Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கிராமத்தினர் முற்றுகை: கூவத்தூரிலிருந்து வெளியேறும் எம்.எல்.ஏ.,க்கள்

Posted: 10 Feb 2017 07:53 AM PST

சென்னை: கூவத்துாரில் கிராம மக்கள் முற்றுகையிட்டதால் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் விடுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தை அடுத் கூவத்துாரில் உள்ள கோல்டன் பே என்னும் சொகுசு விடுதி ஒன்றில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் தங்கி உள்ளனர். இந்த தகவல் ஊடகங்கள் மூலமாக பரவியது.
கிராமத்தினர் முற்றுகை
இதையறிந்த, அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுதியை முற்றுகையிட்டனர். எம்.எல்.ஏ.,க்களை விடுதியிலிருந்து வெளியேற கூறி கோஷமிட்டனர். இதனால், எம்.எல்.ஏ.,க்கள் ...

உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்கப்போவது... யார்?: 73 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல்

Posted: 10 Feb 2017 08:06 AM PST

லக்னோ:நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கும், உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல்கட்ட தேர்தல், இன்று நடைபெறுகிறது; ஆட்சி யார் கையில் என்பதை முடிவு செய்யும், உ.பி.,யின் மேற்கு மாவட்டங்களில் உள்ள, 73 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான, உ.பி., யில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், முதல்வராக உள்ளார். அவரது பதவிக்காலம் முடிய உள்ளதையடுத்து, இன்று துவங்கி, மார்ச், 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது; மார்ச், 11ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தேர்தலில், பா.ஜ., பகுஜன் சமாஜ் கட்சிகள் தனித்து ...

விடுமுறையில் முதல்வரின் பாதுகாப்பு எஸ்.பி., : யாரை ஆதரிப்பது என்பதில் குழப்பம்

Posted: 10 Feb 2017 08:25 AM PST

முதல்வர் பன்னீர்செல்வம் - சசிகலா, இருவரில் யாரை ஆதரிப்பது என தெரியாமல், போலீசார் குழப்பத்தில் உள்ளனர். அதனால், முதல்வரின் பாதுகாப்பு பிரிவு, எஸ்.பி., திடீரென விடுமுறையில் சென்றார்.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு பிரிவு, எஸ்.பி., சுதாகர்; மதுரையை சேர்ந்த இவர், 2015 முதல், இப்பொறுப்பில் உள்ளார். முதல்வரின் வாகனம் புறப்படும் முன், அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் கவனிக்க வேண்டிய, முக்கிய பொறுப்பில் உள்ளவர்.
விசாரணை :
ஜெயலலிதா இருக்கும் வரை, பொது நிகழ்ச்சி களில், இவர் தலை காட்டியதில்லை. அவரது மறைவிற்கு பின், ...

ராகுல் 'காமெடி பீஸ்' : பிரதமர் மோடி கிண்டல்

Posted: 10 Feb 2017 08:49 AM PST

லக்னோ: ''வேறெந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத வகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை வைத்துதான் அதிக அளவில், 'ஜோக்'குகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால், மற்றவர்கள் பார்த்து சிரிக்கும் நிலைமையில் அவர் உள்ளார்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கிண்டலாக குறிப்பிட்டார்.

முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைந்துள்ள உத்தர பிரதேசத்தில், ஏழு கட்டங்களாக நடைபெறும் சட்டசபை தேர்தல் இன்று துவங்குகிறது. இந்த நிலையில், பா.ஜ., பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தன்னுடைய சிறுபிள்ளைத்தனமான
...

பொ.செ.,வாக சசிகலா நியமனம் செல்லாது! தேர்தல் கமிஷனுக்கு மதுசூதனன் கடிதம்

Posted: 10 Feb 2017 09:12 AM PST

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என, அவைத் தலைவர் மதுசூதனன், தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து, அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக, சசிகலா அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க., நிறுவன தலைவர், எம்.ஜி.ஆர்., மறைந்த பின், அக்கட்சியின் பொதுச்செயலராக, ஜெயலலிதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு வந்தார். ஜெ., மறைவுக்கு பின், முறைப்படி பொதுச்செயலரை தேர்வு செய்யாமல், பொதுக்குழு உறுப்பினர்கள் பரிந்துரையின்படி, தற்காலிக பொதுச்செயல ராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார்.அவர் தன் குடும்பத்தினர்உதவியுடன், முதல்வர் ...

சசி பிடியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் பட்டினியா? அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிடுக்கிப்பிடி

Posted: 10 Feb 2017 09:31 AM PST

சென்னை:எம்.எல்.ஏ.,க்கள், 20 பேர், உணவு, தண்ணீர் சாப்பிட மறுப்பதாக கூறப்படுவது குறித்து, காஞ்சிபுரம் எஸ்.பி., பதிலளிக்கும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தான், அவர்கள் உள்ளனர் என, அரசு வழக்கறிஞர் கூறியது சரியல்ல' என, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
தகவல் சரியல்ல
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியை சேர்ந்த, வாக்காளர் இளவரசன் தாக்கல் செய்த மனு:குன்னம் தொகுதி, எம்.எல்.ஏ.,வான, ஆர்.டி. ராமச்சந்திரனை காணவில்லை; பிப்., 8ல், சென்னையில் நடந்த, அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ...

எங்க எம்.எல்.ஏ., காணாம போயிட்டார்...: குவியும் புகாரால் 'டரியல்' ஆகும் போலீஸ்

Posted: 10 Feb 2017 09:34 AM PST

சசிகலா தரப்பினரின் பிடியில் சிக்கியுள்ள, எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை என, தமிழகம் முழுவதும் குவியும் புகார்களால், போலீசார் செய்வதறியாமல் திகைக்கின்றனர்.

கோவை, காந்திபுரம் பகுதி, அ.தி.மு.க., துணை செயலர் சீனிவாசன் மற்றும் கட்சியினர், மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் நேற்று அளித்த புகார்:கோவை மாவட்டத்தில், ஒன்பது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும், எம்.எல்.ஏ.,க்கள் அலுவலகம் உள்ளது.ஒரு வாரமாக, எம்.எல்.ஏ., அலுவலகங்கள் பூட்டி கிடக்கின்றன. எம்.எல்.ஏ.,க்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டால், 'சுவிட்ச் ...

எம்.எல்.ஏ.,க்களை மீட்க கவர்னரிடம் ஸ்டாலின் மனு

Posted: 10 Feb 2017 09:48 AM PST

சென்னை:'சிறை வைக்கப்பட்டுள்ள, எம்.எல்.ஏ.,க்களை மீட்க வேண்டும்' என, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை, ராஜ்பவனில், நேற்று இரவு, கவர்னரை ஸ்டாலின் சந்தித்தார். தமிழக அரசு நிர்வாத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார்.பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலை நடத்த, தமிழக அரசுக்கு விருப்பமில்லை என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகத்தில், ஒன்பது மாதங்களாக, அரசு பணிகள் முடங்கியுள்ளன. தேர்தல் முடிந்து, இதுவரை எந்தப் பணிகளும் நடக்கவில்லை.அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பிணை ...

ஆட்சி அமைக்கும்படி சசிகலாவுக்கு அழைப்பு விடுக்க...முடியாது? மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை அனுப்பியதாக பரபரப்பு

Posted: 10 Feb 2017 10:14 AM PST

'தற்போதுள்ள சூழ்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்கும்படி அழைக்க முடியாது' என, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அறிக்கை அனுப்பியதாக, நேற்றிரவு பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், 'அப்படிப்பட்ட அறிக்கை எதையும் அனுப்பவில்லை' என, கவர்னர் அலுவலகம் மறுத்துள்ளது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த, பன்னீர்செல்வம், தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதாக, சசிகலா மீது குற்றம் சாட்டி, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க, தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என, நேற்று முன்தினம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து கோரிக்கை வைத்தார்.அதேநேரம் பெரும்பான்மை, ...

அரசு துறைகளின் ஒப்பந்த பணிகள் ஆணை வழங்க சசி தரப்பு முட்டுக்கட்டை

Posted: 10 Feb 2017 10:22 AM PST

அரசு ஒப்பந்த பணிகளுக்கான ஆணையை வழங்க, சசிகலா தரப்பினர் முட்டுக்கட்டை போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில், மின் வாரியம், பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளில், பல வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன. அந்த பணிகள், 'டெண்டர்' கோரப்பட்டு, குறைந்த விலை கோரும், ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. இவை, சசிகலா தரப்புக்கு வேண்டிய நிறுவனங் களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகின்றன. இது, முதல்வர் பன்னீர்செல்வம் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர், தகுதி வாய்ந்த நிறுவனத்துக்கு, ஒப்பந்த ஆணை வழங்க உத்தரவிட்டார். ...

முதல்வருக்கு ஆதரவாக அணிவகுக்கும் நிர்வாகிகள்

Posted: 10 Feb 2017 11:09 AM PST

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி உள்ள முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, கட்சியிலும், பொதுமக்களிடமும் ஆதரவு பெருகி வருகிறது.
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க, அனைத்து பகுதிகளில் இருந்தும், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், பகுதி செயலர்கள், வட்ட செயலர்கள், ஒன்றியச் செயலர்கள், நகரச் செயலர்கள் என அனைவரும், தினமும் வந்தபடி உள்ளனர். நேற்று, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கட்ராமன், பதர் சயீத், முத்துகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., பு.தா.இளங்கோவன் உட்பட ஏராளமானோர் ...

சென்னையில் குண்டர்கள் பதுங்கல்; வன்முறையை கட்டவிழ்க்க சதி?

Posted: 10 Feb 2017 01:01 PM PST

தலைநகர் சென்னையில், பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி உள்ள குண்டர்களால் கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக, உளவு துறையினர் எச்சரித்துள்ளனர்.
முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால், சசிகலா, முதல்வராக முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வம் பக்கம் தாவாமல் இருக்க, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைநகர் சென்னையில், பயங்கர ஆயுதங்களுடன் குண்டர்கள் மற்றும் அரசியல் சார்பு ரவுடிகள், வாடகை வீடுகள், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் தங்க ...

கண்டபடி திட்டுறாங்க...!: சி.ஆர்.சரஸ்வதி புலம்பல்

Posted: 10 Feb 2017 02:12 PM PST

சென்னை : ''சசிகலாவுக்கு ஆதரவு கொடுப்பதால், பலரும் என்னை கண்டபடி திட்டுகின்றனர். அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை,'' என, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர், நடிகை, சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.
திட்டுறாங்க:
சென்னை போயஸ் கார்டன் வந்த, அவர் கூறியதாவது: நான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்; இது, பலருக்கும் பிடிக்கவில்லை. அதனால், என் மொபைல் போனில், பெண் என்றும் பார்க்காமல், கண்டபடி திட்டுகின்றனர். அவர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியவில்லை. இரண்டு நாட்களாக, என் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டேன். இவ்வாறு ...

தேர்தல் ஆணையத்திடம் கருத்து கேட்கிறார் கவர்னர்

Posted: 10 Feb 2017 03:05 PM PST

சென்னை: முதல்வர் பன்னீர்செல்வம், கவர்னரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளிக்காததால், அதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்க, கவர்னர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.
கவர்னரின் உரிமை:
பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதம், கவர்னர் சென்னையில் இல்லாத போது, 'மெசெஞ்சர் மற்றும் பேக்ஸ்' மூலம் அனுப்பப்பட்டுள்ளது; அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். ஆனால், முதல்வர் தன் ராஜினாமா கடிதத்தை, கவர்னரை நேரில் சந்தித்து வழங்காவிட்டால், அதை ஏற்பதும், நிராகரிப்பதும் கவர்னரின் உரிமை. அதாவது, ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™