Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Cinema.tamil.com

Cinema.tamil.com


1 கோடி ஹிட்ஸில் 'ரெமோ - செஞ்சிட்டாளே..' பாடல்

Posted:

இசையமைப்பாளர் அனிருத்தின் இசைக்கு இன்றைய இளம் தலைமுறையினர் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அவருடைய பாடல்களுக்குக் கிடைக்கும் வரவேற்பில் இருந்து புரிந்து கொள்ளலாம். குறுகிய காலத்திலேயே புகழைப் பெற்றுவிட்ட அனிருத்தின் இசையில் வெளிவரும் படங்களின் பாடல்கள் அனைத்தும் ஹிட் ரகமாக இல்லையென்றாலும் கூட சில பாடல்கள் சூப்பர் ...

கடலடிக் காட்சிகளுடன் பிப்., 17-ம் தேதி ரிலீஸாகிறது காஸி

Posted:

நம் இந்திய நாட்டைப் பற்றியும் நாட்டுப்பற்றைப் பற்றியும் பேசி வெளிவந்துள்ள பல படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்தக்கால கப்பலோட்டிய தமிழன் தொடங்கி 1921, ஜெய்ஹிந்த், மதராசப்பட்டினம், லகான் வரை ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் தேசம் பற்றிப் பேசியவை. அந்த வகையில் ஒரு படமாக காஸி படமும் உருவாகியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ...

விராட் கோலி தயாரிப்பாளரா...? - அனுஷ்கா கோபம்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையான அனுஷ்கா தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது இவர் ‛பில்லாரி' என்ற படத்தை தயாரித்து வருகிறார். தில்ஜித், அனுஷ்கா முக்கிய ரோலில் நடிக்கின்றனர், அன்சாய் லால் இயக்குகிறார். சில தினங்களுக்கு முன் இப்படத்தை, அனுஷ்காவின் காதலரான விராட் கோலி தயாரிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை கேட்ட ...

ஷாரூக்கான், ஆமீர்கான் இணைந்த முதல் புகைப்படம்

Posted:

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாரூக்கான், ஆமீர்கான் இருவரும் இணைந்து முதல் முறையாக ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளனர். ஒரு புகைப்படத்தை எடுக்கவே அவர்களுக்கு 25 வருடங்கள் ஆகியிருக்கிறது.

இது பற்றி ஷாரூக்கான அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, "25 ...

மகளின் செல்ஃபி மோகத்திற்கு ஸ்ரீதேவி தடை?

Posted:

சாதாரண மக்கள்தான் செல்ஃபி மோகத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்தால், பிரபலங்கள் பலரும் செல்ஃபி மோகத்தில் இருக்கிறார்கள். சீனியர் நடிகையான ஸ்ரீதேவி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டே இருப்பார். அவரைப் போலவே அவருடைய மகள் ஜான்வியும் அவருடைய சமூக வலைத்தத்தில் அவருடைய செல்ஃபி ...

'சி 3' - வசூல் எப்படி.?

Posted:

தமிழ்நாட்டு மக்கள் அரசியலில் பல அதிரடியான திருப்பங்களை நேரடியாகப் பார்த்து வருவது திரையுலகத்திலும் எதிரொலித்தது. கடந்த மாதம் பொங்கல் தினத்திலிருந்தே தியேட்டர்களில் எதிர்பார்த்த அளவிற்கு கூட்டம் வரவில்லை என்பதே உண்மை. 'பைரவா' படத்திற்குக் கூட பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டுமே வசூல் இருந்தது. அதன் பின் அப்படியே ...

'புரூஸ்லீ' ரிலீஸ் எப்போது...?

Posted:

ஆரம்பத்தில் வெற்றிப்பட ஹீரோவாக இருந்த ஜி.வி.பிரகாஷ்குமார், அதன் பிறகு தொடர்ந்து தோல்விப்படங்களையே கொடுத்து வருகிறார். பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு என அவர் நடித்த மூன்று படங்கள் வரிசையாக வசூல் ரீதியாக வெற்றிபெறாமல் தோல்வியடைந்தன. இந்த இக்கட்டானநிலையில், தனது அடுத்த படமாக ரிலீஸாக உள்ள 'புரூஸ் ...

'மாநகரம்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

Posted:

ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, ட்ரீம்வாரியர் என்ற பெயரில் ஒரு பட நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் ஜோக்கர் படம் தயாரிக்கப்பட்டது. இதுதவிர, நயன்தாரா நடிப்பில் 'மாயா' எனும் வெற்றிப் படத்தை தயாரித்த 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனமும் எஸ்.ஆர்.பிரபுவுக்கு ...

குழப்பத்தில் துருவங்கள் பதினாறு இயக்குநர்

Posted:

சமீபத்தில் திரைக்கு வந்த படங்களில் மிகப் பெரிய பாராட்டுக்களுடன் மட்டுமின்றி நல்ல வசூலுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'துருவங்கள் பதினாறு'. இந்த படத்தை கோவையைச் சேர்ந்த கார்த்திக் நரேன் என்ற இனளைஞர் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்கும் புதிய படத்திற்கு 'நரகாசூரன்' என்று ...

மார்ச் 31ஆம் தேதி 'கவண்' ரிலீஸ்

Posted:

ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் அதே படநிறுவனத்துக்காக பிரம்மாண்டமாக இயக்கியுள்ள படம் 'கவண்'. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்கள். 'காதலும் கடந்து போகும்' படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியும், மடோனா செபாஸ்டியனும் மீண்டும் ...

மீண்டும் சென்னையில் குடியேறுகிறார் பிரபுதேவா

Posted:

நயன்தாரா உடன் காதல் ஏற்பட்ட விவகாரத்துக்கு பிறகு மனைவி ரமலத்தை விவாகரத்து செய்த பிரபுதேவா மும்பையிலேயே செட்டிலானார். அங்கு செட்டிலான பிறகு பாலிவுட்டில் சில படங்களை இயக்கிய பிரபுதேவாவினால் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. தற்போதும் மும்பையிலேயே வசிக்கும் பிரபுதேவா மீண்டும் சென்னையில் குடியேற திட்டமிட்டுள்ளார். ...

எமன் படத்துக்கும் சிக்கல்

Posted:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறப்போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதால் போலீஸ் மீது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதற்கு நேர்மாறாக தமிழ்நாடு போலீஸ் புராணம் பாடும் சி-3 படம் தற்போது வெளியாகி உள்ளது. போலீஸ் மீதான அதிருப்தி சி-3 படத்தின் வசூலை பாதித்துவிடுமோ என்ற கலக்கத்தில் உள்ளது சூர்யா ...

கரண் - அஜய் பிரச்னைக்கு காரணம் தெரிந்தது

Posted:

பாலிவுட்டில் இருக்கும் பிரபலங்களில் கரண் மற்றும் அஜய் தேவ்கன் முக்கியமானவர்கள். கடந்த சில மாதங்களாகவே கரண் - அஜய் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் கரண்.
கரண் மேலும் கூறியதாவது.... "அஜய் எனக்கு போன் செய்தார், நான் அழைப்பை எடுத்ததும் ...

கரண் ஜோகர் ஆபத்தானவர்: கோவிந்தா

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர்களில் கோவிந்தாவும் ஒருவர். இயக்குநர் தீபங்கர் சேனாபதி இயக்கத்தில் கோவிந்தா தற்போது நடித்துள்ள படம் ‛ஆ கயா ஹீரோ'. மார்ச் 3ம் தேதி படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார் கோவிந்தா. சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவிந்தா, இயக்குநர் கரண் ஜோகர் மிகவும் ...

‛பத்ரிநாத் கி துல்கனியா' பற்றி ஸ்வேதா பாசு

Posted:

ரா ரா, சந்தமாமா போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு. தமிழ் தவிர்த்து ஹிந்தியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் தொழில் செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தற்போது சந்திர நந்தினி உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். இதுதவிர சில ...

விருதுக்கு நான் தகுதியில்லாதவன் - அக்ஷ்ய்

Posted:

பாலிவுட்டின் வெற்றி நாயகனாக வெளிவரும் அக்ஷ்ய் குமார், கடந்தாண்டு மூன்று ஹிட் படங்களை கொடுத்தார். சினிமாவில் பல ஆண்டுகளாக இருந்து வரும் அக்ஷ்ய், இதுவரை பிலிம்பேர் விருது வென்றதில்லை. சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருதுகளுக்கு கூட இவரது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை. இதுப்பற்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ...

மகளுக்காக படத்தை பார்த்து பார்த்து செதுக்கும் அர்ஜுன்

Posted:

ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன். பட்டத்துயானை படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானார். பூபதி பாண்டியன் படத்தை இயக்கினார். ஆனால் ஐஸ்வர்யாவின் அறிமுக படம் வெற்றிப் படமாக அமையவில்லை. இதனால் ஐஸ்வர்யாவுக்கு எதிர்பார்த்த அளவிற்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அப்பா தயாரித்து இயக்கிய ஜெய்ஹிந்த் ...

திருநங்கைகள் பற்றி ஆல்பம் இயக்கிய கிருத்திகா உதயநிதி

Posted:

வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இவர் உதயநிதி ஸ்டாலின் மனைவி. சினிமா தவிர பல்வேறு சமூக தொண்டு நிறுவனங்களில் பங்கேற்று பணியாற்றி வருகிறார். கிருத்திகா தற்போது திருநங்கைகள் பற்றிய விழிப்புணர்வு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளார்.
சியர் என்ற அமைப்பு திருநங்கைகளின் உரிமைக்காக போராடி ...

அருள்நிதியின் புதிய படம் இரவுக்கு ஆயிரம் கண்கள்

Posted:

டிமாண்டி காலனிக்கு பிறகு அருள்நிதிக்கு சரியான படங்கள் அமையவில்லை. நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஆறாது சினம் படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. தற்போது பிருந்தாவனம் படத்தில் நடித்து வருகிறார். இதனை ராதாமோகன் இயக்குகிறார், மாஜி ஹீரோ ரவிச்சந்திரன் பேத்தி தன்யா அருள்நிதி ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது ஆக்சஸ் ...

ஜல்லிக்கட்டில் பாதியில் வெளியேறிய லாரன்ஸ்

Posted:

மெரினா கடற்கரையில் மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய மாபெரும் புரட்சியின் காரணமாக தமிழர்களின் கலாச்சார அடையாளமாக ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டது. அதன் வெற்றி விழா போன்று பிரபலமான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு உள்ளூர் மக்கள் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்திருந்தனர். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் ஜல்லிக்கட்டை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™