Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கல்வித் தகுதியை சொல்லாதீங்க: ஸ்மிருதி இரானி கெஞ்சல்

Posted: 18 Jan 2017 08:42 AM PST

புதுடில்லி: தகவல் அறியும் உரிமைச் சட்டத் தின் கீழ், தன் கல்வித் தகுதி பற்றிய தகவலை, தெரிவிக்க வேண்டாமென, மத்திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி கேட்டதாக, டில்லி பல்கலையின் அங்கமான, 'ஸ்கூல் ஆப் ஓபன் லேர்னிங்' கல்வி மையம் கூறியுள்ளது.

பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய ஜவுளித் துறை
அமைச்சர், ஸ்மிருதி இரானி, 2004, 2011 மற்றும் 2014ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல் களின்போது, வேட்பு மனுவுடன் தாக்கல்செய்த பிரமாணப் பத்திரத்தில், முரண்பட்ட கல்வித் தகுதிகளை குறிப்பிட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமை சட்டத் தின் கீழ், தகவல் ...

செல்லாத நோட்டு அறிவிப்பை கண்டித்து காங்கிரஸ்...ஆர்ப்பாட்டம்!:ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் முன் எதிர்ப்பு கோஷம்

Posted: 18 Jan 2017 08:47 AM PST

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை கண்டித்தும், 50 நாட்களுக்கு பின் னும், பணத் தட்டுப்பாடு நிலவுவதை கண்டித் தும், ரிசர்வ் வங்கி செயலிழந்து விட்டதாகவும் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் முன், காங்., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, செல்லாத ரூபாய் நோட்டுகளாக, 2016 நவ., 8ல், மத்திய அரசு அறிவித்தது. செல் லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவும், புதிய நோட்டுகளை பெறவும், மக்கள் வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.,களுக்கும் முண்டியடித்தனர்.மத்திய அரசின் முடிவுக்கு, காங்., ...

ஜல்லிக்கட்டு போராட்டம் : மோடியுடன் இன்று பன்னீர் பேச்சு

Posted: 18 Jan 2017 09:02 AM PST

சென்னை: 'ஜல்லிக்கட்டு நடத்த, உடனே அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என, பிரதமரை சந்தித்து வலியுறுத்த, இன்று டில்லி செல்கிறேன்; எனவே, போராட்டங்களை கைவிட வேண்டும்' என, முதல்வர், பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: ஜல்லிக்கட்டு ஆர்வலர்களின் உணர்வுகளை உணர்வதோடு,
அந்த உணர்வின் அங்கமாக, தமிழக அரசு செயல் பட்டு வருகிறது. எனவே தான், ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என, பிரதமரையும், மத்திய அரசையும், தமிழக அரசு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. மத்திய அரசின் ...

தமிழன் ஒருவனுக்கு பிரச்னை எனில்...'ஒன்றுபடுவோம்!:ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு மாணவ சமுதாயம் ஓரணி:தடை நீங்கும் வரை ஓய மாட்டோம் என உரக்க அறிவிப்பு :அரசியல் செய்ய முன்நின்றவர்கள் முக்காடு போட்ட அவலம்

Posted: 18 Jan 2017 09:23 AM PST

'தமிழன் ஒருவனுக்கு பிரச்னை எனில், நாங்கள் ஒன்றுபடுவோம்' என்ற உணர்வுடன், ஜல்லிக்கட்டுக்காக, ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் ஓரணியில் திரண்டுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் என, மாநிலம் தழுவிய போராட்டத்தில் குதித்துள்ள மாணவர்கள், 'ஜல்லிக்கட்டு தடை நீங்கும் வரை ஓய மாட்டோம்' என, உரத்த குரலில் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக வெகுண்டெழுந்த மாணவர் கிளர்ச்சியை பார்த்ததும், ஆதரவு கூறி அரசியல் செய்யலாம் என, முன்வந்த அரசியல்வாதிகள், முக்காடு போட்டு, 'துண்டைக் காணோம்; துணியைக் காணோம்' என ஓடிய அவலமும் ஆங்காங்கே அரங்கேறியது.

தமிழகத்தில், ...

மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்குமா? ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சட்ட சிக்கல்கள்

Posted: 18 Jan 2017 09:35 AM PST

ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக, அவசர சட்டத்தை, மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என, அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி விட்டன. மாணவர்களும், இதே கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஆனால், அவசர சட்டம் பிறப்பிக்க முடியுமா என்பது, மில்லியன் டாலர் கேள்வியே!

காட்சிப்படுத்த தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து, காளையை நீக்காமல், ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயங்களுக்காக, காளைகளை பயன்படுத்தும் வகையில், மத்திய அரசு ஓர் அறிவிப்பாணையை, 2016, ஜன., 7ல் வெளியிட்டது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், அவசர ...

ஜல்லிக்கட்டு தடையின் பின்னணி

Posted: 18 Jan 2017 09:39 AM PST

தமிழர்களின் பாரம்பரிய விளையாட் டான, ஜல்லிக்கட்டு போட்டியை, மூன்றாவது ஆண்டாக நடத்த முடியவில்லை. அதற்கு, 'பீட்டா' போன்ற வெளிநாட்டு நிதி உதவிபெறும் அமைப்புகள் தொடுத்த வழக்கு தான் காரணம். இங்கு மட்டுமல்ல, நாடு முழுவதும், பாரம்பரியத்தை அழிக்கும் பல வழக்குகளை, இது போன்ற அமைப்புகள் தொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. விலங்குகளை வதை செய்வது, தவறு எனக் கூறுவதை, யாரும் மறுக்கப் போவதில்லை.

ஆனால், ஜல்லிக்கட்டு எனப்படும், பல ஆயிரம் ஆண்டு பாரம்பரியத்தை, 'மிருக வதை' என்ற சிறிய வட்டத்திற்குள் திணித்து, கலாசாரத்தை அழிக்க, சிலர் முற்படும் போது, சந்தேகம் எழுவதை ...

மாணவர்கள் போராட்டம்:சமூக வலைதளங்கள் உதவி

Posted: 18 Jan 2017 09:41 AM PST

ஜல்லிக்கட்டு மீதான தடை உத்தரவுக்கு எதி ராக,தமிழகம் முழுவதும், மாணவர்கள் கொதித் தெழ, 'வாட்ஸ் ஆப்' மற்றும் சமூக வலைதளங் கள் பெரிதும் உதவின.

பொங்கல் பண்டிகைக்கு முன் வரை, ஜல்லிக் கட்டு நடத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பிரச் னையை, அரசியல்வாதிகள் கையில் எடுத்த னர். பொங்கல் பண்டிகைக்கு, ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை உருவானதும், மத்திய இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், பகிரங்க மன்னிப்புக் கோரினார்; மாநில அரசு அமைதியானது.அதையடுத்து, ஜல்லிக்கட்டு நடத்தவலியுறுத்தி, சமூக அமைப்புகள் களமிறங்கின. அவர்களுக்கு, ...

ஜெ.,க்கு அளித்த சிகிச்சை விபரம்: வெளியிட தீபா வலியுறுத்தல்

Posted: 18 Jan 2017 09:45 AM PST

சென்னை:''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரத்தை முழுமையாக வெளியிட வேண்டும்,'' என, ஜெ., அண்ணன் மகள், தீபா தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று அளித்த பேட்டி:* ஜெ., மறைவில் சந்தேகம் இல்லை என, திடீரென தெரிவித்துள்ளீர்களே?*** முதலில் இருந்து ஒரே கருத்தையே தெரிவிக்கிறேன். அப்பல்லோ மருத்துவமனை உள்ளே, என்னை அனுமதிக்கவில்லை. என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது, என்ன நடந்தது என்பது எதுவுமே தெரியவில்லை. எதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பதும் தெரியவில்லை. சிகிச்சை குறித்த தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்; அதில் மாற்று கருத்து கிடையாது. ...

ஜல்லிக்கட்டுக்கு ஏன் இந்த மல்லுக்கட்டு?

Posted: 18 Jan 2017 10:12 AM PST

ஒவ்வொரு இனத்துக்கும் தனி குணமும், பண்பாடும் உண்டு. அதில், அன்னியர் குறுக்கிடக் கூடாது. குறுக்கிட்டால், உரிமைப் போராக மட்டுமின்றி, உணர்வு போராகவும் அது மாறும். இதற்கு, ஜல்லிக்கட்டு தடை உடைக் கும் முயற்சியில், மாணவர்கள் இணைந்துள்ள தன்னெழுச்சி போராட்டத்தை கூறலாம்.

ஏன் இந்த போராட்டம்... இதற்கான காரணங்கள் என்ன... இது குறித்த சிந்தனைகளை இளைஞர் கள் பெற்றது எப்படி... என, அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இந்த கேள்விகளுக்கு, போராட்ட களத்தில் உள்ள மாணவர்கள் கூறியதாவது:காட்சிப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டிய லில், காளைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ...

இன்று முதல் கல்லூரிகள் விடுமுறை; போராட்டம் மேலும் வலுவடையும்

Posted: 18 Jan 2017 11:31 AM PST

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இன்று முதல் அறிவித்துள்ளதால் ஜல்லிகட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் போராட்டம் இன்று மேலும் வலுவடையும் சூழல் உருவாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக ஜல்லிகட்டிற்காக இளைஞர்களின் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, நெல்லை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இரவு பகலாக போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வரை பொங்கல் மற்றும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கல்வி ...

‛பீட்டா'வுக்கு பாடை கட்டிய இளைஞர்கள்

Posted: 18 Jan 2017 12:38 PM PST

சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு பாடை கட்டி ஊர்வலம் நடத்தினர்.
எழுச்சி:
சுப்ரீம் கோர்ட் தடையால், தமிழகத்தில், இந்த ஆண்டும், பொங்கலுக்கு, ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. 'தடையை நீக்கி, இந்த ஆண்டே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்' என, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என, பல தரப்பினரும் போராடி வருகின்றனர். மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட பெண்களும், இளைஞர்களும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு ...

மெரினாவில் விஸ்வரூபம்: மிரண்ட போலீஸ்

Posted: 18 Jan 2017 02:16 PM PST

சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை மெரினாவில் குவிந்தோரின் எண்ணிக்கை, 50 ஆயிரத்திற்கும் அதிகம் எனக் கூறும் போலீசார், எதிர்பாராத வகையில் கூட்டம் திரண்டதால், மிரண்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இந்த ஆண்டும், பொங்கலுக்கு, ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. 'தடையை நீக்கி, இந்த ஆண்டே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்' என, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என, பல தரப்பினரும் போராடி வருகின்றனர்.
சென்னை மெரினாவில், மாணவர்கள், இளைஞர்கள் என, ஏராளமானோர் போராடினர். நேற்று, கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால், 12 ஆயிரம் ...

இவங்களப் பாத்து கத்துக்கங்க.. ‛குட்டு' வைக்கும் இளைஞர்கள்

Posted: 18 Jan 2017 03:40 PM PST

சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் போராடி வரும் இளைஞர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீசாருக்கு உதவியதுடன், அங்கிருந்த குப்பைகளை தாங்களே சுத்தம் செய்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினர்.
போராட்டம்:
தமிழக பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக்கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்களும். பெண்களும் ஒன்று திரண்டனர். மாபெரும் இளைஞர் சக்திக்கு முன்னாள் தமிழகமே குலுங்கியது. கடந்த 3 நாட்களாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™