Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு!

Posted: 05 Feb 2017 09:38 AM PST

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். இந்த நிலையில், கேப்பாப்புலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டத்துக்கு, யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகப்பீட மாணவர் ஒன்றியத்தின் மாணவர் குழு இன்று நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளது.

The post கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு! appeared first on TamilStar.com.

கனேடிய பிரித்தானியப் பிரதமர்களிடையே பேச்சு

Posted: 05 Feb 2017 09:27 AM PST

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கும் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே க்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த உரையாடலின் போது, கியூபெக் நகர மசூதித் தாக்குதல் சம்பவத்திற்கு பிரித்தானியப் பிரதமர் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். நோட்டோ அமைப்பு, G7 மற்றும் G20 நாடுகளின் கூட்டமைப்பு தொடர்பிலும் இரண்டு நாடுகளின் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறியிருந்தனர் என்றும், அதில் இரண்டு நாடுகளும் வழங்கும் ஒத்துழைப்புத் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் கனடாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் […]

The post கனேடிய பிரித்தானியப் பிரதமர்களிடையே பேச்சு appeared first on TamilStar.com.

ரொரன்ரோ இஸ்லிங்டன் அவனியூவில் சடலம் மீட்பு

Posted: 05 Feb 2017 09:24 AM PST

ரொரன்ரோ இஸ்லிங்டன் அவனியூ மற்றும் டிக்சன் வீதிப் பகுதியில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள நீர் வழிந்தோடும் பள்ளம் ஒன்றில் ஒருவரின் உடல் மிதப்பதைக் கண்ட வழிப்போக்கர் ஒருவர், காவல்த்துறையினருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தகவல் கிடைத்ததை அடுத்து காவல்த்துறையினர்,அவசர மீட்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவப் பிரிவினர் குறித்த இடத்திற்கு விரைந்தனர் என்றும், நேற்றுப் பிற்பகல் 3.30 அளவில் குறித்த அந்த பள்ளத்தில் கிடந்த சடலம் மீட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குறித்த […]

The post ரொரன்ரோ இஸ்லிங்டன் அவனியூவில் சடலம் மீட்பு appeared first on TamilStar.com.

நான் ஒன்றும் சட்டம் தெரியாமல் கூறவில்லை..! வடக்கு முதல்வர் ஆதங்கம்

Posted: 05 Feb 2017 09:20 AM PST

இலங்கையில் காலத்திற்கு காலம் ஆட்சிக்குவரும் பெரும்பான்மையின அரசியல் தலைமைகள் போர் குற்றங்களை விசாரிக்க கூடாது என்பதில் திடமான நிலைப்பாட்டினை கொண்டிருக்கின்றார்கள். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். போர்குற்றங்களை வடமாகாணசபை விசாரிக்க முடியுமா..? என சட்டத்தில் ஆராயவேண்டும் என நான் கூறியதற்கே பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் மனப்பதற்றத்தில் உள்ளார்கள் அதனையே என் மீதான விமர்சனங்கள் சுட்டிக்காட்டுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் 31ம் திகதி மன்னார் – வட்டக்கண்டல் படுகொலையின் 32ம் ஆண்டு நினைவு நாளில் […]

The post நான் ஒன்றும் சட்டம் தெரியாமல் கூறவில்லை..! வடக்கு முதல்வர் ஆதங்கம் appeared first on TamilStar.com.

பெண்களை தவறாக வர்ணிக்காதீர்கள்! நாமலை எச்சரிக்கும் தம்பி ரோஹித

Posted: 05 Feb 2017 09:16 AM PST

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தப்பி ரோஹித ராஜபக்ஷ அறிவுரை கூறியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பெண்கள் தொடர்பில் நாமல் கொண்டுள்ள தவறான சிந்தனையின் அடிப்படையில், இந்த அறிவுரை அமைந்துள்ளது. கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு சென்ற யோஷித ராஜபக்சவின் காதலியான லொஹான் ரத்வத்தேயின் மகள் யோஹான ரத்வத்தே சென்றுள்ளார். குறித்த பெண் தொடர்பில் நாமல் ராஜபக்ச தனக்கு நெருக்கமானவர்களிடம் தவறான வர்ணித்துள்ளார் இந்த நடவடிக்கைக்கு நாமலின் கடைசி தம்பி […]

The post பெண்களை தவறாக வர்ணிக்காதீர்கள்! நாமலை எச்சரிக்கும் தம்பி ரோஹித appeared first on TamilStar.com.

சுமந்திரன் படுகொலை சதித் திட்டம்! சந்தேக நபர்கள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு

Posted: 05 Feb 2017 09:13 AM PST

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை படுகொலை செய்வதற்கு அண்மையில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் 5 பேரும் திட்டம் தீட்டினார்கள் என பொலிஸார் நீதிமன்றில் கூறவில்லை. அவர்கள் மீது போதை பொருட்களை வைத்திருந்ததாகவே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த விடயத்தில் எந்தளவு உண்மையுள்ளது என எண்ணத்தோன்றுகின்றது என கூறியிருக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணத்தில் படையினரை தொடர்ந்தும் நிலை கொள்ள செய்வதற்கான முயற்சியா எனவும் எமக்கு சந்தேகம் உள்ளது என கூறியுள்ளார். தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற […]

The post சுமந்திரன் படுகொலை சதித் திட்டம்! சந்தேக நபர்கள் மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு appeared first on TamilStar.com.

கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!

Posted: 05 Feb 2017 09:09 AM PST

மட்டக்களப்பில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. மட்டக்களப்பில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் ரி.வசந்தராஜா இந்த அழைப்பினை விடுத்தார். எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்விற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே திட்டமிட்டது போன்று இரண்டு பேரணிகள் நடைபெறமாட்டாது. கல்லடி பாலம் அருகில் இருந்து ஒரு பேரணி மட்டுமே நடைபெறும். பல்லாயிரக்கணக்கானோர் […]

The post கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு ஆதரவு தருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு! appeared first on TamilStar.com.

ஆட்சியில் இருக்கும் போது செய்வதொன்று : இல்லாத போது பேசுவது இன்னொன்று

Posted: 05 Feb 2017 09:05 AM PST

மாலபே சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடியடி தாக்குதல் நடத்தக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தமது குறைகளை முன்வைக்க வேறு ஒருவரும் இல்லாத காரணத்தினாலேயே தமது குறைகளை கூற ஜனாதிபதியை தேடிச் செல்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். குருணாகல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மருத்துவ மாணவர்கள் எதிர்கால மருத்துவர்கள், அவர்கள் […]

The post ஆட்சியில் இருக்கும் போது செய்வதொன்று : இல்லாத போது பேசுவது இன்னொன்று appeared first on TamilStar.com.

நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் – அமைச்சர் திசாநாயக்க

Posted: 05 Feb 2017 09:01 AM PST

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொருளாளர் அமைச்சர் எஸ் பி திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்த சட்டத்தின்கீழ் சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடம் இருக்கவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில் ஒற்றையாட்சியை தக்கவைப்பதற்காக சில நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் இருப்பது அவசியமாகும் எனவும் திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

The post நிறைவேற்று அதிகாரங்கள் ஜனாதிபதியிடமே இருக்க வேண்டும் – அமைச்சர் திசாநாயக்க appeared first on TamilStar.com.

மீண்டும் சீனா செல்கிறார் ரணில்!

Posted: 05 Feb 2017 08:57 AM PST

சீனாவுடன் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே மாதம், பீஜிங் செல்லவுள்ளார். சீனாவுக்கான தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு, இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சீனாவின் "ஒரு அணை ஒரு பாதை" திட்டம் தொடர்பான உச்சி மாநாடு ஒன்று எதிர்வரும் மே மாதம் சீனாவில் நடைபெறவுள்ளது. 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது இருதரப்பு சுதந்திர வர்த்தக […]

The post மீண்டும் சீனா செல்கிறார் ரணில்! appeared first on TamilStar.com.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™