Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சசிகலாவுக்கு சிறையில் முதல் வகுப்பு மறுப்பு

Posted: 19 Feb 2017 07:58 AM PST

பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவுக்கு, முதல் வகுப்பு அறை ஒதுக்க, சிறைத்துறை அதிகாரிகள் மறுத்துள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும், சசிகலா, அவரது அண்ணி இளவரசி ஆகியோர், முதல் மாடியில் உள்ள மகளிருக்கு ஒதுக்கப்பட்ட சாதாரண அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த அறையில், 'டிவி' மற்றும் 'ஏசி' என சிறப்பு வசதிகள் கிடையாது. அனைத்து வசதிகளும் உடைய, முதல் வகுப்பு அறை வேண்டுமென, சசிகலாவின் வக்கீல்கள், ...

மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்! கவர்னரிடம் பன்னீர் வலியுறுத்தல்

Posted: 19 Feb 2017 08:02 AM PST

'சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை ரத்து செய்ய வேண்டும்; மீண்டும் ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவிடம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தி.முக., செயல் தலைவர் ஸ்டாலினின் பிரதிநிதி களும், அடுத்தடுத்து சந்தித்து வலியுறுத்தினர்.

முதல்வராக பதவியேற்ற, இடைப்பாடி பழனி சாமி, நேற்று முன்தினம், சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோரினார். ரகசிய ஓட்டெடுப்பு என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை; சபையில் ரகளை நடந்தது. பிரதான எதிர்க்கட்சியான, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ...

உ.பி.,யில் குண்டர் ராஜ்ஜியம்: பிரதமர் மோடி ஆவேசம்

Posted: 19 Feb 2017 08:45 AM PST

பதேபூர்:''உ.பி.,யில், குண்டர்கள் ராஜ்ஜியம் நடந்து வருகிறது; மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, சமாஜ்வாதி அரசு தவறிவிட்டது,'' என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உ.பி.,யில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், மார்ச், 8 வரை, ஏழு கட்டங் களாக சட்ட சபை தேர்தல் நடக்கிறது. நேற்று டன், மூன்றாவது கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இந்நிலையில், பதேபூரில் நேற்று நடந்த, பா.ஜ., பிரசாரக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:உ.பி.,யில் குண்டர்கள் ராஜ்ஜியம் பரவிக் கிடக்கிறது. சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, ...

மக்களின் முதல்வராக மாறுங்கள்! சி.பி.ஐ., முன்னாள் இயக்குனரின் திறந்த மடல்

Posted: 19 Feb 2017 09:13 AM PST

'அரசியல் பழிவாங்கலை நிறுத்தி, பெங்களூரு சிறையின் உத்தரவுகளை எதிர்நோக்காமல், மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, மக்களின் முதல்வராக மாற வேண்டும்' என, தமிழக முதல்வர், இடைப்பாடி பழனிசாமிக்கு, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர், ஆர்.கே.ராகவன், ஆலோசனை வழங்கியுள்ளார்.

முதல்வர் இடைப்பாடி பழனிசாமிக்கு, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் எழுதியுள்ள, திறந்த மடலில் கூறியுள்ளதாவது:நான், தமிழகத்தைச் சேர்ந்த சாதாரணமான, மூத்த குடிமகன். கோவையில் பிறந்து, இந்த மாநிலத்தில் படித்தவன். ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றி, 2001ல், சி.பி.ஐ., இயக்குனர் பதவியில் இருந்து ஓய்வு ...

முதல்வருடன் அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன்... ஒட்டுப்புல்!:எங்கே சென்றாலும் ஒட்டிக் கொள்வதால் கட்சியினர் அதிருப்தி:கவர்னர் சந்திப்பின் போதும் உடனிருந்ததால் நிர்வாகிகள் விரக்தி

Posted: 19 Feb 2017 09:19 AM PST

தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள இடைப்பாடி பழனிசாமி எங்கே சென்றாலும், அ.தி.மு.க., துணை பொதுச்செயலர், ஒட்டுப்புல் போல் ஒட்டிக் கொள்வதால், கட்சியினர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று கவர்னரை சந்தித்த போதும்,அவர் உடன் இருந்ததால், முக்கிய நிர்வாகிகளும் விரக்தி அடைந்துள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த ஜெயலலிதா, தன்னுடன் இருந்த, சசிகலா, அவரது சொந்தங்களான டி.டி.வி.தினகரன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட, 18 பேரை, 2011ல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். 'சதிகாரர்கள், துரோகிகள்' என, முத்திரை குத்தி, வீட்டை விட்டும் ...

எம்.எல்.ஏ.,க்கள் மீது மக்கள் கொந்தளிப்பு வீடு, அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted: 19 Feb 2017 09:22 AM PST

சட்டசபையில், இடைப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஓட்டளித்த, எம்.எல்.ஏ.,க்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கூவத்துார் விடுதியில் தங்கியிருந்த சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை, பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க கோரி, தொகுதி மக்கள், சமூக வலைதளங்கள், மொபைல் போன்கள் மூலம் வலியுறுத்தி வந்தனர்.மக்கள் கருத்தை மதித்து, கோவை மாவட்டத் தைச் சேர்ந்த கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் தொகுதி, எம்.எல்.ஏ.,க்கள் மனம் மாறினர்.தொகுதி மக்களின் எண்ணங்களுக்கு புறம்பாக, கோவை தெற்கு, தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு, சூலுார், ...

'கிழியாத எங்க ஊர் பனியன்' ஸ்டாலினை வைத்து காமெடி

Posted: 19 Feb 2017 09:25 AM PST

திருப்பூர்:சட்டசபையில் நடந்த அமளியில், ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது குறித்து, சமூக வலைதளங்களில், கலகலப்பூட்டும் பதிவுகள் வெளியாகி வருகின்றன.

சட்டசபையில், நேற்று முன்தினம் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், கடும் அமளி ஏற்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், கிழிந்த சட்டையோடு, பனியன் வெளியே தெரிய நடந்து வந்து, பேட்டியளித்தார்.இந்த காட்சிகளுக்கு, 'நெட்டிசன்கள்' சிலர், 'மீம்ஸ்' உருவாக்கி வெளியிட்டனர். சட்டைகிழிந்த நிலையில், பனியன் தெரிய ஸ்டாலின் நடந்து வரும் வீடியோ காட்சியுடன், திருப்பூர் பிரபல ஆடை நிறுவனத்தின் விளம்பர பாடலை இணைத்து, ...

ஓட்டளித்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையில் தவறா?

Posted: 19 Feb 2017 09:29 AM PST

சட்டசபையில் நடந்த, ஓட்டெடுப்பில் பங்கேற்ற, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையில் குளறுபடி நிகழ்ந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது தவறானது என, தெரிய வந்துள்ளது.

தமிழக சட்டசபையில், மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 234. ஜெயலலிதா மரணத்தால், ஆர்.கே.நகர் தொகுதி, காலியாக உள்ளது. மீதம், 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, சட்டசபையில், நேற்று முன்தினம், நம்பிக்கை ஓட்டு கோரியது. அப்போது, ஏற்பட்ட அமளி யால், 88 தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளி யேற்றப்பட்டனர். தி.மு.க.,வின் மற்றொரு எம்.எல்.ஏ.,வான, அக்கட்சி தலைவர் ...

'துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு தாங்கய்யா!' அதிகாரியிடம் கெஞ்சிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,

Posted: 19 Feb 2017 09:35 AM PST

கோவை:கொங்கு மண்டலத்தில், தொகுதி பக்கம் செல்ல பயந்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள் இருவர், துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு கேட்டு, போலீஸ் உயரதிகாரியிடம் போனில் கெஞ்சி உள்ளனர்.

சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில், இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனி, அமைச்சர்கள் மற்றும் ஆளுங் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி பக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.கூவத்துாரில் அடித்த கூத்தும், கும்மாளமும் குக்கிராமங்கள் வரை எட்டி விட்டதால், சொந்த ஊருக்கு செல்லும்போது, தொகுதி மக்களின் கடும் அதிருப்திக்கு ...

பழனிச்சாமிக்கு ஓட்டளித்தது ஏன்? யதார்த்தத்தை சொன்னார் எம்.எல்.ஏ.,

Posted: 19 Feb 2017 11:04 AM PST

மிகுந்த பரபரப்புக்கு இடையில், தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிச்சாமி, தனது பெரும்பான்மை பலத்தை நிரூபித்திருப்பதாக, சட்டசபை சபாநாயகர் அறிவித்திருக்கிறார்.
இதில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 பேர் ஓட்டளித்துள்ளதாகவும்; எதிர்ப்பாக 11 பேர் ஓட்டளித்துள்ளதாகவும் சபாநாயகர் அறிவித்திருக்கிறார். சபையில் இருந்தவர்களின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கையில் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், பழனிச்சாமிக்கு ஓட்டளித்தவர்களாக காட்டப்படும் எம்.எல்.ஏ.,க்களில் பாதிக்கும் அதிகமானோர், மனது மயக்கப்பட்ட நிலையில் சபைக்கு ...

நடுங்கும் முன்னாள் அமைச்சர்கள் சசிகலா எடுத்த சபதம் ஏற்படுத்தும் கிலி

Posted: 19 Feb 2017 12:05 PM PST

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா. அங்கு செல்வதற்கு முன், சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்ட சசிகலா, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று வணங்கினார். அப்போது, மூன்று முறை சமாதியில் குனிந்து குனிந்து கையால் ஓங்கி ஓங்கி அறைந்து, சபதம் எடுத்தார்.
அந்த காட்சிகளை அவருக்கு பின்னாலேயே நின்று பார்த்தவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திராவும், வளர்மதியும். சற்று தள்ளி நின்றவர், தலைமைக் கழக ...

தைரியமாக மக்களை சந்திப்பேன்; தொகுதியில் பாண்டியராஜனுக்கு பாராட்டு

Posted: 19 Feb 2017 01:28 PM PST

சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வெற்றி பெற்ற சந்தோஷத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம், தோல்வியைத் தழுவி இருக்கும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி பக்கம் சென்று விட்டனர்.
அந்த வகையில், சென்னை, ஆவடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் மாபா பாண்டியராஜன், நேற்று வழக்கம் போல ஆவடி தொகுதிக்குச் சென்று, மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது, அவரை பெரும் திரளாக கூடி ...

இது யாருன்னு தெரிகிறதா..? கட்ஜு சொல்லாதது புரிகிறதா?

Posted: 19 Feb 2017 02:37 PM PST

நாட்டு நடப்பு, அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக அவலங்கள் குறித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, தன் டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து, அதிரடியான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அவரது, 'லேட்டஸ்ட் பேஸ்புக்' பதிவில், ஆள், பெயர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், அதை புரிந்து கொள்வதற்கு, மூளையை போட்டு கசக்க வேண்டியதில்லை.
பச்சை குழந்தைக்கும் கூட புரியும் வகையில், கட்ஜு பதிவிட்ட முகநுால் பதிவு:
அமெரிக்காவில், சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்படும், 'காட் பாதர்'கள் ...

'பழனிசாமி பதவி வாடகை சேர் தான்': பொன் ராதாகிருஷ்ணன்

Posted: 19 Feb 2017 03:51 PM PST

துாத்துக்குடி:‛‛தமிழக முதல்வராக பதவியேற்ற இடைப்பாடி பழனிசாமி பதவி வாடகை சேர் போன்றது'' என, மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மக்கள் வெறுப்பு:
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: சட்டசபையில் இது வரை ரகசிய வாக்கெடுப்பு நடந்ததில்லை. தமிழக சட்டசபையில் நடந்த சம்பவத்திற்கு, சபாநாயகரும் தி.மு.க.,வும் தான் பொறுப்பு. இது தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., வின் செயல்களால், மக்கள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™