Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பிரம்டனில் தீப்பரவல் – மூவர் பலி, உயிராபத்தான நிலையில் சிறுமி

Posted: 14 Feb 2017 08:27 AM PST

பிரம்டனில் இன்று அதிகாலை வீடு ஒன்று தீக்கிரையான சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுமி ஒருவர் உயிராபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் தீயணைப்பு வீரர்களால் மீட்கப்பட்ட சிறுமி உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். டிக்சி வீதி மற்றும் வில்லியம்ஸ் பார்க்வே பகுதியில், Madison Streetஇல் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று அதிகாலை 4.10 மணியளவில் இந்த தீ சம்பவம் இடம்பெற்றுள்ளது இது தொடர்பில் பீல் பிராந்திய காவல்த்துறையினர் வெளியிட்ட தகவலில், அவசர மீட்புப் படையினர் […]

The post பிரம்டனில் தீப்பரவல் – மூவர் பலி, உயிராபத்தான நிலையில் சிறுமி appeared first on TamilStar.com.

Milton பகுதி விபத்தில் ஒருவர் பலி

Posted: 14 Feb 2017 08:25 AM PST

Milton பகுதியில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் மோதி வித்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை Reid Side வீதி மற்றும் Twiss வீதிப் பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. பிரதான வீதி ஒன்றிலிருந்து வீடு ஒன்றுக்கு செல்வதற்கான தனியார் பாதை ஒன்றின் ஊடாக சென்ற கார் ஒன்று, அந்த வீதியில் சாரதி அற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டதாக கூறப்படுகிறது. இதன்போது அந்த காரைச் செலுத்திச் சென்ற நபரே சம்பவ […]

The post Milton பகுதி விபத்தில் ஒருவர் பலி appeared first on TamilStar.com.

உலகின் வேகத்திற்கு அமைய பயணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: பிரதமர்

Posted: 14 Feb 2017 08:20 AM PST

உலகம் வேகமாக மாற்றமடைந்து வருவதாகவும் அந்த வேகத்திற்கு ஏற்ப எமது எதிர்கால பயணத்தின் வழிகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் டீனிக் பல்லைக்கழகம் வழங்கிய கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அங்கு பட்டம் பெற்ற பட்டதாரிகள் முன் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். வாழ்க்கைப் பயணத்தில் விழும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மீள எழுக்கூடிய வகையில் பலத்தை உருவாக்கிக்கொள் வேண்டும். மாறிவரும் உலகத்தில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெற்றிகரமான வாழ்க்கைக்கு அடித்தளத்தை […]

The post உலகின் வேகத்திற்கு அமைய பயணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்: பிரதமர் appeared first on TamilStar.com.

மருத்துவ பரிசோதனைக்காக திடீரென சிங்கப்பூர் சென்றார் மஹிந்த!

Posted: 14 Feb 2017 08:17 AM PST

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திடீரென சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் அவரது புதல்வர் ரோஹித்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். சிங்கப்பூர் குயின் எலிசபெத் வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளார்.

The post மருத்துவ பரிசோதனைக்காக திடீரென சிங்கப்பூர் சென்றார் மஹிந்த! appeared first on TamilStar.com.

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பூனையைக் கொண்டு பாலை பாதுகாப்பது போலுள்ளது: வடமாகாண முதலமைச்சர்

Posted: 14 Feb 2017 08:14 AM PST

ஜனாதிபதியின் தீர்மானம் நல்லதாக இருப்பினும் அதை நடைமுறைப்படுத்தும் விதம் சிக்கல் மிகுந்ததாகக் காணப்படும் என்று தாம் நம்புவதாகவும், இது பூனையைக் கொண்டு பாலை பாதுகாப்பது போல் உள்ளது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களில் ஊழியர்களுக்கான தினம் ஒன்றினை பிரகடனப்படுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் நிகழ்வு இன்று காலை உதவி யாழ். உள்ளூராட்சிஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து […]

The post ஜனாதிபதியின் தீர்மானங்கள் பூனையைக் கொண்டு பாலை பாதுகாப்பது போலுள்ளது: வடமாகாண முதலமைச்சர் appeared first on TamilStar.com.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசத் தயார்! – சுமந்திரன்

Posted: 14 Feb 2017 08:07 AM PST

அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தை பகிரும் வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாட தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  பி.பி.சி செய்திச்சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலில் அவர், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றும் போது அதற்காக பொது கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தி பொதுமக்களின் அனுமதியுடன் அதனை நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்ற அதிகாரம், அரசாங்க அதிகாரம், நிறைவேற்று அதிகாரம் மற்றும் தேர்தல் முறைமை என்பவற்றில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமாயின் பொதுமக்களின் அனுமதியின்றி மேற்கொள்ள முடியாது என்பதே தமது கட்சியின் […]

The post அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு குறித்துப் பேசத் தயார்! – சுமந்திரன் appeared first on TamilStar.com.

மகிந்த சிங்கப்பூர் சென்றமைக்கான காரணம்

Posted: 14 Feb 2017 07:46 AM PST

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று சீங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதியுடன் அவரது புதல்வர் ரோஹித்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோர் உடன் சென்றுள்ளனர். சிங்கப்பூர் குயின் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் சிலவற்றை மேற்கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மகிந்த சிங்கப்பூர் சென்றமைக்கான காரணம் appeared first on TamilStar.com.

ஐ.நா தீர்மானத்தை மீறியுள்ளது இலங்கை அரசு! – யஸ்மின் சூக்கா

Posted: 14 Feb 2017 07:31 AM PST

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை மீறியுள்ளதாக, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா குற்றம் சுமத்தியுள்ளார். ஜெனிவா தீர்மானத்தின்படி சித்திரவதைகளுக்கான எதிரான குழுவுக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு பேர் இன்னும் நியமிக்கப்படவில்லை. இது மந்தைக்கு ஓநாயை காவலுக்கு நிறுத்தியது போன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.குறித்த குழுவில் எவரும் முறைப்பாடுகளையோ, சாட்சிகளையோ செய்ய முன்வருவதில்லை. சாட்சி பாதுகாப்பில் உள்ள அச்சமே இதற்கான காரணமாகும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார். மூதூரில் 2006ஆம் ஆண்டு […]

The post ஐ.நா தீர்மானத்தை மீறியுள்ளது இலங்கை அரசு! – யஸ்மின் சூக்கா appeared first on TamilStar.com.

கேப்பாப்புலவு மக்களுக்கு ஜனாதிபதியின் பதில் இதுதான்!

Posted: 14 Feb 2017 07:25 AM PST

காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கேப்பாப்புலவு மக்கள் தொடர்ந்தும் 15 நாட்களாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் எடுத்த நடவடிக்கைகளுக்கே இந்த சாதகமான பதில் கிடைத்துள்ளது. கேப்பாப்புலவு தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கலந்துரையாடி உள்ளார். குறித்த கலந்துரையாடலில் "கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிக்கப்பட வேண்டும்" என்று ஜனாதிபதியிடம் அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கையை முன்வைத்ததார். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இராணுவத்தளபதியுடன் இது குறித்து வினவியுள்ளார். இதற்கு பதிலளித்த […]

The post கேப்பாப்புலவு மக்களுக்கு ஜனாதிபதியின் பதில் இதுதான்! appeared first on TamilStar.com.

தவறுகளை திருத்தாமல் தேர்தலை நடத்தக் கூடாது : அமைச்சர் பொன்சேகா

Posted: 14 Feb 2017 07:22 AM PST

உள்ளூராட்சி சபைகளில் ஊழல்களுக்கு வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் தவறுகளை திருத்தாமல் தேர்தல் நடத்தினால் மக்களுக்கான சேவையை மீண்டும் எதிர்பார்க்க முடியாது போகும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். களனி பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியலமைப்பை அடிப்படையாக கொள்ளாமல் தவறுகளை திருத்த செயற்பாட்டு ரீதியான முறைகளை கையாள வேண்டியுள்ளது எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

The post தவறுகளை திருத்தாமல் தேர்தலை நடத்தக் கூடாது : அமைச்சர் பொன்சேகா appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™