Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அம்பலம்? ஜெ., மரணம் தொடர்பான மர்மங்கள் விரைவில்... சிகிச்சை விபரங்களை வெளியிட அப்பல்லோ தயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பான விசாரணை

Posted: 09 Jan 2017 08:46 AM PST

சென்னை:ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்கள், விரைவில் அம்பலமாகும் சூழல் உருவாகியுள்ளது.

இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பான விசாரணையின் போது, ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்கள் குறித்த அறிக்கையை, தாக்கல் செய்ய தயாராக இருப்பதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த, அ.தி.மு.க., தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த மனுவில், 'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது; இந்த சந்தேகம், கட்சி தொண்டர்கள் மத்தியில் உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூலம், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ...

5 மாநில தேர்தலில் செல்லாத நோட்டு பிரச்னை எதிரொலிக்குமா? நம்பிக்கையுடன் வலம் வரும் பா.ஜ., தலைவர்கள்

Posted: 09 Jan 2017 08:50 AM PST

உத்தர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பிற்கு பின், நடக்கும் பெரிய அளவிலான தேர்தல் என்பதால், மக்கள் மன்றத்தில், பா.ஜ.,வுக்கு எழுச்சியா, எதிர்ப்பா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக அமைந்துள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான, சட்டசபை தேர்தல்கள், பிப்ரவரி துவங்கி, மார்ச் வரை நடக்கவுள்ளன. நம் நாட்டின், ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ஓட்டளிக்கப் போகும் தேர்தல் இது. மத்தியில், பா.ஜ., ஆட்சிக்கு வந்து, அரை கிணறு தாண்டியுள்ள நிலையில் நடக்கும் பெரிய ...

பெட்ரோலுக்கு கார்டு பயன்படுத்தினால் சேவை கட்டணம் வசூலிக்கப்படாது

Posted: 09 Jan 2017 08:52 AM PST

புதுடில்லி,: 'பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால், அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படாது' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

'பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு, கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால், அதற்கு, ஒரு சதவீதம் வரையிலான சேவை கட்டணத்தை, டீலர்கள் ஏற்க வேண்டும்' என, வங்கிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதனால், 'இனி, இந்த கார்டுகளுக்கு பெட்ரோல் வழங்கப்படாது' என, டீலர்கள் அறிவித்திருந்தனர்.
ஆலோசனை
இந்நிலையில், வரும், 13ம் தேதி வரை, இந்த சேவை கட்டணம் வசூலிக்கப்படாது' என, வங்கிகள் ...

செல்லாத நோட்டு திட்டம் அரசின் வரி வசூல் 'விர்ர்'

Posted: 09 Jan 2017 08:53 AM PST

புதுடில்லி,: ''ஏப்ரல் - டிசம்பர் காலத்தில், நேரடி மற்றும் மறைமுக வரிகள் அபரிமிதமாக வசூலாகி உள்ளன. இதன் மூலம், உற்பத்தி உள்ளிட்ட பொருளாதார செயல்பாடுகள், வளர்ச்சி அடைந்து வருகின்றன,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

டில்லியில், நேற்று, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது:ஏப்ரல் - டிசம்பர் காலத்தில், நேரடி மற்றும் மறைமுக வரிகள் அபரிமிதமாக வசூலாகி உள்ளன. இது, உற்பத்தி உள்ளிட்ட பொருளாதாரசெயல்பாடுகள், வளர்ச்சி அடைந்து வருவதை உணர்த்துகின்றன.
அதிகரித்து
கடந்த, 2016ல், ஏப்., - டிச., ...

தீபாவிற்கு பெருகும் ஆதரவு; சசிகலா உறவினர்கள் திக்... திக்...

Posted: 09 Jan 2017 09:01 AM PST

தஞ்சாவூர், : - சசிகலாவின் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டங்களில், தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவால், சசிகலா உறவினர்களை பீதியடைய செய்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வில் உயர்மட்ட நிர்வாகிகள், பகீரத பிரயத்தனம் செய்து, சசிகலாவை பொதுச் செயலராக அமரச் செய்துவிட்டனர். சசிகலாவை ஏற்காத, அதிருப்தியாளர்கள், சசிகலாவிற்கு ஆதரவாக வைக்கப்படும், 'பிளக்ஸ்' பேனர்கள் மீது, சாணம் வீசி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வந்தனர்.
மேலும், இதற்கு மாற்றாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கு, ஆதரவுகள் தமிழகம் முழுவதும் தற்போது வலுவாக ...

முதல்வர் பேசும்போது வெளியேறிய சசிகலா; கருத்தரங்கில் பங்கேற்றோர் அதிர்ச்சி

Posted: 09 Jan 2017 09:06 AM PST

கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போது, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா வெளியேறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

'இந்தியா டுடே' குழுமம் சார்பில், இரண்டு நாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று துவங்கியது. கருத்தரங்கை, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா துவக்கி வைத்தார்; ஜெயலலிதா உருவ படத்தையும் திறந்து வைத்தார். கருத்தரங்கில், முதல்வர் பன்னீர்செல்வம் பேசும் போதே, அரங்கில் இருந்து சசிகலா வெளியேறினார். மாநில முதல்வர் பேசும் போது, அவர் சார்ந்த கட்சி பொதுச்செயலர் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது. அவர், கட்சி அலுவலகத்தில் ...

3 மாடுகள் வளர்க்கிறேன் மதுரையில் விஜயகாந்த் பேச்சு

Posted: 09 Jan 2017 09:12 AM PST

அலங்காநல்லுார்: ''ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான, 'பீட்டா' அமைப்பை கலைக்க வேண்டும்; நானே மூன்று மாடுகளை வளர்க்கிறேன்,'' என, மதுரை அலங்காநல்லுாரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம், 'பீட்டா;' அதன் தலைவர் மேனகா. அவர் யார் என உங்களுக்கே தெரியும். வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பற்றி, 'பீட்டா'வுக்கு என்ன தெரியும்.
யானை,ஓட்டகம்
கேரளாவில் யானையை வைத்து போட்டி நடத்துகின்றனர். யானை, எத்தனை பேரை கொல்லும் ...

காலில் விழுவதில்லை ஸ்டாலின் நன்றி

Posted: 09 Jan 2017 09:29 AM PST

சென்னை,: 'என் காலில் விழுவதை தவிர்த்துள்ள தொண்டர்களுக்கு, நன்றி தெரிவிக்கிறேன்' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தி.மு.க., செயல் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல், தினந்தோறும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. எந்தளவுக்கு வாழ்த்துகள் குவிகின்றனவோ, அந்தளவுக்கு பொறுப்புகளும், பணிகளும் நிறைந்திருக்கின்றன என்பதை உணர்கிறேன். எந்த நம்பிக்கையுடன் அனைவரும் வாழ்த்துகின்றனரோ, அந்த நம்பிக்கை நிறைவேறும் வகையில், பணியை மேலும் செம்மைப்படுத்தும் சீரிய தருணமாக, இது அமைந்துள்ளது.
வாழ்த்துக்களை வழங்கும் தொண்டர்கள், ஆர்வ ...

'உதய்' திட்டத்தில் இணைந்தது தமிழகம்! ரூ.11 ஆயிரம் கோடி மிச்சமாக வாய்ப்பு

Posted: 09 Jan 2017 09:34 AM PST

புதுடில்லி: 'உதய்' மின் திட்டத்தில் தமிழகம் இணைந்ததால், 11 ஆயிரம் கோடி மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநில மின் வாரியங்களின் நிதி நெருக்கடியை சரி செய்ய, உதய் மின் திட்டத்தை, 2015 நவம்பரில், மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தில் கூறப்பட்ட, மின் கட்டணம் மாற்றியமைத்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை தளர்த்தும்படி, மத்திய அரசிடம் தமிழகம் கோரிக்கை விடுத்தது. அதை ஏற்காததால், உதய் திட்டத்தில் தமிழகம் இணையாமல் இருந்தது.தமிழக மின் வாரியம், மத்திய அரசின், 'பவர் பைனான்ஸ், ரூரல் எலக்ட்ரிபிகேஷன்' நிறுவனங்களிடம், மின் திட்டங்களுக்கு கடன் கேட்டது. உதய் திட்டத்தில் ...

கேரளாவில் ரேஷன் கடைகளுக்கு 'ஸ்வைப்பிங் மிஷின்'

Posted: 09 Jan 2017 10:38 AM PST

திருவனந்தபுரம்: கேரளாவில், 14,500 ரேஷன் கடைகளுக்கு, 'ஸ்வைப்பிங் மிஷின்' வழங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஸ்வைப்பிங் மிஷின்:
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்; இங்கு, ரேஷன் கடைகள், ஏற்கனவே, மின்னணு தொழில்நுட்பத்தில், இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செல்லாத நோட்டு பிரச்னையில், மக்கள் தவித்து வருவதால், கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில், 14 ஆயிரத்து, 500 ரேஷன் கடைகளுக்கு, 'ஸ்வைப்பிங் மிஷின்' வழங்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், ...

இந்தியாவின் முதல் சர்வதேச பங்குவர்த்தக மையம்: பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

Posted: 09 Jan 2017 11:40 AM PST

காந்திநகர்: இந்தியாவின் முதல் சர்வதேச பங்குசந்தை வர்த்தக மையத்தின் துவக்க விழா நேற்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்தது. விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சர்வதேச பங்குச் சந்தை மையத்தினை துவக்கி வைத்தார்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள சர்வதேச பங்குசந்தை வர்த்தக மையம், மும்பை பங்குச் சந்தை வர்த்தக நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த நிறுவனத்தில் சர்வதேச பங்குகள் கரன்சிகள், சரக்குகள் கையாளப்படும்.
விரைவான சேவை:
புதிதாக தொடங்கப்பட்டுள்ள சர்வதேச பங்குச் சந்தை மையத்தில் அதி நவீன ...

ரொனால்டோக்கு சிறந்த கால்பந்து வீரர் விருது

Posted: 09 Jan 2017 12:40 PM PST

புதுடில்லி: பிஃபாவின் 2016-ம் ஆண்டிற்கான சிறந்த கால்பந்து வீரருக்கான விருது போர்ச்சுகல் வீரர் ரொனால்டோக்கு வழங்கப்பட்டது.

பிஃபா விருதுகள்
சர்வதேச கால்பந்து சம்மேளனமான பிஃபா ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. 2016 ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் விழா ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் நடந்தது. அதில், சிறந்த கால்பந்து வீரருக்கான தேர்வில் அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரெஞ்சின் கிரிஸ்மென் மற்றும் போச்சுக்கலின் ரொனால்டோ ஆகிய மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில் ரொனால்டோ ...

சசிகலாவுடன் சந்திப்பு : 'லெட்டர் பேடு' கட்சிகள் குஷி

Posted: 09 Jan 2017 02:05 PM PST

அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு, கட்சி தொண்டர்களிடம் எதிர்ப்பு அதிகம் காணப்படுகிறது. அதை மறைத்து, அவருக்கு அனைத்து தரப்பினரும், ஆதரவு தருவது போல காட்ட, 'லெட்டர் பேடு' கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பு, தினமும், போயஸ் கார்டனில் நடந்து வருகிறது.
கவனிப்பு :
சிறிய கட்சி தலைவர்கள், லெட்டர் பேடு அமைப்புகளின் நிர்வாகிகளை அழைத்து, சசிகலாவை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர்; அப்படி வருவோர், நன்கு கவனிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, லெட்டர் பேடு கட்சி நடத்துவோரும், சமுதாய அமைப்புகளை பெயரளவிற்கு நடத்துவோரும், சசிகலாவை ...

நீர்மூழ்கி அணுஆயுத ஏவுகணை சோதனை: வெற்றிகரமாக பரிசோதித்தது பாக்.,

Posted: 09 Jan 2017 03:01 PM PST

இஸ்லாமாபாத் : நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாயும் அணுஆயுத ஏவுகணையை, பாக்., வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட இந்த சோதனை எப்பகுதியில் நடத்தப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இலக்கை தாக்கியது:
இதுகுறித்து பாக்., ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீர்மூழ்கி கப்பலிலிருந்து செலுத்தக்கூடிய பாக்.,ன் முதல் ஏவுகணையான ‛பாபர்-3' வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வெடி பொருளை சுமந்து பாயும் இந்த ஏவுகணை சுமார் 450 கி.மீ., தொலைவிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™