Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!

Posted: 08 Jan 2017 06:45 AM PST

கட்டுரையாளர் கவனத்திற்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம். ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும். அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் ...

யார் என் கோபத்திற்கு காரணமோ....அவர்களையே போட்டுருவேன்.....கொத்து புரோட்டா

Posted: 08 Jan 2017 06:12 AM PST

யார் என் கோபத்திற்கு காரணமோ....அவர்களையே போட்டுருவேன்.....கொத்து புரோட்டா ------------------------------------------------------------------------------------------------------------------------ நன்றி முகநூல் ரமணியன்

படித்தது பகிர்வுக்காக...

Posted: 08 Jan 2017 06:00 AM PST

படித்தது பகிர்வுக்காக... அபூர்வமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் ரகசியங்கள்... சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள். நமது உடலை, நமது உணர்வுகளை, நமது உறக்க நிலையை, அவசரமாக வரும் சிறுநீர் முதற்கொண்டு பலவற்றை சின்ன சின்ன ட்ரிக்ஸ் மற்றும் ஹேக்ஸ் மூலம் நாமே கட்டுப்படுத்தலாம். அது எப்படி ...

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை

Posted: 08 Jan 2017 05:52 AM PST

வாழ்த்துவோம் சாகச கலைஞர்களை




நன்றி முகநூல்

ரமணியன்

சின்னமா !

Posted: 08 Jan 2017 05:41 AM PST

அது ஓர் அடர்ந்த காடு .  அந்தக் காட்டின் நடுவே ஒரு குடிசை . அந்தக் குடிசையில் வேடன் ஒருவன் , தன் மனைவியுடனும் ,இரண்டு மகன்களுடனும் வாழ்ந்துவந்தான் . தினமும் அவன் வேட்டைக்குச் செல்வான் .பறவைகள் , மிருகங்கள் ஆகியவற்றை வேட்டையாடிக் கொண்டுவருவான் . தன் குடும்பத் தேவைக்குப் போக மீதியுள்ள பறவைகளையும் , மிருகங்களையும் விற்றுவிடுவான் . அதில் கிடைத்த பணத்தைக்கொண்டு ஜீவனம் செய்து வந்தான் . வேட்டைக்குச் செல்லும்போது தன் இரண்டு மகன்களையும் அழைத்துச் செல்வான் . வேட்டையின் நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் ...

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் புத்தகம் தேவை

Posted: 08 Jan 2017 04:52 AM PST

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் புத்தகம் தேவை நண்பர்கள் யாரிடமாவது இருந்தால் தந்து உதவவும்
(ஆங்கிலத்தில் -ஸ்டீஃபன் ஹாக்கிங், தமிழில் -நலங்கிள்ளி)

கவியருவி ம. ரமேஷ் கவிதைகள்

Posted: 08 Jan 2017 12:56 AM PST

குதர்க்கம்

இன்றும் -
நெருஞ்சி முள்ளில்
நடக்கிற போது
பரதன் குலத்தோர்
செருப்பை
பறித்துக் கொள்கிறார்கள்

கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்

Posted: 08 Jan 2017 12:50 AM PST

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்


நீ
என்னை
மறந்துபோய் நினைத்திருக்கலாம்
துன்பத்தில் நினைக்கும்
பக்தன்போல


வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ

Posted: 08 Jan 2017 12:49 AM PST

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை


µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி

கவியருவி ம. ரமேஷ் சென்ரியு!

Posted: 08 Jan 2017 12:48 AM PST

¦ அம்மா  விளையாடப்  போறேன் என்ன  விளையாட்டு? போய்ப்  படி ¦ உண்டி  கொடுத்தோரே உயிரை  எடுத்தனர் கல்லரை  வாசகம்:  ஈழத்தமிழர்   ¦ காதலியைப்  படைத்தவன் கடவுள்  என்றால் கடவுள்  எனக்கு  மாமா  உறவு ¦ படிடா … முடியாது! எழுதுடா … முடியாது! சார் நான் பாஸ் ஆயிட்டேன் ¦ வரிசையில் ஆண்கள் திறக்கப்பட்டது டாஸ்மாக்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™