Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


உடைகிறது அ.தி.மு.க.,! அணி திரட்டுகிறார் 'மாஜி' அமைச்சர் கே.பி.முனுசாமி சசிகலா குடும்பத்தினர் ஆட்டம் போடுவதாக ஆவேசம்

Posted: 16 Jan 2017 08:47 AM PST

அ.தி.மு.க.,வை, அதன் பொதுச் செயலர் சசிகலாவின் கணவரான நடராஜனும், சகோதரரான திவாகரனும் கைப்பற்ற முயற்சி செய்வதாக, கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான, கே.பி.முனுசாமி, பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்; மேலும், முதல்வர், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக, கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, சமீபத்தில், சென்னையில் நடந்த ஒரு விழாவில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவாக பேசி உள்ளதால், கட்சியில் பலரும், சசிகலா மீதும், அவர் உறவினர்கள் மீதும் எரிச்சலில் உள்ளது வெளிப்படும் சூழலும், ஓ.பி.எஸ்.,சுக்கு ஆதரவு பெருகும் சூழலும் ...

ரூ.10,000...! ஏ.டி.எம்.,களில் ஒரு நாளில் பணம் எடுக்கும் வரம்பு உயர்வு; நடப்பு கணக்கிற்கும் சலுகையை அறிவித்தது ரிசர்வ் வங்கி

Posted: 16 Jan 2017 08:49 AM PST

மும்பை,: ஏ.டி.எம்.,களில் இருந்து ஒரு நாளில் பணம் எடுக்கும் வரம்பு, 4,500 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கான உச்ச வரம்பான, 24 ஆயிரம் ரூபாயில், எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில், நடப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு புதிய சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, கடந்த ஆண்டு, நவ., 8ல் வெளியானது. அதைத் தொடர்ந்து, கையில் உள்ள பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றவும், சில்லரை பெறவும், மக்கள், வங்கிகளுக்கும், ஏ.டி.எம்.,களுக்கும் படையெடுக்கத் துவங்கினர். ...

'உங்களுடன் நான்' விஜயகாந்த் பயணம் குமரியில் ஜன.20ல் துவக்கம்

Posted: 16 Jan 2017 08:59 AM PST

மதுரை: தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக காட்டவும், சோர்வுற்ற தொண்டர்களிடம் உற்சாகம் ஏற்படுத்தவும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் திட்டம் வகுத்துள்ளார்.

இதன்படி, தென் மாவட்டங்களில் இரண்டாவது கட்டமாக 'உங்களுடன் நான்' பயணம் துவக்குகிறார்.கடந்த நவம்பரில் நடந்த மூன்று தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
தொடர்தோல்வி
தொடர் தோல்வியால் தொண்டர்கள் மத்தியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை சரி கட்ட, மூன்றாவது பெரிய கட்சியாக காட்ட விஜயகாந்த் 'உங்களுடன் நான்' பயணத்தை துவக்கியுள்ளார். முதற்கட்ட ...

அகிலேஷ் தான் சமாஜ்வாதியின் தலைவர்; 'சைக்கிள்' அவருக்கு தான் சொந்தம் தேர்தல் கமிஷன் அறிவிப்பு

Posted: 16 Jan 2017 09:20 AM PST

புதுடில்லி: சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை அங்கீகரித்துள்ள தேர்தல் கமிஷன், கட்சியின் சின்னமான, 'சைக்கிள்' அவருக்கே சொந்தம் என, அறிவித்துள்ளது.

கடந்த, 1992ல், உ.பி., முன்னாள் முதல்வர், முலாயம் சிங் யாதவால், 77, துவக்கப்பட்டது, சமாஜ்வாதி கட்சி. தற்போது, உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியில், அதன் தலைவராக இருந்த முலாயம் சிங் யாதவ் மற்றும், அவரது மகன் அகிலேஷ் யாதவ், 43, இடையே, கடும் மோதல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, ஜன., 1ல் தேசிய செயற்குழுவை கூட்டினார், அகிலேஷ் யாதவ். அதில், கட்சியின் தலைவராக, 24 ...

தனியுரிமையை மீறும் சமூக தளங்களை கட்டுப்படுத்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Posted: 16 Jan 2017 09:32 AM PST

துடில்லி, : 'தனிநபர் சுதந்திரத்தை மீறும் வகையில் செயல்படும், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த, வழிமுறைகளை வகுக்க வேண்டும்' என, தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசு உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தனி நபரின் சுதந்திரத்தை மீறல்'வாஸ்ட் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள், பயனாளிகளின் விபரங்களை தவறாகப் பயன்படுத்துகின்றன; அத்துமீறல்கள் நடக்கின்றன' என, பரவலாக புகார்கள் உள்ளன. இந்நிலையில், 'இதுபோன்ற சமூக வலைதளங்கள், தனிநபரின் சுதந்திரத்தை மீறும் வகையில் ...

ஜி.எஸ்.டி., பேச்சு வெற்றி: அருண் ஜெட்லி அறிவிப்பு

Posted: 16 Jan 2017 09:39 AM PST

புதுடில்லி,: ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பாக, நேற்று நடந்த, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்பட்டதாக, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இதனால், ஜூலை, 1 முதல், நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., அமலாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் நோக்கில், பார்லிமென்டில், ஜி.எஸ்.டி., மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை, ஏப்., 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டுவது, ஜி.எஸ்.டி., ...

ஆதரவாளர்களுக்கு தொடரும் மிரட்டல்

Posted: 16 Jan 2017 09:40 AM PST

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், தீபாவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால், வருவாய் துறையினர் மூலம், ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு, தமிழகம் முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. எம்.ஜி.ஆர்., பிறந்த நாளான இன்று, அவர் தன் முடிவை அறிவிக்க உள்ளார். தீபாவுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, சசிகலா தரப்பில், பல்வேறு வளைப்பு முயற்சிகள் நடந்து வருகின்றன.
இதில், தீபாவுக்கு ஆதரவு அதிகம் உள்ள மாவட்டங்கள் கண்டறியப்பட்டு, ஆதரவாளர்களுக்கு அதிகாரிகள், போலீஸ் வழியாக மிரட்டல் ...

ரூ.39,565 கோடி தேவை பிரதமருக்கு பன்னீர் மனு

Posted: 16 Jan 2017 10:04 AM PST

சென்னை: 'தமிழக வறட்சியை சமாளிக்க, மத்திய அரசு, 39 ஆயிரத்து, 565 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் பன்னீர்செல்வம் சார்பில், இதற்கான கோரிக்கை மனுவை, தமிழக வருவாய் நிர்வாகத் துறை கமிஷனர் சத்யகோபால், வருவாய் துறை செயலர் சந்திரமோகன் ஆகியோர், டில்லியில், பிரதமர் அலுவலகத்தில் வழங்கினர். மேலும், மத்திய வேளாண் துறை அமைச்சக செயலர், எஸ்.கே.பட்நாயக்கிடமும் வழங்கினர்.
மழை கிடைக்கவில்லை
மனுவில் கூறியுள்ளதாவது: வடகிழக்கு பருவமழையின் நீர் ஆதாரத்தை, தமிழகம் ...

'ஜோக்' கோர்ட் அல்ல சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Posted: 16 Jan 2017 11:05 AM PST

புதுடில்லி,":'சுப்ரீம் கோர்ட் என்பது வேடிக்கையான, 'ஜோக்' கோர்ட் அல்ல; எங்கள் உத்தரவை மதித்து நடக்க வேண்டும்' என, மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், பள்ளிகளில் சுகாதாரமற்ற முறையில், மதிய உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுவதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்று, பொதுநல வழக்கு தொடர்ந்தது.
வேடிக்கையாக நினைக்கின்றன
இதை, விசாரித்த சுப்ரீம் கோர்ட், பதில் மனு தாக்கல் செய்யும்படி, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், பல மாதங்கள் ஆன பிறகும், தமிழகம், கேரளா உட்பட பல மாநிலங்கள், ...

இரண்டுக்கு மேல் இருந்தால் பள்ளியில் 'சீட்' கிடையாது

Posted: 16 Jan 2017 11:41 AM PST

புதுடில்லி: 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பள்ளியில் 'அட்மிஷன்' மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பும் கிடையாது' என, டில்லியில் இயங்கி வரும் ஒரு பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு, பிரபலமான, சல்வான் என்ற பள்ளி உள்ளது.
டில்லிவாசிகள், தங்கள் குழந்தைகளை, சல்வான் பள்ளியில் சேர்ப்பதை விரும்புகின்றனர். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்காக நர்சரி வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ...

வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்: மத்திய அரசு ஆலோசனை

Posted: 16 Jan 2017 12:29 PM PST

புதுடில்லி: 2017 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் மாத ஊதியம் பெறுபவர்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் திருப்தி அளிக்கும் வகையில் வரி விதிப்பில் மாற்றங்கள் ஏற்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

உயர் மதிப்பு நோட்டுகளின் மதிப்பிழப்பால் மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். நாட்டு மக்களின் நலனை கருதி பொருளாதார ரீதியாக அனைத்து தரப்பு மக்களும் நன்மை அடையும் வகையில் இந்த வரிவிதிப்பு மாற்றங்கள் இருக்கும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரி விகிதத்தில் மாற்றம்
தற்போது ...

கபாலம் வளர்ச்சி இல்லாத கருவை கலைக்க அனுமதி

Posted: 16 Jan 2017 01:49 PM PST

புதுடில்லி: கபாலம் இல்லாமல் வளர்ந்துள்ள, 24 வார கருவைக் கலைக்க, 22 வயது பெண்ணுக்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

கரு கலைக்க அனுமதி:
மும்பையைச் சேர்ந்த பெண், 'என் வயிற்றில் வளரும் கருவுக்கு கபாலம் வளர்ச்சி அடையவில்லை. கருவின், 21வது வாரத்தில் தான், இது தெரியவந்தது. மருத்துவ ரீதியில் இந்தக் குழந்தை உயிருடன் பிறப்பதற்கு வாய்ப்பில்லை. அதனால், கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மருத்துவ ஆய்வுக்கு பின்...
கருக் கலைப்பு சட்டத்தின்படி, 20 ...

பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்த பாக்., பார்லி.,!

Posted: 16 Jan 2017 02:30 PM PST

இஸ்லாமாபாத் : ‛பயங்கரவாதத்தின் தாயகம்' என பாகிஸ்தானை விமர்சித்ததற்காக பிரதமர் மோடிக்கு, பாக்., பார்லி., கண்டனம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்தின் தாயகம்:
கோவாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‛பயங்கரவாத இயக்கங்கள் அனைத்துடனுடம் தொடர்புடைய நாடு பாக்.,' மற்றும் ‛பயங்கரவாதத்தின் தாயகம்' என பாகிஸ்தானை விமர்சித்து பேசினார். மோடியின் இப்பேச்சுக்காக பாக்., பார்லி., நேற்று(ஜன.,16) கண்டன தீர்மானம் கொண்டு வந்தது.
கண்டன தீர்மானம்:
பாக்., பார்லியில் கண்ட ...

பெட்ரோலுக்கு மானியம் இல்லை: மத்திய அரசு திட்டவட்டம்

Posted: 16 Jan 2017 03:38 PM PST

புதுடில்லி: 'பெட்ரோல், டீசல் பொருட்களுக்கு மானியம் வழங்கும் நடைமுறை, மீண்டும் வராது' என, மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.

விலை உயர்வு:
சர்வதேச சந்தை நிலவரப்படி, பெட்ரோல், டீசல் பொருட்களின் விலையை, மாதம் இரு முறை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்க, மத்திய அரசு அனுமதித்துள்ளது. சமீப காலமாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, ஏறுமுகமாக உள்ளது. இதனால், டிசம்பருக்கு பின், அடுத்தடுத்து விலை உயர்த்தப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை கணிசமாக அதிகரித்தது. இந்த விலை உயர்வுக்கு, எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™