Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ஜெ., சொத்து யாருக்கு?: நிறைவுப் பகுதி

Posted: 05 Jan 2017 06:38 AM PST

'ஜெ., சொத்து யாருக்கு?' என்ற தலைப்பில், கடந்த இரு நாட்களாக வெளியான முழுப்பக்க கட்டுரை, சொத்துக் குவிப்பு வழக்கில், தாக்கலான சொத்துப்பட்டியலில் இடம் பெற்றிருந்த 200 சொத்து விபரங்களைக் கூறியது.

அந்த பட்டியலில் மீதமுள்ள விபரங்களையும், வழக்கின் எதிர்காலம் குறித்து சட்ட நிபுணர்கள் சொல்வதையும், அரசியல் தலைவர்கள், தங்களுடைய சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைத்துள்ள முன் உதாரணங்களையும் தெளிவு படுத்துகிறது, இன்றைய நிறைவுப்பகுதி...
201. சசிகலா பங்குதாரராக உள்ள மெட்டல்கிங் நிறுவனத்தின் பெயரில், மயிலாப்பூரில் 10.11.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கில், 30.4.1996 ...

சி.பி.ஐ., வசம் சேகர் ரெட்டி : கலக்கத்தில் வங்கி அதிகாரிகள்

Posted: 05 Jan 2017 08:35 AM PST

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியை, காவ லில் எடுத்து விசாரிக்க அனுமதி கிடைத் ததை தொடர்ந்து, அவரிடமும், அவரது கூட்டாளிக ளிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள், விசாரணையை துவங்கினர். இதில், வங்கி அதிகாரிகள் சிக்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளின் வீடுகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 132 கோடி ரூபாய் பணம், 177 கிலோ தங்கம் சிக்கியது. இதில், 34 கோடி ரூபாய் அளவிற்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மேலும், சென்னை, தி.நகரில் உள்ள வீட்டில் இருந்து, எட்டு கோடி ரூபாய்க்கு,புதிய நோட்டுகள் ...

தேர்தல் நேரத்தில் பட்ஜெட் தாக்கலால் எதிர்க்கட்சிகள் கலக்கம்! : தடுத்து நிறுத்தும்படி தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்தல்

Posted: 05 Jan 2017 08:55 AM PST

விரைவில் நடக்கவுள்ள, உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், வாக்காளர் களை கவரும் வகையில் அறிவிப்புகள் இருக்கலாம் என்பதால், பட்ஜெட் தாக்கலை ஒத்தி வைக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி துாக்கியுள்ளன. இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் ஆணையத் திடம்,எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இம்மாதம், 31ல், பட்ஜெட் கூட்டத் தொடருக் காக, பார்லிமென்டை கூட்டுவதற்கு மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. முதல் முறை யாக, ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படாமல், பொது பட்ஜெட்டுடன் சேர்த்து, தாக்கல் செய்யப்படுகிறது. அடுத்த ...

தண்ணீர் திறக்காமல் கர்நாடகா அடம் : குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

Posted: 05 Jan 2017 09:06 AM PST

மைசூரு:''தமிழகத்திற்கு, தினமும், 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்றுவது இல்லை என, கர்நாடக அரசு முடிவு செய்துள் ளது,'' என, அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர், எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர், எம்.பி., பாட்டீல் கூறியதாவது:மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அணை களில் தண்ணீர் மட்டம் குறைந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவு படி, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் ...

பீஹார் அரசியலில் வருகிறது மாற்றம்?: நிதிஷ் குமாருக்கு பிரதமர் மோடி பாராட்டு

Posted: 05 Jan 2017 09:23 AM PST

பாட்னா:பாட்னாவில் நடந்த, சீக்கிய குரு கோவிந்த் சிங்கின், 350வது பிறந்த நாள் விழா வில் பங்கேற்ற, பிரதமர், நரேந்திர மோடி, பீஹாரில் மதுவிலக்கை அமல்படுத்திய, மாநில முதல்வர் நிதிஷ் குமாரை வெகுவாக பாராட்டி னார்; பிரதமரின் இந்த பேச்சு, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

சீக்கிய குரு கோவிந்த் சிங்கின், 350வது பிறந்த நாள் விழா, பீஹார் மாநிலம் பாட்னாவில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதிலும் இருந்து, லட்சக்கணக்கான சீக்கியர்கள் விழாவில் பங்கேற்றனர். இதை முன்னிட்டு, மத்திய - மாநில அரசுகளின் சார்பில் சிறப்பான ஏற்பாடு ...

கூட்டங்களில் பேசிப் பழக்கமில்லாததால் சசிகலா... திணறல்! : அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் பேச தெரியாமல் தவிப்பு

Posted: 05 Jan 2017 09:28 AM PST

அ.தி.மு.க., பொதுச் செயலராகியுள்ள சசிகலா, கூட்டங்களில் பேசிப் பழக்கம் இல்லாததால், எழுதி வைத்ததை படிக்கவே திணறி வருகிறார். மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின் போது, சரியாக பேச முடியாமல் தவித்தது, கட்சி நிர்வாகி களிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவுடன், 33 ஆண்டு களாக வசித்து வந்தவர், அவரது தோழி சசிகலா. அவருக்கு உதவியாளராக மட்டுமே செயல்பட்டு வந்தார். ஜெ., பங்கேற்ற பொதுக் கூட்டங்களுக்கு, அவருடன் சென்றாலும், எந்தக் கூட்டத்திலும் பேசியதில்லை.ஜெ., செல்லும் வாகனத்தில், பின் சீட்டில் அமர்ந்து, அவருக்கு குடிக்க தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, ...

சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது

Posted: 05 Jan 2017 09:34 AM PST

அ.தி.மு.க.,வில், சசிகலாவுக்கு எதிர்ப்பும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதர வும் அதிகரித்து வருகிறது. தொண்டர்களிடம் பேசிய தீபா, 'என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது' என, தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலாவை நியமனம் செய்து, பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அவரும் பொறுப்பேற்றார். அதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், 'தலைமை ஏற்க வர வேண்டும்' என, தீபாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.சசிகலா தங்கியுள்ள, சென்னை, போயஸ் ...

சசிகலா பேனர்கள் கிழிப்பு போலீஸ் ஆதரவுடன் மூடி மறைப்பு

Posted: 05 Jan 2017 09:37 AM PST

சேலத்தில், ஒரே நாளில், 10 இடங்களில், சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து வைக்கப் பட்ட பேனர்களை, தொண்டர்கள் கிழித்தனர். அதை, போலீஸ் ஆதரவுடன், நிர்வாகிகள் மூடி மறைத்தனர்.

அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா தேர்வு செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள் ளது. பதவியில் இருப்பவர்கள், நிர்வாகி கள், சம்பாதித்ததை பாதுகாக்க நினைக்கும் நிர்வாகி கள் மட்டுமே, தங்களின் வாழ்க்கை ஓட்டத்திற்காக, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து பேனர்கள் வைக்கின்றனர்.ஆனால், சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள கட்சி தொண்டர்கள், செய்வதறியாது உள்ளனர். தீபாவுக்கு ...

விவசாயிகள் தற்கொலை: ஐகோர்ட் கேள்வி

Posted: 05 Jan 2017 09:45 AM PST

சென்னை:விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கு, அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, மனு தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை, பொது நல வழக்கு மைய நிர்வாக அறங்காவலர் கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது குறித்து, பத்திரிகைகளில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மூன்று ஆண்டுகளாக, வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதால், விவசாயிகள், அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலை தேடி, விவசாய தொழிலாளர்கள், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத் துக்கு ...

காந்தி படம் இல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள்!

Posted: 05 Jan 2017 10:55 AM PST

போபால்: மத்திய பிரதேசத்தில், வங்கியில் வழங்கப்பட்ட, 2,000 ரூபாய் நோட்டுகளில், காந்தியின் படம் இல்லாததை பார்த்து, அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள், அவற்றை வங்கியில் திரும்ப ஒப்படைத்தனர்.

காந்தி படம் இல்லை:
ம.பி., மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஷிவ்பூர் மாவட்டம், பிச்சுகாவடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மீனா. விவசாயியான இவர், சமீபத்தில், அங்குள்ள, எஸ்.பி.ஐ., வங்கிக் கிளையில், தன் கணக்கில் இருந்து, 2,000 ரூபாய் எடுத்தார். வங்கியில் இருந்து வெளியில் வந்தபின், ரூபாய் நோட்டில் காந்தி ...

மீனவர்களை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted: 05 Jan 2017 11:51 AM PST

சென்னை: 'இலங்கை சிறையில் உள்ள, 61 தமிழக மீனவர்களையும், 116 படகுகளையும், உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.
சிறையில் வாடும் மீனவர்கள்:
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாம்பட்டிணத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற, பத்து மீனவர்களை, இலங்கை கடற்படை, கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது. மேலும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 61 பேர் மற்றும் 116 படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க ...

சிறப்பான நிலையில் இந்தியப் பொருளாதாரம்: அருண்ஜெட்லி

Posted: 05 Jan 2017 12:25 PM PST

புதுடில்லி: உலக அளவிலான பொருளாதாரத்தில் இந்திய பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்

டில்லியில் நடந்த நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜி.டி.பி., அதிகரிக்க வாய்ப்பு:
அவர் தெரிவித்ததாவது: மத்திய அரசின் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணியான பெரும் முதலீட்டில் ...

நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகளுக்கு ரூ.100 கோடி பரிசு

Posted: 05 Jan 2017 01:08 PM PST

திருப்பதி : ''நோபல் பரிசு பெறும், ஆந்திர விஞ்ஞானிகளுக்கு, 100 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும்,'' என, அம்மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான, சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார்.
இந்திய அறிவியல் மாநாடு:
ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். இங்குள்ள திருப்பதியில், இந்திய அறிவியல் மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் துவக்கி வைத்தார். ஐந்து நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட, உலக நாடுகளைச் சேர்ந்த, நோபல் பரிசு பெற்ற ...

தந்திரமான பேச்சாளர் மோடி: சரத் பவார்

Posted: 05 Jan 2017 02:04 PM PST

நாசிக் : பிரதமர் நரேந்திர மோடி பேசியே மயக்கும் தந்திரமான பேச்சாளர் என தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
இதுவே கடைசி:
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய வாபஸ் பெறப்பட்ட பின், தாங்கள் அணிந்திருக்கும் நகைகள் பற்றிய விவரங்களையும் மத்திய அரசு கேட்க உள்ளதாக ஒரு பேச்சு நிலவுகிறது. அவ்வாறு நடந்தால், எம்.பி.,கள் அனைவருக்கும் இதுவே கடைசி பதவிக் காலம். இதன்பின் ஒருபோதும் மக்கள் நம்மை தேர்ந்தெடுக்க ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™