Tamil News | Online Tamil News |
- நடைமுறை சிக்கலை தாண்டி சாதனை படைத்த பட்ஜெட்
- ஞாபக மறதி நோயால் கருணாநிதி அவதி: இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?
- ரூ.5 லட்சம் வரை வருமான வரி பாதியாக குறைப்பு * மூத்த குடிமக்களின் மருத்துவத்துக்கு 'ஸ்மார்ட் கார்டு' * கிராம கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம் * ரூபாய் 10 லட்சம் கோடி விவசாயக்கடன் தர இலக்கு * ஊழலை ஒழிக்க அரசியல் கட்சி நன்கொடைக்கு கடிவாளம்
- நன்கொடைகளுக்கு கட்டுப்பாட்டால் அரசியல் கட்சிகள்...கலக்கம்..! கறுப்புப் பணத்தை ஒழிக்க பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு
- 'டிஜிட்டல்' முறைக்கு மாற பட்ஜெட்டில் ஊக்குவிப்பு
- தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் : சட்டசபையில் முதல்வர் தகவல்
- தமிழகத்தில் 'நீட்' தேர்வு கிடையாது; சட்டசபையில் மசோதா நிறைவேறியது
- மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் சாதகமா?
- மார்ச்சுக்குள் 10 லட்சம் பி.ஓ.எஸ்., இயந்திரங்கள்
- 1.75 கோடி கார்டுகளில் உள் தாள் ஒட்டியாச்சு!
- 'பணிவு காட்டுவதில் என்னை மிஞ்சி விட்டார்!' ; சட்டசபையில் சிரிப்பலை
- 5 ஆண்டுகள் பன்னீருக்கு ஆதரவு; துரைமுருகன் அறிவிப்பால் பரபரப்பு
| நடைமுறை சிக்கலை தாண்டி சாதனை படைத்த பட்ஜெட் Posted: 01 Feb 2017 08:51 AM PST முன்னாள் மத்திய அமைச்சர், இ.அகமதுவின் மறைவு ஏற்படுத்திய எதிர்பாராத நடைமுறை சிக்கல் மற்றும் அரசியல் நெருக்கடியை சமாளித்து, பெரும் போராட்டத்துக்கு மத்தியில், வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட் தாக்கல் பார்லிமென்டில் அரங்கேறியது. நேற்று முன்தினம், பார்லிமென்டின் மைய மண்டபத்தில், லோக்சபா, ராஜ்யசபா, எம்.பி.,க் களின் கூட்டுக் கூட்டத்தில், தன் உரையை ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, வாசித்துக் கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக, முன்னாள் மத்திய அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி.,யுமான, இ.அகமது, இருக்கையில் இருந்தவாறே ... |
| ஞாபக மறதி நோயால் கருணாநிதி அவதி: இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது? Posted: 01 Feb 2017 08:54 AM PST ஞாபதி மறதி, பேச்சு திறன் இன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 'ஸ்பீச் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்; மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. மூன்று டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர். ... |
| Posted: 01 Feb 2017 09:04 AM PST புதுடில்லி: வரும், 2017 - 18 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சாமானிய மக்களுக்கு சந்தோஷம் அளிக்கும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்துக்கான வரி, பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிராம கட்டமைப்பு, விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், விவசாயக் கடனுக்கான ஒதுக்கீடு உயர்வு, மூத்த குடிமக்களின் மருத்துவத்துக்கு, 'ஸ்மார்ட் கார்டு' என, ஏழை, எளிய, சாதாரண மக்களுக்கான பட்ஜெட்டாக, பிரதமர் மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின் பட்ஜெட் அமைந்துள்ளது.ஊழலை ஒழிக்கும் வகையில், அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைக்கு கடிவாளத்தை போட்டுள்ள இந்த ... |
| Posted: 01 Feb 2017 09:11 AM PST புதுடில்லி: அரசியல் கட்சிகள், 2,000 ரூபாய்க்கு மேல், ரொக்கமாக நன்கொடை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வழங்கப்படும் தொகை அனைத்தும், காசோலை அல்லது டிஜிட்டல் வடிவில் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், அரசியல் கட்சிகள் இடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:அரசியல் கட்சிகள், முறைகேடான வகையில் நன்கொடை பெறுவதை தடுக்கும் வகையில், தேர்தல் கமிஷன் வழிகாட்டுதலின் படி, சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. வரிச்சலுகைஅதன்படி, அரசியல் ... |
| 'டிஜிட்டல்' முறைக்கு மாற பட்ஜெட்டில் ஊக்குவிப்பு Posted: 01 Feb 2017 09:35 AM PST புதுடில்லி : செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு காயத்துக்கு மருந்து போடும் வகையிலும், 'டிஜிட்டல்' முறைக்கு மாறுவதை ஊக்குவிக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசின், நான்காவது பட்ஜெட் அமைந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பட்ஜெட்; முதன்முறையாக, முன்னதாகவே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என, பல, 'முதல்'களை கொண்ட, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார்.டிஜிட்டல் மயம் சம்பளதாரர்களுக்கு, வருமான வரியில் சிறு சலுகை தரப்பட்டுள்ளது. ... |
| தமிழக பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் : சட்டசபையில் முதல்வர் தகவல் Posted: 01 Feb 2017 09:37 AM PST சென்னை:''தமிழக பட்ஜெட்டில், புதிய திட்டங்கள் இடம்பெறும். ஜெயலலிதா ஆசியுடன், தமிழகம் முன்னேற்றப் பாதையில், தொடர்ந்து பயணிக்கும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டசபையில், அவர் பேசியதாவது:எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசும்போது, நடுக்கடலில் உள்ள ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் உள்ள நிலை குறித்து கூறினார். கற்பனைப் படகில் உட்கார்ந்து, இல்லாத பிரச்னைகளை எண்ணி மாய்ந்தால், நல்ல தண்ணீர், ஒரு துளியும் கிடைக்காது என்பது உண்மை தான்.தேர்தலில், அவரது எதிர்பார்ப்புகள் கானல் நீரான விரக்தியில், எது கானல் நீர் என்பதே புரியாமல் ... |
| தமிழகத்தில் 'நீட்' தேர்வு கிடையாது; சட்டசபையில் மசோதா நிறைவேறியது Posted: 01 Feb 2017 09:39 AM PST சென்னை,:''நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும், சட்ட முன்வடிவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் பெறப்படும். பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்றவும், நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - பொன்முடி: மருத்துவக் கல்லுாரிகளில், தற்போதுள்ள நடைமுறைப்படி, மாணவர் சேர்க்கை தொடர்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ள, சட்ட முன்வடிவு, அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கது; இச்சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும்.புதிய கல்விக் கொள்கை மூலம், மத்திய அரசு, மாநில உரிமையை பறிக்க ... |
| மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் சாதகமா? Posted: 01 Feb 2017 09:50 AM PST இரண்டும் கலந்த கலவை தொழில் நிறுவனங்கள் கருத்து 'மத்திய பட்ஜெட்டில், சாதகமான அம்சங்கள் பல உள்ளன. அதேநேரம், எதிர்பார்த்த சில அறிவிப்புகள் இல்லை' என, பெரு மற்றும் சிறுந்தொழில் துறையினர் கூறியுள்ளனர். சென்னை தொழில் வர்த்தக சபை தலைவர், ராம் வெங்கட்ரமணி: கிராமப்புற மேம்பாடு; கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது சிறப்பு. பல்வகை வாகன, சரக்கு கையாளும் பூங்கா, சாலைகள் - துறைமுகங்கள் இணைப்பு, இரண்டாம் நிலை நகரங்களில் விமான நிலையங்கள், மெட்ரோ ரயிலுக்கு புது கொள்கை போன்றவை, அத்துறைகளில் வேலை வாய்ப்பை பெருக்கும். ... |
| மார்ச்சுக்குள் 10 லட்சம் பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் Posted: 01 Feb 2017 09:59 AM PST 'ரொக்கமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்கும் வகையில், ஆதார் எண் அடிப்படையில் பணம் செலுத்த உதவும், பி.ஓ.எஸ்., இயந்திரங்கள் முழு வீச்சில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளன. நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, ரொக்கமற்ற பரிவர்த்தனையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 'ஸ்மார்ட் போன், மொபைல் போன், இ - வாலட்'களை பயன்படுத்துவோர் மட்டுமே, 'டிஜிட்டல்' பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலையை மாற்றும் வகையில், ஆதார் எண் அடிப்படையிலான பரிவர்த்தனைக்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அந்த வகையில் ... |
| 1.75 கோடி கார்டுகளில் உள் தாள் ஒட்டியாச்சு! Posted: 01 Feb 2017 11:35 AM PST
ஜன., வரை, 1.75 கோடி ரேஷன் கார்டுகளில், உள்தாள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில், புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 2009ல் முடிவடைந்தது. பின், உள் தாள் ஒட்டப்பட்டு, அதன் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கு, உள் தாள் ஒட்டும் பணி, ரேஷன் கடைகளில், ஜன., 2ல் துவங்கியது. இதுவரை, 1.75 கோடி கார்டுகளில், உள் தாள் ஒட்டப்பட்டுள்ளது. உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரிசி, சர்க்கரை, காவலர் கார்டுகளுக்கு, ரேஷன் கடைகளில், உள்தாள் ஒட்டப்பட்டு, புதுப்பிக்கப்படுகிறது. பொருளில்லா ரேஷன் கார்டுதாரர்கள், ... |
| 'பணிவு காட்டுவதில் என்னை மிஞ்சி விட்டார்!' ; சட்டசபையில் சிரிப்பலை Posted: 01 Feb 2017 12:48 PM PST சென்னை: ''பணிவு காட்டுவதில், பணிவுக்கு பணிவு காட்டும் என்னையும் மிஞ்சி விட்டார், தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.சட்டசபையில் நேற்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் முன், எம்.எல்.ஏ.,க்கள், தாங்கள் கொடுத்த, தீர்மானங்களை முன்மொழிந்தனர். அப்போது, மதுராந்தகம் தி.மு.க., - எம்.எல்.ஏ., புகழேந்தி, பள்ளியில் ஆசிரியர் முன், மாணவர்கள் கைகட்டி நிற்பது போல் நின்று, தான் கொடுத்த திருத்தங்களை, முன்மொழிவதாக கூறினார்.அவரது செய்கையால், சபையில் சிரிப்பலை எழுந்தது. ... |
| 5 ஆண்டுகள் பன்னீருக்கு ஆதரவு; துரைமுருகன் அறிவிப்பால் பரபரப்பு Posted: 01 Feb 2017 02:30 PM PST சென்னை: ''ஐந்து ஆண்டுகளுக்கு, பன்னீர்செல்வமே முதல்வராக இருக்க வேண்டும்; தேவைப்பட்டால், நாங்கள் ஆதரவு தருகிறோம்,'' என, சட்டசபையில், தி.மு.க., துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்தார். இதை, தி.மு.க.,வினர் மேஜையை தட்டி வரவேற்றனர்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் முழித்தனர். மனமில்லை: சட்டசபையில், நேற்று முதல்வர் பன்னீர்செல்வம் பேசும்போது, ''அரசு எத்தனையோ சாதனைகளை செய்துள்ளது. ஆனால், எதிர்க்கட்சி தலைவருக்கு பாராட்ட மனமில்லை,'' என்றார். ஆதரவு: அப்போது, துரைமுருகன் எழுந்து, ''நான் மனதார உங்களை ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |பிப்ரவரி 02,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |