Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


காலில் விழாதீர்: ஸ்டாலின்

Posted: 07 Jan 2017 06:12 AM PST

சென்னை:'வளைந்து, குனிந்து, தவழ்ந்து, தரையில் உருண்டு, கால் நோக்கி கும்பிடு போடுபவர்களால், தமிழகம் பாழ்பட்டு கிடக்கி து. எனவே, காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், கட்சியினருக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை: தி.மு.க., செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள என்னை சந்திக்க வரும் கட்சியினர் சிலர், ஆர்வம் மிகுதியால் சற்றும் எதிர்பாராத நிலையில், காலில் விழுந்து வணங்க முயற்சிக்கின்றனர். இதை, நான் சிறிதும் விரும்புவதில்லை. யார் காலிலும் விழ வேண்டிய அடிமை நிலை, எந்த மனிதருக்கும் எப்போதும் ஏற்படக் கூடாது. வாழும் ...

பன்னீருக்கு எதிராக தம்பிதுரை பனிப்போர்: சசிகலா குடும்பம் 'ஷாக்'

Posted: 07 Jan 2017 06:24 AM PST

அ.தி.மு.க.,வில், முதல்வர் பன்னீர்செல்வத்திற் கும், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரைக் கும் இடையே பனிப்போர் நிகழ்வது, சசிகலா குடும்பத்தினர் மற்றும் நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா இருந்தவரை, அவரை எதிர்க்கும் துணிவு இல்லாததால், அனைவரும் அடக்கி வாசித்தனர். அனைத்து நிர்வாகிகளும், உளவுத் துறையினரால் கண்காணிக்கப்பட்டனர். நிர்வாகிகளில் யார் தவறு செய்தாலும், தயவு தாட்சண்யம் பார்க்காமல், ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வந்தார். இதன் காரணமாக, நிர்வாகிகள் பயத்துடன், ஜெ., கூறும் பணிகளை மட்டும் செய்து வந்தனர்.எனினும், ...

5 மாநில தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., தலைமை...வியூகம்?:பட்ஜெட்டில் ஏழைகளை கவரும் திட்டங்களுக்கு வாய்ப்பு

Posted: 07 Jan 2017 06:29 AM PST

அடுத்த மாதம், 4ல் துவங்கி, மார்ச் 8 வரை, உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், பிப்., 1ல் தாக்கலாக உள்ள மத்திய பட்ஜெட்டில், ஏழை களை கவரும் வகையிலான திட்டங்களை இடம்பெறச் செய்ய, மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசு திட்டமிட்டு உள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், அடுத்த மாதம், 4 முதல் மார்ச் 8 வரை, பல கட்டங்களாக நடக்கவுள்ளது. 2014 லோக்சபா தேர்தலுக்குப் பின் நடக்கும் பெரியளவிலான தேர்தல் என்பதால், எப்படியும் வெற்றி பெற்று, தங்கள் மீதான ...

'மன்னார்குடி' தலையீட்டால் கட்டுமான நிறுவனங்கள்... பீதி!:தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு ஆபத்து?

Posted: 07 Jan 2017 06:38 AM PST

அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள அதிகார மாற்றங்க ளால், ரியல் எஸ்டேட் துறையில், மீண்டும் மன்னார்குடி சொந்தங்களின் ஆதிக்கம் தலை துாக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் பீதியடைந்து உள்ளன. அறிவித்த கட்டுமான திட்டங்களை கைவிடலாமா என, நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன. இதனால், ரியல் எஸ்டேட் துறைக்கு, தமிழகத்தில் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா, 1991 - 96, 2001 - 2005 ஆகிய காலங்களில் இருந்த போது, அவரது தோழியும், தற்போதைய, அ.தி.மு.க., பொதுச் செயலருமாக உள்ள, சசிகலாவின் உறவினர்கள் என்று கூறிக்கொள்ளும், மன்னார்குடி சொந்தங்கள், அதிகார பலத்துடன் ...

அரசியலில் வெளிப்படை தன்மையை ஏற்படுத்துவதில் மோடி...திட்டவட்டம்!:கட்சிகளுக்கு நிதி கிடைப்பதை முறைப்படுத்த முடிவு

Posted: 07 Jan 2017 08:47 AM PST

புதுடில்லி:''அரசியல் கட்சிகளுக்கு நிதி கிடைக் கும் விஷயத்தில், வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்த, பா.ஜ., முக்கிய பங்காற்றும்; வெளிப் படைத் தன்மையை முன்னிறுத்தி, தேர்தல் நடைமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

உ.பி., கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டசபைகளுக்கு, பிப்ரவரி முதல், மார்ச் வரை, பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.மொத்தம், 403 தொகுதிகளை உடைய, உ.பி.,யில், பலத்தை நிரூபித்து, ஆட்சியை கைப்பற்றுவதில், ஆளும் சமாஜ்வாதி உள்ளிட்ட பிரதான கட்சிகள் ...

சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக்காக காத்திருக்கிறார் சசிகலா 'திக் திக்!:களம் 'கிளியர்' ஆக பொறுத்திருக்கிறார் ஜெ., மருமகள் தீபா

Posted: 07 Jan 2017 09:30 AM PST

அ.தி.மு.க., பொதுச் செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலாவிற்கு, தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், முதல்வர் பதவியேற்பை தள்ளிப் போட்டு, 'திக் திக்' மனநிலையில், சசிகலா தரப்பினர் காத்திருக்கின்றனர்.

அதேபோல, ஜெயலலிதாவின் வாரிசாக உரு வெடுக்க தயாராக இருக்கும், அவரது மருமகள் தீபாவும், சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்புக்கு பின், களம், 'கிளியர்' ஆகும் என்பதால், பொறுத்திருக்கிறார்.வருமானத்திற்கு அதிகமாக, 66 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்கள் சேர்த்ததாக, ...

செல்லாத ரூபாய் நோட்டு திட்டம்: அடங்கினர் பயங்கரவாதிகள்

Posted: 07 Jan 2017 09:37 AM PST

புதுடில்லி:மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாத தாக்குதல் எண்ணிக்கை, 60 சதவீதமும், ஹவாலா பணப் பரிவர்த்தனை, 50 சதவீதமும் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து, மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட ரகசிய, 'சர்வே'யில் தெரிய வந்துள்ளதாவது:* மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்குப் பின், ஜம்மு - காஷ்மீர் மாநிலத் தில், பயங்கரவாத செயல்களின் எண்ணிக்கை, 60 சதவீதம் குறைந்துள்ளது. டிசம்பரில்,ஒரே ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் மட்டுமே நடந்துள்ளது* ஹவாலா பணப் ...

எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் தீபா முடிவு அறிவிப்பு

Posted: 07 Jan 2017 09:47 AM PST

சசிகலாவிற்கு எதிராக, ஜெயலலிதா மருமகள் தீபா, அரசியலில் குதிக்க தயாராகி விட்டார். எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான, ஜன., 17ல், தன் அரசியல் பிரவேசத்தை அறிவிக்கிறார்.

தினமும், தீபாவை சந்திக்க, வெளி மாவட்டங்க ளில் இருந்து, ஏராளமானோர் வருகின்றனர். நேற்று வந்த தொண்டர்கள், 'நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். பணம் குறித்து கவலைப்பட வேண்டாம்; நாங்கள் தருகிறோம்' என, கோஷமிட்டனர்.
அவர்களிடம், தீபா பேசியதாவது:
ஜெயலலிதாவை இழந்த மீளாத் துயரில் இருக்கிறோம். எனவே, சிறிது காலம் பொறுமை காக்கவும். தற்போதைய நிலையில், பொறுமை யுடன் காத்திருப்பது மிக ...

சசிகலா படம் மீது சாணம் வீச்சு: சுத்தம் செய்த போலீசார்

Posted: 07 Jan 2017 09:50 AM PST

மயிலாடுதுறை:மயிலாடுதுறையில், அ.தி. மு.க.,வினர் வைத்த டிஜிட்டல் பேனரில், பொது செயலர் சசிகலா உருவப்படம் மீது பூசப்பட்ட சாணத்தை, போலீசார் சுத்தப்படுத்தியது, பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறையில் பல இடங்களில், ஜெயலலிதா, சசிகலா படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் இரவு, இரு இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில், சசிகலா படத்தின் மீது சாணம் வீசப்பட்டது. அதை, அ.தி.மு.க., நிர்வாகிகளே கண்டு கொள்ளாத நிலையில், போலீசார் உடனடியாக ஆட்களை அழைத்து வந்து, பேனரிலிருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தனர். ...

புரியும் வகையில் தீர்ப்பு : சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

Posted: 07 Jan 2017 11:39 AM PST

புதுடில்லி: ''கிரிமினல் வழக்கு விசாரணை முடிவில், கருத்தை மட்டும் சொல்லாமல், அனைவருக்கும் புரியும் வகையில் முழு தீர்ப்பையும் நீதிபதி அறிவிக்க வேண்டும்,'' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில், வரதட்சணை மரணம் தொடர்பான ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவரை, விசாரணை கோர்ட் விடுவித்தது. அதை எதிர்த்து, சத்தீஸ்கர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை, மற்றொரு செஷன்ஸ் நீதிபதிக்கு மாற்றி, ஐகோர்ட் உத்தரவிட்டது.
நீதிபதிகள் உத்தரவு
இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு ...

அண்ணாமலை பல்கலையில் சும்மா இருக்கும் 1,080 பேர்

Posted: 07 Jan 2017 01:13 PM PST

அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், அண்ணாமலை பல்கலையில், 1,080 பேராசிரியர்கள் வேலையே இல்லாமல், சம்பளம் பெறுவதாகவும், அதனால், மாதம், 20 கோடி ரூபாய் வீணாவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலை, 2013 முதல், தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
நிதி பற்றாக்குறை
ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கே சம்பளம் வழங்க முடியாமல், நிதி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், அரசின் நிதியில் நிர்வாக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போதைய நிலையில், மாதம் தோறும், 50 கோடி ரூபாய் வரை, ...

‛ ரங்கா.. கோவிந்தா...' கோஷம் முழங்க ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு

Posted: 07 Jan 2017 03:11 PM PST

திருச்சி : வைகுண்ட ஏகாதசி யை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று(08-01-17) அதிகாலை 4 .30மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவின், முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு, இன்று அதிகாலை நடந்தது. ஸ்ரீ ரெங்கநாத கோவி்ல் வைகுண்ட ஏகாதேசி விழா கடந்த டிச.28-ம் தேதி தொடங்கியது.
முன்னதாக நடந்த ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™