Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

Posted:

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்காக விஷால் தாக்கல் செய்த வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து, தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறியதாவது:நடிகர் விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரின் வேட்பு மனு ...

ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன்: நடிகர் ரஜினி

Posted:

‛நான் ஒரு நடிகன் என்பதைவிட ஆன்மீகவாதி என்பதில் பெருமை கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி பேசினார்.

சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ‛தெய்வீக காதல் என்னும் ஆன்மீக புத்தக வெளியீட்டு விழா இன்று நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினி பேசியதாவது:

மனிதப்பிறவியே அபூர்வம். நான் யார்? எங்கிருந்து ...

‛அண்ணாதுரை' தலைப்பு : திராவிட கட்சிகளை நாடும் விஜய் ஆண்டனி.?

Posted:

'சைத்தான்' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த எமன் படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. 'எமன்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விஜய் ஆண்டனி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்து விஜய் ஆண்டனி தரப்பில் விசாரித்தோம். அப்படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. விஜய் ...

இங்கே 70 லட்சம், அங்கே 30 லட்சம்...!

Posted:

தமிழில் ஹன்சிகாவின் மார்க்கெட் ஏறக்குறைய கடைசிகட்டத்தில் இருக்கிறது. தற்போது இரண்டாம்நிலை ஹீரோக்களுடன் நடிக்க தயாராகிவிட்டார் ஹன்சிகா. ஜி.வி.பிரகாஷ்குமார் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் ஹன்சிகா. இதற்கிடையில், தமிழில் மார்க்கெட் போய்விட்டால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த ஹன்சிகா தற்போது தன் கவனத்தை மலையாளப்பக்கம் ...

தயாரிப்பாளர் சங்க தேர்தல் : விஷால் அணி மனு தாக்கல் - பதவிக்காக போட்டியிடவில்லை

Posted:

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணி சார்பில் கவுதம் மேனன், பிரகாஷ்ராஜ், ஏஎல் அழகப்பன், ஞானவேல்ராஜா, எஸ்ஆர் பிரபு உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்தனர். பதவிக்காக தேர்தலில் போட்டியிடவில்லை என்று விஷால் கூறினார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கு இரண்டாண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுகிறது. 2017-19 ஆண்டுக்கான தேர்தல் வருகிற மார்ச் ...

கனவிலும் நினைக்காத வாழ்க்கை - சிவகார்த்திகேயன்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் இன்றைய முன்னணி வியாபார நடிகர்களில் சிவகார்த்திகேயன் முக்கிய இடத்தில் உள்ளார். விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் அங்கேயே நிகழ்ச்சித் தொகுப்பாளராக சில வருடங்கள் பணிபுரிந்து முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக ...

'சிவலிங்கா' வெளியீடு ஏப்ரல் மாதம் தள்ளி வைப்பு?

Posted:

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள 'சிவலிங்கா' படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இந்தப் படம் இந்த மாதம் 17ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள மற்றொரு ...

'வீரம்' தெலுங்கு ரீமேக் 'கட்டமராயுடு' டீசர் வெளியீடு

Posted:

சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வீரம்' படத்தை தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிக்க 'கட்டமராயுடு' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தப் படத்தின் டீசர் சற்று முன் வெளியிட்டார்கள். பவன் கல்யாண் என்றாலே அதிரடி ஆக்ஷன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தில் அது இன்னும் ...

பன்சாலி மீதான தாக்குதல் தவறானது - அர்ஷத் வர்சி

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகரான அர்ஷத் வர்சி, தான் நடித்துள்ள இரடா படத்தை புரொமோஷன் செய்து வருகிறார். சமீபத்தில் அவர் பங்கேற்ற புரொமோஷன் ஒன்றில், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது நடந்த தாக்குதல் குறித்து மனம் திறந்தார்.
அவர் பேசுகையில், சினிமா துறையில் இருந்து அரசுக்கு அதிகப்படியான வரி போகிறது. ஆனால் எங்களைப்போன்ற ...

‛டியூப்லைட்'-ல் வித்தியாசமான சல்மான் - கபீர்கான்

Posted:

சல்மான் - கபீர்கான் கூட்டணியில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றன. தற்போது இவர்கள் ‛டியூப்லைட்' என்ற படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கபீர்கான், டியூப்லைட் பற்றியும், அதில் சல்மானின் ரோல் பற்றியும் பேசினார்.
அவர் பேசுகையில், சல்மான் இதுவரை தன் சினிமா கேரியரில் நடித்திராத ஒரு ...

சல்மான் - கரண் படத்தில் இணைந்த தில்ஜித்

Posted:

பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் ஹீரோவான அக்ஷ்ய் குமார், சல்மான்-கரண் ஜோகர் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இப்போது இந்தப்படத்தில் மற்றொரு நடிகரும் இணைந்துள்ளார். அவர் வேறுயாருமல்ல நடிகர் தில்ஜித் தான். இந்தப்படத்தில் அக்ஷ்ய்யின் ரோல் தவிர மற்றொரு முக்கியமான ரோல் ஒன்று உள்ளதாம். அதனால் ...

அக்ஷ்ய்யின் காதலியாக நடிக்கும் சனாகான்

Posted:

தமிழில் சிலம்பாட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகை சனாகான், பாலிவுட்டிலும் பிஸியான நடிகையாக இல்லாவிட்டாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடிகர் அக்ஷ்ய் குமார், ஜாலி எல்எல்பி-2 படத்தை தொடர்ந்து ‛டாய்லட் ஏக் பிரேம் கதா' எனும் படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிகை சனா கானும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். ...

இயக்கத்தோடு பின்னணியும் பாடிய அக்சயா

Posted:

கலாபக்காதலன், உளியின் ஓசை, எங்கள் ஆசான், உயர்திரு 420 உள்படபல படங்களில் நாயகியாக நடித்தவர் அக்சயா. தற்போது யாளி என்றொரு படத்தை இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார். தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கும் யாளி படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

இந்த படம் குறித்து அக்சயா கூறுகையில், சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்து ...

ஹீரோயினை சுற்றிவளைத்த காட்டு யானைக்கூட்டம்!

Posted:

ஹரி கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஆறாம் வேற்றுமை. அஜய்-கோபிகா ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த படத்திற்கு அறிவழகன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் ராகவேந்திரன் இசையமைத்துள்ளார். இப்படம் ஆதிவாதி மக்களின் பிரச்னையை சொல்லும் கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தர்மபுரி மாவட்டத்திலுள்ள கூனிக்காடு என்கிற ...

தமிழ்ப்புத்தாண்டில் ரிலீஸாகிறது பேய் இருக்கா இல்லையா! - இயக்குநர் ரஞ்சித் பாரிஜாதம்

Posted:

டைரக்டர் ஏ.வெங்கடேஷின் உதவியாளர் ரஞ்சித் பாரிஜாதம் இயக்கியுள்ள படம் பேய் இருக்கா இல்லையா. பேய் கதையில் பல படங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், பேய் இருக்கா இல்லையா என்பதை சொல்ல வருகிறது இந்த படம். ஜோதிஷா, விஜயகுமார், லிவிங்ஸ்டன், மதன்பாப், பொன்னம்பலம், லொள்ளு சபா சாமிநாதன், தாடி பாலாஜி, ஜாங்கிரி மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள ...

பரபரப்பு வளையத்திற்குள் விஜய் ஆண்டனி!

Posted:

நடிகை ராதிகாவின் சித்தி சீரியல் உள்பட சில சீரியல்களுக்கு இசையமைத்து அதன்பிறகு சினிமாவில் இசையமைப்பாளரானவர் விஜய் ஆண்டனி. காதலில் விழுந்தேன் படத்தில் அவரது இசையில் உருவான நாக்குமுக்க பாடல் அவரை முன்னணி இசையமைப்பாளராக்கியது. அதன்பிறகு விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வந்த அவர் நான் படம் மூலம் ஹீரோவாக ...

டைரக்டர் லட்சுமணை துரத்திய ஜெயம்ரவி!

Posted:

எஸ்.ஜே.சூர்யா-நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்த கள்வனின் காதலி படத்தை தயாரித்தவர் லட்சுமண். அவர்தான் ஜெயம்ரவி -ஹன்சிகா நடித்து வெளியான ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கியிருக்கிறார். கள்வனின் காதலி படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் பின்னர் படம் தயாரிப்பதில் இருந்து விலகி கதைகள் ரெடி பண்ணி ஸ்கிரிப்ட் எழுதிய லட்சுமன் பல நடி ...

'இணைய பைரசி' - தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆவேசம்

Posted:

தமிழ்த் திரையுலகம் 'பைரசி'யுடன் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. 25 வருடங்களுக்கு முன்பு 'விஎச்எஸ்' கேசட் இருந்த காலத்தில் புதிய திரைப்படங்கள் வெளிவந்த ஒரு வார காலத்திற்குள் வீடியோ கேசட்டாக வெளிவந்து அச்சுறுத்தலாக இருந்தது. அதன் பின் கேபிள் டிவி வந்த பிறகு அந்தப் படங்களை அப்படியே கேபிள் டிவியில் ஒளிபரப்ப ...

தனுசுடன் நடிக்க ஆசைப்படும் பெங்காலி நடிகை!

Posted:

இந்தி, பெங்காலி, தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு அதர்வாவின் செம போத ஆகாத படம் மூலம் தமிழுக்கு வந்தவர் பெங்காலி நடிகை மிஷ்டி. இந்த படத்தில் வழக்கமான நாயகியாக இல்லாமல் அழுத்தமான ஒரு வேடத்தில் நடித்திருக்கும் மிஷ்டி, மிக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பர்பாமென்ஸ் குறித்த செய்திகள் கோலிவுட்டில் பரவியதை ...

இப்போதும் பிசியாக பாடல் எழுதி வருகிறேன்! -சினேகன்

Posted:

பாண்டவர்பூமி படத்தில் அவரவர் வாழ்க்கையில், தோழா தோழா, சாமி படத்தில் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா உள்பட பல ஹிட் பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் சினேகன். யோகி படத்தில் அமீரின் நண்பராக நடித்தவர், பின்னர் உயர்திரு-420 படத்தில் நாயகனாகவும் நடித்தார். தற்போது பொம்மி வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதுபற்றி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™