Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கறுப்பு பணத்தை ஆராதிக்கும் அரசியல் பூசாரிகள்: பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்

Posted: 08 Jan 2017 07:57 AM PST

பெங்களூரு:செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை விமர்சிப்போரை, 'கறுப்புப் பணத்தை ஆராதிக்கும், அரசியல் பூசாரிகள்' என, பிரதமர், நரேந்திர மோடி, கடுமையாக சாடியுள்ளார்.

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின நிகழ்ச்சிகள் நேற்று நடந்தன; இதில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளுக்கு எதிராக, மத்திய அரசு, பெரிய ளவிலான போரை துவங்கி உள்ளது. கறுப்புப் பணத்தால், அரசியல், சமூகம், நிர்வாகம் மிக மோசமாக சீர்கெட்டுள்ளன. இதை ஒழிக்கும் நோக்கில், மத்திய அரசு, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை ...

உ.பி., சட்டசபை தேர்தலில் இருந்து ஆம் ஆத்மி கட்சி ஓட்டம்!:பா.ஜ.,வுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக நழுவல்

Posted: 08 Jan 2017 08:31 AM PST

லக்னோ:உ.பி., சட்டசபை தேர்தலில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டியை பார்த்து பீதி யடைந்துள்ள, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி, 'போட்டியிடப் போவதில்லை' எனக்கூறி, ஓட்டம் பிடித்துள்ளது.

உ.பி., உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு, பிப்., 4 முதல் மார்ச் 8 வரை, ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதில், மத்தியில் ஆளும், பா.ஜ., உள்ளிட்ட முக்கிய கட்சிகள், பெரிய மாநிலமான, உ.பி.,யில் நடக்கும் தேர்தலை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகின்றன. நாடு முழுவதும் தன் அதிகார எல்லையை ...

எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் முடிவு: தீபா அறிவிப்பு

Posted: 08 Jan 2017 09:03 AM PST

''எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில், என் முடிவை அறிவிப்பேன்,'' என, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்தார்.

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், 'கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும்' என, ஜெ., அண்ணன் மகள் தீபாவை வலியுறுத்தி வருகின்றனர். தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.நேற்று மாலை, தொண்டர்களிடம் தீபா பேசுகை யில், ''வரும், 17ல், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை, அனைவரும் கொண்டாட வேண்டும். அன்று, அவரது ...

மூன்று நிமிட பேச்சுக்கு 3 மணி நேரம் காத்திருக்கச் செய்வதா? சசிகலா கூட்டத்தில் பங்கேற்ற, 'மாஜி'க்கள் கொதிப்பு

Posted: 08 Jan 2017 09:07 AM PST

சசிகலாவின் மூன்று நிமிட பேச்சை கேட்க, மூன்று மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால், 'மாஜி' அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். 'மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய சந்திப்பு, கசப்பானதாக முடிந்து விட்டது' என்றும், கொதிப்புடன் கூறினர்.

அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலாவுக்கு, பல மட்டத்திலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதைச் சமாளிக்க, தலைமை அலுவலகத்தில், கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து வருகிறார். நேற்று காலை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். மதியம், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் ...

ஜெ., பட அழைப்பிதழ்களுக்கு தடை; இனி... எல்லாம் இப்படி தான்...!

Posted: 08 Jan 2017 09:09 AM PST

ஜெயலலிதா படத்துடன் கூடிய, திருமண அழைப்பிதழ்களை பயன்படுத்த, அ.தி.மு.க., நிர்வாகிகள் தடை விதித்துள்ளதால், வியாபாரி கள், அச்சக உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த, 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின்பும், அ.தி.மு.க., ஆட்சியே தொடர்ந்தது. இதனால், அக்கட்சியினரின் ஆர்டரை எதிர் பார்த்து, ஜெயலலிதா படத்துடன் கூடிய, 10 கோடி திருமண அழைப்பிதழ்களுக்கு, சிவகாசி, மதுரை, சென்னை, சேலம், திருச்சி, டில்லி, கோல்கட்டா ஆகிய இடங்களில் உள்ள அச்சகங்கள், திருமண அழைப்பிதழ் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, வியாபாரிகள் ஆர்டர் கொடுத்தனர். இவை, நவம்பரில் வினியோகிக்கப் ...

செல்லாத நோட்டு அறிவிப்பு சாதனை என்கிறார் ஜெட்லி

Posted: 08 Jan 2017 09:12 AM PST

புதுடில்லி:'செல்லாத நோட்டு அறிவிப்பு, மத்திய அரசின் சாதனை நடவடிக்கை' என, நிதியமைச்சர், அருண் ஜெட்லி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலை வருமான, அருண் ஜெட்லி, சமூக வலை தள மான, 'பேஸ்புக்'கில் கூறியுள்ளதாவது: செல்லாத நோட்டு அறிவிப்பால், இரண்டு மாதங்களாக, வங்கிகளில் காத்திருந்து மக்கள் அடைந்த கஷ்டம் நீங்கியுள்ளது; நிலைமை சீரடைந்து உள்ளது. வழக்கமான பொருளாதார நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.இந்த நடவடிக்கையால், கறுப்பு பணத்தை மீட்க முடியவில்லை என, சிலர் விமர்சிக்கின்றனர். ஆனால், இவை வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப் ...

ரூ.871 கோடி கறுப்பு பணம் 'டிபாசிட்': குஜராத் கூட்டுறவு வங்கியில் மோசடி

Posted: 08 Jan 2017 09:14 AM PST

புதுடில்லி:குஜராத் மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில்,செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், முறைகேடான வழியில், 871 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலை மையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்நிலை யில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின், ராஜ் கோட்டில், பிரபல கூட்டுறவு வங்கியில், முறை கேடான வகையில், கறுப்பு பணம், 'டிபாசிட்' செய்யப்பட்டு, வெள்ளை ஆக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகள் சில நாட்க ளாக, அந்த வங்கிக்கு ...

தீபா ஆதரவாளர்கள் ஈரோட்டில் புதிய கட்சி துவக்கம்!:எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அ.தி.மு.க., என பெயர்:கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி அறிமுகம்:ஆதரவு பெருகுவதால் சசிகலா வட்டாரங்கள் கலக்கம்

Posted: 08 Jan 2017 09:28 AM PST

தீபா ஆதரவாளர்கள், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரில், புதிய கட்சியை, ஈரோட்டில் நேற்று துவங்கினர். கட்சிக்கு, கறுப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தில் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. தீபாவுக்கு நாளுக்கு நாள் பெருகும் ஆதரவால், சசிகலா வட்டாரங்கள் கலக்கத்தில் உள்ளன.

அ.தி.மு.க., பொதுச்செயலராக பொறுப்பேற் றுள்ள சசிகலாவை, அடிமட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அதனால், 'ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும்; ஜெ., விட்டு சென்ற பணிகளை தொடர வேண்டும்' என, வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக, தமிழகம் முழுக்க பல ...

ரெட்டியால் கிடப்பில் போன சாலை பணிகள்; ஜெ., மறைவால் சாட்டையை சுழற்ற ஆளில்லை

Posted: 08 Jan 2017 09:34 AM PST

சேகர் ரெட்டியால் மேற்கொள்ளப்பட்ட சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்காமல், நெடுஞ் சாலை துறையினர் அமைதி காத்து வருகின்றனர்.

அரசு துறைகளில், 'கிரேடு' அடிப்படையில், கான்ட்ராக்டர்களுக்கு, லைசென்ஸ் வழங்கப் படுகிறது. இப்படி, லைசென்ஸ் பெற்ற குறுகிய காலத்தில், சேகர் ரெட்டி பெரும் தொகையுள்ள, நெடுஞ்சாலை துறை பணிகளை செய்துள்ளார். இதற்கு, துறையின் முக்கிய புள்ளி மட்டுமின்றி, அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்; ஏராளமான பணிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் மூலம், கிழக்கு கடற்கரை சாலையை, ...

13ம் தேதி வரை கிரெடிட், டெபிட் கார்டு ஏற்கப்படும்: பெட்ரோல் முகவர்கள் சங்கம்

Posted: 08 Jan 2017 10:39 AM PST

புதுடில்லி : கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படாது என்ற முடிவை பெட்ரோல் முகவர்கள் சங்கம் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளது. அதன்படி, ஜன., 13 ம் தேதி வரை கிரேடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் பெறலாம்.
1 சதவீத வரி
ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிப்புக்கு பிறகு மத்திய அரசு ரொக்கமில்லா பரிவர்த்தனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பெட்ரோல் பங்குகளில் வங்கி கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் 0.75 சதவீதம் விலை குறைப்பு அளிக்கப்படும் என அறிவித்தது. இதற்கிடையே, ஹச்.டி.எப்.சி., ஆக்சிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., ...

நடைமேடைகளில் ஏ.டி.எம்.,: ரயில்வே துறை திட்டம்

Posted: 08 Jan 2017 12:12 PM PST

புதுடில்லி: நாடு முழுவதும், ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகளில், 2,400 ஏ.டிஎம்.,களை நிறுவ, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இலக்கு:
ரயில் கட்டணம் தவிர, விளம்பரம் உள்ளிட்ட மற்ற வழிகளில், வருவாயை பெருக்குவது தொடர்பாக, ரயில்வே துறை ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் மூலம், 2,000 கோடி ரூபாய் வரை, நிதி திரட்ட ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, ரயில்வே ஸ்டேஷன் நடைமேடைகளில், ஏ.டி.எம்.,களை நிறுவ, வங்கிகளுக்கு இடமளிக்கும் திட்டமும் உள்ளது.
விளம்பர வசதி:
இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் ...

வருமான வரி சோதனையில் சிக்கிய ரூ.4,800 கோடி

Posted: 08 Jan 2017 01:37 PM PST

புதுடில்லி: நாடு முழுவதும், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில், 4,807 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது; 112 கோடி ரூபாய் மதிப்பிலான, புதிய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிரடிசோதனை:
மத்திய அரசு, செல்லாத நோட்டு திட்டத்தை, நவ., 8ல் அறிவித்தது. பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டது. செல்லாத நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது முதல், நாடு முழுவதும், வருமான வரி அதிகாரிகள், 1,138 இடங்களில் அதிரடி சோதனை ...

'பான்' கட்டாயம்: வரித்துறை கிடுக்கிப்பிடி

Posted: 08 Jan 2017 02:28 PM PST

புதுடில்லி: 'வங்கிகள், சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவரின், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான, 'பான்' விபரத்தை, கட்டாயம் பெற வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.

உத்தரவு:
இதுகுறித்து, வங்கிகளுக்கு, வருமான வரித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றிக்கை விபரம்: கடந்த, 2016, ஏப்ரல், 1ல் இருந்து, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியான, நவம்பர், 8 வரையில், வங்கி சேமிப்பு கணக்குகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, ரூபாய் குறித்த விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
வங்கிகளில், ...

5 மாநில தேர்தல்: இடதுசாரிகள் தனித்துப் போட்டி

Posted: 08 Jan 2017 03:09 PM PST

திருவனந்தபுரம் : உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
தனித்துப் போட்டி:
உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்திரகண்ட் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறுகிறது. இத்தேர்தலில் பிற இடதுசாரிகள் கட்சியுடன் சேர்ந்து தனித்து போட்டியிடுவதாக சி.பி.எம்.,(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாய்ப்பில்லை :
கேரள மாநிலம் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™