மாதம் 'காதலர் தினத்தன்று மரைன் டிரைவ் பகுதியில் உள்ள பூங்காவில் சிவசேனா கொடியுடன் வந்த சிவசேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் காதல் ஜோடிகளை அடித்து விரட்டினர். இந்த சம்பவத்தை போலீஸ் வேடிக்கை பார்த்தது. இதனால் போலீஸார்களை முதல்வர் கண்டித்தார் - இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு ...

வேலன்:-கிரிஸ்டல் பிளேயர்.

Posted: 10 Mar 2017 08:01 AM PST

ஆடியோ பைல்களை பிளே செய்து பார்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததம் உங்களக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் உள்ள பைல்கிளிக் செய்து நம்மிடம் உள்ள ஆடியோ பைல்களை தேர்வு செய்யவும். போல்டிரில் ஆடியோ பைல்கள் இருந்தாலும் அந்த போல்டரை தேர்வு செய்யலாம்.பின்னர் உங்களுக்கு பிடித்த ஆடியோவினை பேவரிட்டாக வைத்துக்கொள்ளலாம். மேலும் இது அனைத்துவிதமான பார்மெட்டுகளில் உள்ள பைல்களை சப்போர்ட் செய்கின்றது. ...

உங்கள் கடற்படைக்கு எடுத்துரையுங்கள்: இலங்கை மீனவர்களிடம் நீதிபதியின் உணர்வுப்பூர்வ பேச்சு

Posted: 10 Mar 2017 07:57 AM PST

எழும்பூர்: இந்திய அதிகாரிகளின் கண்ணியம் குறித்து, இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு எடுத்துரையுங்கள் என்று இலங்கை மீனவர்களிடம் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார். இந்திய கடல் பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 10 பேர் நேற்று கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 23ம் தேதி வரை காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி சந்திரன், இந்திய அதிகாரிகள் உங்களை தாக்கினார்களா என்று இலங்கை மீனவர்களிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, ...

யுவன்ஷங்கர் ராஜாவின் முதல் சாய்ஸ் நயன்தாரா. இரண்டாவது சாய்ஸ் த்ரிஷா?

Posted: 10 Mar 2017 07:52 AM PST

- பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா சமீபத்தில் . YSR பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் 'கொலையுதிர்க் காலம்' என்று அறிவிக்கப்பட்டது. - சக்ரி டோலட்டி இயக்கி வரும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நயன்தாரா. நடித்து வருகிறார் - இந்நிலையில் யுவன் தனது டுவிட்டரில் விரைவில் YSR பிலிம்ஸ் தயாரிக்கும் 2வது படத்தின் அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். முதல் படத்தில் நயன்தாரா. முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இரண்டாவது ...

தமிழில் வெளியாகும் கொங் ஸ்கூல் ஐஸ்லேண்ட்

Posted: 10 Mar 2017 07:43 AM PST

- - * மனிதர்களின் ஆராய்ச்சி சில நேரங்களில் விபரீதங்களை விளைவித்துவிடும். இதன் பின்னணியை கற்பனையாகக் கொண்டு ஹாலிவுட்டில் இதுவரை வந்த படம் பெரும் அளவில் வெற்றிப் பெற்றுள்ளன. – இந்த பாணியில் அடுத்து கவனத்தை ஈர்க்க வருகிறது, "கொங் ஸ்கூல் ஐஸ்லேண்ட்.' மனிதர்களின் வாடையே இல்லாத இயற்கைச் சூழலில், அமைதியாக வாழ்ந்து வரும் ராட்சசக் குரங்குகளின் கூட்டத்தை தனது ஆராய்ச்சிக்காக ஒரு குழுவினர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர். மிகப் பெரிய தோற்றத்துடன், பலம் பொருந்திய அந்த குரங்குகள் ...

மலரே பேசு மௌன மொழி

Posted: 10 Mar 2017 07:40 AM PST

படம்: கீதாஞ்சலி இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, சித்ரா — ———————– பெ: ஆ.. ஆஆஆஆ ஆஆஆ.. ஆ.. ஆஆஆஆ ஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ ஆ ஆ ஆ.. … பெ: மலரே பேசு மௌன மொழி மனம்தான் ஓடும் ஆசை வழி வாசலைத் தேடி ஓடி வந்தேன் வாலிப ராகம் பாடி வந்தேன் மலரே பேசு மௌன மொழி.. மலரே … ஆ: வாசனைப் பூக்கள் வாய் வெடிக்க ஆயிரம் ஈக்கள் தேன் குடிக்க – பெ: நானொரு பூவோ நீ பறிக்க நால்வகை குணமும் நான் மறக்க – ஆ: மெதுவாய்க் குலுங்கும் மாங்கனியே கிடைத்தால் விடுமோ ஆண்கிளியே – பெ: மடிமேல் கொடிபோல் விழுந்தேனே – ஆ: மலரே ...

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் விரைவில் வருகிறது புதிய 10 ரூபாய் நோட்டுகள்

Posted: 10 Mar 2017 07:39 AM PST

மும்பை: ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா (ஆர்பிஐ) விரைவில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட புதிய 10 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட இருக்கின்றது. 10 ரூபாய் நோட்டுகளில் தற்போது இருக்கும் பாதுகாப்பு வசதிகளுடன், கூடுதல் அம்சங்களையும் சேர்த்து விரைவில் புதிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில், மகாத்மா காந்தி-2005 வரிசையிலான இந்த நோட்டுகளில் இரு வரிசை எண் பகுதியிலும் ஆங்கில எழுத்து 'எல்' சேர்க்கப்படும். ...

கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள்

Posted: 10 Mar 2017 07:38 AM PST

புதுடெல்லி கியாஸ் இருப்பு எவ்வளவு? என்பதை காட்டும் நவீன சிலிண்டர்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இரும்பு சிலிண்டர்கள் வீடுகள், ஓட்டல்களில் சமையலுக்காக தற்போது பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டர்கள் முற்றிலும் இரும்பால் செய்யப்பட்டவை ஆகும். சில வீடுகளில் ஒரே ஒரு சிலிண்டரை மட்டுமே வைத்திருக்கும் குடும்பத்தினருக்கு அதில் கியாஸ் எப்போது தீரும்? என்பது தெரியாது. இதனால் கியாஸ் முற்றிலும் தீர்ந்து போன பிறகே அடுத்த சிலிண்டருக்கு பதிவு செய்ய முடியும். புதிய சிலிண்டர் வரும் ...

உலகோர் குலதெய்வம்

Posted: 10 Mar 2017 05:12 AM PST

- --மகளிர் தின கவிதை --- உன் கருவின் கதகதப்பில் உயிர் கொண்டேன் எனைப் படைத்த கடவுள் நீ! - எனக்கு பாலூட்டி சீராட்டி வளர்த்தாய் என் தாய் நீ! - என்னோடு மண்ணில் விளையாடி அன்பை வளர்த்தாய் என் சகோதரி நீ! - பதின் பருவ ஹார்மோனால் பட்டாம்பூச்சி பறந்த போது எனக்கு தேவதை நீ! - கல்யாண பந்தத்தில் வாழ்வோடு கைகோர்த்த மனைவி நீ! - என் சகியின் மணிவயிற்றில் மலர்ந்து சிரித்த போது எனக்கு தெய்வத் திருமகள் நீ! - சருமம் சருகாகி உதிரும் இலையான எனை மடியில் சுமக்கும் போது மீண்டும் ...

தமிழகத்தில் ஒன்றல்ல இரண்டல்ல 35 ஆயிரம் போலி மருத்துவர்கள்

Posted: 10 Mar 2017 03:08 AM PST

சென்னை: தமிழகத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் பல்வேறு பகுதிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். தங்கம் விலை நிலவரம் போல, நாளிதழ்களில் தினமும் வெளியாகும் செய்தியாகவே மாறியிருந்தது போலி மருத்துவர்கள் கைதாகும் செய்தியும். ஆனால், தமிழகத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல இதுபோல நூறும் அல்ல 35 ஆயிரம் போலி மருத்துவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தரும் ...

விதவைகளை இனி ‛‛கல்யாணி'' என்றே அழைக்கலாமே

Posted: 10 Mar 2017 02:46 AM PST

விதவைகளை இனி ‛‛கல்யாணி'' என்றே அழைக்கலாமே : ம.பி. முதல்வர் பேச்சு - போபால்: கணவனை இழந்த மனைவிகள் விதவைகள் என அழைக்கப் படமாட்டார்கள் அவர்கள் கல்யாணி என்றே அழைக்கப் படுவார்கள் என ம.பி. முதல்வர் கூறினார். ம.பி.யில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் முதியோர், விதவைகள், ஆகியோருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையி்ல், மகளிர் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ...

கேக்கிறான் மேய்க்கிறான்

Posted: 10 Mar 2017 02:13 AM PST

- ஆடம்பர வாழ்க்கைக்காக குறுக்கு வழிகளில் பணம் தேடும் இளைஞர்கள் குறித்து உருவாகி வரும் படம் "கேக்கிறான் மேய்க்கிறான்.' – சபா, லுப்னா, அமீர், நரேன், சபீதா ஆனந்த், மதுமிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் சாம் இமானுவேல். – சமீபமாக அரங்கேறும் குற்றச் செயல்கள் அனைத்தும் ஆடம்பர வாழ்க்கைக்கான பணத் தேடல்களை மையமாகக் கொண்டு நடைபெறுகின்றன. – குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களின் அத்தியாவசியத் தேவை அல்லது ஆடம்பர தேவைகளுக்காக ...

ஜெய் ஆகாஷ் நாயகனாக நடிக்கும் அமாவாசை

Posted: 09 Mar 2017 11:17 PM PST

- அமானுஷ்யம், பேய் உள்ளிட்ட பின்னணிகளைக் கொண்டு படங்கள் உருவாக்குவதற்கு பெரும் பட்ஜெட் தேவையில்லை என்பதால், அது தொடர்பான படங்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் அடுத்து இணைய வருகிற படம் "அமாவாசை.' முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகி வருவது இப்படத்தின் தனிச்சிறப்பு. ஜெயாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் இப்படத்தில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். தன்யா மௌரியா கதாநாயகியாக நடிக்கிறார். ராஜேஷ் விவேக், ஜீவா, ஷ்ரான், சாக்ஷி, ஷோகன், ...

விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாம் 'படை .வீரன்’

Posted: 09 Mar 2017 11:06 PM PST

- இவோக் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகி வரும் படம் "படை வீரன்.' பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். - புதுமுகம் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, "கல்லூரி' அகில், கலையரசன், "தெய்வம் தந்த வீடு' நிஷா, இயக்குநர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்கின்றனர். - மணிரத்னத்தின் உதவியாளர் தனா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ராஜவேல் மோகன் ஒளிப்பதிவில், கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ...

மார்ச் 10-ல் வெளியாகிறது 'மாநகரம்'

Posted: 09 Mar 2017 09:50 PM PST

- சென்னை பின்னணியில் உருவாகியுள்ள படம் "மாநகரம்'. ஸ்ரீ, சந்தீப், ரெஜினா, சார்லி, முனிஸ்காந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். வரும் 10-ஆம் தேதி படம் வெளியாகவுள்ளது. இக்கதையில் சென்னைக்கு தரப்பட்டிருக்கும் இமேஜ் குறித்து இயக்குநரிடம் பேசுகையில், " சென்னை என்றாலே வன்முறை என்ற அளவில்தான் இதுவரை பெரும்பாலான கதைகள் உருவாகியுள்ளன. ஆனால், அது போல் இல்லாமல் வேறு ஒரு பார்வையில் சென்னை மாநகர வாழ்க்கையைப் படம் பிடித்துள்ளோம். படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ...

புதுக்கவிதை

Posted: 09 Mar 2017 07:17 PM PST

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!! * நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது. எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான் மையக் குழு முடிவு செய்துள்ளது நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம். சமாளித்து ...

பணிபுரியும் பெண்களுக்கு பிரசவ கால விடுப்பை அதிகரிக்கும் மசோதா நிறைவேறியது

Posted: 09 Mar 2017 04:49 PM PST

புதுடெல்லி இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961–ன் படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த கால அளவை 26 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு வகை செய்யும் 'மகப்பேறு உதவி திருத்த மசோதா–2016', கடந்த ஆண்டு டெல்லி மேல்–சபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த மசோதா நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை தாக்கல் செய்த ...

3 பாராளுமன்ற தொகுதிகள், 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

Posted: 09 Mar 2017 04:49 PM PST

- புதுடெல்லி, நாடு முழுவதும் காலியாக உள்ள 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 11 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் கமி‌ஷன் நேற்று அறிவித்தது. காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், அனந்த்நாக் ஆகிய 2 பாராளுமன்ற தொகுதிகளில், ஏப்ரல் 9 மற்றும் 12–ந் தேதிகளில் 2 கட்டங்களாக இ டைத்தேர்தல் நடைபெறும். அங்கு ஏப்ரல் 15–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். கேரள மாநிலம் மலப்புரம் பாராளுமன்ற தொகுதியில் ஏப்ரல் 12–ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். ஏப்ரல் 17–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். டெல்லி, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™