Tamil News | Online Tamil News |
- அச்சுறுத்தும் அமெரிக்க கனவு:அதிர்ச்சியில் பெற்றோர்
- முதல்வருக்கு எதிராக நீதிபதி போராட்டம்?
- கறுப்புப் பணம், லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்களுக்கு மோடி...அழைப்பு! டிஜிட்டல் பரிவர்த்தனை ஆயுதமாக மாறியுள்ளதாக பெருமிதம்
- சுய நலத்திற்காக கண்டனக்கணை; பன்னீர் மீது ஸ்டாலின் தாக்கு
- அ.தி.மு.க.,வில் சசிகலா ஆதரவு கூடாரம்... காலியாகிறது!:கிளை கழக நிர்வாகிகளும் பன்னீர் அணிக்கு ஓட்டம்:தினகரனுக்கு தொண்டர்கள் எதிர்ப்பு வலுப்பதால் அதிரடி:உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் பதவியை பிடிக்க தீவிரம்
- ஏமாற்றுவோருக்கு ஏற்ற ஜனநாயகம்! பிரிட்டனில் ஜெட்லி வருத்தம்
- தனி மாவட்டமாகிறது இடைப்பாடி:முதல்வர் பழனிசாமி திட்டம்
- பேரவை செயலர் நியமனத்திற்கு எதிர்ப்பு; தீபா வீட்டு முன் ஆதரவாளர்கள் ரகளை
- நீர் நிலைகளை புனரமைக்க நிதி அரசு ஒதுக்காததால் அதிருப்தி
- மதவாதம் பேசாதீர்; தேர்தல் கமிஷன் கண்டிப்பு
- மணப்பாடு படகு விபத்து: தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு
- கிழக்கு கடற்கரை சாலையில் 'ரேஸ்' ; சொகுசு கார்கள் பறிமுதல்
- இந்தியாவின் பணக்கார நகரம்: மும்பைக்கு முதலிடம்
| அச்சுறுத்தும் அமெரிக்க கனவு:அதிர்ச்சியில் பெற்றோர் Posted: 26 Feb 2017 07:59 AM PST அமெரிக்காவில், இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அங்கு வசிக்கும் நம் நாட்டினரை மட்டுமின்றி, இங்குள்ள அவர்களின் உறவினர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில், வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் எதிர்காலம், டிரம்ப், அதிபராக பதவியேற்றது முதல் கேள்விக்குறியாகியுள் ளது. அவரது அரசு, இந்தியா போன்ற நாடு களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பொறியாளர் களுக்கு, அங்கு பணிபுரிவதற்காக வழங்கப் படும், 'எச் - 1பி விசா'வுக்கான, நெறிமுறை களில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர முடிவெடுத்துள்ளது. அந்த விசா மூலம் வருவோருக்கு, ... |
| முதல்வருக்கு எதிராக நீதிபதி போராட்டம்? Posted: 26 Feb 2017 08:03 AM PST புதுடில்லி:'தமிழகத்தில் அமைந்துள்ள, சிறையில் இருந்து நடத்தப்படும் பினாமி ஆட்சி நீக்கப்படும் வரை என் போராட்டம் தொடரும்' என, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். 'தமிழன் என்று கூறிக் கொள்வதற்கு வெட்கப் படுகிறேன்' என, நேற்று முன்தினம், 'பேஸ்புக்' சமூகவளைதளத்தில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து, தன் கருத்தை வெளியிட்டி ருந்தார், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு. இந்த நிலையில், நேற்று பதிவிட்டுள்ள மற்றொரு செய்தியில், அவர் கூறியுள்ளதாவது: தமிழர் குறித்து நான்கூறியுள்ள கருத்துக்கு வந்துள்ள ... |
| Posted: 26 Feb 2017 08:19 AM PST புதுடில்லி:''கறுப்புப் பணம் மற்றும் லஞ்சத்தை ஒழிக்கும் ஆயுதமாக, டிஜிட்டல் பரிவர்த்தனை மாறியுள்ளது. கறுப்புப் பணம் மற்றும் லஞ்சம், ஊழலுக்கு எதிரான போரில், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை ஆயுதத்தை ஏந்தும்வீரர்களாக, ஒவ்வொரு இளைஞரும் மாற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி, 'மன் கி பாத்' என்ற பெயரில், ஒவ்வொரு மாதமும், 'ரேடியோ' மூலம், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வரு கிறார். அதன்படி, இந்த மாதத்துக்கான நிகழ்ச்சி, நேற்று ஒலிபரப்பானது. அதில், பிரதமர் மோடி கூறியதாவது:'சுத்தமான பணம்' என்ற பெரும் முயற்சியில் மத்திய அரசு ... |
| சுய நலத்திற்காக கண்டனக்கணை; பன்னீர் மீது ஸ்டாலின் தாக்கு Posted: 26 Feb 2017 08:36 AM PST சென்னை:'பன்னீர்செல்வம், தன் அரசியல் சுய நலத்திற்காக, என் மீது கண்டனக்கணை தொடுக்கிறார்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: அரசு சார்பில், ஜெ., பெயர், படம் இடம் பெறுவது சட்ட விரோதம்; ஜனநாயக நெறிமுறை களுக்கு நேர் எதிரானது. இந்த ஆட்சியாளர்களின் செயல், நீதிமன்ற அவமதிப்பு என்பதோடு, பதவியேற்பின் போது, அவர்கள் ஏற்ற உறுதிமொழிக்கு மாறானது. இதை சுட்டிகாட்டினால், பன்னீர்செல்வம், தன் அரசியல் சுய நலத்திற்காக, என் மீது கண்டனக் கணை தொடுக்கிறார். ஜெ., மீதான அவரது விசுவாசத்தை காட்ட வேண்டு மென்றால், அதற்கு ... |
| Posted: 26 Feb 2017 08:46 AM PST அ.தி.மு.க., துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட தினகரனுக்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில், நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், பதவியை பிடிக்கும் எண்ணத்தில் உள்ள கட்சியின் கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அணிக்கு ஓட்டம் பிடித்து வருகின்ற னர். தங்களது கூடாரம் காலியாவதால், சசிகலா தரப்பு கலக்கத்தில் உள்ளது.தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்ப அரசியலை, மறைந்த முதல்வர்கள் எம்.ஜி. ஆர்., - ஜெயலலிதா ஆகியோர் எதிர்த்து போராடினர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் யாரும், கட்சி ... |
| ஏமாற்றுவோருக்கு ஏற்ற ஜனநாயகம்! பிரிட்டனில் ஜெட்லி வருத்தம் Posted: 26 Feb 2017 08:53 AM PST லண்டன்:''கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாதோர், பிரச்னை இன்றி தங்கும் வகையில், பிரிட்டன் ஜனநாயகம், சுதந்திரமாக உள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார். 'கிங் பிஷர்' விமான சேவை நிறுவனத்தை நடத்திய, தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பி யோடி தலைமறைவாக உள்ளான். இந்நிலை யில், பிரிட்டன் தலைநகர் லண்டனில், 'லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ்' கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், மத்திய நிதியமைச் சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி பேசினார்; ... |
| தனி மாவட்டமாகிறது இடைப்பாடி:முதல்வர் பழனிசாமி திட்டம் Posted: 26 Feb 2017 08:57 AM PST சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சில தாலுகாக்களை இணைத்து, இடைப்பாடியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க, அரசு திட்டமிட்டுள்ள தாக வருவாய் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில், 32 மாவட்டங்கள் உள்ளன. சேலம் மாவட்டத்தில், ஒன்பது தாலுகாக்கள் உள்ளன. தற்போதைய முதல்வர் பழனிசாமி, சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா, சிலுவம்பாளையத்தைச் சேர்ந்தவர். இவர், 2011 அ.தி.மு.க.,ஆட்சியில், நெடுஞ் சாலை,சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். சேலம் நெடுஞ் சாலை துறை கோட்டத்தைப் பிரித்து, இடைப்பாடி கோட்டத்தை உருவாக்கினார். மேட்டூர் ... |
| பேரவை செயலர் நியமனத்திற்கு எதிர்ப்பு; தீபா வீட்டு முன் ஆதரவாளர்கள் ரகளை Posted: 26 Feb 2017 09:10 AM PST சென்னை:ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தான் துவக்கிய பேரவைக்கு, தன் கார் ஓட்டுனரையே பொதுச்செயலர் ஆக்கியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அவரதுவீட்டின் முன் குவிந்த ஆதரவாளர்கள் போராட்டம் மற்றும் ரகளையில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை, அக்கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களில் பெரும்பாலான வர்கள், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத் திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.வேறு சிலரோ, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தி, அவரது ... |
| நீர் நிலைகளை புனரமைக்க நிதி அரசு ஒதுக்காததால் அதிருப்தி Posted: 26 Feb 2017 09:39 AM PST நீர் நிலைகள் புனரமைப்பு திட்டத்திற்கு, சிறப்பு நிதியை அரசு ஒதுக்காததால், பொதுப்பணித் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தமிழகத்தில், பல அணைகள் மற்றும் ஏரிகளின் கரைகள் உடைந்து, அவற்றின் கொள்ளளவு பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால், மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. வரும் காலங்களில், இது போன்ற வறட்சி ஏற்பட்டால், அவற்றை சமாளிப் பதற்கான திட்டங்களை, பொதுப்பணித் துறை வகுத்துள்ளது.இதற்காக, அணைகள் மற்றும்ஏரிகள் கொள்ளளவு மீட்பு, புதிய நீர்த்தேக்கம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மூன்று ... |
| மதவாதம் பேசாதீர்; தேர்தல் கமிஷன் கண்டிப்பு Posted: 26 Feb 2017 11:06 AM PST
புதுடில்லி: 'தேர்தல் பிரசாரத்தின் போது, மதவாத கருத்துக்களை கூறக் கூடாது' என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு, தேர்தல் கமிஷன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் போது மதம் தொடர்பான விஷயங்களை பேசக் கூடாது. மதவாதத்தை துாண்டும் வகையில், தேர்தல் கூட்டங்களில் பேசப்படுவதாக, நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவிக்கின்றன. தேர்தல் நடக்கும் சமயத்தில், தேர்தல் நடக்காத பகுதியில் இருந்து, சிலர் மதவாத கருத்துக்களை கூறுகின்றனர். தகவல் தொழில்நுட்பமும், மின்னணுவியலும் ... |
| மணப்பாடு படகு விபத்து: தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு Posted: 26 Feb 2017 11:45 AM PST
துாத்துக்குடி: மணப்பாடு படகு விபத்தில் பலியான 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. படகு விபத்து: திருச்செந்துார் அருகே உள்ள மணப்பாடு கிராமத்தில், கடலில் சுற்றுலா சென்றவர்களின் படகு மூழ்கியதில் 9 பேர் பலியாயினர். 11 பேர் மீட்கப்பட்டனர். மேலும் 10 பேரை தேடி வருகின்றனர். சுமார் 5 பேர் மட்டும் செல்லும் பைபர் படகில் குழந்தைகள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் சென்றதால், பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது தெரியவந்துள்ளது. உள்ளூர் ... |
| கிழக்கு கடற்கரை சாலையில் 'ரேஸ்' ; சொகுசு கார்கள் பறிமுதல் Posted: 26 Feb 2017 12:53 PM PST
உத்தண்டி : கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாகச் சென்ற பந்தய கார்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். சொகுசு கார் உரிமையாளர்கள், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம் பகுதியில், நேற்று அதிகாலை, 4:30 மணியளவில், 15 அதிஉயர் ரக பந்தய கார்கள் ஒவ்வொன்றாக வந்தன. அணிவகுத்து நின்ற கார்கள், ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து, மாமல்லபுரம் நோக்கி அதிவேகமாகச் சென்றன. இதனால், அதிக சத்தம் கேட்டுள்ளது. அப்பகுதிகளில் வசித்தோர் அதிர்ச்சியடைந்து, வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். ... |
| இந்தியாவின் பணக்கார நகரம்: மும்பைக்கு முதலிடம் Posted: 26 Feb 2017 02:45 PM PST
புதுடில்லி: இந்தியாவின் பணக்கார நகரம் மும்பை என ஆய்வு அறிக்கை தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சென்னைக்கு 7வது இடம் கிடைத்துள்ளது. ஆய்வு முடிவு: இதுகுறித்து நியூ வேர்ல்டு வெல்த் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவிலுள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.360 லட்சம் கோடி. இந்தியாவில் 2 லட்சத்து 64 ஆயிரம் மில்லியனர்களும் (கோடீஸ்வரர்கள்), 95 பில்லியனர்களும் (பெரும் கோடீஸ்வரர்கள்) உள்ளனர். டாப் 5: மும்பையில் உள்ளவர்களின் மொத்த சொத்து மதிப்பு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 27,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |