Tamil Star |
- தஞ்சக் கோரிக்கையாளர்கள் கனடாவினுள் நுளைவதைக் கவனிக்கும் ஐ.நா
- ஒன்ராறியோ சட்டசபையில் இஸ்லாமிய எதிர்ப்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்
- நெடியவன் தலைமையில் மீண்டும் புலிகள் மீளுருவாக்கம் : கோத்தபாய
- ஒரே இடத்தை குறி வைத்து மூன்று தாக்குதல்கள்: உண்மையை வெளியிட்டார் மஹிந்த!
- ஜனாதிபதியை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு!
- மஹிந்த காலத்து பாணியிலேயே சைட்டம் சமீர மீது துப்பாக்கிச்சூடு!
- பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இம்மாதத்துடன் ஓய்வு!
- பொன்சேகா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
- சம்பந்தனை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறார் கஜேந்திரகுமார்!
- மைத்திரி கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு ஒரு கோடி ரூபா செலவு
| தஞ்சக் கோரிக்கையாளர்கள் கனடாவினுள் நுளைவதைக் கவனிக்கும் ஐ.நா Posted: 24 Feb 2017 11:03 AM PST அமெரிக்க – கனடா எல்லைப் பகுதியின் ஊடாக அமெரிக்காவில் இருந்து கனடாவினுள் தஞ்சக் கோரிக்கையாளர்கள் நுளைவது தொடர்பில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனமும் அணுக்கமாக கவனித்து வருகின்றது. ஒட்டாவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் முகவரமைப்பின் பிரதிநிதியான ஜீன் நிக்கோலஸ் பியூசி தகவல் வெளியிடுகையில், கியூபெக் பகுதியில் உள்ள எல்லைப் பகுதியின் ஊடாக சட்டவிரோதமான முறையில் குடிநுளைவாளர்கள் நுளைவதை அவதானித்துவருவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் எதிர்வரும் வாரங்களில் குறித்த அந்த பகுதிகளுக்கான நேரடிப் பயணங்களை மேறகொண்டு நிலைமைகளை நேரில் அவதானிக்கவுள்ளதாகவும் […] The post தஞ்சக் கோரிக்கையாளர்கள் கனடாவினுள் நுளைவதைக் கவனிக்கும் ஐ.நா appeared first on TamilStar.com. |
| ஒன்ராறியோ சட்டசபையில் இஸ்லாமிய எதிர்ப்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் Posted: 24 Feb 2017 11:00 AM PST இஸ்லாமிய எதிர்ப்பிற்கு எதிரான தீர்மானம் ஒன்று ஒன்ராறியோ சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஒன்ராறியோ சட்டமன்றத்தின் நேற்றைய கூட்டத்தில் ஆளும் லிபரல் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நிலையில், கட்சி பேதமின்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அந்த தீர்மானத்தை ஒரு மனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். குறித்த இந்த தீர்மானத்தில், வெறுப்பு, விரோம், தவறான எண்ணம், இனவெறி மற்றும் சகிப்பின்மை உள்ளிட்ட, இஸ்லாமுக்கு எதிரான அனைத்துவித செயற்பாடுகளையும் எதிர்ப்பதாகவும், இஸ்லாமிய ஆதிக்கம் வளர்ந்துவிடும் என்ற பயத்தினால் தலைதூக்கியுள்ள அனைத்துவித இஸ்லாம் எதிர்ப்பு முனைப்புக்களையும் […] The post ஒன்ராறியோ சட்டசபையில் இஸ்லாமிய எதிர்ப்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம் appeared first on TamilStar.com. |
| நெடியவன் தலைமையில் மீண்டும் புலிகள் மீளுருவாக்கம் : கோத்தபாய Posted: 24 Feb 2017 07:12 AM PST நெடியவன் தலைமையில் விடுதலைப்புலிகள் மீளுருவாக்கத்திற்கான செயற்பாடுகள் அன்று காணப்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சுமந்திரன் படுகொலை சதி மற்றும் விடுதலைப்புலிகள் மீளுருவாக்கம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் பரபரப்பாக பேசப்படும் சுமந்திரன் படுகொலை சதி தொடர்பான புலனாய்வு தகவல்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அது தொடர்பில் ஒன்றும் என்னிடம் இல்லை. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த வேளையில் […] The post நெடியவன் தலைமையில் மீண்டும் புலிகள் மீளுருவாக்கம் : கோத்தபாய appeared first on TamilStar.com. |
| ஒரே இடத்தை குறி வைத்து மூன்று தாக்குதல்கள்: உண்மையை வெளியிட்டார் மஹிந்த! Posted: 24 Feb 2017 07:10 AM PST இலங்கை ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல உண்மைகள் தற்போதுவெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் இராணுவ புலனாய்வுஅதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில்விடுதலை செய்யப்படுகின்றனர். கைதுகள் தொடர்நது கொண்டு சென்றாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைதொடர்பான உண்மைகள் நாளுக்கு நாள் வெளியாகிய வண்ணமே உள்ளன. சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர், லசந்த விக்ரமதுங்க 2009ம் ஆண்டு கொலைசெய்யப்பட்டிருந்தாலும் கடந்த வருடம் முதல் அவரது கொலை தொடர்பான சில விடயங்கள்வெளியாகிக் கொண்டு வருகின்றன. […] The post ஒரே இடத்தை குறி வைத்து மூன்று தாக்குதல்கள்: உண்மையை வெளியிட்டார் மஹிந்த! appeared first on TamilStar.com. |
| ஜனாதிபதியை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு! Posted: 24 Feb 2017 07:08 AM PST படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு கேப்பாபிலவு , பிலக்குடியிருப்பு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், இதுபற்றி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. காணி விவகாரம் மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் குறித்து ஜனாதிபதியுடனான சந்திப்பு இன்று நடக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அந்த சந்திப்பு நாளை சனிக்கிழமை இடம்பெறலாம் என தமிழ் […] The post ஜனாதிபதியை நாளை சந்திக்கிறது கூட்டமைப்பு! appeared first on TamilStar.com. |
| மஹிந்த காலத்து பாணியிலேயே சைட்டம் சமீர மீது துப்பாக்கிச்சூடு! Posted: 24 Feb 2017 07:06 AM PST சைட்டம் நிறுவனத்தின் நிறைவேற்றதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் அமைதிகாக்கிறது. எனினும் குறித்த சம்பவத்தின் பின்னணியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப் பெரும தெரிவித்தார். சைட்டம் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி சமீர சேனாரத்ன மீதான துப்பாக்கிச்சுட்டு சம்பவத்தின் பின்னணியை கண்டறிய வேண்டும். அப்பின்னணி இனங்காணப்படும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் சூத்திரத்தையும் கண்டு கொள்ள முடியும். நல்லாட்சி அரசாங்கமானது பிரச்சினைகளுக்கு […] The post மஹிந்த காலத்து பாணியிலேயே சைட்டம் சமீர மீது துப்பாக்கிச்சூடு! appeared first on TamilStar.com. |
| பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இம்மாதத்துடன் ஓய்வு! Posted: 24 Feb 2017 07:04 AM PST பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், இம்மாதம் 28ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, ஜனாதிபதியின் ஊடாக அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் புதிய பிரதம நீதியரசர் தெரிவு செய்யப்பட்டள்ளதாக கூறப்படுகின்றது. உயர் நீதிமன்றத்தில் தற்போது சிரேஷ்ட நீதியரசர்களாக பிரியசாந் டேப் மற்றும் ஈவா வணசுந்தர ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. The post பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இம்மாதத்துடன் ஓய்வு! appeared first on TamilStar.com. |
| பொன்சேகா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! Posted: 24 Feb 2017 07:02 AM PST இலங்கை மருத்துவ சபையின் தலைவரும் பேராசிரியருமான கார்லோ பொன்சேகா அவசர சிகிச்சைப் பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. திடீர் சுகயீனம் காரணமாக கார்லோ பொன்சேகா நேற்றிரவு கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே அவர் இன்றைய தினம் குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதய நோய் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரின் உடல் நிலை இயல்பாகவே உள்ளது என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் […] The post பொன்சேகா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி! appeared first on TamilStar.com. |
| சம்பந்தனை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறார் கஜேந்திரகுமார்! Posted: 24 Feb 2017 06:59 AM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தம்முடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சவால் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறிக்கொண்டு, தனக்கு பாதுகாப்பு இல்லை என மக்களிடம் செல்வதை தவிர்த்துக் […] The post சம்பந்தனை பகிரங்க விவாதத்துக்கு அழைக்கிறார் கஜேந்திரகுமார்! appeared first on TamilStar.com. |
| மைத்திரி கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு ஒரு கோடி ரூபா செலவு Posted: 24 Feb 2017 06:56 AM PST கொழும்பு, வெல்லவாய பிரதேசத்தில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்விற்காக ஒரு கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெல்லவாய பிரதேசத்தில் காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் அண்மையில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு ஒரு கோடி ரூபாய்க்கான குறை நிரப்பு மதிப்பீட்டை ஊவாமாகாண சபை சமர்ப்பித்துள்ளது. ஊவா மாகாண முதலமைச்சர் சாமர தசநாயக்கவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணசபை ஆளுநர் இந்த குறை நிரப்பு மதிப்பீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post மைத்திரி கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு ஒரு கோடி ரூபா செலவு appeared first on TamilStar.com. |
| You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |