Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை

Posted: 13 Feb 2017 08:33 AM PST

புதுடில்லி,: 'கோர்ட் அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும், கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி, கர்ணன் ஆஜராகவில்லை.

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றிய கர்ணனை, கோல்கட்டா ஐகோர்ட்டுக்கு மாற்றி, கடந்த ஆண்டு, சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் உத்தரவு பிறப்பித்தது.
கடிதம் எழுதினார்
ஆனால், அதை தானாகவே வழக்காக எடுத்துக் கொண்டு, அந்த உத்தரவுக்கு தடை விதித்தார் கர்ணன்.இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, பிரதமர்உள்ளிட்டோருக்கு அவர் ...

மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மாயம் : தமிழகம் முழுவதும் குவியுது புகார்

Posted: 13 Feb 2017 09:00 AM PST

தமிழகம் முழுவதும், 'அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை' என, போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன.

வீரமணி எங்கே?
வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலர் கே.கே.மணி, தன் ஆதரவாளர்களுடன், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.அதில், '6ம் தேதி முதல், எங்கள் தொகுதி சட்டசபை உறுப்பினரும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான வீரமணியை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
* வேளாண் ...

சொகுசு சிறையில் இருந்து விடுதலை எப்போ? : அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் தவிப்பு

Posted: 13 Feb 2017 09:02 AM PST

சொகுசு விடுதிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களை விடுவிக்க, யாராவது நடவடிக்கை எடுக்க மாட்டார்களா என்ற தவிப்பில் உள்ளனர்.

சசி தரப்பினர், தங்களது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, கூவத்துார் மற்றும் பூந்தண்டலத்தில், தனியார் சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளனர். அவர்கள், அங்கிருந்து வெளியேறாமல் இருக்க, பாதுகாப்பு பணியில், குண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
குண்டர்களின் கெடுபிடி
ஒவ்வொரு, எம்.எல்.ஏ.,வுக்கும், மூன்று குண்டர்கள், பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டு ...

எத்தனை எம்.எல்.ஏ.,க்கள்? : சசி பேச்சால் குழப்பம்

Posted: 13 Feb 2017 09:08 AM PST

சசிகலா பேசும் போது, 129 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்தது, அனைத்து தரப்பினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போது, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பன்னீர் உட்பட ஏழு பேர், சசிகலாவுக்கு எதிராக உள்ளனர்.

நட்ராஜ் நடுநிலை
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நட்ராஜ், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, மனிதநேய ஜனநாயக
கட்சி எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆகியோர் நடுநிலை வகிக்கின்றனர்; மீதம், 126 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ...

சிறையா; பதவியா? சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு இன்று தீர்ப்பு

Posted: 13 Feb 2017 09:08 AM PST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் ஆசையில் உள்ள, அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், சுப்ரீம் கோர்ட், இன்று காலை, 10:30 மணிக்கு தீர்ப்பு அளிக்க உள்ளது. 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் தீர்ப்பு, சசிகலாவுக்கு சிறையா; முதல்வர் பதவியா என்பதை தீர்மானிக்க உள்ளதால், மன்னார்குடி கூட்டமும், அவருக்கு ஜால்ரா அடிக்கும் அமைச்சர்களும் பீதியில் உறைந்துள்ளனர்.இதற்கிடையில், கூவத்துாரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் ஓடிவிடக் கூடாது என்பதற்காக, சசிகலா நேற்று அங்கேயே ...

தலைகீழாக நின்று தனி மரமாகும் தம்பிதுரை எதை காட்டுகிறது எம்.பி.,க்களின் தாவல்?

Posted: 13 Feb 2017 09:16 AM PST

பல, எம்.பி.,க்கள் முகாம் மாறிக் கொண்டிருப்பதால், பார்லி மென்டில், அ.தி.முக., இரு அணியாக செயல்படப் போவது உறுதியாகி உள்ளது. இதனால், தம்பி துரையின் பதவிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துஉள்ளது.

சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியுள்ள, முதல்வர் பன்னீர்செல்வத்தை, எத்தனை, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிப்பர் என, பலரும் எதிர்பார்த்திருக்க, எம்.பி.,க் களின் ஆதரவு, கிடுகிடுவென அதிகரித்து, இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.
லாபி' செய்தார்
இதன் பின்னணியில், சசிகலா எதிர்ப்பு என்பதுடன் சேர்த்து, தம்பிதுரையின் மீதான அதிருப்தியும் உள்ளதாக ...

பன்னீருக்கு ஆதரவா?: உரிய நேரத்தில் நல்ல முடிவு ஸ்டாலின் தகவல்

Posted: 13 Feb 2017 09:42 AM PST

''யாருக்கும் ஆதரவு கொடுக்க போவதில்லை; உரிய நேரத்தில், நல்ல முடிவு எடுக்கப்படும்,'' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று, அறிவாலயத்தில் நடந்தது.இதில், 'அரசியல் சட்ட விதிகள் மற்றும் மரபுகளுக்கு உட்பட்டு, தமிழகத்தில், நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னர் தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது உட்பட, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வழிகாட்டுதல்படி
கூட்டத்தில், 'முதல்வர் பன்னீர்செல்வம் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரினால், அவரை ஆதரிக்க வேண்டும்; ...

கடல் வழியே படகில் தப்ப முடியுமா?அடைபட்ட எம்.எல்.ஏ.,க்கள் முயற்சி

Posted: 13 Feb 2017 09:51 AM PST

தீவுக்குள் அமைந்துள்ள, சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்கள், படகு மூலம் தப்ப முடியுமா என, ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்பாக்கத்தை அடுத்துள்ள கூவத்துார், 'கோல்டன் பே' விடுதி, கடலை ஒட்டிய உப்பங்கழி, முகத்துவாரத்தை ஒட்டி உள்ளது. இதில், 34 அறைகள் மட்டுமே உள்ளன. இங்கு, அ.தி.மு.க.,வின், 100 எம்.எல்.ஏ.,க்கள், ஒரு அறைக்கு, மூன்று பேர் வீதம், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.முதல் இரு நாட்களில், எம்.எல்.ஏ.,க்கள் ஆர்வத்துடன் நடனம்ஆடிய காட்சிகள், கேமராக்களில் ரகசியமாக படமாக்கப்பட்டுள்ளதாக,

எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள 'உல்லாச சிறை'யில் நடப்பதென்ன? * 'உள்ளே இருப்பவர்' பரபரப்பு தகவல்

Posted: 13 Feb 2017 10:25 AM PST

சென்னை அருகே கூவத்துாரில் உள்ள சொகுசு விடுதியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதியின் உள்ளே நடந்த நிகழ்வுகள் குறித்து, கொங்கு மண்டல எம்.எல்.ஏ., ஒருவர், மனக்குமுறலுடன் நேற்று கூறியதாவது:

இப்படியொரு இழிநிலை வரும் என, நினைக்கவில்லை. அடிமைகள் போன்று ஆள்பிடித்து வாகனத்தில் அழைத்துச் சென்று, ஆடம்பர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். மனைவி, மக்களிடம் பேசக்கூட அனுமதி கிடையாது; இதை என்னவென்று சொல்வது?'எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என்ற உத்தரவு, போயஸ் கார்டனில் இருந்து வந்தது. அதனால், 'கூட்டம் ...

குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி; அனுமதியுடன் வீட்டுக்குச் சென்ற ஆம்பூர் எம்.எல்.ஏ.,

Posted: 13 Feb 2017 11:04 AM PST

கூவத்தூருக்கு இரண்டாவது நாள் சென்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, அங்குள்ள பண்ணை விட்டில் தங்கியிருந்த கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் என்னிடம் சொல்லுங்கள்; உடனடியாக செய்ய வேண்டியதை நான் செய்து தருகிறேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் செய்ய வேண்டியதை பிறகு செய்து தருகிறேன் என்று உருகி உருகிப் பேசினார்.
தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்
பெண் எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரிடமும், கணவர் எப்படி இருக்கிறார்; ...

சென்னையில் பலத்த பாதுகாப்பு; 20 ஆயிரம் போலீசார் குவிப்பு

Posted: 13 Feb 2017 12:22 PM PST

சென்னை: சசிகலா தொடர்பான சொத்து குவிப்பு வழக்கில் இன்று(பிப்.,14) தீர்ப்பு வருவதால், அசாம்பாவிதங்களை தடுக்க, சென்னையில், 20 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) தீர்ப்பு வெளியாகிறது.
பலத்த பாதுகாப்பு:
தீர்ப்பு, சசிகலாவுக்கு எதிராக இருக்கும் பட்சத்தில், சென்னையின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை ...

பன்னீர் செல்வத்தை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவு

Posted: 13 Feb 2017 02:27 PM PST

'முதல்வரிடம் கட்டாயப்படுத்தி, ராஜினாமா கடிதம் வாங்கியிருப்பது தெரிய வந்தால், அதை ஏற்க தேவையில்லை' என, அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனடிப்படையில் தான், பன்னீர்செல்வத்தின் கடிதத்தை, கவர்னர் ஏற்காமல் இருந்திருக்கலாம் என,தெரிகிறது.

அதிர்ச்சி:
முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக, கவர்னர் அலுவலகம் அறிவித்த பின், அவர் தற்காலிக முதல்வராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலர் சசிகலா, முதல்வராக பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகள் துவங்கின. அப்போது, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™