Tamil News | Online Tamil News |
- நெடுவாசல் திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது: மத்திய அரசு விளக்கம்
- நெடுவாசல் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்? : வன்முறை நிகழலாம் என உளவு துறை எச்சரிக்கை
- 'தொடர்பில்லை!' ஜல்லிக்கட்டு போராளிகளின் புதிய கட்சியுடன் எங்களுக்கு...
- ரயில்வேயில் புதிய உணவு 'சப்ளை' கொள்கை... அறிமுகம் ...! பயணிகளுக்கு தரமான உணவு கிடைக்க நடவடிக்கை
- 'பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்க சதி'
- முதல்வர் பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் கண்டனம்
- ரேஷன் பொருட்கள் வினியோக குளறுபடி; தி.மு.க., செயல் தலைவர் எச்சரிக்கை
- நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஸ்டாலின் வழக்கு சபாநாயகர், முதல்வர் பதிலளிக்க ஐகோர்ட் 'நோட்டீஸ்'
- மெரினாவில் இன்னொரு போராட்டமா? ; அஞ்சி நடுங்கும் தமிழக அரசு
- கர்நாடகாவின் காவிரி நீர் பாக்கி 116 டி.எம்.சி., வறண்டு விடும் நிலையில் மேட்டூர் அணை
- இனவெறிக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஹிலாரி
- 'சிமி' பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை
- தமிழை கொலை செய்யும் தமிழ் படங்கள் - சமூக ஆர்வலர்கள் வேதனை
- மதபோதகர் ஜாகிருக்கு அமலாக்கத்துறை 'சம்மன்'
| நெடுவாசல் திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது: மத்திய அரசு விளக்கம் Posted: 27 Feb 2017 08:39 AM PST புதுடில்லி:தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் மேற்கொள்ளப்படும், 'ஹைட்ரோ கார்பன்' திட்டத்தால், விவசாய நிலம், நிலத்தடி நீராதாரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. மாறாக, தமிழக அரசுக்கு, 40 கோடி ரூபாய் உரிமத் தொகை கிடைப்பதுடன், 500 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: குறுகிய நிலப்பரப்பில் இருந்து எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்கும் கொள்கையின் அடிப்படையில், நாடு முழுவதும், 31 இடங்களில், ஹைட்ரோகார்பன் போன்ற எரிபொருட்களை ... |
| நெடுவாசல் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல்? : வன்முறை நிகழலாம் என உளவு துறை எச்சரிக்கை Posted: 27 Feb 2017 09:03 AM PST நெடுவாசல் போராட்டத்தில், சமூக விரோத சக்திகள் ஊடுருவி இருப்பதாகவும், வன்முறை வெடிக்கும் சூழல் உருவாகி உள்ளதாகவும், மத்திய உளவு போலீசார் எச்சரித்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் எனப்படும், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிராக, போராட்டம் நடந்து வருகிறது. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என, பல தரப்பினரும், இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.மத்திய அரசுக்கு அறிக்கை அவர்களுடன், மத்திய அரசுக்கு எதிராக செயல்படும், சில சமூக விரோத சக்திகள் ஊடுருவி, வன்முறைக்கு ... |
| 'தொடர்பில்லை!' ஜல்லிக்கட்டு போராளிகளின் புதிய கட்சியுடன் எங்களுக்கு... Posted: 27 Feb 2017 09:07 AM PST 'ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்ததாகக் கூறி, அரசியல் கட்சி துவக்கியுள்ளவர்கள், மாணவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்றனர். அவர்களுடன், எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை' என, உண்மையான போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். தங்களுக்கு கட்சி துவக்கும் திட்டம் எதுவும் இல்லை என, வெளிப்படுத்திய அவர்கள், புதிய கட்சி துவக்கியோரின் பின்னணி குறித்தும், சந்தேகம் கிளப்பி உள்ளனர். தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஜன., 17ல், சென்னை, மெரினாவில், இளைஞர்கள் போராட்டம் துவக்கினர். முதலில், ௫௦ பேருடன் துவங்கிய போராட்டம், ... |
| ரயில்வேயில் புதிய உணவு 'சப்ளை' கொள்கை... அறிமுகம் ...! பயணிகளுக்கு தரமான உணவு கிடைக்க நடவடிக்கை Posted: 27 Feb 2017 09:13 AM PST ரயில்வே துறையில், சமையல் மற்றும் உணவு வினியோகப் பணிகளை தனியாக பிரிக்கும் வகையில், புதிய உணவு சப்ளை கொள்கையை, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுரேஷ் பிரபு, நேற்று துவக்கி வைத்தார். இதன் மூலம், உணவு சப்ளை பணிகள் அனைத்தும், ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும், உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விலை குறித்து, ஏராளமான புகார்கள், ரயில்வே துறைக்கு வந்துள்ளன. இவற்றுக்கு தீர்வு காணும் வகையில், புதிய, உணவு சப்ளை கொள்கையை, ரயில்வே துறை வகுத்துள்ளது. இதன்படி, ... |
| 'பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்க சதி' Posted: 27 Feb 2017 09:18 AM PST லக்னோ, :''உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்க, சதி நடக்கிறது,'' என, பிரதமர் மோடி பேசினார். உத்தர பிரதேசத்தின் மாவ் பகுதியில், நேற்று நடந்த பா.ஜ., பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:உ.பி., சட்டசபை தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்வாதி கட்சிகளுக்கு தெரிந்துவிட்டது. அதனால், பா.ஜ.,வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கக் கூடாது; தொங்கு சட்டசபை வர வேண்டும்; அப்போது பேரம் பேசலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டு உள்ளன.ஆனால், மக்கள் மிகவும் தெளிவானவர்கள். லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு தனிப் ... |
| முதல்வர் பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் கண்டனம் Posted: 27 Feb 2017 09:49 AM PST சென்னை:முதல்வர் பழனிசாமிக்கு, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஜெ., பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட, தமிழகம் முழுவதும் ஊர்வலங்கள், கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என, பல நிகழ்ச்சிகளுக்கு, கட்சியினர் ஏற்பாடு செய்தனர்.போலீசாரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்த போது, முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டில் இயங்கும் போலீசார், அனுமதி தர மறுத்து விட்டனர். திரும்பும் திசை எங்கும், ஜெ., படம் இருக்க வேண்டும் என்ற தொண்டர்களின் ஆர்வத்திற்கு, காவல் துறை ஏன்தடை போட்டது.அனுமதி தர ... |
| ரேஷன் பொருட்கள் வினியோக குளறுபடி; தி.மு.க., செயல் தலைவர் எச்சரிக்கை Posted: 27 Feb 2017 09:53 AM PST சென்னை,:'ரேஷன் கடைகளில், பொருட்கள் கிடைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்தால், தி.மு.க., மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தும்' என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: ரேஷன் கடைகளில், 20 கிலோ இலவச அரிசி, முழுமையாக கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக, 10 கிலோ கோதுமை வழங்கப்படும் என அறிவித்தும், அதையும் உருப்படியாக வழங்குவதில்லை. முதல் வாரத்தில் கிடைக்கும், சில அத்தியாவசிய பொருட்கள், இரண்டாவது வாரத்தில் கிடைப்பதில்லை என்ற அவல நிலை, சென்னை உட்பட, தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும் தொடர்கிறது.தொடர்ந்து ... |
| நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு எதிராக ஸ்டாலின் வழக்கு சபாநாயகர், முதல்வர் பதிலளிக்க ஐகோர்ட் 'நோட்டீஸ்' Posted: 27 Feb 2017 09:57 AM PST சென்னை, :'முதல்வர் பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு செல்லாது' என, அறிவிக்கக் கோரிய மனுவுக்கு, பதிலளிக்கும்படி, சபாநாயகர், முதல்வர் உள்ளிட்டோருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. 'வீடியோ' பதிவை தாக்கல் செய்ய, சட்டசபை செயலருக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு மீது, பிப்., 18ல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அதில், பழனிசாமிக்கு ஆதரவாக, 122; எதிராக, 11 ஓட்டுகள் கிடைத்தன.'சபாநாயகரின் முடிவு செல்லாது 'சபாநாயகரின் இந்த முடிவு சட்ட விரோத மானது; சபை விதிகளுக்கு எதிரானது; ... |
| மெரினாவில் இன்னொரு போராட்டமா? ; அஞ்சி நடுங்கும் தமிழக அரசு Posted: 27 Feb 2017 10:35 AM PST
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை எதிர்த்து, மாணவர்களும், விவசாயிகளும், வியாபாரிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டியை இந்தாண்டு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, சமூக வலைதளங்களில் அழைப்பு விடுத்து, தமிழக இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாக, சென்னை, மெரினாவில் கூடி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெரினா கலவரம்: கோரிக்கை நிறைவேறிய பின்னும், போராட்டக்காரர்கள், அங்கிருந்து ... |
| கர்நாடகாவின் காவிரி நீர் பாக்கி 116 டி.எம்.சி., வறண்டு விடும் நிலையில் மேட்டூர் அணை Posted: 27 Feb 2017 10:53 AM PST கர்நாடகாவின் காவிரி நீர் பாக்கி, 116 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளதால், மேட்டூர் அணை வறண்டு விடும் நிலையில் உள்ளது. டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமான மேட்டூர் அணை, 93.4 டி.எம்.சி., கொள்ளளவு உடையது. கர்நாடகா அணைகளில் இருந்து வரும் காவிரி நீர் தான், மேட்டூர் அணையின் முக்கிய நீராதாரம். ஆண்டுதோறும், மேட்டூர் அணைக்கு, 193 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இதில், ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி நடுவர் மன்றம் இறுதி செய்துள்ளது. அதன்படி, 2016 ஜூன் முதல், இந்தாண்டு, பிப்., 23 வரை, 183.8 டி.எம்.சி.,யை, கர்நாடகா வழங்கி இருக்க வேண்டும். ஆனால், ... |
| இனவெறிக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஹிலாரி Posted: 27 Feb 2017 11:30 AM PST
கான்சஸ்: அமெரிக்காவில் தொடந்து நடந்து வரும் இனவெறி குற்றங்களுக்கு எதிராக அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிலாரி கிளிண்டன் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கான்சஸ் மாகாணத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இனவெறி காரணமாக நடந்த துப்பாக்கி சூட்டில் ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் குச்சிபோத்லா என்ற இன்ஜினியர் ஒருவர் பலியானார். இச்சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அந்நாட்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் கருத்து தெரித்துள்ளார். அவர் ... |
| 'சிமி' பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை Posted: 27 Feb 2017 12:27 PM PST
இந்துார் : தடை செய்யப்பட்டுள்ள, 'சிமி' எனப்படும், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு முன்னாள் தலைவன் உட்பட, 11 பேருக்கு, சி.பி.ஐ., கோர்ட், ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஆயுத தடை சட்டம், வெடிபொருள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ், 'சிமி' பயங்கரவாத அமைப்பின் முன்னாள் தலைவன், சப்தார் நகோரி, அவன் சகோதரன், கம்ருதீன் நகோரி உள்ளிட்ட, 11 பேர், ம.பி., மாநிலம், இந்துாரில், 2008, மார்ச்சில், கைது செய்யப்பட்டு, சி.பி.ஐ., கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், சி.பி.ஐ., கோர்ட் சிறப்பு நீதிபதி, பி.கே.பலோடா, 'சிமி' ... |
| தமிழை கொலை செய்யும் தமிழ் படங்கள் - சமூக ஆர்வலர்கள் வேதனை Posted: 27 Feb 2017 01:32 PM PST
தமிழுக்கு ஏற்பட்ட வறட்சியால், தமிழ் படங்களே தமிழே கொலை செய்து வருகின்றன. வாயில் நுழையும் வார்த்தைகள் எல்லாம், படங்களின் தலைப்பாக மாறுவது, கோலிவுட்டில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜென்டில்மேன், லவ் டுடே என, தமிழ் படங்களுக்கு, ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் கலாசாரம் அதிகரித்தது. 'தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே, படங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும்' என்ற நடைமுறை, தி.மு.க., ஆட்சியில் அமலானது. தமிழா, இல்லையா குழப்பம்: ஜில்லா, மிருதன், கெத்து, கபாலி, ஜில் ஜங் ஜக், மெட்ராஸ் உட்பட, பல படங்களின் ... |
| மதபோதகர் ஜாகிருக்கு அமலாக்கத்துறை 'சம்மன்' Posted: 27 Feb 2017 02:28 PM PST
மும்பை: சர்ச்சைக்குரிய மதபோதகர், ஜாகிர் நாயக் மற்றும் கூட்டாளிகளுக்கு, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை, நேற்று, புதிதாக, 'சம்மன்' அனுப்பியுள்ளது. சர்ச்சைக்குரிய மதபோதகர், ஜாகிர் நாயக், ஐ.ஆர்.எப்., எனப்படும், இஸ்லாமிக் ஆராய்ச்சி மையத்தை தோற்றுவித்து நடத்தி வருகிறார். ஜாகிரின் போதனைகள் பயங்கரவாதத்தை துாண்டும் வகையில் உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, வெளிநாட்டில் அவர் தலைமறைவாக உள்ளார். கடந்த டிசம்பரில், ஜாகிர் மற்றும் கூட்டாளிகளுக்கு எதிராக, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 28,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |