Tamil News | Online Tamil News |
- பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விரைவில்...தளர்வு; முடிவுக்கு வரும் செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கை
- நடப்பு கூட்டத்தொடரிலேயே ஜி.எஸ்.டி., வரைவு மசோதா
- சசிக்காக போக்குவரத்து நிறுத்தம்: நெரிசலில் வாகன ஓட்டிகள் தவிப்பு
- போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றச்சாட்டு
- சர்க்கரை மானியம் ரத்தால் ரூ.240 கோடி கூடுதல் செலவு
- '3 நாட்களுக்குள் அகற்றப்படும்'
- 'டிஜிட்டல்' பரிவர்த்தனையால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு
- கட்சியில் நிர்வாகிகளை நியமிக்க சசிக்கு அதிகாரமில்லை என... சர்ச்சை!: கோஷ்டிகளை சமாளிக்க 23 பேருக்கு பதவி தந்ததற்கு எதிர்ப்பு: அ.தி.மு.க.,வில் காங்., கலாசாரம் தலைதூக்குவதாக புகார்
- நாளை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: அ.தி.மு.க.,வில் மீண்டும் பரபரப்பு
- தமிழக அரசின் முதன்மை செயலர், முதல்வரின் தனிச்செயலர் பதவி விலகல்?
- 'நீட்' தேர்வு எழுத புதிய சலுகை
- ஒரே அலைபேசி நோய் தொற்று ஏற்படும்; முன்னெச்சரிக்கை தேவை
- விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி
| பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் விரைவில்...தளர்வு; முடிவுக்கு வரும் செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கை Posted: 03 Feb 2017 07:50 AM PST புதுடில்லி,: சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்க உள்ள கட்டுப்பாடு, விரைவில் முழுவதுமாக தளர்த்தப் பட உள்ளது. மேலும் செல்லாத ரூபாய் நோட்டு நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், மத்திய அரசு தெரிவித்துள்ளது. 'கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016 நவ., 8ல் மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கு, ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.இந்த கட்டுப்பாடுகள் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுள்ள நிலை யில், இது குறித்து மத்திய ... |
| நடப்பு கூட்டத்தொடரிலேயே ஜி.எஸ்.டி., வரைவு மசோதா Posted: 03 Feb 2017 07:50 AM PST ''மிகவும் எதிர்பார்க்கப்படும், ஜி.எஸ்.டி., எனப் படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான வரைவு மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரின் 2-ம் கட்டத்தில் தாக்கல் செய்யப்படும்,'' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்தார். மத்திய பட்ஜெட் குறித்து தொழிலதிபர்கள் உடனான விவாதம், டில்லியில்நடந்தது; இதில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், வரும், 18ல் மீண்டும் கூட உள்ளது. அப்போது, ஜி.எஸ்.டி., சட்டங்கள் மற்றும் விதிகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப் படும் என்று முழுமையாக ... |
| சசிக்காக போக்குவரத்து நிறுத்தம்: நெரிசலில் வாகன ஓட்டிகள் தவிப்பு Posted: 03 Feb 2017 08:36 AM PST சென்னையில் நேற்று, அண்ணாதுரை நினை விடத்திற்கு, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வந்த போது மறைந்திருந்த போலீசார், சசிகலா வருகைக்காக வாகனங்களை நிறுத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணாதுரை நினைவு தினத்தை ஒட்டி, பல் வேறு கட்சி தலைவர்கள், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தனர்.காலை, 8:10 மணிக்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.,வினர், சேப்பாக்கத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, அஞ்சலி செலுத்தினர்.அப்போது, போலீசார் யாரும் பாதுகாப்பு பணி யில் ஈடுபடவில்லை. தி.மு.க.,வினர் சென்ற சிறிது ... |
| போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றச்சாட்டு Posted: 03 Feb 2017 08:42 AM PST ''சசிகலா குடும்பத்தினர், காவல் துறை மூலம், என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர்,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டினார். சென்னையில், நேற்று அண்ணாதுரை நினை விடத்தில், அஞ்சலி செலுத்த, தீபா சென்றார். அவரது காரை, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழி யில் அனுமதிக்க, போலீசார் மறுத்தனர். தீபா ஆதரவாளர்கள், அவர்களுடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின், அவரை அனுமதித் தனர்.இதேபோல், சென்னை, ஆர்.கே.நகரில், தீபா கலந்து கொண்டநிகழ்ச்சிகளுக்கும், இடையூறு ஏற்படுத்தினர்.இது குறித்து, தீபா கூறியதாவது: காவல் துறையினர், நான் கலந்து கொள்ளும், பொது ... |
| சர்க்கரை மானியம் ரத்தால் ரூ.240 கோடி கூடுதல் செலவு Posted: 03 Feb 2017 08:49 AM PST மத்திய அரசு வழங்கும் சர்க்கரை மானியம் ரத்து செய்யப்பட்டால், தமிழக அரசுக்கு, ஆண்டுக்கு கூடுதலாக, 240 கோடி ரூபாய் செலவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு, ரேஷன் கடைகளில், ஒரு கிலோ சர்க்கரை, 13.50 ரூபாய்க்கு வழங்குகிறது. இதற் காக மாதந்தோறும், 3.60 கோடி கிலோ சர்க்கரை யை கொள்முதல் செய்கிறது. அதாவது, ஒரு கிலோ, 38 ரூபாய்க்கு, தமிழக அரசு வாங்கு கிறது. இதில், மத்திய அரசு, கிலோ வுக்கு, 18.50 ரூபாய்மானியம் வழங்குகிறது.அதிலும், தமிழக அரசு வாங்கும் மொத்த சர்க்கரைக் கும் தரப்படாமல், பாதி அளவுக்கும் குறைவாக, 1.08 கோடி கிலோவிற்கு மட்டுமே மானியம் ... |
| '3 நாட்களுக்குள் அகற்றப்படும்' Posted: 03 Feb 2017 08:55 AM PST புதுடில்லி, 'சென்னை அருகே, கடலில் ஏற் பட்டுள்ள எண்ணெய் கசிவு படலத்தைஅகற்றும் பணி, 80 சதவீதம் முடிந்துள்ளது; மூன்று நாட்களுக்குள், முழுமையாக அகற்றப்பட்டு விடும்' என, ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர், மன்சுக் லால் மாண்ட வியா, ராஜ்யசபாவில், நேற்று தாக்கல் செய் துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சென்னை அருகே கடலில், இரு கப்பல்கள் மோதியதில், ஒரு கப்பலில் கொண்டு செல்லப் பட்ட, பி.ஓ.எல்., எனப்படும், பெட்ரோலிய மசகு எண்ணெய் கடலில் கலந்து, மிகபெரிய அளவில் மாசுவை ஏற்படுத்தி உள்ளது.இந்த எண்ணெய் ... |
| 'டிஜிட்டல்' பரிவர்த்தனையால் வேலைவாய்ப்பு அதிகரிப்பு Posted: 03 Feb 2017 09:02 AM PST மத்திய அரசின், 'டிஜிட்டல்' பரிவர்த்தனை திட்டத்தால், ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையால், வங்கிகள், தனியார் வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும், பி.ஓ.எஸ்., எனப்படும், 'டெபிட், கிரெடிட் கார்டு' பயன்படுத்தும் கருவிகள் பயன் பாடு கட்டாயமாகியுள்ளது. அதேபோல், கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, வங்கி களின் சார்பில், கூடுதல் ஏ.டி.எம்., மையங்கள் அமைக்கப்படுகின்றன. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு என, தனியாக மின்னணு மையங்களும், கருவிகளும் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களின் ... |
| Posted: 03 Feb 2017 09:12 AM PST அ.தி.மு.க.,வில், நியமன பொதுச் செயலரான சசிகலாவுக்கு, புதிய நிர்வாகிகளை நியமிக்க அதிகாரமில்லை என்ற, திடீர் சர்ச்சை வெடித்துள்ளது. கோஷ்டிகளை சமாளிக்க, ஒரே நாளில், 23 பேருக்கு பதவிகளை வாரி வழங்கியதற்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சசிகலா வருகைக்கு பின், கட்சியில், காங்., கலாசாரம் தலைதுாக்குவதாகவும், தொண்டர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.தமிழக காங்கிரசில், கோஷ்டிகளை சமாளிக்க வும், சரிக்கட்டவும், ஏராளமான பதவிகள் வழங்கப்படுவது உண்டு. அதே போல், ஆளும், அ.தி.மு.க.,வில், 23 பேருக்கு, திடீரென கட்சி பதவிகளை வாரி வழங்கியுள்ளார், அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா.தன் ... |
| நாளை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: அ.தி.மு.க.,வில் மீண்டும் பரபரப்பு Posted: 03 Feb 2017 09:14 AM PST அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், அ.தி.மு.க., வட்டாரத்தில், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தை முன்னிட்டு, ஜன., 27ல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா நடத்தினார். அதில், 'அனை வரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்; மக்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்' என, அறிவுரை கூறினார்.இக்கூட்டத்தில், முதல்வர் பதவியேற்கும்படி, தன்னை, எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்துவர் என, சசிகலா எதிர்பார்த்தார். ஆனால், யாரும் கோரிக்கை வைக்கவில்லை. 'எந்த அவசியமும் இன்றி, கூட்டம் நடத்தப்படுகிறது' என, ... |
| தமிழக அரசின் முதன்மை செயலர், முதல்வரின் தனிச்செயலர் பதவி விலகல்? Posted: 03 Feb 2017 11:10 AM PST
சென்னை: தமிழக அரசின் முதன்மை செயலர் மற்றும் முதல்வரின் தனிச்செயலர் இருவரும் பதவி விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலகல்? தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெங்கட்ராமன், முதல்வரின் தனிச்செயலாளர் ராமலிங்கம் ஆகிய இருவரும் தங்களது பொறுப்பிலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் நேற்று பொறுப்பிலிருந்து விலகியதாக கூறப்பட்டது. இதையடுத்து மேலும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடுத்தடுத்து பொறுப்பிலிருந்து விலகிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ... |
| 'நீட்' தேர்வு எழுத புதிய சலுகை Posted: 03 Feb 2017 01:17 PM PST
புதுடில்லி : மூன்று முறை தேர்வு எழுதியவர்களுக்கு, 'நீட்' எழுதுவதற்கான தடை விலக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இணையதளத்தின், 'கோடிங்' மாற்றாததால், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டாயம்: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' தேர்வு, மே 7ல் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஜன., 31ல் வெளியானது. இந்த தேர்வில், கடந்த மூன்று முறை எழுதியவர்கள், விண்ணப்பிக்க முடியாது என, ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், 'நீட்' தேர்வு முழுமையாக, இந்த ஆண்டுதான் கட்டாயம் ... |
| ஒரே அலைபேசி நோய் தொற்று ஏற்படும்; முன்னெச்சரிக்கை தேவை Posted: 03 Feb 2017 02:15 PM PST
புதுடில்லி: ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. நோய் தொற்று: லோக்சபாவில் நேற்று, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர், பாகன் சிங் குலோஸ்தே கூறியதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், 2015ல், அலைபேசி தொற்று தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளது; இதில், ஒரே அலைபேசியை பலர் பயன்படுத்துவதால், நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 81% வாய்ப்பு: |
| விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி Posted: 03 Feb 2017 03:05 PM PST
புதுடில்லி : விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. புதிய 100 ரூபாய் நோட்டுகள்: கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த நவ.,8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய 500 மற்றும் 2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் புதிய 100 ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அம்சங்கள்: |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 04,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |