Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிரடி முடிவு குறித்து திரையுலகத்தை சேர்ந்தவர்களின் ஆதரவு பதிவு

Posted:

நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், அடுக்கடுக்காக பல கருத்துக்களை பதிவு செய்து இருக்கிறார்.

அவை வருமாறு:-

"நிம்மதியாய் உறங்கு தமிழகமே... அவர்கள் நமக்கு முன்னால் விழித்து விடுவார்கள். சில வருடங்களுக்கு முன்பு பிப்ரவரி 7-ந் தேதி எனக்கு பிரச்சினைகள் (விஸ்வரூபம் பட சர்ச்சை) ஏற்பட்டன. மக்களின் அன்பு ...

ஓ.பி.எஸ்., ஆட்சிக்கு வர வேண்டும்: கமல்

Posted:

‛ஓ.பன்னீர்செல்வம் திறமையானவர்; அவர் முதல்வராக ஆட்சி புரிய வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, தொலைகாட்சி பேட்டியில் அவர் பேசியதாவது;
நான் பன்னீர்செல்வத்தின் நண்பனும் அல்ல. எதிரியும் அல்ல. ஓ.பன்னீர் செல்வம் திறமையற்றவர் அல்ல. ஜல்லிக்கட்டு விஷயத்தில் அவர் திறமையாக வெற்றி ...

அஞ்சலி பற்றி என்னிடம் எதுவும் கேட்காதீங்க!: ஜெய்

Posted:

இசை குடும்பத்தில் இருந்து நடிகரானவர். அஜித்தைப் பின்பற்றும் கார் ரேஸ் பிரியர். நஸ்ரியா நட்பு, அஞ்சலி அன்பு, அடிக்கடி வெளிநாட்டு பயணம், படங்களின் பிரமோஷனுக்கு வருவதில்லை என்பது போன்ற பல வதந்திகள், இவரைப் பற்றி றெக்கைக் கட்டி பறக்கின்றன. இது குறித்து விளக்கம் கேட்பதற்காக, தொலைதுாரத்தில் இருந்த அவரை மடக்கி பிடித்தோம். 'வாட்ஸ் ...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

Posted:

விவேகம் படத்துக்காக, அஜித், 'சிக்ஸ் பேக்' உடலுடன் போஸ் கொடுத்திருக்கும், 'பர்ஸ்ட் லுக்' ரிலீசானதும், கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அஜித் ரசிகர்கள்,உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். ஆனால், எதிர்தரப்பினரோ, 'இதெல்லாம் கிராபிக்ஸ்' என, சமூக வலைதளங்களில், வழக்கம் போல் கிண்டலடித்து உள்ளனர். இதனால், கடுப்பான ...

புல்லட் ராணி ஜோதிகா!

Posted:

திருமணத்துக்கு பின், நடிப்பதை தவிர்த்து வந்த ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பின், 36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். அதில், அவர் நடிப்புக்கு பாராட்டு கிடைத்ததுடன், அந்த படத்துக்கு ரசிகர்களின் வரவேற்பும் கிடைத்தது. இதையடுத்து, 'நல்ல கதைகள் கிடைத்தால், தொடர்ந்து நடிப்பேன்' எனக்கூறிய ஜோதிகா, தற்போது, மகளிர் மட்டும் என்ற படத்தில் ...

மாஸ்டரை நினைத்து உருகும் ராய் லட்சுமி

Posted:

லாரன்சுக்கு, மிகவும் பிடித்த நடிகை ராய் லட்சுமி. அவரது ஆஸ்தான நடிகை என்றும் கூறலாம். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில், நிக்கி கல்ராணி ஹீரோயின் என்றாலும், ராய் லட்சுமி மீது உள்ள பாசத்தால், இதில், அவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். 'ஹர ஹர மஹாதேவஹி' என்ற பாடலுக்கு, அசத்தலான குத்தாட்டம் போட்டு உள்ளாராம் ராய் லட்சுமி. வார்த்தைக்கு ...

சவாலுக்காக காத்திருப்பு!

Posted:

முன்பெல்லாம், படப்பிடிப்பு இல்லாவிட்டாலும், அடிக்கடி சென்னை பக்கம் தலைகாட்டுவார் ஸ்ருதி. இப்போது, அவரை, அரிதாகவே சென்னை பக்கம் பார்க்க முடிகிறது. சிங்கம் - 3, சபாஷ் நாயுடு ஆகிய படங்களை தவிர, தெலுங்கில், கட்டம்ம ராயுடு என்ற படத்திலும், ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த கையுடன், தன் அடுத்த திட்டங்களை ...

மலையாள கரையோரம்

Posted:

கோலிவுட்டை கடந்து, மலையாள கரையோரத்திலும் கால் பதித்துள்ளதால், மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார் கன்னக்குழி அழகி, சிருஷ்டி டாங்கே. தர்மதுரை, அச்சமின்றி படத்தில், தன் நடிப்புக்கு கிடைத்த பாராட்டால், ஏற்கனவே சந்தோஷத்தில் இருந்த அவருக்கு, தற்போது, மோகன் லால் நடிக்கும் ஒரு படத்தில், அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ...

இதற்கு தான் ஓபிஎஸ்.,-ஐ ஜெ., தேர்ந்தெடுத்தார் - கவுதமி

Posted:

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் அசாதாரண சூழல்நிலை நிலவி வருகிறது. அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக நடிகை கவுதமி கூறினார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். ஆனால் இதுவரை அவரது கேள்விக்கு விடை கிடைக்கவில்லை, இதனால் பிரதமர் மீது தன் அதிருப்தியை தெரிவித்தார். தமிழகம் ...

நாகசைதன்யாவின் அடுத்த படம்

Posted:

நாகசைதன்யாவிற்கும் நடிகை சமந்தாவுடனான திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின்னர், நாகசைதன்யாவிற்கு பட வாய்புக்கள் குவிய துவங்கியுள்ளதால் சமந்தா அதிர்ஷ்டத்தையும் அழைத்து வந்ததாக நாகசைதன்யா பெருமிதம் கொள்கின்றாராம். அந்த வகையில் இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் நாகசைதன்யா, சமந்தாவுடன் இணைந்து மேலும் ஒரு ...

மகேஷ் பாபு உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்

Posted:

தமிழில் விஜய்யுடன் பைரவா படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு குறி வைத்துள்ளார். டோலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாணின் 23வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ...

பவன் கல்யாணின் கட்டமராய்டு டீசரை புகழ்ந்த சல்மான்

Posted:

தெலுங்கு திரை உலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் கட்டமராய்டு படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீசர் வெளிவந்து மூன்று நாட்களுக்குள் 5 மில்லியன் பார்வையாளர்களை அள்ளியிருக்கும் கட்டமராய்டு படத்தின் டீசரை ரசிகர்கள் மட்டுமல்லாது ...

பெற்ற சுதந்திரம் ஊழல் அரசியல்வாதிகளால் இழப்பு - கமல்

Posted:

தமிழகத்தில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவி வருகிறது என்று ரஜினி சில வாரங்களுக்கு முன்னர் சொல்லியது தற்போது நிரூபணமாகிவிட்டது. முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று கொடுத்த அதிரடி பேட்டியால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் பற்றி நடிகர் கமல் நேற்று இரவு முதலே டுவீட் செய்ய ...

மோகன்லால் படத்தில் இருந்து பின்வாங்கிய மம்முட்டி..!

Posted:

மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து சுமார் 56 படங்களில் நடித்துள்ளார்கள்.. மீண்டும் இவர்களை இணைக்கும் விதமாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இவர்கள் இருவரிடமும் ஒரு கதையை சொல்லியிருந்தார் கதாசிரியர் உதயகிருஷ்ணா.. ஆம்.. சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'புலி முருகன்' படத்தின் கதாசிரியரே தான். இவர்கள் இருவரும் இணைந்து ...

பிரகாஷ்ராஜின் கனவுப்படத்தில் ஹீரோவாக ஜெயராம்..!

Posted:

பிரகாஷ்ராஜுக்கும் ஜெயராமுக்குமான நட்பு ஆரம்பித்து 'பரமசிவன்' படத்தில் நடித்தபோதுதான்.. அதன்பின் தமிழில் 'சரோஜா' என்கிற படத்தில் இணைந்து நடித்தார்கள்.. இப்போது எட்டு வருடங்கள் கழித்து மலையாளத்தில் 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். ...

மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் திலீப்-சித்தார்த்..!

Posted:

பிரபல விளம்பர பட இயக்குனரான ரதீஷ் அம்பாட் மலையாளத்தில் இயக்கிவரும் படம் 'கம்மர சம்பவம்'.. திலீப் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில், இன்னொரு கதாநாயகனாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் சித்தார்த். இந்தப்படத்தில் திலீப் நாயகன் என்றாலும் சித்தார்த்துக்கும் மிக முக்கியமான வேடமாம். ...

சி3 படத்தை இணையதளங்களில் வெளியிட தடை

Posted:

சூர்யாவின் ‛சி3' திரைப்படத்தை தயாரிப்பாளர் அனுமதி இல்லாமல் எந்த ஒரு இணையதளமும் வெளியிட கூடாது என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஹரி-சூர்யா கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‛சி3' உருவாகியுள்ளது. பலமுறை தள்ளிப்போய் ஒருவழியாக நாளை இப்படம் வெளியாக இருக்கிறது. இதனிடையே சினிமாவிற்கு தற்போது பெரும் தலைவலியாக ...

காதலித்த விநியோகஸ்தரை முறைப்படி கரம்பிடித்தார் சாட்னா

Posted:

பிச்சைக்காரன் புகழ் சாட்னா டைட்டஸ்க்கும், அப்படத்தை வெளியிட்ட கார்த்திக்கிற்கும் முறைப்படி திருமணம் சிறப்பாக நடந்தது. சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் சாட்னா டைட்டஸ். இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் மாபெரும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. தொடர்ந்து சில படங்களில் ...

சுசாந்த் சிங் படத்தில் இணைந்த மாதவன்

Posted:

கோலிவுட்டையும் தாண்டி பாலிவுட்டிலும் வெற்றி நடிகராக திகழ்ந்தவர் நடிகர் மாதவன். கடைசியாக பாலிவுட்டில் சாலா கடூஸ்(இறுதிச்சுற்று ஹிந்தி ரீ-மேக்) படத்தில் நடித்திருந்தார். அடுத்தப்படியாக மாதவன் தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். தோனி படத்தின் வெற்றிக்கு பிறகு சுசாந்த் சிங் ...

சசிகலாவால் நேரடியாக பாதிக்கப்பட்டேன் - கங்கை அமரன்

Posted:

சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார். அதிமுக., பொதுச் செயலாளராக உள்ள சசிகலா விரைவில் முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் நேற்று முதல்வர் பன்னீர் செல்வம் கொடுத்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. சசிகலாவிற்கு எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™