Tamil News | Online Tamil News |
- பரிதாபம் ...ஆந்திராவில் ரயில் விபத்தில் 41 பேர் பலி:நொறுங்கிய பெட்டிகளில் மீட்பு பணி தீவிரம்
- ரூ.2 லட்சத்துக்கு மேல் 'டிபாசிட்' செய்தால் வருமான வரி 'நோட்டீஸ்'
- அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்! நிபுணர்கள் கருத்து
- ஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு
- போராட்ட மாணவர்கள் கலக்கல் அரசு அதிகாரிகள் சொதப்பல்
- அசைந்து கொடுக்காத அலங்காநல்லூர் சென்னை திரும்பினார் பன்னீர்
- ஜல்லிக்கட்டு அவசர சட்டம்; சட்டசபையில் இன்று தாக்கல்
- ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க விஷமிகள்...சதி:தேச விரோத சக்திகள் களமிறங்கியுள்ளதாக திடுக்கிடும் தகவல்:சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம் என மாணவர்களுக்கு வேண்டுகோள்
- 49 ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி
- சுயநல கும்பலின் சதிக்கு மாணவர்கள் பலியாக வேண்டாம்:ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள் வேண்டுகோள்
- போராட்ட மாணவர்கள் கலக்கல் அரசு அதிகாரிகள் சொதப்பல்
- மெரினாவில் திரண்ட 10 லட்சம் பேர்!
- அடுத்த இரு நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்
| பரிதாபம் ...ஆந்திராவில் ரயில் விபத்தில் 41 பேர் பலி:நொறுங்கிய பெட்டிகளில் மீட்பு பணி தீவிரம் Posted: 22 Jan 2017 08:56 AM PST குனேரு:ஆந்திராவில், எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒன்பது பெட்டிகள் தடம் புரண்டதில், 41 பேர் இறந்தனர்;60க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலம், ஜகதால் பூரிலிருந்து, ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு, ஆந்திர மாநிலம் வழியாக, ஹீராகண்ட் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது.ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், குனேரு ரயில் நிலையத்தை தாண்டி, சென்று கொண்டிருந்த போது, ரயிலின் ஒன்பது பெட்டிகள், திடீரென்று தடம் புரண்டன. அவற்றில் இருந்த பயணிகள், இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். பலர், துாங்கிய நிலையில் உயிரிழந்தனர். ஏராளமானோர், ... |
| ரூ.2 லட்சத்துக்கு மேல் 'டிபாசிட்' செய்தால் வருமான வரி 'நோட்டீஸ்' Posted: 22 Jan 2017 09:06 AM PST புதுடில்லி:செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக வங்கிகளில், 'டிபாசிட்' செய்தவர்களுக்கு, வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பி வருகிறது. மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு திட்டம், நவ., 8ல் அறிவிக்கப்பட்டது; இதை யடுத்து, பழைய நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டது. இதை பயன்படுத்தி, கறுப்புப் பண பதுக்கல் கும்பல், பல கோடி ரூபாயை வங்கிகளில் டிபாசிட் செய்து, 'வெள்ளை' ஆக்கியது.இதையடுத்து, 2 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக டிபாசிட் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை ஆய்வு செய்யும் பணியை, மத்திய அரசு ... |
| அவசர சட்டமே நிரந்தர சட்டம் ஆகலாம்! நிபுணர்கள் கருத்து Posted: 22 Jan 2017 09:17 AM PST தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு விட்டது. இதன்படி, ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விட்டன. முக்கிய இடங்களில் நடத்த முடியாவிட்டாலும் அவசர சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. மத்திய அரசு இயற்றிய பிராணிகள் வதை தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள் ளது. அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகளையும் அரசு வகுத்துள்ளது. இதில், பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன.கைவிட மறுப்பு 'இந்த சட்டம் தற்காலிகமானது தான்; ஆறு ... |
| ஜல்லிக்கட்டு விதிமுறைகள்: அரசாணை வெளியீடு Posted: 22 Jan 2017 09:23 AM PST ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையை, தமிழக அரசு, நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள் ளது; இது, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவசர சட்டத்தின்படி, ஜல்லிக்கட்டு நடத்து வதற்கான விதிமுறைகள், மத்திய சட்டம் - 1960 பிரிவு மூன்றின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.விதிமுறைகள் விபரம்: * ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் தனி நபர், அமைப்பு அல்லது குழு, கலெக்டரிடம் முன்ன தாகவே விண்ணப்பிக்க வேண்டும். கலெக்ட ரின் அனுமதி கிடைத்ததும், ஜல்லிக்கட்டு ... |
| போராட்ட மாணவர்கள் கலக்கல் அரசு அதிகாரிகள் சொதப்பல் Posted: 22 Jan 2017 09:26 AM PST தகவல் தொழில்நுட்பத்தில், அரசு நிர்வாகம் எவ்வளவு பின்தங்கி உள்ளது என்பதை மாணவர்கள் நடத்திய போராட்டம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலி யுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், போராட்டத்தை தீவிரப்படுத்த சமூக வலை தளங்களை அதிகளவில் பயன்படுத்தினர். போராட்டத்தில் எழுப்ப வேண்டிய கோஷங் களையும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' மூலம் அனைத்து பகுதிகளுக்கும் பரப்பினர். மாவட்டம் தோறும் நடைபெறும் போராட்ட நிகழ்வை, உடனுக் குடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். பிரதமரை சந்திக்க முதல்வர் ... |
| அசைந்து கொடுக்காத அலங்காநல்லூர் சென்னை திரும்பினார் பன்னீர் Posted: 22 Jan 2017 09:34 AM PST மதுரை:அலங்காநல்லுாரில் நேற்று ஜல்லிக் கட்டு நடத்த, அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மதுரையில், 14 மணி நேரம் முகாமிட்ட முதல்வர் பன்னீர் செல்வம், சென்னை திரும்பினார். ஜல்லிக்கட்டு நடத்த, மாநில அரசு நேற்று முன்தினம் அவசர சட்டம் இயற்றியது. இதையடுத்து, 'அலங்காநல்லுாரில் நாளை ஜல்லிக்கட்டு நடக்கும்' என, ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவித்தார்.இதை துவக்கி வைக்க, முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மதுரை வந்தார். ஆனால், 'ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர சட்டம் நிறை வேற்றும் வரை போராட்டத்தை கைவிட முடியாது' என, போராட்டக்காரர்கள் ... |
| ஜல்லிக்கட்டு அவசர சட்டம்; சட்டசபையில் இன்று தாக்கல் Posted: 22 Jan 2017 09:39 AM PST சென்னை:''ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை, நிரந்தர சட்டமாக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு, இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்,'' என, முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். தமிழக அரசின், அவசர சட்டம் காரணமாக, ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் சில இடங்களில், நேற்று ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பிரதமர் உறுதி இந்நிலையில், மதுரையில் இருந்து, முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று சென்னை திரும்பி னார். விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:'ஜல்லிக்கட்டு தடையை நீக்க வேண்டும்' என, பிரதமரை சந்தித்து வலியுறுத்தினேன். ... |
| Posted: 22 Jan 2017 09:45 AM PST சென்னை:தமிழகத்தையே புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு போராட்டத்தின் நோக்கத்தை சிதைக்க, விஷமிகள் சதி செய்வதாக, பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாரம்பரியத்தை மீட்டெடுக்க, தன்னெழுச்சி யாக திரண்டுள்ள மாணவர் கூட்டத்தை, திசை திருப்பும் வேலைகளில், தேச விரோத சக்திகள் களம் இறங்கியுள்ளதாக, தீவிர ஜல்லிக்கட்டு ஆர்வலரும், இசை அமைப்பாளருமான, 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி கூறியுள்ளார். அதனால், 'சூழ்ச்சி வலையில் விழ வேண்டாம்' என, மாணவர்களுக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார்.பொங்கல் பண்டிகைக்கு முன், கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரின் உதடுகளும், ... |
| 49 ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி Posted: 22 Jan 2017 11:23 AM PST சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தால், நேற்று, 49 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். இன்றும், ஒன்பது ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிப்பு: தமிழகத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடரும் நிலையில், ரயில் போக்குவரத்து, நான்காவது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. ● சென்னை எழும்பூரில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு, நேற்று இயக்கப்பட வேண்டிய, கன்னியாகுமரி, செந்துார், ராமேஸ்வரம் சேது, முத்துநகர், அனந்தபுரி, பொதிகை, பாண்டின், ராமேஸ்வரம், மதுரை மகால் எக்ஸ்பிரஸ் ... |
| சுயநல கும்பலின் சதிக்கு மாணவர்கள் பலியாக வேண்டாம்:ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள் வேண்டுகோள் Posted: 22 Jan 2017 11:26 AM PST சென்னை:'தமிழகத்தில், ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மத்திய அமைச்சகங்கள் மற்றும் ஜனாதிபதி ஒப்புதலுடன், அவசர சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டம், விரைவில் நிரந்தர சட்டமாக இயற்றப்படும் என்பதால், மாணவர்கள், தங்கள் போராட் டத்தை கைவிட வேண்டும்' என, ஜல்லிக்கட்டு ஆதரவு அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. 'தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும்; ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படும், 'பீட்டா' அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளுடன், கடந்த சில தினங்களாக, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் ... |
| போராட்ட மாணவர்கள் கலக்கல் அரசு அதிகாரிகள் சொதப்பல் Posted: 22 Jan 2017 01:20 PM PST
தகவல் தொழில்நுட்பத்தில், அரசு நிர்வாகம் எவ்வளவு பின்தங்கி உள்ளது என்பதை மாணவர்கள் நடத்திய போராட்டம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், போராட்டத்தை தீவிரப்படுத்த சமூக வலைதளங்களை அதிகளவில் பயன்படுத்தினர். போராட்டத்தில் எழுப்ப வேண்டிய கோஷங்களையும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' மூலம் அனைத்து பகுதிகளுக்கும் பரப்பினர். மாவட்டந்தோறும் நடைபெறும் போராட்ட நிகழ்வை, உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். பிரதமரை ... |
| மெரினாவில் திரண்ட 10 லட்சம் பேர்! Posted: 22 Jan 2017 02:10 PM PST
சென்னை: 'ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும்' என வலியுறுத்தி, மெரினாவில் நேற்று, 10 லட்சம் பேர் திரண்டனர். தமிழகம் முழுவதும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நிரந் தரமாக நீக்கக்கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம்: சென்னை மெரினாவில், ஜன., 17 முதல் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் அமைதி வழி போராட்டம், இந்தியா முழுவதும் மட்டுமின்றி, உலக நாடுகளையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை நேற்று முன் தினம் அமல்படுத்தியது. இதை ஏற்காமல், ... |
| அடுத்த இரு நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் Posted: 22 Jan 2017 02:59 PM PST சென்னை: 'தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வங்கக் கடலில், அந்தமான் அருகே உருவான, காற்றழுத்த தாழ்வு நிலை, மத்திய வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது. இது, மேற்கு நோக்கி மேலும் நகர்ந்து வருகிறது. வங்கக் கடலில் நகர்ந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்னும் இரு நாட்களுக்கு மழை பெய்யும்.தென் மாவட்டங்களில் பரவலாகவும், வட கடலோர மாவட்டங்களில், ஒரு சில இடங்களிலும் மழை பெய்யும். ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 23,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |