Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெ., சொத்து வழக்கு செலவு வசூலிக்க கர்நாடகா தயாராகிறது

Posted: 28 Feb 2017 07:11 AM PST

பெங்களூரு:''ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை செலவு விபரங்களை, கர்நாடக அரசு சேகரித்து வருகிறது.

பணி முடிந்ததும், வழக்கு செலவு தொகையை ஒப்படைக்க, தமிழக அரசிடம் கோரப்படும்,'' என, கர்நாடக சட்டத்துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார்.
கர்நாடக சட்டத் துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா, பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:ஜெ., சொத்து குவிப்பு வழக்குவிசாரணை செலவை வழங்கும்படி, உச்ச நீதி மன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், கர்நாடக அரசும் ஏராளமாக செலவு செய்துள்ளது. அந்த விபரங்கள் சேகரிக்கப்படு கின்றன. ...

நாடு தழுவிய வங்கி 'ஸ்டிரைக்'; ரூ.1.3 லட்சம் கோடி முடக்கம்

Posted: 28 Feb 2017 07:24 AM PST

நாடு முழுவதும் , வங்கி ஊழியர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, 1.3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, வங்கி பரிவர்த்தனைகள் முடங்கின.

தமிழகம் உட்பட, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள், அலுவலர்கள், நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.வங்கி பணிகள், தனியாரிடம் ஒப்படைப்பு;காலிப்பணி யிடங்களை நிரப்பாதது; வாரம் ஐந்து நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடந்தது.சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப் பாட்டத்தில், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க மூத்த ...

சிறை குற்றவாளியை அமைச்சர்கள் சந்திக்கலாமா?

Posted: 28 Feb 2017 07:35 AM PST

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவை, தமிழகத்தை சேர்ந்த நான்கு முக்கிய அமைச்சர்கள் சந்தித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவை சந்திக்க, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர், நேற்று காலை, சென்னை யில் இருந்து பெங்களூரு வந்தனர். இதன்பின், கூட்டுறவு ...

சபாஷ்! ஜூலை முதல் அமலுக்கு வருகிறது ஜி.எஸ்.டி.,: எல்லா மாநிலங்களும் ஒப்புதல் அளித்ததாக தகவல்

Posted: 28 Feb 2017 07:57 AM PST

புதுடில்லி:ஒரே சீரான வரிவிதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை,1 முதல், நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ், நேற்று கூறியதாவது:ஜி.எஸ்.டி.,வரி விதிப்பு முறையை அமல்படுத் துவதற்கு,அனைத்து மாநில அரசுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.தற்போதைய சூழ்நிலையில், ஜூலை, 1 முதல் இந்த வரி விதிப்பு முறையை, நாடு முழுவதும் அமல் படுத்துவதற்கு, மத்திய அரசு தயாராக உள்ளது. இது மிகப் பெரிய பணி; இதற்காக அனைத்து மாநிலங்களும் தயாராகி வருகின்றன. அதனால், ...

முதல்வர் மாவட்டத்தில் எதிர்ப்பு அதிகரிப்பு அரசு விழா நடத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை

Posted: 28 Feb 2017 08:01 AM PST

தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது தாக்குதல் முயற்சி தொடர்வதால், முதல்வர் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், பொதுக்கூட்டங்களை நடத்தவும், நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த வர், முதல்வர் பழனிசாமி. அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது.முதல்வரின்மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது செருப்பு மாலை வீச்சு, முற்றுகை போராட்டம் நடத்தி, பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில், ...

வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை போட்டவர்கள்...எங்கே? இன்று முதல் விற்பனை இல்லை எனச் சொன்னவர்கள் 'கப்சிப்': அனைத்து கடைகளிலும் சிறப்பாக நடக்கிறது வியாபாரம்

Posted: 28 Feb 2017 08:20 AM PST

வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை போட்டவர்கள் எல்லாம் எங்கே போயினர் என தெரியவில்லை.

'இன்று முதல் கடைகளில் விற்க மாட்டோம்' எனச் சொன்னவர்கள், 'கப்சிப்' என, அமைதி யாகி விட்டனர். அதனால், அனைத்து கடை களிலும் உள்ளூர் குளிர்பானங்களை விட, அன்னிய குளிர்பானங்களின் வியாபாரம் எப்போதும் போல் சிறப்பாக நடக்கிறது.தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டங்களில் பங்கேற்ற இளைஞர்கள், உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய, வெளிநாட்டு குளிர்பான விற்பனையை தடை செய்யுமாறு வலியுறுத்தினர். அதை ஏற்று, வியாபாரிகள் சங்கத்தினர், தாங்களாகவே முன்வந்து, 'மார்ச் 1ல் ...

காங்கிரசுக்கு ஓரிரு இடங்கள் போதும்! மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

Posted: 28 Feb 2017 08:29 AM PST

'உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுக்கான இடங்களை, மாவட்ட அளவில் முடிவு செய்து கொள்ளுங்கள்' என, தி.மு.க., மாவட்ட செயல ருக்கு, ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டி உள்ளார். தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில், அக்கட்சி யின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

அதில், அவர் பேசியது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல், தடை ஏற்படுத்து வதற்கு, ஆளுங் கட்சி தரப்பில், பல்வேறு வியூகங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன. அவற்றை, நீதிமன்றம் வாயிலாக நாம் முறியடிப்போம். உள்ளாட்சி தேர்தலில், மாவட்ட அளவில், காங்கிரசுக்கான ...

ஜெ., மரணம் குறித்து விசாரணை தேவை; ஜனாதிபதியிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

Posted: 28 Feb 2017 08:43 AM PST

'ஜெயலலிதா மரணம் குறித்து, மத்திய அரசின் மேற்பார்வையில், நீதி விசாரணையோ, சி.பி.ஐ., விசாரணையோ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தோ விசாரணை நடத்த வேண்டும்' என்று ஜனாதிபதியிடம், அ.தி.மு.க., -- எம்.பி.,க்கள் 12 பேர் கோரிக்கை வைத்தனர்.

பன்னீர்செல்வம் ஆதரவுஎம்.பி.,க்களான, மைத் ரேயன் தலைமையிலான,12 பேர் அடங்கிய குழு, நேற்று, டில்லியில் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசியது. இந்த சந்திப்புக்கு பின், மைத்ரேயன் கூறியதாவது:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது அல்ல என பொது மக்கள், அ.தி. மு.க., தொண்டர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது. ...

ஜெ., மரணத்தை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்; 8ல் பன்னீர் அணியினர் உண்ணாவிரதம்

Posted: 28 Feb 2017 08:59 AM PST

ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து, மத்திய அரசு நேரடி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் முதல்வர், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 8ம் தேதி, மாவட்ட தலைநகரங்களில், உண்ணா விரதபோராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அப்பல்லோ:
முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் மரணத்தில், பல்வேறு சந்தேகங்கள் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது, சசிகலா , குடும்பத்தினரை தவிர, வேறு யாரும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. மேலும், ஜெ., மருத்துவ மனைக்கு வரும் போது, சுய நினைவோடு வந்தாரா அல்லது மயக்க ...

பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பிரதமரிடம் கோரிக்கை: பழனிசாமி

Posted: 28 Feb 2017 10:48 AM PST

சென்னை: ‛தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது' என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கோரிக்கை:
டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த பழனிசாமி, சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். இலங்கை சிறையிலுள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தினேன். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க வலியுறுத்தினேன். வறட்சி நிவாரணம், வர்தா ...

கார்கில் தியாகி மகளுக்கு மிரட்டல்; போராட்டத்தில் இருந்து விலகினார்

Posted: 28 Feb 2017 12:00 PM PST

புதுடில்லி: கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரரின் மகள், தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல் வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, அடையாளம் தெரியாத மர்ம நபர்களுக்கு எதிராக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏ.பி.வி.பி., அமைப்பினருக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகுவதாகவும், அந்த பெண் அறிவித்துள்ளார்.
எதிர்ப்பு:
டில்லி, ஜே.என்.யு., பல்கலை மாணவர், உமர் காலித், ஷெஹ்லா ரஷித் ஆகியோருக்கு, கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க வரும்படி, ராம்ஜாஸ் கல்லுாரி அழைப்பு விடுத்தது. அதற்கு, ஏ.பி.வி.பி., எனப்படும், அகில பாரதிய ...

நம்பர் இல்லாத நோட்டு; ம.பி., மக்கள் கலக்கம்

Posted: 28 Feb 2017 01:05 PM PST

போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள, ஏ.டி.எம்.,ல் இருந்து எடுக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளில், வரிசை எண் இல்லாமல் இருந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள், பல்வேறு இடங்களில் சிக்கின. இதற்கிடையில், டில்லியில் உள்ள, ஏ.டி.எம்.,ல், பணம் எடுத்தவர்களுக்கு 2,000 ரூபாய்க்கு பதிலாக, அதே நிறத்தில், வடிவத்தில் இருக்கும் குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுகள் கிடைத்தன.
இந்த பரபரப்பு ...

மல்லையா சொத்துகளை முடக்க கோர்ட் அனுமதி

Posted: 28 Feb 2017 02:01 PM PST

புதுடில்லி: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான, 4,200 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய, அமலாக்கத் துறைக்கு, சிறப்பு கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
தலைமறைவு:
கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவன், 'கிங் பிஷர்' நிறுவன அதிபர் விஜய் மல்லையா; வங்கிகளில் பெற்ற கோடிக் கணக்கான ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளான். அவனிடமிருந்து கடன் தொகையை வசூல் செய்ய, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
கோர்ட் அனுமதி:
இந்நிலையில், மல்லையா, சட்ட ...

ராகுல் பேசியது கீழ்த்தரமான பேச்சு: வெங்கையா நாயுடு

Posted: 28 Feb 2017 03:15 PM PST

புதுடில்லி: ‛பிரதமருக்கு ஓய்வு அவசியம் என ராகுல் பேசியது கீழ்த்தரமான பேச்சு' என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
உ.பி.,யில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில், மோடி களைப்படைந்துள்ளார்; அவருக்கு ஓய்வு அவசியம். அகிலேஷ் மீண்டும் உ.பி., முதல்வராவதன் மூலம் பிரதமருக்கு அவரால் ஓய்வு கொடுக்க முடியும் என பேசியிருந்தார்.
ராகுலின் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: முக்கிய விவாதங்களின் போது, பார்லி., நடவடிக்கைகளில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™