Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சசிகலாவுக்கு எதிராக தீபா வீட்டில் குவியுது கூட்டம்:அரசு இடையூறு செய்வதாக கட்சியினர் மறியல்

Posted: 06 Jan 2017 08:14 AM PST

ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டின் முன், நாளுக்கு நாள் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தன் பேச்சு அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதால், 'மைக்' பிடித்து பேச ஆரம்பித்துள்ளார் தீபா. கூட்டம் குவிவதால், இடையூறு ஏற்படுத்தும் செயல்கள் நடப்பதாக, தொண்டர்கள் நேற்று, மறியல் செய்தனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அரசியலுக்கு வரும் படி, வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா வசித்து வந்த, போயஸ் கார்டன் பகுதி, வெறிச்சோடியுள்ள ...

ராமமோகன ராவிடம் மீண்டும் விசாரணை

Posted: 06 Jan 2017 08:33 AM PST

முன்னாள் தலைமைச் செயலர் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக்கிடம், வரு மான வரித் துறையினர், மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறிய தாவது: டிச., 30ல் ஆஜரான விவேக், நாங்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு, பதில் அளித்தார். முழுமையான விளக்கம் அளிக்க,
கூடுதல் அவகாசம் கேட்டு உள்ளார். அதுபோல், ராவின் அலுவலகத்தில் சிக்கிய, இரண்டு மொபைல் போன்களில் உள்ள பதிவுகளை, ஆய்வு செய்ய உள்ளோம். சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும் என்ப தால், சேகர் ரெட்டி,ராமமோகன ராவ் வீடுகளில், முதலில் சோதனை செய்தோம். அந்த சோதனைகள் ...

ஜெ., - சசி வாங்கி குவித்த நிலங்கள் : திரும்ப கிடைக்குமா என விவசாயிகள் ஏக்கம்

Posted: 06 Jan 2017 08:47 AM PST

திருநெல்வேலி: ஏக்கருக்கு, 2,000 ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங் கள், ஜெ., இறந்ததை அடுத்து, தங்களுக்கு திரும்ப கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

கடந்த 1991 - 96 அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா பெயர்களில், தமிழகம் முழுவதும் ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவிக்கப்பட்டன. அவர்கள் வாங்கி குவித்த சொத்து பட்டியலில், துாத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே சேரகுளம், வல்லகுளம், மீரான்குளம், அரசர்குளம் உள்ளிட்ட இடங்களில், 969 ஏக்கர் நிலங்களும் அடக்கம். வானம் பார்த்த பூமியான
இந்த பகுதியில், ரோட்டின் ...

100 சதவீதம் 'டிஜிட்டல்' பரிவர்த்தனைக்கு ரயில்வே மாறுவதில்...சிக்கல்!:'இ - வாலட்'டை தடுக்கும் வகையில் சி.ஏ.ஜி., புது நிபந்தனை

Posted: 06 Jan 2017 08:58 AM PST

புதுடில்லி:'ரயில்வே விதிகளின் படி, ரயில் வேக்கு முதலில் பணத்தை கட்டிவிட்டு தான், டிக்கெட்களை விற்க வேண்டும்' என, சி.ஏ.ஜி., எனப்படும், மத்திய கணக்கு தணிக்கை அலுவல கம், கண்டிப்பாக கூறியுள்ளது; இதனால், 'இ - வாலட்' முறையில் பணப்பரிமாற்றம் நடக்க முடியாததால், ரயில்வேயை, 100 சதவீதம், 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரயில்வேயை, ரொக்கமில்லாத பரிவர்த்தனை யாக முற்றிலும் மாற்றும், முயற்சிக்கு, புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.கறுப்புப்பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, என, பிரதமர் நரேந்திர மோடி ...

தினகரனுக்கு ரூ.28 கோடி அபராதம் விதித்தது சரியே : அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தீர்ப்பு

Posted: 06 Jan 2017 09:02 AM PST

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவின் சகோதரியின் மகனும், முன்னாள் எம்.பி.,யுமான, டி.டி.வி.தினகரனுக்கு, 28 கோடி ரூபாய் அபராதம் விதித்து, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை மேல்முறையீட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது; வாரியத்தின் உத்தரவை எதிர்த்த, தினகரனின் மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக, அவரது தோழி சசிகலா நியமிக்கப்பட்டார். சசிகலா சகோதரியின் மகன், தினகரன். 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்; ...

6 ஆண்டு வங்கி கணக்குகளை சோதனையிட அரசு முடிவு

Posted: 06 Jan 2017 09:18 AM PST

புதுடில்லி:கறுப்புப் பணத்தை ஒழிக்கும் அடுத்த நடவடிக்கையாக, ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக் கணக்குகளையும், சோதனை செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கறுப்புப் பணத்தை தானே முன் வந்து அறிவிக் கும் வகையில், இரண்டு திட்டங்களை, 2016ல் மத்திய அரசு அறிவித்தது. முதல் திட்டத்தின் மூலம், 65 ஆயிரத்து, 250 கோடி ரூபாய், வெள்ளை ஆனது. இரண்டாவது திட்டத்தின்கீழ், கறுப்புப் பணம் வெளியான விபரம் தெரிவிக்கப்பட வில்லை. இந்த நிலையில்,கறுப்பு பணம் பதுக்கலை தடுக்கும் நோக்கில், ஆறு ஆண்டுகளுக்கு முந்தைய வங்கிக் கணக்குகளையும் சோதனையிட, அரசு முடிவு செய்துள்ளது. ...

52 வயதுக்காரர் இளைஞரணி செயலரானார் 63 வயது ஸ்டாலின் விட்டுக் கொடுத்தார்

Posted: 06 Jan 2017 09:26 AM PST

சென்னை:தி.மு.க.,வில், மூன்று அதிகாரமிக்க பதவிகளை வைத்துள்ளதாக சர்ச்சையில் சிக்கிய ஸ்டாலின், 30 ஆண்டுகளுக்கும் மேலாக வகித்து வந்த, தன், 63வது வயதில், மாநில இளைஞர் அணி செயலர் பதவியை துறந்தார்;52 வயது நிரம்பிய, முன்னாள் அமைச்சர், வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு, அப்பதவி வழங்கப்பட்டுள்ளது.சென்னை அறிவாலயத்தில், ஜன., 4ல், தி.மு.க., பொதுக்குழு கூடியது. அதில், செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வுசெய்யப் பட்டார். பொருளாளர், மாநில இளைஞரணி செயலர் ஆகிய பதவிகளும், அவரிடமே இருந்தன; வேறு யாருக்கும் வழங்கப்படாதது, சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ...

'2ஜி' உரிமம் முடக்கப்படும்! : சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

Posted: 06 Jan 2017 09:50 AM PST

புதுடில்லி: 'ஏர்செல் - மேக்சிஸ்' வழக்கில், மலேஷியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத் தின் அனந்தகிருஷ்ணனும், ரால்ப் மார்ஷலும் நேரில் ஆஜராகத் தவறினால், ஏர்செல் நிறுவனத்தின், '2ஜி' உரிமம் முடக்கப்படும் என, சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்த போது, ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேஷியாவை சேர்ந்த, மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வைத்தார் என, குற்றஞ்சாட்டப்பட்டது. இதில், 742 கோடி வரை பணம் கைமாறியதாக கூறப்பட்டது. இது பற்றி சுப்ரீம் கோர்ட்
மேற்பார்வையில், சி.பி.ஐ., விசாரித்து ...

புளோரிடா விமானநிலையத்தில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் பலி

Posted: 06 Jan 2017 10:51 AM PST

புளோரிடா: புளோரிடா விமான நிலையத்தில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்; 9 பேர் காயம் அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள போர்ட் லாண்டர்டேல் சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர், பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுடத் துவங்கினான். இதனால், பதற்றமடைந்த பயணிகள் ஓடத் துவங்கினர்.
5 பேர் பலி:
இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியானதாகவும் 9 பேர் காயம் அடைந்தனர். பின் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில், மர்ம நபர் ...

* அ.தி.மு.க., ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர...ரூ.200!:* எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க 'படியளப்பு' தீவிரம்

Posted: 06 Jan 2017 10:51 AM PST

அ.தி.மு.க.,வில், ஆதரவுக் கூட்டத்தை அழைத்து வர, தலைக்கு, 200 ரூபாய் பட்டு வாடா செய்யப்படும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா தலைமைக்கு, தொண்டர்களிடமும், மக்களிடமும் எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்க, 'படியளப்பு' ஏற்பாடு களில், நிர்வாகிகள் தீவிரம் காட்ட துவங்கி உள்ளனர்.

அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப் பட்டுள்ள சசிகலா, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகி களை சந்தித்து வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாத புரம், சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை, அவர் ...

தீபாவுடன் கைகோர்ப்பா? மறுக்கிறார் சைதை துரைசாமி

Posted: 06 Jan 2017 01:14 PM PST

சென்னை: ''தீபாவுடன் கைகோர்த்து, அ.தி.மு.க.,வை உடைக்க முயற்சிப்பதாக பரவிய தகவல் வதந்தி,'' என, முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

கைகோர்ப்பா?
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., தலைமை ஏற்குமாறு, சசிகலாவை, முன்னாள் மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட, முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தினர். பின், போயஸ் கார்டன், கட்சி அலுவலகம் பக்கம், துரைசாமியை பார்க்க முடியவில்லை. சமூக வலைதளங்களில், 'ஜெயலலிதாவின், அண்ணன் மகள் தீபாவுடன் கைகோர்த்து, சைதை துரைசாமி, அ.தி.மு.க.,வை உடைக்க முயற்சி செய்கிறார்' என, நேற்று தகவல்கள் பரவின; அந்த தகவலை, சைதை ...

'உதய்' மின் திட்டத்தில் இணைகிறது தமிழகம்; 9ம் தேதி ஒப்பந்தம்

Posted: 06 Jan 2017 02:14 PM PST

புதுடில்லி : உதய் மின் திட்டத்தில் தமிழகம் இணைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 9ம் தேதி டில்லியில் கையெழுத்ததாக உள்ளது.

‛உதய்' மின் திட்டம்:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 'உதய்' (உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்) திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ், 2015 செப்., வரை, மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, மாநில அரசுகள் ஏற்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல அம்சங்கள் அந்த திட்டத்தில் ...

10 ரூபாய் நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி திட்டவட்டம்

Posted: 06 Jan 2017 03:07 PM PST

புதுடில்லி : 'பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என, வரும் தகவல்கள் தவறானவை; மக்கள் அச்சமடைய வேண்டாம்; அது போன்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை' என, ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தி உள்ளது.

தவறான தகவல்:
செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியானது முதல், ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. செல்லாத நோட்டுகளை மாற்ற வாய்ப்பு தரப்பட்ட போது, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமின்றி, நாணயங்களையும் மக்கள் வாங்கி சென்றனர். இவ்வாறு, 10 ரூபாய் நாணயங்கள் பெற்றவர்களும், ஏற்கனவே அவற்றை சேர்த்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™