ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சர்வம் ஜல்லிக்கட்டு மயம்...............
- ’கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி
- இளைஞர் சக்தியை வழிநடத்த சகாயம் ஐஏஎஸ் வருவாரா?
- ’காலில் விழுந்தே ஆகனும்’ அரசு அதிகாரியை மிரட்டிய எம்.ஏல்.ஏ: வைரல் வீடியோ!!
- 3.5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி உலக சாதனை
- அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்பை விரைவில் சந்திக்கிறார் புதின்:ஏற்பாடுகள் தீவிரம்
- குரலை உயர்த்தாத சண்டைகள்!
- பொன்னாத்தா!
- தெரிஞ்சுக்கோங்க!......
- படித்ததில் பிடித்தது :) -- பெண் என்றால் மட்டமா?
- பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !
| சர்வம் ஜல்லிக்கட்டு மயம்............... Posted: 22 Jan 2017 11:09 AM PST தமிழகத்தின் திரையரங்குகளை நிரம்பும் மாணவர்களும், இளைஞர்களும் ஜல்லிக்கட்டுக்காக மெரினாவிலும், தமுக்கத்திலும் இன்னும் நூற்றுக்கணக்கான இடங்களிலும் போராட்டத்தில் குவிந்ததால் திரையரங்குகளில் படங்களை பார்க்க ஆளில்லை. ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள் இரண்டு காட்சிகளை இன்று ரத்து செய்திருக்கிறார்கள். எந்தப் போராட்டமாக இருந்தாலும் அதை திரைநட்சத்திரங்கள் நடத்தும்போதுதான் மீடியாவும், சமூகமும் பரபரப்படையும். தங்கள் அபிமான நடிகர்கள் வருகையில் ... |
| ’கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி Posted: 22 Jan 2017 11:08 AM PST ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக தமிழகத்தில் ஜனவரி 26 முதல் அமெரிக்க குளிர்பானமான பெப்சி, கோகோ கோலா போன்றவற்றை விற்கமாட்டார்கள் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது. தமிழகமெங்கும் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்திற்கு வணிகர்களின் ... |
| இளைஞர் சக்தியை வழிநடத்த சகாயம் ஐஏஎஸ் வருவாரா? Posted: 22 Jan 2017 10:51 AM PST தமிழகத்தின் எழுச்சியை நாடே மிரட்சியுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஒன்றுகூடி போராட்டம் நடத்தும் இளைஞர், மாணவர் பட்டாளம் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்து வருகின்றனர். தெளிவான சிந்தனை, முழுமையான அரசியல் புரிதலுடன் அறவழிப்போராட்டத்தால் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளான் தமிழக இளைஞன். மறைந்த மக்கள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கண்ட கனவுகள், இளைஞர் பட்டாளத்தின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை பொய்த்துப்போகவில்லை. எந்த ஒருங்கிணைப்பாளர்களும் ... |
| ’காலில் விழுந்தே ஆகனும்’ அரசு அதிகாரியை மிரட்டிய எம்.ஏல்.ஏ: வைரல் வீடியோ!! Posted: 22 Jan 2017 09:35 AM PST - அசாம் மாவட்டம் நாகோன் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ திம்பேஸ்வர் தாஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அவரது காரை அலுவலகத்தின் பாதை நடுவே நிறுத்தி வைத்தார். அதே வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக உள்ளார் ஜெயந்தா தாஸ். இவர் நடுவில் நிறுத்தப்பட்டிருந்த எம்.எல்.ஏ.வின் காரை அங்கிருந்து அகற்றி ஓரமாக நிறுத்தியுள்ளார். இதை அறிந்த எம்.எல்.ஏ கொதிப்படைந்து, எனது காரை எப்படி நீ அகற்றலாம்? என தகராறு செய்து, தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லி ... |
| 3.5 லட்சம் பேர் தேசிய கீதம் பாடி உலக சாதனை Posted: 22 Jan 2017 09:33 AM PST - குஜராத் மாநிலம், ராஜ்காட் மாவட்டம், காக்வாட் நகரில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவிலில் நேற்று அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேசிய கீதத்தை பாடி புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன்பு கடந்த 2014-ம் ஆண்டில் வங்கதேசத்தில் 2.54 லட்சம் பேர் சேர்ந்து அந்த நாட்டு தேசிய கீதத்தை பாடியது உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. குஜராத் தேசிய கீத சாதனை கின்னஸ் உலக சாதனை ... |
| அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டிரம்பை விரைவில் சந்திக்கிறார் புதின்:ஏற்பாடுகள் தீவிரம் Posted: 22 Jan 2017 08:58 AM PST மாஸ்கோ, அமெரிக்க நாட்டின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் (வயது 70) நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவருக்கு அமெரிக்காவின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்க நாட்டின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றதை தொடர்ந்து அவருக்கு ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா அமெரிக்காவில் பணியாற்றிய ரஷ்ய தூதரக அதிகாரிகள் 35 பேரை திடீரென வெளியேற்றினார். அதற்கு பதிலாக ரஷ்யாவில் ... |
| Posted: 22 Jan 2017 03:40 AM PST ஒரு சில மனிதர்களுக்கு பிறக்கும் போதே, தொண்டையில் அலறும் ஒலி பெருக்கியும் இணைந்தே வந்து விடும் போல... எல்லாவற்றிற்கும், எட்டுக் கட்டையில் கத்துவர். இவர்கள், சாதாரணமாக பேசுவது கூட, யாரோ சண்டையிடுவதைப் போல் அடுத்தவர்களுக்கு தோன்றும். நான் விரும்புவதெல்லாம், சண்டை போடும் போது கூட, குரலை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதில், ஒரு உண்மை என்னவென்றால், சம்பந்தமே இல்லாத யாரோ சண்டை போட்டால் கூட, நம்மில் பலருக்கு, பதற்றம் தொற்றிக் கொள்ளும்.நெருங்கிய இருவர் சண்டை போட்டாலோ, கேட்கவே வேண்டாம். ... |
| Posted: 21 Jan 2017 10:27 PM PST பொன்னாத்தாளின் பிணத்திற்கு மாலை அணிவித்த மாரப்பன், குலுங்கி குலுங்கி அழுதார். வெளியூரிலிருந்து வந்திருந்த பொன்னாத்தா உறவுக்காரர்கள், ஆச்சரியத்துடன், 'யார் இவர்...' என்று விசாரிக்க, 'பொன்னாத்தாளோட பக்கத்து காட்டுக்காரர்; தாயாப் பிள்ளையா பழகினவங்க. அதான், அவரும், அவர் பொண்சாதியும் அழறாங்க...' என்றனர், அருகில் அமர்ந்திருந்தோர். மாரப்பனின் மனைவி பெண்கள் கூட்டத்தில் அமர, வாசலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தார் மாரப்பன். கூட்டத்தில் ஒருத்தி, 'எப்பேர்ப்பட்ட மனுஷி பொன்னாத்தா... ... |
| Posted: 21 Jan 2017 09:41 PM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| படித்ததில் பிடித்தது :) -- பெண் என்றால் மட்டமா? Posted: 21 Jan 2017 09:39 PM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! Posted: 21 Jan 2017 08:45 PM PST பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108 நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் ! ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
