Tamil News | Online Tamil News |
- ஜனாதிபதி ஆட்சி கேட்கும் இளைஞர்கள் : மெரினாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு
- கர்நாடக ஐகோர்ட் செய்த கூட்டல் தப்புகள்!
- தமிழக சிறையில் சசிகலா? வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு
- கோடநாடு எஸ்டேட் 'ஜப்தி'யானால் என்னாகும்? : 600 தொழிலாளர்களுக்கு உறக்கம் போச்சு
- 'நான் சாதா திருடி அல்ல' போலீசிடம் சசி ஆவேசம்
- சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் 'நோட்டீஸ்'
- சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்கள் வருமான வரித்துறை மவுனம் ஏன்?
- கவர்னரை திவாகரன் சந்தித்தது ஏன்?
- சட்டசபையில் இன்று ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர்...பலப்பரீட்சை!:1988ல் நடந்த காட்சிகள் மீண்டும் அரங்கேறுமோ என பதற்றம்:கடைசி நேரத்தில் 16 எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறலாம் என பரபரப்பு
- பழனிச்சாமிக்கு எதிராக காங்., ஓட்டு: முகுல் வாஸ்னிக்
- பன்னீர் ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க., வரிசையில் இடம்
- சசிகலா மேல்முறையீடு செய்ய முடியாது: கட்ஜு
- சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி: கர்நாடக அரசு கடிதம்
- வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம்
| ஜனாதிபதி ஆட்சி கேட்கும் இளைஞர்கள் : மெரினாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு Posted: 17 Feb 2017 07:22 AM PST சென்னை: 'மன்னார்குடி உறவினர்களிடம் தமிழகம் சிக்கியுள்ளது; அந்த கும்பலிடம் இருந்து தமிழகம் காப்பாற்றப்பட, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இதற்காக, மெரினாவில் ஒன்று கூடுவோம்' என்ற தகவல்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. எந்த நேரமும் இளைஞர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், மெரினாவில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, ஜன., 17 முதல், 23 வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாண வர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.சென்னை மெரினாவில், ஆயிரக்கணக்கான மாண ... |
| கர்நாடக ஐகோர்ட் செய்த கூட்டல் தப்புகள்! Posted: 17 Feb 2017 08:24 AM PST 'கூட்டல் கணக்கில் செய்த தவறால், கடன் தொகையை, 24.17 கோடி ரூபாய் என, கர்நாடக உயர் நீதிமன்றம் உயர்த்தி உள்ளது. ஆனால், 10.67 கோடி ரூபாய் என்பது தான், சரியான கணக்கு' என, உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' 570 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை அளித்தது. அந்தத் தீர்ப்பில் உள்ள முக்கிய சாராம்சங்கள்: திராட்சை தோட்ட வருமானம்: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு, ஐதராபாத்தில் ... |
| தமிழக சிறையில் சசிகலா? வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு Posted: 17 Feb 2017 08:29 AM PST பெங்களூரு:சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி, பரப்பன அக்ரஹாரா சிறையில், தண்டனை அனுபவித்து வரும், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, சென்னை சிறைக்கு மாற, முயற்சி மேற்கொண்டு உள்ளார். அ.தி.மு.க., பொதுச் செயலர், சசிகலாவின் உயிருக்கு ஆபத்து உள்ளது' என்ற தமிழக உளவுத் துறை அதிகாரிகளின் தகவல் அடிப் படையில், பெங்களூரு சிறையிலிருந்து, சென்னைக்கு இடமாற்றம் செய்யும்படி கோரி, நீதிமன்றத்தில், சசிகலா மனு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. பரப்பன அக்ரஹாரா சிறையில் அமர்ந்திருந் தால், தமிழக அரசியலை கட்டுப்படுத்துவது கஷ்டம். சென்னை சிறைக்கு இடம் ... |
| கோடநாடு எஸ்டேட் 'ஜப்தி'யானால் என்னாகும்? : 600 தொழிலாளர்களுக்கு உறக்கம் போச்சு Posted: 17 Feb 2017 08:48 AM PST ஊட்டி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி, கோடநாடு எஸ்டேட்டும், ஜப்தி செய்யப்படும் சூழ்நிலை உள்ளதால், அங்கு, 30 ஆண்டுகளாக பணி புரியும் தொழிலாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். ஜெயலலிதா, சசிகலா வாங்கிய பல்வேறு சொத்துகளில், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாடு எஸ்டேட் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில், 900 ஏக்கர் பரப்பில் இருந்த இந்த எஸ்டேட் நிர்வாகத்தின் கீழ் கடந்த, 20 ஆண்டுகளில், மேலும் பல நுாறு ஏக்கர் எஸ்டேட் களும் வந்தன.இந்த தேயிலை தோட்டத்தில், 600 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி, இந்த எஸ்டேட்டும் ஜப்திக்கு வரும் ... |
| 'நான் சாதா திருடி அல்ல' போலீசிடம் சசி ஆவேசம் Posted: 17 Feb 2017 09:15 AM PST பெங்களூரு:'போலீஸ் ஜீப்பில் ஏறுவதற்கு நான் ஒன்றும் சாதா திருடி அல்ல' என,போலீசாரிடம், சசிகலா ஆவேசமாக கூறியுள்ள தகவல், தற்போது வெளியாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் பதவியை கைப் பற்றிய அவர், முதல்வர் பதவியையும்பறிக்க முயற்சிகள் மேற்கொண்டார். இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, அவருடைய கனவுகளை தவிடுபொடியாக்கியது. மேலும், சரணடைய அவகாசம் கேட்டபோது, ... |
| சிறையில் உள்ள சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் 'நோட்டீஸ்' Posted: 17 Feb 2017 09:17 AM PST புதுடில்லி:அ.தி.மு.க.,வின் இடைக்கால பொது செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கும்படி, சசிகலாவுக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள் ளது. பிப்., 28க்குள் பதிலளிக்காவிட்டால், இதில் தகுந்த முடிவை ஆணையமே எடுக்கும் என்றும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, அவருடைய தோழி சசிகலா, அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச் செயலராக பதவியேற்றார். முதல்வர் பதவியை யும் கைப்பற்ற அவர் முயற்சித்ததால், முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் போர் கொடி துாக்கினார். அவருக்கு பல, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் ... |
| சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.,க்கள் வருமான வரித்துறை மவுனம் ஏன்? Posted: 17 Feb 2017 09:28 AM PST கோவை:கூவத்துார் விடுதியில், சொகுசு வாழ்க்கை நடத்திய, எம்.எல்.ஏ.,க்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசியலில் நிலவும் பரபரப்பான சூழலில், சசிகலா ஆதரவுடன் இடைப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பின், அமைச்சர் கள் உட்பட அனைவரும் கூவத்துார் விடுதிக்கு சென்றுள்ளனர்.கூவத்துார் விடுதியில் அடைப் பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் மீது பொது மக்களின் கோபம் திரும்பியுள்ளது. தங்களது எண்ணத்துக்கு ஏற்ப செயல்படாத எம்.எல்.ஏ.,க் களை, ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என, ... |
| கவர்னரை திவாகரன் சந்தித்தது ஏன்? Posted: 17 Feb 2017 09:39 AM PST சசிகலாவின் தம்பி திவாகரன், தன் மகனுடன், கவர்னரை சந்தித்து பூங்கொத்து கொடுத்தது, அ.தி.மு.க.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், 'குற்றவாளி' என தீர்ப்பளிக்கப்பட்டதால், சசிகலா சிறைக்கு சென்றார்.புறக்கணிப்பு அதற்கு முன், கட்சியும், ஆட்சியும், தன் குடும்பத்தை விட்டு சென்று விடக்கூடாது என்பதற்காக, தன் அக்கா மகன் தினகரன், அண்ணன் மகன் வெங்கடேஷ் ஆகியோரை மட்டும் கட்சியில் சேர்த்தார். தினகரனை, துணை பொதுச்செயலராக வும் நியமித்தார்.ஆனால்,தன் தம்பி திவாகரன் மற்றும் உறவினர்க ளான, மகாதேவன், தங்கமணி, ராவணன் ... |
| Posted: 17 Feb 2017 10:37 AM PST தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது. அதனால், 1988ல் நடந்த வன்முறை காட்சிகள் மீண்டும் அரங்கேறுமோ என, பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில், கடைசி நேரத்தில், 16 எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.ஜெ., மறைவை தொடர்ந்து, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். கட்சியை கைப்பற்றியதோடு, ஆட்சியையும் கைப்பற்ற முடிவு செய்தார்.முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, ... |
| பழனிச்சாமிக்கு எதிராக காங்., ஓட்டு: முகுல் வாஸ்னிக் Posted: 17 Feb 2017 10:54 AM PST சென்னை: நம்பிக்கை ஓட்டெடுப்பில் காங்., எதிர்த்து ஓட்டளிக்கும் என அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை ஓட்டு கோருகிறார். இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில், அக்கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. காங்கிரசின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முடிவில் நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்., நிலைப்பாடு ... |
| பன்னீர் ஆதரவாளர்களுக்கு அ.தி.மு.க., வரிசையில் இடம் Posted: 17 Feb 2017 11:56 AM PST சென்னை : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வரிசையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை கூட்டம்: சசிகலாவுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். அவருக்கு, 10 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, புதிய முதல்வராக பொறுப்பேற்ற, இடைப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையை நிரூபிக்க, இன்று(பிப்.,18) சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. 82வது இடம்: இக்கூட்டத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ... |
| சசிகலா மேல்முறையீடு செய்ய முடியாது: கட்ஜு Posted: 17 Feb 2017 01:50 PM PST
திருச்சி: ''சிறை தண்டனை பெற்ற சசிகலா, மேல்முறையீடு செய்ய முடியாது.'' என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, மார்கண்டேய கட்ஜு கூறினார். முடிவுகள் சரியே.. திருச்சி, என்.ஐ.டி.,யில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்த கட்ஜு, விமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: சிறை தண்டனை பெற்ற சசிகலா, மேல்முறையீடு செய்ய முடியாது. சீராய்வு மனு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம். ஆனால், பெரும்பாலான சீராய்வு மனுக்கள், தள்ளுபடி தான் செய்யப்பட்டுள்ளன. இடைப்பாடி பழனிசாமி ஆட்சி குறித்து, ஆறு மாதம் கழித்து தான், விமர்சனம் செய்ய முடியும். தமிழக ... |
| சொத்து குவிப்பு வழக்கு செலவு ரூ.12 கோடி: கர்நாடக அரசு கடிதம் Posted: 17 Feb 2017 02:32 PM PST பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடக அரசுக்கு ரூ.12.04 கோடி வழங்க வேண்டும் என அம்மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கு: மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, இந்த வழக்கு கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடகாவுக்கு ... |
| வெறிச்சோடி கிடக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம் Posted: 17 Feb 2017 03:28 PM PST பெங்களூரு: சசிகலா அடைபட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை வளாகம் அ.தி.மு.க., தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. சசிக்கு சிறை: கடந்த 21 ஆண்டு காலமாக நடந்த சொத்து குவிப்பு வழக்கில் பிப்ரவரி 14 ம் தேதி சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க., பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு நானகு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் உறுதிசெய்யப்பட்டது. ஜெயலலிதா இறந்து விட்டதால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். சுப்ரீம் கோட்டின் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 18,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |