Tamil News | Online Tamil News |
- வீரர்களுக்கு எச்சரிக்கை: புகார் சொல்லாதீங்க!
- 'டிஜிட்டல்' பரிவர்த்தனை: 45 பேருக்கு 'ஜாக்பாட்'
- உருவெடுக்கிறது சசிகலாவிற்கு எதிரான அணி
- நீண்ட காலத்திற்கு பின் தமிழக அரசு விழாவில்... எளிமை!:முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஆடம்பரமில்லை:கொடி, தோரணம், ஜால்ரா பேச்சுக்கு இடமில்லை:பாட்டுப்பாடி உற்சாகம் கூட்டினார் பன்னீர்செல்வம்
- புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை: சசிகலா அதிர்ச்சி
- உ.பி., தேர்தலில் 'மாஜி' முதல்வர் முலாயம் நிலை...பரிதாபம்!: தலைவர் பதவி தருவதாக குட்டிக் கட்சி அறிவிப்பு
- சொத்து சொல்ல வேண்டாம்! அரசு ஊழியர்கள் நிம்மதி
- பன்னீருடன் கைகோர்க்க பண்ருட்டி முடிவு: சசிகலாவுக்கு பெருகுகிறது எதிர்ப்பலை
- ராமாவரம் தோட்டத்திற்குள் நாளை நுழைகிறார் சசிகலா எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர்களையும் வளைக்க திட்டம்
- கழிவு அகற்றுவது கட்டாயம்! பசுமை தீர்ப்பாயம் அதிரடி
- 115 ஆண்டுகளில் அதிக வெயில்; 2016ல் 700 பேர் பலி
- காங்.,கில் இணைந்தார் சித்து; முடிவுக்கு வந்தது இழுபறி
- இழுபறிக்கு தீர்வு கிடைக்குமா? ஜி.எஸ்.டி., கவுன்சில் இன்று ஆலோசனை
- ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: நிதி அமைச்சகம் விளக்கம்
| வீரர்களுக்கு எச்சரிக்கை: புகார் சொல்லாதீங்க! Posted: 15 Jan 2017 08:21 AM PST புதுடில்லி:''தங்களுக்கு உள்ள குறைகளை, சமூக வலைதளங்கள் மூலம் புகார் சொல்லும் ராணுவ வீரர்களுக்கு எதிராக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ராணுவ தளபதி, பிபின் ராவத் எச்சரித்துள்ளார். 'சரியான அளவிலும், தரத்திலும் உணவு வழங்கப்படுவதில்லை' என, எல்லை பாதுகாப்புப் படை வீரர், தேஜ்பகதுார் யாதவ் என்பவர், சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பான வீடியோவை, சமூக தளங்களில் அவர் வெளியிட்டார். இதேபோல், பல்வேறு வீரர்களும், சமூக தளங்களில் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், டில்லியில் நடந்த, ராணுவ தின நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற, ராணுவத் தளபதி, ... |
| 'டிஜிட்டல்' பரிவர்த்தனை: 45 பேருக்கு 'ஜாக்பாட்' Posted: 15 Jan 2017 08:24 AM PST மும்பை:'டிஜிட்டல்' பரிவர்த்தனையை பயன் படுத்தியதன் மூலம், மூன்று வாரங்களில், 45 பேர் லட்சாதிபதியாகி உள்ளனர். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், 'டிஜிட்டல்' பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக, 'டிஜிட்டல்' பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கான பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டது.குலுக்கல் முறையில் தேர்வு ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான, என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பண பரிவர்த் தனை வாரியம் சார்பில், குலுக்கல் முறையில், பரிசுக்கு உரியோர் ... |
| உருவெடுக்கிறது சசிகலாவிற்கு எதிரான அணி Posted: 15 Jan 2017 08:31 AM PST அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியிலிருந்து விலகிய, நடிகர் ஆனந்தராஜை, ஜெ., அண்ணன் மகள், தீபா ஆதரவாளர்கள் நேற்று சந்தித்துப் பேசியது, அ.தி.மு.க., வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சசிகலாவுக்கு, கட்சி யின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்; ஜெ., அண்ணன் மகள் தீபாவை, 'கட்சி தலைமை ஏற்க வேண்டும்' என்றும், வலியுறுத்தி வருகின்றனர். சென்னை, தி.நகரில் உள்ள அவரது வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இவர்கள், சமூக வலைதளங்களில், தீபாவிற்கு ... |
| Posted: 15 Jan 2017 09:09 AM PST சென்னை:நீண்ட காலத்திற்குப் பின், தமிழக அரசு விழா, கொடி, தோரணம், ஆடம்பரம், வீண் செலவுகள் இன்றி, எளிமையாக நடந்தது. விழாவில், முதல்வர் பன்னீர்செல்வம், பாட்டு பாடி, ஜால்ரா வார்த்தைகள் ஏதும் இன்றி, உற்சாகமாக பேசினார். திருவள்ளுவர் தினத்தையொட்டி, தமிழக அரசின் சார்பில், தமிழ் அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்று, ஒன்பது தமிழ் அறிஞர்களுக்கு, விருதுகள் வழங்கி பாராட்டினார்.சிறந்த அரசன்:விழாவில் அவர் பேசியதாவது: இம்மையிலும், மறுமையிலும் நன்மை ... |
| புதுக்கட்சி துவக்க ரஜினி ஆலோசனை: சசிகலா அதிர்ச்சி Posted: 15 Jan 2017 09:12 AM PST 'தமிழக அரசியலில், அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது' என, நடிகர் ரஜினிகாந்தின் பரபரப் பான பேச்சு, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலாவுக்கு,கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தன், அரசியல் பிரவேசத்திற்கு அச்சாரமாக, ரஜினியின் பேச்சு அமைந்துள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர். புதுக்கட்சியை துவக்குவதற்குரிய ஆலோசனை பெற, அரசியல் வி.ஐ.பி.,க்களை சந்திக்க, ரஜினி முடிவு செய்துள்ளார் என, அவரது ரசிகர் மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.ரசிகர்கள் வேண்டுகோள் ஜெயலலிதா மறைவுக்கு பின், நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, தமிழகம் முழுவதும் ... |
| Posted: 15 Jan 2017 09:20 AM PST லக்னோ:உ.பி., மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் சமாஜ்வாதி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், காமெடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவன தலைவருமான, முலாயம் சிங்கிற்கு, தங்களுடைய கட்சி சின்னம், தலைவர் பதவி தரத் தயாராக இருப்பதாக, குட்டிக் கட்சியான லோக்தளம் கூறியுள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைந்துள்ள, உ.பி., உட்பட, ஐந்து மாநில சட்டசபைகளுக்கு, பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. உ.பி.,யில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில், அதன் நிறுவனர் முலாயம் ... |
| சொத்து சொல்ல வேண்டாம்! அரசு ஊழியர்கள் நிம்மதி Posted: 15 Jan 2017 09:23 AM PST புதுடில்லி:'லோக்பால் சட்டத்தின்கீழ், மத்திய அரசு ஊழியர்கள், தங்களுடைய சொத்து விபரங்களை, தற்போதைக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. பார்லிமென்டில், 2013ல், லோக்பால் சட்டம் நிறைவேற்றப் பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும், தங்களுடைய சொத்து விபரங் களை, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வரையிலான காலத்துக்கு, அந்த நிதியாண்டில், ஜூலை, 31க்கு முன், தாக்கல் செய்ய வேண்டும்.அதன்படி, 2014ம் ஆண்டுக்கான சொத்து விபரங் களை, தாக்கல் செய்வதற்கான காலக் கெடு, பல முறை நீட்டிக்கப்பட்டு,2016, டிச., 31க்குள் ... |
| பன்னீருடன் கைகோர்க்க பண்ருட்டி முடிவு: சசிகலாவுக்கு பெருகுகிறது எதிர்ப்பலை Posted: 15 Jan 2017 09:27 AM PST சென்னை:''முதல்வர் பன்னீர் செல்வத்தின் பிறந்த நாளை, உலகம் முழுவதும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர்,'' என, பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டி பேசியுள்ளதால், இவர் உட்பட, அ.தி.மு.க.,வில் உள்ள பழைய தலைவர்கள், பன்னீரையே முதல்வராக ஏற்றுக் கொள்வர் எனத் தெரிகிறது. அக்கட்சி பொதுச் செயலர் சசிகலா, விரைவில் முதல்வர் பொறுப்பேற்க உள்ள நிலையில், அவருக்கு மறைமுக எதிர்ப்பு தெரிவிக்க, பெரும்பாலானோர் அணி திரள்வர் என்ற சூழல் உருவாகி உள்ளது.சென்னை, கலைவாணர் அரங்கில், நேற்று நடந்த, விருது வழங்கும் விழாவில், பெரியார் விருதைப் பெற்ற பின், பண்ருட்டி ராமச்சந்திரன் ... |
| Posted: 15 Jan 2017 10:09 AM PST போயஸ் தோட்டத்தை கைப்பற்றிய சசிகலா, நாளை, எம்.ஜி.ஆர்., தோட்டத்தில் நுழைந்து, பாரம்பரியமான அவரது சிலையை திறந்து வைத்து, எம்.ஜி.ஆரின் குடும்ப உறுப்பினர் களையும் வளைக்க திட்டமிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவரது பொதுச்செயலர் செயலர் பதவியை, சசிகலாவுக்கு வழங்கியதை, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, அவரது தம்பி தீபன் குடும்ப உறுப்பினர்கள் விரும்பவில்லை. அவர்கள் அனைவரும், முதல்வர், பொதுச் செயலர் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் நீடிக்க வேண்டும் என, விரும்பினர். இதனால்,சுதா குடும்பத்தினர் மீது சசிகலா தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.சுதாவிற்கு ... |
| கழிவு அகற்றுவது கட்டாயம்! பசுமை தீர்ப்பாயம் அதிரடி Posted: 15 Jan 2017 10:18 AM PST
புதுடில்லி: 'கழிவுகளை சேகரிப்பது, தரம் பிரிப்பது, அவற்றை அகற்றுவது போன்றவற்றுக்கான, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும் கட்டுமான திட்டங்களுக்கே அனுமதி அளிக்க வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விரிவான அறிக்கை: இது தொடர்பான வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர், சுதந்திர குமார் தலைமையிலான அமர்வு அளித்துள்ள உத்தரவு: வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட எந்த கட்டுமான திட்டப் பணிகளாக இருந்தாலும், அதில், குப்பையும், கழிவு நீரும் சேரும். இந்த திட்டங்களில், ... |
| 115 ஆண்டுகளில் அதிக வெயில்; 2016ல் 700 பேர் பலி Posted: 15 Jan 2017 11:47 AM PST புதுடில்லி : கடந்த, 115 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2016ல், வெயில் வறுத்தெடுத்துள்ளது. அந்த ஆண்டில், பல்வேறு தட்ப, வெப்பநிலை காரணமாக உயிரிழந்த, 1,600 பேரில், வெயில் காரணமாக மட்டும், 700 பேர் பலியாகி உள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம், 2016ம் ஆண்டுக்கான அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது: * கடந்த, 1901ம் ஆண்டில் இருந்து, பதிவான வெப்ப நிலைகளுடன் ஒப்பிடுகையில், 2016ல், வெப்பம் அதிகம். ஆண்டு சராசரியைவிட, 0.91 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெயில் பதிவானது * மிகவும் அதிகமாக, ராஜஸ்தான் மாநிலம், பலோடியில், 51 டிகிரி செல்சியஸ் ... |
| காங்.,கில் இணைந்தார் சித்து; முடிவுக்கு வந்தது இழுபறி Posted: 15 Jan 2017 12:55 PM PST
புதுடில்லி : கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான நவ்ஜோத் சிங் சித்து, 53, நீண்ட இழுபறிக்கு பின், நேற்று(ஜன.,15), முறைப்படி காங்கிரசில் இணைந்தார். விலகல்: கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள், எம்.பி.,யுமான, நவ்ஜோத்சிங் சித்து, அந்த கட்சியிலிருந்து விலகி, பரபரப்பை ஏற்படுத்தினார். அவர், ஆம் ஆத்மியில் சேரப் போவதாக தகவல் வெளியானது. டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட, மூத்த தலைவர்கள் பலருடன், பல கட்ட பேச்சு நடத்தியும், அந்த முயற்சி நிறைவேறவில்லை. குழப்பம்: இதன்பின், புதிய ... |
| இழுபறிக்கு தீர்வு கிடைக்குமா? ஜி.எஸ்.டி., கவுன்சில் இன்று ஆலோசனை Posted: 15 Jan 2017 01:59 PM PST புதுடில்லி : ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் இடையிலான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ஒன்பதாவது முறையாக, இன்று, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், டில்லியில் நடைபெறுகிறது. நிறைவேற்றம்: நாடு முழுவதும், சரக்கு மற்றும் சேவைகளுக்கு, ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் நோக்கில், ஜி.எஸ்.டி., மசோதா, பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டது. ஜி.எஸ்.டி.,யை, இந்தாண்டு ஏப்ரலில் அமல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அதிகார வரம்பு தொடர்பாக, ... |
| ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை: நிதி அமைச்சகம் விளக்கம் Posted: 15 Jan 2017 03:41 PM PST
புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையில், ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையீடா நடைபெற்றதா என்ற கேள்விக்கு நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குற்றச்சாட்டு: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின், ஒருங்கிணைப்புக்காக அதிகாரி ஒருவரை மத்திய அரசு நியமித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் அமைப்பு, ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேலுக்கு கடிதம் எழுதியது. அக்கடிதத்தில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் தன்னாட்சியில் தலையிடுவதாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 16,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |