Tamil Star |
- ஒன்ராரியோ முதல்வருக்கான ஆதரவு குறைகிறதா?
- ரொரன்ரோ டவுன்ரவுனில் கத்திக்குத்துச் சம்பவம்
- தெற்காசிய கொள்முதல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்
- இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: ரணில்
- பிரபாகரன் கொல்லப்பட்டதை நினைத்து மனவருத்தமடையும் சந்திரிக்கா!
- கொழும்பு துறைமுகத்தில் இந்தோனேசிய கடற்படைக் கப்பல்!
- நடேசனையும் புலித்தேவனையும் கொன்றது அமெரிக்கா? இறுதிக் களத்தில் நடந்தது என்ன?
- கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார்கள்: சந்திரிக்கா
- விமல் வீரவன்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
- தலைமைப் பொறுப்பு மைத்திரிக்கா? மகிந்தவுக்கா?
| ஒன்ராரியோ முதல்வருக்கான ஆதரவு குறைகிறதா? Posted: 20 Feb 2017 08:21 AM PST ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின்னுக்கு மக்கள் மத்தியிலான ஆதரவு நிலைப்பாடு தொடர்ந்து குறைவடைந்து வருவதாக கருத்துக் கணிப்பொன்றில் இருந்து தெரியவந்துள்ளது. "The Mainstreet Research" எனப்படும் நிறுவனம் கடந்த 12ஆம் நாள் மேற்கொண்டு வெளியிட்டுள்ள அந்த கருத்துக் கணிப்பு முடிவில் இது தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கத்தலின் வின் முதல்வராக தனது பணிகளை சரியாக கையாள்கிறார் என்ற கூற்றை, இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 65 சதவீதமானோர் கடுமையாக நிராகரித்துள்ளனர். இதேவேளை 18 சதவீத மக்கள் […] The post ஒன்ராரியோ முதல்வருக்கான ஆதரவு குறைகிறதா? appeared first on TamilStar.com. |
| ரொரன்ரோ டவுன்ரவுனில் கத்திக்குத்துச் சம்பவம் Posted: 20 Feb 2017 08:18 AM PST ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Dundas street மற்றும் Huron street பகுதியில் அதிகாலை நான்கு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்த்துறையினர் சென்ற போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கத்திக் குத்துக் காயங்களுடன் அங்கு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமான காயங்களுடன் காணப்பட்ட குறித்த நபர் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு […] The post ரொரன்ரோ டவுன்ரவுனில் கத்திக்குத்துச் சம்பவம் appeared first on TamilStar.com. |
| தெற்காசிய கொள்முதல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் Posted: 20 Feb 2017 08:14 AM PST தெற்காசிய பிராந்தியத்தின் நான்காவது கொள்முதல் மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை கொழும்பு சினமன்கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பமானது. இந்த மாநாடு இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை கொழும்பிலும் கண்டியிலும் நடைபெறும். 2011 ஆம் ஆண்டு நேபாளத்தின் கத்மண்டு நகரத்தில் ஆரம்பமான இந்த கொள்முதல் மாநாடு 2014 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரிலும் அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷின் டாக்கா நகரிலும் நடைபெற்றது. உலக வங்கி, ஆசிய ஆபிவிருத்தி […] The post தெற்காசிய கொள்முதல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் appeared first on TamilStar.com. |
| இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: ரணில் Posted: 20 Feb 2017 08:11 AM PST இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதே அரசாங்கத்திற்கு உள்ள பிரதான சவாலாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்கவில் ரெயினோ கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு உரையாற்றிய பிரதமர், இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதே அரசாங்கத்திற்கு உள்ள பிரதான சவாலாகும். அதிகார பரவலாக்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். மூவின மக்களும் ஐக்கியத்துடன் இருந்தால் எமக்கு சர்வதேசத்துடன் இலகுவாக பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவே […] The post இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: ரணில் appeared first on TamilStar.com. |
| பிரபாகரன் கொல்லப்பட்டதை நினைத்து மனவருத்தமடையும் சந்திரிக்கா! Posted: 20 Feb 2017 08:08 AM PST தமிழீழ விதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடித்தமை குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மனவருத்தமடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இன்று முற்பகல் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகிய அவர், ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்துவிட்டு, திரும்பியபோது ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துரைத்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், இராணுவத்தினர் வடக்கிலுள்ள பெண்களை துஸ்பிரயோகம் செய்ததாக சந்திரிகா குமாரதுங்க குற்றம்சாட்டியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்? இவ்வாறு கூறுவதற்கு அவருக்கு இருக்கும் […] The post பிரபாகரன் கொல்லப்பட்டதை நினைத்து மனவருத்தமடையும் சந்திரிக்கா! appeared first on TamilStar.com. |
| கொழும்பு துறைமுகத்தில் இந்தோனேசிய கடற்படைக் கப்பல்! Posted: 20 Feb 2017 08:05 AM PST இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான "கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா-367 " என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கிடையிலான நல்லெண்ண நோக்கத்திலேயே குறித்த கப்பலின் வருகை அமைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படையின் பாரம்பரியப்படி இந்தோனேசிய கப்பலை வரவேற்றதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நேற்று வந்தடைந்த "கிரி சுல்தான் ஸ்கந்தர் முடா-367 " எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் இலங்கை கடற்படையால் […] The post கொழும்பு துறைமுகத்தில் இந்தோனேசிய கடற்படைக் கப்பல்! appeared first on TamilStar.com. |
| நடேசனையும் புலித்தேவனையும் கொன்றது அமெரிக்கா? இறுதிக் களத்தில் நடந்தது என்ன? Posted: 20 Feb 2017 08:02 AM PST ஆட்சி மாறிவிட்டது இப்போது இலங்கையில் யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அவலங்களுக்கு தீர்வு கொடுக்கப்பட வேண்டும்., போர்க்குற்ற விசாரனைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்பதும் ஒரு தரப்பினரது கோரிக்கையாக இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கை அரசு மட்டும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதை ஒத்துக் கொள்ளாத நிலையிலேயே நாட்கள் நகர்த்தப்பட்டு கொண்டு வருகின்றது. இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம் பெற்றது என்ன? இங்கிலாந்து “சண்டே டைம்ஸ்’ நாளேட்டின் பெண் செய்தியாளர் மேரி கால்வின் அப்போது வெளியிட்ட செய்தி. விடுதலைப் […] The post நடேசனையும் புலித்தேவனையும் கொன்றது அமெரிக்கா? இறுதிக் களத்தில் நடந்தது என்ன? appeared first on TamilStar.com. |
| கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார்கள்: சந்திரிக்கா Posted: 20 Feb 2017 07:56 AM PST மகிந்த ராஜபக்ச இன்று வரை நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்திருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து அந்த ஆபத்தில் இருந்து நாட்டை காப்பாற்றியது எனவும் இதனை புரிந்து கொள்ளாது மக்கள் அரசாங்கத்தை குறை கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். கம்பஹா நிட்டம்புவ பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் வேலை செய்வது போதவில்லை என அரசாங்கத்தை திட்டுவதை […] The post கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார்கள்: சந்திரிக்கா appeared first on TamilStar.com. |
| விமல் வீரவன்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! Posted: 20 Feb 2017 07:47 AM PST தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் விளக்கமறியல் மார்ச் மாதம் 6ஆம் திகதிவரையிலும், கோட்டை நீதிமன்றத்தினால் இன்று நீடிக்கப்பட்டது. அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். The post விமல் வீரவன்சவுக்கு மீண்டும் விளக்கமறியல்! appeared first on TamilStar.com. |
| தலைமைப் பொறுப்பு மைத்திரிக்கா? மகிந்தவுக்கா? Posted: 20 Feb 2017 07:45 AM PST ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவுக்கு வழங்க கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல்செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை மார்ச் மாதம் 13 ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்புமாவட்ட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு முன்னாள் உறுப்பினர்களான அருணபிரியசாந்த மற்றும் அசங்க ஸ்ரீநாத் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். 2015ம் ஆண்டு தேர்தலின் போது,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றுமொருகட்சியின் கீழேயே பொது வேட்பாளராக […] The post தலைமைப் பொறுப்பு மைத்திரிக்கா? மகிந்தவுக்கா? appeared first on TamilStar.com. |
| You are subscribed to email updates from TamilStar.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |