Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ரொரன்ரோவில் அதிகரிக்கிறது சொத்து வரி

Posted: 16 Feb 2017 08:07 AM PST

ரொரன்ரோ நகர சபை குடியிருப்பு சொத்து வரியை இரண்டு சதவீதத்தினால் அதிகரிக்க உள்ளது. நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற நகரசபை கூட்டத்தில் இந்த சொத்து வரி தொடர்பில் விவாதங்கள் நடாத்தப்பட்டன. பின்னர் கூட்டத்தின் நிறைவில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் நகர பிதா யோன் ரொரியால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 35வாக்குகளும், எதிராக 8 வாக்குகளும் அளிக்க்பபட்ட நிலையில், குடியிருப்பு சொத்து வரியை இரண்டு சதவீதத்தினால் அதிகரிப்பதை நகர சபை உறுதிசெய்துள்ளது. அதேவேளை சொத்து வரியை 4.26சதவீதத்தால் அதிகரிப்பதற்கு Gord […]

The post ரொரன்ரோவில் அதிகரிக்கிறது சொத்து வரி appeared first on TamilStar.com.

ரொரன்ரோ மருத்துவமனையில் $1.2M கொள்ளை

Posted: 16 Feb 2017 08:04 AM PST

ரொரன்ரோ வெஸ்ரேன் மருத்துவமனையில் இருந்து 1.2மில்லியன் டொலர்கள் பெறுமதியான சத்திரசிகிச்சை உபகரணப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. களவாடப்பட்ட அந்த பொருட்களுள் gastroscopes மற்றும் colonoscopes என்பனவும் அடங்குவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை பிற்பகல் அளவில் மருத்துவமனையின் நான்காவது தளத்திற்கு சென்ற மூன்று நபர்கள் சத்திரசிகிச்சை பிரிவினுள் அத்துமீறி நுளைந்ததாக விசாரணையாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அத்துடன் பெருமதியான சத்திரசிகிச்சை உபரகணங்கள் களவாடப்பட்டு வெள்ளி நிற சிற்றூர்தி ஒன்றில் அவை ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படடுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இது […]

The post ரொரன்ரோ மருத்துவமனையில் $1.2M கொள்ளை appeared first on TamilStar.com.

ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்!– ஜீ.எல்.பீரிஸ்

Posted: 16 Feb 2017 07:47 AM PST

அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நீதி சேவை சம்பிரதாயங்களை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டத்தரணி ஒருவரை நேரடியாக மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமித்தjன் மூலம் ஜனதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளதாக பொதுஜன முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சட்டத்தரணிகள் சங்கத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனத்தை வழங்கியதாக ஜனாதிபதி கூறியுள்ள போதிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய மேல் நீதிமன்றத்திற்கு நீதிபதி ஒருவரை நியமிக்கும் போது […]

The post ஜனாதிபதி அரசியலமைப்புச் சட்டத்தை மீறியுள்ளார்!– ஜீ.எல்.பீரிஸ் appeared first on TamilStar.com.

தமிழ் மக்கள் பேரவையிலுள்ள கட்சிகள் அரசியல் இலாபம் பெற நினைக்கலாம்! – விக்னேஸ்வரன்

Posted: 16 Feb 2017 07:44 AM PST

தமிழ் மக்கள் பேரவையில் இணைந்திருக்கும் சில அரசியல் கட்சிகள், அதிலிருந்து அரசியல் இலாபங்களைப் பெறலாமென நினைக்கலாம். ஆனால், தமிழ் மக்கள் பேரவை, அரசியல் கலப்பற்ற மக்கள் இயக்கமாகவே செயற்பட்டு வருகிறது என, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும் வடமாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். "பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுக்கு, அரசியல் ரீதியான முன்னோக்குகள் மற்றும் தேவைகள் இருக்கக்கூடும். ஆனால், தமிழ் மக்கள் பேரவையைப் பொறுத்தவரையில், இப்போதும் மக்களுடைய இயக்கமாகத் தான் செயற்பட்டு வருகின்றது. நாங்கள் […]

The post தமிழ் மக்கள் பேரவையிலுள்ள கட்சிகள் அரசியல் இலாபம் பெற நினைக்கலாம்! – விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

அனைத்து தரப்புடன் பேச்சு நடத்தி தீர்வு வழங்கப்படும்: ஜனாதிபதி

Posted: 16 Feb 2017 07:40 AM PST

தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான தீர்வை வழங்க அரசாங்கம் அனைத்து தரப்புடனும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரச்சினைகள் இருக்குமாயின் அவற்றை தீர்க்கும் வரை கல்வியை சீர்குலைத்துக் கொள்ள வேண்டாம் என சகல பல்கலைக்கழக மாணவர் சங்கங்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பாக மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனை […]

The post அனைத்து தரப்புடன் பேச்சு நடத்தி தீர்வு வழங்கப்படும்: ஜனாதிபதி appeared first on TamilStar.com.

ஈழத்தமிழர் நலனை மீறி செயற்படுபவர்களை தமிழக மக்கள் தூக்கியெறிவார்கள்! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted: 16 Feb 2017 07:33 AM PST

தமிழகத்தில் ஆட்சியமைக்கும் எவராயினும், ஈழத் தமிழர்களின் நலனை மீறி செயற்படுவார்களாயின் அவர்களை தமிழக மக்கள் தூக்கி எறிவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, தமிழகத்தின் அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஈழத் தமிழர்கள் மீது தமிழக மக்கள் ஆழமான கரிசனை கொண்டவர்கள். இதனை மீறி செயற்பட்ட ஆட்சியாளர்கள் கடந்த காலங்களில் தூக்கியெறியப்பட்டனர். இலங்கையின் இனப்படுகொலைக்கு […]

The post ஈழத்தமிழர் நலனை மீறி செயற்படுபவர்களை தமிழக மக்கள் தூக்கியெறிவார்கள்! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் appeared first on TamilStar.com.

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு எதிராக முறைப்பாடு

Posted: 16 Feb 2017 07:30 AM PST

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூர்த்தி உதவி பெறுவோருக்கு வழங்கப்பட்ட நிவாரண நிதியை மீண்டும் அறிவிட நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் சாமர மத்துமகளுகே தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வீடுகளை நிர்மாணிக்க வழங்கப்பட்ட 2 ஆயிரத்து 500 ரூபா உதவிப்பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த […]

The post அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு எதிராக முறைப்பாடு appeared first on TamilStar.com.

மஹிந்த சிங்கப்பூர் சென்றமைக்கான காரணம் என்ன? உண்மையை கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு

Posted: 16 Feb 2017 07:27 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீடீரென சிங்கப்பூர் சென்ற இரகசியத்தை அரசாங்க புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக அவர் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் வைத்தியசாலைக்கு செல்வதாக கூறப்பட்டது. எனினும் குறித்த மருத்துவ பரிசோதனைக்கு முன்னர், சிங்கப்பூரின் பிரதான வங்கிக்கு சென்று பாரிய அளவிலான பண மாற்றல் செய்துள்ளதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்கானிப்பு உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, […]

The post மஹிந்த சிங்கப்பூர் சென்றமைக்கான காரணம் என்ன? உண்மையை கண்டுபிடித்த புலனாய்வு பிரிவு appeared first on TamilStar.com.

ஹம்பந்தோட்டையில் காணிக்காக போராடிய சிங்கள மக்கள் கேப்பாபிலவு மக்களை பற்றிய அறிய வேண்டும்! – மனோ கணேசன்

Posted: 16 Feb 2017 07:23 AM PST

ஹம்பந்தோட்டையில் 15,000 ஏக்கர் தனியார் காணிகளை அரசாங்கம் சுவீகரிக்கப்போகிறது என்ற வெறும் வதந்திக்கே தெருவுக்கு வந்து, பெரும் போராட்டங்களை நடத்திய சிங்கள மக்கள், வடக்கில் கேப்பாபிலவு என்ற முல்லைத்தீவு மாவட்ட கிராமத்தில் கடந்த 15 நாட்களாக தெரு போராட்டம் நடத்தி வரும் அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் அடங்கிய தமிழ் மக்களை பற்றி கேட்டு அறிய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார். நேற்று இரவு 7.30 […]

The post ஹம்பந்தோட்டையில் காணிக்காக போராடிய சிங்கள மக்கள் கேப்பாபிலவு மக்களை பற்றிய அறிய வேண்டும்! – மனோ கணேசன் appeared first on TamilStar.com.

சைட்டம் மருத்துவ கல்லூரி விவகாரம் : ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

Posted: 16 Feb 2017 07:20 AM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சைட்டம் மருத்துவ கல்லூரி தொடர்பிலேயே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது சைட்டம் மருத்துவ கல்லூரி குறித்து பல விடயங்கள் கலந்துரையாடப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், அனைத்து […]

The post சைட்டம் மருத்துவ கல்லூரி விவகாரம் : ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™