Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்

Posted: 01 Feb 2017 10:25 AM PST

நிதியமைச்சர் அருண் ஜேட்லி அளித்த மத்திய பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பினால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொபைல் போன் தயாரிப்பில் முக்கிய பணியாற்றும் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் மீது 2% கூடுதல் சுங்கத்தீர்வை விதிக்கப்படவுள்ளதால் மொபைல் போன்கள் விலை அதிகரிக்கவுள்ளது. இந்த புதிய வரிவிதிப்பினால் பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளின் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பயன் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட போர்டுகளைப் பயன்படுத்தும் ...

வருமான வரி சலுகை எவ்வளவு?

Posted: 01 Feb 2017 10:24 AM PST

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகையின் மூலம், மூன்று லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில், 2.5 லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரி, 10 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, வருமான வரி சட்டத்தின் 87 ஏ பிரிவின் கீழ், ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டு வந்த வரிசலுகையான, 5,000 ரூபாய் ...

சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி

Posted: 01 Feb 2017 10:16 AM PST

சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு தள்ளுபடி சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா மீது அந்நிய செலவாணி மோசடி (ஃபெரா) வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் சசிகலாவுக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. 1990களில் வெளிநாட்டு பண பரிமாற்ற சட்டம் (ஃபெரா) வழக்கில் சசிகலா மீது 1996ஆம் ஆண்டு அமலாக்கத் துறை அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக மூன்று வழக்குகளை தாக்கல் செய்திருந்தது. சசிகலா 1996ல் கைது செய்யப்பட்டிருந்தார். சிறை சென்ற ...

கார்ப்பரேட் கூட்டணி!

Posted: 01 Feb 2017 10:15 AM PST

முன்னர் எல்லாம் ஒரு சிற்றூரில் வீட்டைச் சுற்றி மரங்கள், காய்கறிச் செடிகள், வளர்ப்பு விலங்குகள் சூழ வாழ்வதுதான் வாழ்க்கையாக இருந்தது. அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் விலையில்லாமல் கிடைத்தன. இந்த வீட்டில் இருந்து இளைஞர் ஒருவர் வேலைக்காக நகரத்துக்கு வரும்போதுதான், தன் முதல் அதிர்ச்சியைச் சந்திக்கிறார். தாகம் போக்கும் தண்ணீரை அவர் விலைக்கு வாங்க வேண்டியிருக்கிறது. அன்று கறந்த பாலில் தேநீர் அருந்தியவர், என்று கறந்தது என்றே தெரியாத பாக்கெட் பாலை வாங்குகிறார். நாட்டுக்கோழி தின்றவர் பிராய்லர் கோழி ...

படித்தேன் ! ரசித்தேன் !

Posted: 01 Feb 2017 10:05 AM PST

படித்தேன் ! ரசித்தேன் ! ருசித்தேன் ! பகிர்கிறேன் ! சுஜாதா சுஜாதாதான் ! மனுஷன் அப்படியே சமையலறை ஸீனை கண்முன் காட்டுகிறார் ! Waw ! ( thanks to Savithri Rajesh TGS ) சுஜாதாவின் காப்பி கதை தொடர்கிறது நெட்டில் சுட்ட ஒரு காமெடி.டிகாக்ஷன் போடும் கலை! டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் –அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி.வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக ...

நான் ரசித்தவை - மீம்ஸ்கள்

Posted: 01 Feb 2017 09:59 AM PST

வணக்கம் நான் ரசித்த மிமீஸ்களை இங்கே பதிவு செய்யவிரும்புகின்றேன் .சில மீம்ஸ்கள் பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் யோசிப்பார்கள் என்று நானும் யோசிப்பேன் . மீம்ஸ் காலம் வந்தவுடன் படம் பார்த்து கதை வசனம் சொல்லுங்கள் என்ற திரிக்கு படம் தேடுவது மிக சிரமம் ஆகி போனது காரணம் நிறைய படங்கள் ஏதாவது ஒரு மீம்ஸ் உடன் இருக்கும் . பார்ப்போம் ...ரசிப்போம் --சிரிப்போம் நன்றியுடன் வை.பா -ட்ரோல் கிரிக்கெட்

பணி ஓய்வு

Posted: 01 Feb 2017 09:59 AM PST

பணி ஓய்வு பணியிலிருந்து ஓய்வு - அதிகாலைப் பனியிலிருந்தும் ஓய்வு வேலையிலிருந்து ஓய்வு - பரபரக்கும் சாலையிலிருந்தும் ஓய்வு நேரத்திலிருந்து ஓய்வு - கடக்கின்ற தூரத்திலிருந்தும் ஓய்வு வேகத்திலிருந்து ஓய்வு - பணித் தாகத்திலிருந்தும் ஓய்வு ஓட்டத்துக்கு ஓய்வு - அதிகாரத்தின் காட்டத்துக்கும் ஓய்வு கட்டுச்சோறுக்கு ஓய்வு - மேலிடத்தின் திட்டுகளுக்கும் ஓய்வு அவசரத்திற்கு ஓய்வு - அதிகாலைப் பரவசத்திற்கும் ஓய்வு விழித்தலுக்கும் ஓய்வு - அறியாது முழித்தலுக்கும் ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 01 Feb 2017 09:31 AM PST

பார்லி., கூட்டத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் காலமானார்

Posted: 01 Feb 2017 09:17 AM PST

- புதுடில்லி : பார்லி., கூட்டத்தில் பங்கேற்ற போது மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இருக்கையில் சரிந்த அகமது : பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள, எம்.பி.,யான, இ.அகமது, திடீரென தன் இருக்கையில் மயங்கி சரிந்து விழுந்தார். அருகிலிருந்த எம்.பி.,க்கள், மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ...

வேலன்:-வீடியோவினை விரும்பிய இடத்தில் வெட்டி சேமிக்க

Posted: 01 Feb 2017 08:06 AM PST

நம்மிடம்உள்ள வீடியோக்களில் குறிப்பிடட பகுதியையோ.பாடல்களோ.சண்டைக்காட்சிகளோ தனியாக பிரித்து பார்ப்பதற்கு வீடியோ கட்டர் தேவை..15 எம்.பி.கொள்ளளவுகொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் உங்களிடம் உள்ள வீடியோ வினை ஒப்பன் செய்தோ டிராக் அண்ட் டிராப் முறையிலோ தேர்வு செய்யவும்.  வீடியோவினை ஓடவிடவும். பின்னர் எந்த இடத்தில் உங்களுக்கு வீடியோ தேவையோ அந்த இடத்திற்கான ஸ்லைடினை நகர்த்தி ...

வரலாற்றின் வேர்கள்

Posted: 31 Jan 2017 07:24 PM PST

அன்புடையீர் , எனக்கு சமீபத்தில் நடைபெற்ற இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருக்க நேர்ந்த கட்டாய ஓய்வுக்குப் பிறகு உடலுக்கும் மனதிற்கும் வல்லமைப் பெறவேண்டி இடை இடையே எழுதிய இந்தத் தொடர் வல்லமை மின் இதழில் தொடர்ந்து ஒவ்வொரு புதன் அன்றும் வெளிவரும் . நண்பர்களுடன் பகிர ஈகரையில் பதிவிடுகிறேன் படித்துத் தங்கள் கருத்துக்களை பகிர வேண்டுகிறேன் . அன்புடன் அண்ணாமலை சுகுமாரன் வரலாற்றின் வேர்கள் -1 -அண்ணாமலை சுகுமாரன் கடந்த காலத்தின் இரத்தக்கறை படிந்த அடிச்சுவடுகளைப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™