Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நெருங்குகிறது அறுபதாவது நாள்...!!

Posted: 05 Jan 2017 04:31 PM PST

நவீன டிஜிட்டில் பணப்பரிமாற்றத்திற்கு மாறுங்கள் மாறுங்கள் என்று நாளுமொரு அறிக்கை அழகாகச் சட்டையை மாற்றுவது போல வந்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் நிலைமையோ வங்கி வாசல்களில் பசியோடும் பட்டினியோடும் தினமும் நிற்கின்ற அவலநிலையே தொடர்கின்றன. ஐம்பது நாளில் தீரும் என்றார்கள் அறுபது நாளை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கும் இதே நிலைதான் தொடருமோ ? அதற்கு மேலும் தொடருமோ, மக்களின் இந்த அவதி / இன்னல்கள் அந்த ராமனுக்கு தெரியுமோ? இல்லை ராவணனுக்கு தெரியுமோ? தெரியாது. இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ...

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி?

Posted: 05 Jan 2017 04:17 PM PST

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி? மயிலாப்பூர் எம்.எல்.ஏ .பதவியை ராஜினாமா செய்கிறார் நட்ராஜ்? சென்னை: அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா தலைமை ஏற்காமல் ஒதுங்கி இருக்கும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. நட்ராஜ் தமது பதவியை விரைவில் ராஜினாமா செய்வார் என கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் ஒதுங்கிவிட்டனர். தற்போதைய எம்.எல்.ஏ.க்களில் வேறுவழியில்லாமல் சசிகலா தலைமை ஏற்று செயல்பட்டு வருகின்றனர். அதே நேரத்தில் சசிகலாவுக்கு எதிராக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ...

பொங்கல்

Posted: 05 Jan 2017 01:59 PM PST

பொங்கல் திருநாளைப் பேற்றிப் பொலிவுடன் கொண்டாடும் இந்த இந்த மங்கல நாளில் பெரியோர்க்கும் நண்பர்களுக்கும் என் வணக்கம். என்தையும் தாயும் மகிழ்ந்திங்கு கொண்டாடி என் முன்னோர் வழக்கத்தை எனக்குளிங்கு விதைத்து. மகிழ்ந்து கதைபேசும் மக்களாய் நாமெல்லாம். பொங்கல் பற்றியென் கவிதை புனைந்திங்கு பகிர்ந்திடும் வேளையிலே என்னுள் தோன்றியதெல்லாம் ஏனிப்படி நாமென்றே? பொங்கலுக்கென்றோர் பெருமையுண்டு. அன்று தமிழன் அடைந்த லாபங்கள் பொதிகளாய் மூட்டைகட்டி. செல்வத்தால் பொங்கிய காலமது. மேடைகளிட்டு நாங்களிங்கு ...

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை

Posted: 05 Jan 2017 11:39 AM PST

அனைவருக்கும் வணக்கம் , இரண்டு மாதங்களுக்கு முன் எனது மூத்த மகளுக்கு தலையில் பொடுகு தொல்லை அதிகமாக இருந்ததால் ஏதேனும் ஆயுர்வேத மருந்துகள் கிடைக்குமா என்று இணையத்தில் தேடினேன் அப்போது தான் சதுரகிரி ஹெர்பல்ஸ் என்னும் வலைப்பூவை பார்த்தேன். சதுரகிரி என்று பெயர் வைத்துள்ளார்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அதில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு திரு.கண்ணன் அவர்களிடம் பேசினேன் , மிக மரியாதையாக பேசினார். மருந்துகளுக்கான கட்டணத்தை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தினேன் மருந்தை ...

சித்தர்களின் “காயகற்பம்” சாத்தியமா?

Posted: 05 Jan 2017 07:53 AM PST

சித்தர்களின் "காயகற்பம்" சாத்தியமா? -1 --அண்ணாமலை சுகுமாரன் "அஸதோ மா ஸத்கமய தமஸோ மா ஜோதிர்கமைய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:" என்கிறது பிருகதாரண்யக உபநிஷத். [இறைவா!] அஞ்ஞானத்திலிருந்து என்னை மெஞ்ஞானத்திற்கு இட்டுச்செல்! இருளிலிருந்து என்னை ஒளிக்குச் இட்டுச்செல்! இறப்பிலிருந்து என்னை இறப்பின்மைக்கு இட்டுச்செல்! ஓம், அமைதி, அமைதி, அமைதி! இவ்வாறு பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இந்தியமக்களின் வாழ்க்கையின் உயரிய லட்சியமாக மரணமில்லாப் ...

ஜெயலலிதா மரணம் சி.பி.ஐ.,விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Posted: 05 Jan 2017 03:48 AM PST

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணை கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன புதுடில்லி: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ.,விசாரணை கோரிய மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டன.கடந்த டிசம்பர் 5 ம் தேதி ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலாபுஷ்பா சுப்ரீம் கோர்ட்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஜெயலலிதா மரணத்தில் ...

சுயம் அறிதல்

Posted: 05 Jan 2017 02:52 AM PST

- ஒருவன் கடவுளை நோக்கிக் கடுமையாகத் தவம் இருந்தான் கடவுள் அவன் தவத்தை மெச்சி , 'என்ன வரம் வேண்டும் பக்தா ?' என்றார். - 'மற்றவர்களின் மனதை படிக்கிற திறனை அருள வேண்டும் சுவாமி' என்றான். கடவுளும் 'வரம் தந்தேன்' என்றார். - சில நாட்களிலேயே அவன் அழுது புலம்பி கடவுளை அழைத்து , 'தயவு செய்து இந்த வரத்தை திரும்ப வாங்கிக்கொள்ளுங்கள்' என்றான். - 'ஏன்?' என்றார் கடவுள். - 'அனைவரும் என்னை பொய் சொல்கிறவன், பொறாமை பிடித்தவன், அடுத்தவன் குடி கெடுப்பவன், சோம்பேறி என்றெல்லாம் நினைக்கிறார்கள் ...

10 ஆண்டுகாலத்தில் முதல் முறையாக நடந்த சந்திப்பு இது! அரசியலில் புதிய கலாச்சாரம் துவக்கம்

Posted: 05 Jan 2017 02:42 AM PST

- சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடக்காத ஒரு சந்திப்பு நேற்று மாலை சென்னைத் தலைமமைச் செயலகத்தில் நடந்துள்ளது. நிச்சயம் எல்லோரும் கணித்திருப்பார்கள், எதைப் பற்றி சொல்கிறோம் என்றும். ஆம், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை, திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிலவும் வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து சுமார் 25 நிமிடங்கள் இரு தலைவர்களும் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் ...

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

Posted: 05 Jan 2017 02:36 AM PST

மதுரை: விருதுநகர் மாவட்டம், சிவகாசியை சேர்ந்த பால கணேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாய பயிர்கள் கருகியதால் மனமுடைந்து பல விவசாயிகள் தற்கொலை செய்யும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. மேலும் வாடிய பயிரை கண்டு மனவேதனையில் பலர் அதிர்ச்சியில் இறந்து வருகின்றனர். எனவே தமிழகத்தை ...

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Posted: 05 Jan 2017 02:35 AM PST

கான்பூரில் செலவிற்கு பணம் எடுக்க வந்து வரிசையில் சென்றபோது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - தமிழ் வெப்துனியா ------------------------ - ஏர்டெல் பேமண்ட்ஸ் வங்கியின் சேவிங்ஸ் அக்கவுண்டில் ரூ.500/- டெபாசிட் செய்தால் ஏர்டெல் தொலைபேசி எண்ணிற்கு 500 நிமிடங்க்ளுக்கான டாக்டைம் கிடைக்கும். இதை கொண்டு இந்தியா முழுவதும் உள்ள எந்த எண்ணிற்கும் அழைக்கலாம். எனினும், இந்த நன்மை வங்கியில் முதல் முறையாக டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டுமே. - தமிழ் ...

காந்தி படம் இல்லாமல் வெளிவந்த ரூ. 2000 ரூபாய் நோட்டு: மத்திய பிரதேசத்தில் விவசாயி அதிர்ச்சி

Posted: 05 Jan 2017 02:32 AM PST

மத்திய பிரதேசத்தில் மகாத்மா காந்தி படம் இல்லாத ரூ. 2000 நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், சொபூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் விவசாயி ஒருவர் பணம் எடுத்துள்ளார். ஆனால் அவர் எடுத்த ரூ. 2000 நோட்டில் மகாத்மா காந்தியின் படம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இதுகுறித்து வங்கியில் புகார் அளித்துள்ளார். எஸ்பிஐ வங்கியின் அதிகாரி ஆர் கே ஜெயின் கூறுகையில், "இது கள்ள நோட்டு கிடையாது. இந்த நோட்டில் அச்சுபிழை ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ...

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 05 Jan 2017 12:29 AM PST

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 05 Jan 2017 12:14 AM PST

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

முழுசா சந்திரமுகியா மாறத்துடிக்கும் உன் மனைவி கங்காவை பார்!!

Posted: 05 Jan 2017 12:05 AM PST

எண்ணெய்னால வரக்கூடிய கொழுப்பு

Posted: 04 Jan 2017 11:55 PM PST

"சரி மோகன் .. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவை எடுப்பாங்க…" - "எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…" - "மாசத்துகு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?" - "ஆமாண்ணே.. எப்படிண்ணே.." - "உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாது. எண்ணெய்னால வரக்கூடியது…?" - "என்னாண்ணே ...

வங்கி உயரதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை: சிபிஐ நீதிமன்றம்

Posted: 04 Jan 2017 11:41 PM PST

வங்கி உயரதிகாரிகள் துணையின்றி, கோடி கோடியாய் புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைக்க முடியாது என்று கூறியுள்ள சிபிஐ நீதிமன்றம், இதுவரை வங்கி உயர் அதிகாரிகள் யாரும் பிடிபட்டதாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ளது. அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி மூலம் முறையாக விநியோகம் செய்திருந்தால் 76-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து இருக்க மாட்டார்கள் என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேங்கடசாமி தெரிவித்துள்ளார். புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கிய வழக்கில் கைதான சேகர் ரெட்டி மற்றும் ...

இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!

Posted: 04 Jan 2017 11:35 PM PST

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து நாடுமுழுவதும் உள்ள அப்பாவி மக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் பெற்றுக்கொண்டது பிரதமர் மோடி அவர்களின் மத்திய அரசு. விளைவுகளை ஆராயாமல் தெளிவான திட்டமிடப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துச் சொல்லி இந்திய மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை விமர்சிக்கத் தொடங்கியவுடன், இதை விசாரித்த உச்சநீதி மன்றமும் இதை கண்டித்து "பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்" ...

பொய் – ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2017 10:14 PM PST

- 'ஏங்க! என்னோட பர்ஸ்ல ஆயிரம் ரூபா குறையுது. நீங்க எடுத்தீங்களா?'' சேகரின் மனைவி அலைபேசியில் பதட்டத்துடன் கேட்டாள். ''எம்.டி.யோடு மீட்டிங்ல இருக்கேன். கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடட்டுமா?'' என்று போனை வைத்தான் சேகர். என்னோட பாக்கெட்டிலும் அவ்வப்போது பணம் காணாமல் போகும்! அவளிடம் கேட்டால், கோபத்தில் எரிந்து விழுவாள். இனி பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்! எப்படி பாதுகாத்தாலும் பல ஆயிரங்கள காணாமல் போயிருக்கிறது. நான் யார்கிட்ட இதைப் போய் கேட்பேன். தனக்குத்தானே பேசிக்கொண்டான் ...

கூறிவிட்டேன் ! மீறிவிட்டேன் !

Posted: 04 Jan 2017 10:12 PM PST

மானேஜர் ஜானகிராமன் கடுகடுவென்று இருந்தான் . காலிங்பெல்லை அழுத்தினான் . பியூன் சதாசிவம் உள்ளே வந்து , ' என்னங்க ஐயா ! ' என்று கேட்டான் . கோமதியைக் கூப்பிடு ! சற்றுநேரத்தில் கோமதி மானேஜர் அறைக்குள் நுழைந்தாள் . அவள் தலை கீழே கவிழ்ந்திருந்தது . " என்ன கோமதி ! இப்படி பண்ணிட்டியே ! நம்முடைய காதலை யாரிடமும் கூறமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து கொடுத்துவிட்டு ,அந்த சத்தியத்தை மீறிவிட்டாயே ! இதுதான் நீ சத்தியத்தைக் காப்பாற்றும் இலட்சணமா ? குறிப்பாக என் மனைவிக்குத் தெரியக்கூடாது என்று ...

நடிப்பு – ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2017 10:11 PM PST

- கையில் பெட்டியுடன் வந்த தன் மகள் ஆர்த்தியைப் பார்த்து துணுக்குற்றாள் பிரபல நடிகை மதுமதி. ''அம்மா, அந்தாள்கூட இனி நான் வாழ மாட்டேன். என்னை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டார். மாடு மாதிரி என்னை வீட்டு வேலை செய்யச் சொல்றார்'' என்று புலம்பினாள் ஆர்த்தி. மதுமதியின் கண்கள் சிவந்தன. ''என்னது உன்னைப்போய் சமைக்கச் சொல்றானா! என்ன திமிர் அவனுக்கு! ப்ளடி ராஸ்கல்! நான் அப்பவே சொன்னேன், இந்த காதலெல்லாம் உனக்கு வேண்டாம்னு! கேட்டியா! நீ பேசாம இரு. அவனை உடனே விவாகரத்து செய்ய ஏற்பாடு செய்யறேன். அப்புறம் ...

மாற்றம் – ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2017 10:10 PM PST

- 'உங்க அம்மா, அவங்களால் முடிஞ்ச சின்னச் சின்ன உதவியைக்கூட செய்யாமல், என்னை தினமும் கடுப்பேத்தறாங்க. நான் கஷ்டப்படணும்ங்கற ஒரே நோக்கத்தில், அவங்க எதையும் கண்டுக்காமல், மாமியார்ங்கற மமதையில், அக்கம்பக்கத்து வீடுகளில் வம்பளந்துக்கிட்டும், டி.வி. சீரியல் பார்த்துக்கிட்டும் காலத்தைக் கழிக்கிறாங்க. இதில், புதுசா குடி வந்திருக்கும் எதிர்த்த வீட்டு மாமியார் பொம்பளை, வம்பளப்பில் இன்னும் என்ன புதுசா சொல்லிக்கொடுக்கப்போகிறாளோ… தெரியலையே!'' என்று கணவன் நந்தகுமாரிடம் நொந்து கொண்டாள் நந்திதா. ஒரு ...

பிரிவினை – ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2017 10:08 PM PST

- இளையவன் கதிரின் திருமணம் நடந்து ஆறு மாதத்திற்குள் அந்தப் பிரிவினை ஏற்பட்டுவிட்டது. கதிரும், அணணன் ராமுவும் அப்பா அம்மாவிடம் ஒன்றாகச் சொன்னார்கள். ''அப்பா.. நானும் இவனும் சிட்டில ஃப்ளாட் வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டோம்…. வேற வழியில்ல… இந்த வீட்ட வித்து பணத்தை பிரிச்சுக் கொடுங்க… அப்புறம் உங்க ரெண்டு பேரையும் நாங்களே ஆறு ஆறு மாசம்னு வெச்சுக்கறோம். இனிமேலும் கூட்டுக் குடும்பம் சாத்தியமில்ல.'' அப்பா யோசித்தார். ''உங்க விருப்பப்படியே வீட்ட வித்துரலாம். அப்புறம் நீங்க சொன்ன மாதிரி ...

வெறுப்பு – ஒரு பக்க கதை

Posted: 04 Jan 2017 10:07 PM PST

- 'ஸ்டெல்லா… நீ எனக்கு 'வாட்ஸ் அப்'ல அனுப்புனதைப் பார்த்ததும் அதிர்ந்து போயிட்டேன்..! சுருதி அப்படிப்பட்டவளா?'' – வெடித்தான் ரவிக்குமார். ''ஆமா.. ரவி…. சத்தியமா சொல்றேன். அவ மொடா குடிகாரி. இத்தனைக்கும் அவ என் உயிர்த் தோழி! இருந்தாலும் நீ என் ஃபிரண்டு. அதனாலதான் உன்னை உஷார் படுத்தினேன். சுருதிகிட்ட என்னைக் காட்டிக் கொடுத்திடாதே… ஓ.கே.வா.?'' – உடனே தொடர்பைத் துண்டித்தாள் ஸ்டெல்லா. 'ச்சே… குடிகாரியான அவளோடு ஒரு வாழ்க்கையா?' அந்த வினாடி முதல் விரக்தியில் யாருடனும் பேசவில்லை. அவனுக்குள் ...

மைக்ரோ கதை

Posted: 04 Jan 2017 10:06 PM PST

பஸ்ஸில் தன் லக்கேஜுடன் அவசரமாக முன் பக்கமாக ஏறினார் ஒரு முதியவர். லக்கேஜை வைத்துவிட்டு, கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து கொஞ்சம் நகரச் சொல்லி முண்டியடித்து கண்டக்டரிடம் சென்று டிக்கெட் வாங்கினார். ""ஏம்ப்பா வயதானவர்களிடம் நீயே நேரில் வந்து டிக்கெட் கொடுக்கக் கூடாதாப்பா? எவ்வளவு சிரமமாக இருக்கிறது?" என்று கேட்டார். ""இவ்வளவு கூட்டத்தில எல்லாம் என்னால் வந்து டிக்கெட் கொடுக்க முடியாது" என்றார் கண்டக்டர். மறுநாள் ஒரு திருமண வரவேற்பு விழாவுக்கு தன் தந்தையுடன் கண்டக்டர் ...

உழவனுக்கோர் ஒப்பாரி

Posted: 04 Jan 2017 07:55 PM PST

உழவனுக்கோர் ஒப்பாரி வாடிய பயிரைக் கண்டதனால் வானுலகம் நீ சென்றாயோ? நாடிய உம் மக்களையே நட்டாற்றில் விட்டுச் சென்றாயோ? கூடிய மட்டும் பார்த்தாயோ கூட்டை விட்டுப் பறந்தாயோ? ஆடிய ஆட்டம் போதுமென ஆண்டவன் நோக்கிச் சென்றாயோ? ஊருக்கே நீ உணவளித்தாய் உண்பதைக் கண்டு உளமகிழ்ந்தாய் பாருக்கே நீ பசியாற்ற பார்த்துப் பார்த்து பயிர்வளர்த்தாய் யாருக்கும் நீ தெரியாமல் யமனைக் காண விரைந்தாயோ? சோறுக்கே நீ வழியின்றி சொர்க்கம் நோக்கிச் சென்றாயோ? வங்கித் தவணை செலுத்திடவே வருவாய் வந்த பாடில்லை ...

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 5 இந்தியர்கள் பதவியேற்பு

Posted: 04 Jan 2017 07:49 PM PST

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் பதவியேற்றுக் கொண்டனர். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் (52), அமெரிக்க செனட் சபை உறுப்பினராக பதவியேற்றார். அவருக்கு துணை அதிபர் ஜோ பிடன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், அமெரிக்க செனட் சபையில் உறுப்பினராகும் முதல் இந்திய வம்சாவளிப் பெண் எனும் பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றார். கமலா ஹாரிஸின் தாயார் சென்னையைச் சேர்ந்தவர். தந்தை ஆப்பிரிக்க நாடான ஜமைக்காவைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் இருந்து ...

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: புதிய மனுக்கள் மீது 9 -ஆம் தேதி விசாரணை

Posted: 04 Jan 2017 06:41 PM PST

ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க மருத்துவ நிபுணர்கள், சிபிஐ அடங்கிய குழுவை அமைக்கக் கோரி தாக்கல் செய்த புதிய மனுக்கள் மீதான விசாரணையை, வரும் 9-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. - உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 5 -ஆம் தேதி மரணமடைந்தார். - அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் 3 பேர் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என, சென்னை அரும்பாக்கத்தைச் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™