Tamil Star |
- நலமாகவே இருக்கின்றேன்: வதந்திகளை நம்ப வேண்டாம்..! க.வி.விக்னேஸ்வரன்
- பட்டதாரிகள் விவகாரம்: பிரதமரை சந்தித்துப் பேசிய முதல்வர்!
- முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உயிராபத்து
- இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் – ஜெனிவாவில் ஒப்புக்கொண்டார் மங்கள சமரவீர!
- சர்வதேச வெசாக் தினம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்தாய்வு
- நிபந்தனையுடன் காலஅவகாசம் வழங்கும் யோசனை முட்டாள்தனமானது! – சுரேஸ் பிரேமச்சந்திரன்
- சிறைச்சாலை வைத்தியர்களை உடன் இடமாற்றம் செய்யுமாறு உத்தரவு..
- கேப்பாப்பிலவு காணியை விடுவிக்க படைத் தளபதிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு! – சம்பந்தன் தகவல்
| நலமாகவே இருக்கின்றேன்: வதந்திகளை நம்ப வேண்டாம்..! க.வி.விக்னேஸ்வரன் Posted: 28 Feb 2017 06:02 PM PST வடக்கு மாகாண முதலமைச்சர் உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது நலமாக இருப்பதாக க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போது தான் நலமாக இருப்பதாகவும், சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு திரும்பியுள்ளதாகவும் வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது சில பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது என்றும், தனது வேலைகளை இப்போது தாமே செய்வருவதாகவும் கூறியுள்ளார். முதல்வரின் உடல்நலம் குறித்து நேற்று சிங்கள ஊடகம் ஒன்று தவறான செய்தியை பிரசுரித்திருந்தது. இந்த […] The post நலமாகவே இருக்கின்றேன்: வதந்திகளை நம்ப வேண்டாம்..! க.வி.விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com. |
| பட்டதாரிகள் விவகாரம்: பிரதமரை சந்தித்துப் பேசிய முதல்வர்! Posted: 28 Feb 2017 09:12 AM PST கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் மற்றும் கிழக்கின் ஆளணி வெற்றிடங்கள் என பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன. அத்துடன் இதன் போது கிழக்கு மாகாண பட்டதாரிகளின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் துயர நிலை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமருக்கு விரிவாக எடுத்துரைத்தார் […] The post பட்டதாரிகள் விவகாரம்: பிரதமரை சந்தித்துப் பேசிய முதல்வர்! appeared first on TamilStar.com. |
| முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உயிராபத்து Posted: 28 Feb 2017 09:09 AM PST முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கூட்டு எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கும் பாதாள உலகக் கோஷ்டியினரால் உயிர் அச்சுறுத்தல் காணப்படுகின்றது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இல்லாது ஒழிக்கப்பட்ட பாதாள உலக கோஷ்டியினர் […] The post முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உயிராபத்து appeared first on TamilStar.com. |
| இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் – ஜெனிவாவில் ஒப்புக்கொண்டார் மங்கள சமரவீர! Posted: 28 Feb 2017 09:05 AM PST இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகளை தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா மனித பேரவையின் 34 ஆவது கூட்டத்தில் தெரிவித்தார். உள்ளூரிலும், சர்வதேசத்திலும் சித்திரவதை தொடர்பில் முன்வைத்துவரும் குற்றச்சாட்டுகளை இலங்கை பகிரங்கமாக ஏற்றுக்கொள்வது இதுவே முதற்தடவையாகும். கடந்த வாரம் ஜெனீவாவில் இடம்பெற்ற பெண்களுக்கெதிரான சித்திரவதை உள்ளிட்ட அனைத்து வித அடக்குமுறைகளுக்கும் எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் கூட அரச படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சித்திரவதைகள் தொடர்பில் […] The post இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் – ஜெனிவாவில் ஒப்புக்கொண்டார் மங்கள சமரவீர! appeared first on TamilStar.com. |
| சர்வதேச வெசாக் தினம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்தாய்வு Posted: 28 Feb 2017 07:00 AM PST ஐக்கிய நாடுகள் சபையின் ஏற்பாட்டில் இலங்கையில் கொண்டாடப்படவுள்ள சர்வதேச வெசாக் தினம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை வெசாக் தினத்தை சர்வதேச முக்கிய தினங்களில் ஒன்றாக பிரகடனப்படுத்தியுள்ளது. அத்துடன் வெசாக் பண்டிகையையும் சர்வதேச பண்டிகையாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இந்த வருடம் இலங்கையில் சர்வதேச வெசாக் தினம் கொண்டாடப்படவுள்ளது. உலகின் நிரந்தர அமைதிக்கு பௌத்த தர்மோபதேசங்களின் வழிகாட்டல் என்பது இதன் கருப்பொருளாகும். இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள […] The post சர்வதேச வெசாக் தினம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்தாய்வு appeared first on TamilStar.com. |
| நிபந்தனையுடன் காலஅவகாசம் வழங்கும் யோசனை முட்டாள்தனமானது! – சுரேஸ் பிரேமச்சந்திரன் Posted: 28 Feb 2017 06:57 AM PST தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும்போது, நிபந்தனையுடன் காலஅவகாசம் வழங்கவேண்டும் என்று இரா.சம்பந்தன், தெரிவித்திருக்கும் கருத்தானது முட்டாள்தனமானது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, நேற்றுச் சந்தித்துக்கு கலந்துரையாடிய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், […] The post நிபந்தனையுடன் காலஅவகாசம் வழங்கும் யோசனை முட்டாள்தனமானது! – சுரேஸ் பிரேமச்சந்திரன் appeared first on TamilStar.com. |
| சிறைச்சாலை வைத்தியர்களை உடன் இடமாற்றம் செய்யுமாறு உத்தரவு.. Posted: 28 Feb 2017 06:55 AM PST சிறைச்சாலை வைத்தியர்களை உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த உத்தரவை சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் அமல் ஹர்ஷ டி சில்வாவுக்கு பிறப்பித்துள்ளார். சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறைச்சாலை வைத்தியசாலையில் உள்ள அரசியல்வாதிகளுக்கு குறித்த வைத்தியர்கள் உதவி செய்வது குறித்து தெரியவந்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரத்ன […] The post சிறைச்சாலை வைத்தியர்களை உடன் இடமாற்றம் செய்யுமாறு உத்தரவு.. appeared first on TamilStar.com. |
| கேப்பாப்பிலவு காணியை விடுவிக்க படைத் தளபதிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு! – சம்பந்தன் தகவல் Posted: 28 Feb 2017 06:51 AM PST கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் போராட்டங்களை நடத்தும் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதிக்கு முன்பாக தீர்வு காணப்படவேண்டும் என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பில் நேற்றுமாலை ஏற்பாடு செய்திருந்த அவசர செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் நாடாளுமன்ற […] The post கேப்பாப்பிலவு காணியை விடுவிக்க படைத் தளபதிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு! – சம்பந்தன் தகவல் appeared first on TamilStar.com. |
| You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |