Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


புதிய அரசியமைப்பில் 13க்கு அப்பால் அதிகாரங்கள்

Posted: 11 Feb 2017 09:28 AM PST

புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது 13வது அரசியலமைப்பில் உள்ள அதிகார விடயங்களுக்கு அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான குழு இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த தரப்புக்கள் தெரிவித்துள்ளன. 13வது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும்போது பெறப்பட்ட அனுபவங்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்கும்போது உள்ளடக்கப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளன. இதனை மையமாகக்கொண்டே அண்மையில் வடக்கின் முதலமைச்சரின் நடவடிக்கைகளை கண்டித்த அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, விக்னேஸ்வரனின் செயல்களால் புதிய அரசியலமைப்புக்கு […]

The post புதிய அரசியமைப்பில் 13க்கு அப்பால் அதிகாரங்கள் appeared first on TamilStar.com.

வர்த்தக கட்டிடத்தில் தீப்பரவல் – மக்கள் வெளியேற்றம்

Posted: 11 Feb 2017 09:25 AM PST

கீல் வீதி மற்றும் டண்டாஸ் வீதிச் சந்திப்பில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் மோசமான தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், ரொரன்ரோ தீயணைப்பு படையினர் அங்கு ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மூலொக் அவனியூவில் அமைந்துள்ள குறித்த அந்த இரண்டு மாடி வர்த்தக கட்டிடத்தின் கூரைப் பகுதியினூடாக புகை வெளியாவதை, அந்த பகுதி ஊடாக சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்த்துறையினர் இன்று அதிகாலை 5.10 அளவில் அவதானித்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். […]

The post வர்த்தக கட்டிடத்தில் தீப்பரவல் – மக்கள் வெளியேற்றம் appeared first on TamilStar.com.

கனடாவின் வேலைவாப்புக்களில் அதிகரிப்பு

Posted: 11 Feb 2017 09:17 AM PST

கனடாவில் கடந்த மாதம் புதிதாக 48,300 வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், வேலையற்றோரின் எண்ணிக்கை சிறிது குறைவடைந்துள்ளது. கனடாவின் வேலைவாய்ப்பு புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலில், ஜனவரி மாதத்தில் மாத்திரம் பகுதி நேர வேலைவாய்ப்புக்கள் சுமார் 32,400உம், பலரும் விரும்பக் கூடிய முழுநேர வேலைவாய்ப்புக்கள் 15,800உம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கும் ஜனவரி மாதத்திற்கும் இடைப்பட்ட இந்த காலப்பகுதியில் தனியார் பிரிவில் 32,400 வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பொதுப் பிரிவில் 7,700 வேலைவாய்ப்புக்களே வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை வேலையற்றோர் சதவீதமானது […]

The post கனடாவின் வேலைவாப்புக்களில் அதிகரிப்பு appeared first on TamilStar.com.

குமாரபுரம் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு!

Posted: 11 Feb 2017 09:12 AM PST

குமாரபுரம் படுகொலைகள் எமக்கு நன்கு தெரிந்த இராணுவத்தினரால் தான் நிகழ்த்தப்பட்டது என்று குமாரபுரம் கிராம மக்கள் தெரிவித்தனர். திருகோணமலை – குமாரபுரம் படுகொலையின் 21ஆவது நினைவஞ்சலி நிகழ்வு, இன்று குமாரபுரத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட 26 பேருடைய புகைப்படங்கள் அஞ்சலிக்காக வைத்து நினைவுத்தீபம் ஏற்றி பூக்கள் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் 26 பேரின் பெயர்கள் அடங்கிய கல்வெட்டு ஒன்றும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. அத்துடன், "குமுறல் மாறாத குருதிமண் குமாரபுரம் எனும்" தலைப்பிலான […]

The post குமாரபுரம் படுகொலையின் 21 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு! appeared first on TamilStar.com.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரவன்ச! சிறையிலிருந்து வெளியில் வராமல் தடுப்பது யார்?

Posted: 11 Feb 2017 08:44 AM PST

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட, தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை அனைவரும் மறந்து விட்டனர். ராஜபக்சர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் உட்பட விமல் வீரவன்சவை புறக்கணிப்பதோடு, அவருக்காக எவ்வித குரலும் கொடுக்காமல் எவ்வித உதவியும் செய்யாமல் இருப்பதே இதற்கான காரணமாகும். இது தொடர்பில் ஆராய்ந்த போது, 2020ஆம் ஆண்டினை இலக்கு வைத்து வீரவன்சவினால் முன்னெடுக்கப்படும் அரசியல் சூழலை வீழ்ச்சியடைய செய்வதற்காக ராஜபக்சர்கள் சில நடவடிக்கைகளை […]

The post தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரவன்ச! சிறையிலிருந்து வெளியில் வராமல் தடுப்பது யார்? appeared first on TamilStar.com.

எழுக தமிழ் பேரணி நியாயமானதே! – மனோ கணேசன்

Posted: 11 Feb 2017 08:39 AM PST

வடக்கு-கிழக்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, உரிமைக்காக குரலெழுப்பும் வகையில் நடத்தப்பட்ட எழுக தமிழ் பேரணி தொடர்பில் விமர்சிக்கவோ, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாது என தேசிய சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கிழக்கில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு எதிராக போராடியிருக்காவிட்டால், இந்நேரம் காணாமல் […]

The post எழுக தமிழ் பேரணி நியாயமானதே! – மனோ கணேசன் appeared first on TamilStar.com.

சைட்டம் விவகாரம்: ஜனாதிபதியின் யோசனைக்கு எதிர்ப்பு

Posted: 11 Feb 2017 08:35 AM PST

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடத்திய ஊடக சந்திப்பின்போதே மாணவர் ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை ஜனாதிபதியை சந்தித்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் கலந்துரையாடினர். இந்தக் கலந்துரையாடலையடுத்து, தனது டுவிட்டர் வலைதளத்தில் அறிவிப்பொன்றை விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாலபே தனியார் […]

The post சைட்டம் விவகாரம்: ஜனாதிபதியின் யோசனைக்கு எதிர்ப்பு appeared first on TamilStar.com.

வடக்கு- கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேசத் தயார்! – விக்னேஸ்வரன்

Posted: 11 Feb 2017 08:30 AM PST

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசுவதற்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் முன்வந்தால் அவருடன் பேச்சு நடத்த தயார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் சிவில் அமைப்புகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில் உள்ள கூட்டுறவு சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த முதலமைச்சர், மத்திய அரசின் கீழ் […]

The post வடக்கு- கிழக்கு இணைப்பு குறித்து கிழக்கு முதல்வருடன் பேசத் தயார்! – விக்னேஸ்வரன் appeared first on TamilStar.com.

தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதிக்கு

Posted: 11 Feb 2017 08:27 AM PST

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான தேசிய நல்லிணக்க பணியகம் ஊடக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக சுவிஸர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளின் தூதுவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்தித்து நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார். நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

The post தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதிக்கு appeared first on TamilStar.com.

நாடளாவிய போராட்டம் வெடிக்கும்! – எச்சரிக்கிறார் மஹிந்த

Posted: 11 Feb 2017 08:24 AM PST

உள்ளூராட்சித் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், அதனை எதிர்த்து நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றங்கள் சீர்குலைந்துள்ளன. குறிப்பாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால், அனேகமான இடங்களில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி […]

The post நாடளாவிய போராட்டம் வெடிக்கும்! – எச்சரிக்கிறார் மஹிந்த appeared first on TamilStar.com.Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™