Tamil News | Online Tamil News |
- எம்.ஜி.ஆர்., ஸ்டாம்ப் வெளியிட மத்திய அரசு... சம்மதம்!:முதல்வர் விடுத்த கோரிக்கை உடனடியாக ஏற்பு: பிறந்த நாள் வாழ்த்து கூறிய மோடிக்கு ஓ.பி.எஸ்., நன்றி
- தீபா தலைமையில் புதிய கட்சி: பி.எச்.பாண்டியன் ஆலோசனை
- கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்... அதிருப்தி!:மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை
- கை சின்னத்தை ரத்து செய்யணும்!
- தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை... கோலாகலம்!:ஒரு சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு:இன்றும் நடைபெறும் என்பதால் போலீஸ் குவிப்பு
- தமிழகத்தில் அசாதாரண சூழல்: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
- அமைச்சரின் ஆலோசனை கூட்டம்: 20 வட்ட செயலர்கள் புறக்கணிப்பு
- கருணாநிதியின் 10 ரூபாய் பரிசு நிறுத்தம் * தி.மு.க.,வினர் வருத்தம்
- காந்திக்கு பதில் மோடி படம்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை
- அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்கள் தீவிரம்
- சசிகலாவை பொதுச் செயலராக ஏற்கக் கூடாது:தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார் சசிகலா புஷ்பா
| Posted: 14 Jan 2017 07:06 AM PST முதல்வர் பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை ஏற்று, எம்.ஜி.ஆர்., உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. தனக்கு போன் செய்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த, பிரதமர் மோடியிடம், ஸ்டாம்ப் வௌியிட மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததற்கு முதல்வர் நன்றி கூறினார். அ.தி.மு.க., நிறுவனரும், மறைந்த முதல்வரு மான, எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் நுாற்றாண்டு விழா, ஜன., 17ல் தமிழகம் முழுவதும், அக்கட்சியினரால் கொண்டாடப் படுகிறது. மேலும் அந்த நாளை, தமிழக அரசின் சார்பில் விமரிசையாக கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக, தமிழகம் ... |
| தீபா தலைமையில் புதிய கட்சி: பி.எச்.பாண்டியன் ஆலோசனை Posted: 14 Jan 2017 07:23 AM PST ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா துவக்கவுள்ள, புதிய கட்சியின் கட்டமைப்பு குறித்து, இன்று, அம்பாசமுத்திரம் தோட்டத் தில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், தன் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டார். அவருக்கு, மாநில நிர்வாகிகளில், பி.எச்.பாண்டியனை தவிர, மற்ற அனைவரும் ஆதரவு அளித்தனர்.ஆனால், பி.எச்.பாண்டிய னும், அவரது ஆதரவாளர் களும், தீபாவை ஆதரிக்க முன்வந்துள்ளனர்.தீபா தலைமையில் புதிய கட்சி துவக்குவது குறித்தும், அதற்கான விதிகளை ஏற்படுத்துவது குறித்தும், தீபா ... |
| கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக்... அதிருப்தி!:மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை Posted: 14 Jan 2017 07:37 AM PST புதுடில்லி:'அனைவருக்கும், எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது; இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது. நாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. 'அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு ... |
| Posted: 14 Jan 2017 07:44 AM PST லக்னோ, 'கடவுள் உருவங்களுடன், காங்., தேர்தல் சின்னத்தை தொடர்பு படுத்தி, அந்த கட்சி துணை தலைவர் ராகுல் பேசியது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்' என, பா.ஜ., குற்றஞ் சாட்டியுள்ளது. இதையடுத்த, காங்., சின்னத்தை ரத்து செய்யும்படி, மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம், பா.ஜ., முறையிட்டுள்ளது. டில்லியில், சமீபத்தில் நடந்த, காங்., , மாநாட்டில் பேசிய, ராகுல், 'எல்லா மதத்திலும்காங்., கட்சியின் தேர்தல் சின்னம் இடம் பெற்றுள் ளது. காங்., எல்லாருக்கும் துணையாக இருப்பதால், எந்த மதத்தை சேர்ந்தவரும் அச்சப் படத்தேவை யில்லை' என்றார். ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு ... |
| Posted: 14 Jan 2017 09:11 AM PST மதுரை:தமிழகம் முழுவதும், பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப் பட்டது. மதுரை, தேனி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. 'பாலமேடு, அலங்காநல்லுாரில், இன்றும், நாளையும் ஜல்லிக்கட்டு நடைபெறும்' என, அறிவிக்கப்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவனியாபுரத்தில் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இந்தாண்டும் உச்சநீதிமன்ற தடையை மீறி வழக்கம் போல் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் நடந்தன. இதை யறிந்த போலீசார் மாடுபிடி வீரர்களின் வீடுகளுக்கு சென்று 'ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம்,' என எழுதி வாங்கினர். ஒலி பெருக்கி ... |
| தமிழகத்தில் அசாதாரண சூழல்: நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு Posted: 14 Jan 2017 09:18 AM PST சென்னை:''தமிழகத்தில் இப்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில், சோ கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்,'' என்று சென்னையில் நேற்று நடந்த 'துக்ளக்' ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசினார். 'துக்ளக்' வார இதழின், 47வது ஆண்டுவிழா, சென்னையில் நேற்று நடந்தது. பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது;சோ இல்லாத இந்த மேடையில் உரையாற்ற வேண்டி வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. அவர் மருத்துவமனையில் இருந்த பொழுது சென்று பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. மறைந்த ... |
| அமைச்சரின் ஆலோசனை கூட்டம்: 20 வட்ட செயலர்கள் புறக்கணிப்பு Posted: 14 Jan 2017 09:20 AM PST சேலம்:சேலம் மாநகர், புறநகர் மாவட்டங் களில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவது குறித்து, அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தை, 20 வட்ட செயலர்கள் உட்பட, 80 பேர் புறக்கணித்தனர். சேலம் மாவட்டத்தில், எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடு வது குறித்த ஆலோசனை கூட்டம், அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்தது.சேலம் மாநகர, அ.தி.மு.க., அலுவலகத்தில், நேற்று முன் தினம் காலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அம்மாபேட்டை மண்டலத்ததை சேர்ந்த பெரும்பான்மையான நிர்வாகிகள் புறக்கணித்தனர்.சேலம் மாநகரின், நான்கு பகுதிகளை ... |
| கருணாநிதியின் 10 ரூபாய் பரிசு நிறுத்தம் * தி.மு.க.,வினர் வருத்தம் Posted: 14 Jan 2017 09:27 AM PST பொங்கல் பண்டிகை நாளில்,தி.மு.க., தலைவர், கருணாநிதி, தன் கட்சி தொண்டர்களுக்கு, 10 ரூபாய் பரிசு வழங்கும், 50 ஆண்டு நடைமுறை நேற்று நிறுத்தப்பட்டது. தந்தைக்கு பதில், மகன் ஸ்டாலின் நடைமுறையை தொடர்ந்தார். பொங்கல் பண்டிகை நாளில், தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது குடும்பத்தினர், கட்சி யின் முக்கிய நிர்வாகிகள், சென்னை யிலுள்ள தொண்டர்கள் நேரில் சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பர். அப்போது, பொங்கல் பரிசாக, புதிய, 10 ரூபாய் நோட்டை பரிசாக, கருணாநிதி வழங்குவார். 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறையை, கருணாநிதி தொடர்ந்து வந்தார்.இந்த ஆண்டு, அவர் உடல்நிலை ... |
| காந்திக்கு பதில் மோடி படம்: அமைச்சர் பேச்சால் சர்ச்சை Posted: 14 Jan 2017 11:11 AM PST சண்டிகர் ''காதி விளம்பரங்களுக்கு, மகாத்மா காந்தியை விட, பிரதமர் மோடியின் படமே பொருத்தமானது. ரூபாய் நோட்டுகளில், காந்தி யின் படத்தை நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது,'' என, ஹரியானா மாநில, பா.ஜ., அமைச்சர் பேசியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திர போராட் டத்தின் போது, வெளிநாட்டு துணிகளை புறக் கணிக்கும் வகையில், அதற்கு மாற்றாக, மகாத்மா காந்தியால் பிரபலப்படுத்தப்பட்டது, காதி. அது முதல், காதியின் அனைத்து விளம்பரங் களிலும் மகாத்மா காந்தி, ராட்டையில் நுால் நுாற்கும் படம் இடம்பெற்று ... |
| அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் போராட்டங்கள் தீவிரம் Posted: 14 Jan 2017 01:53 PM PST ரிச்மண்ட்: ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு போரட்டங்கள் அமெரிக்கா முழுவதும் தீ விரமடைந்து ள்ளன. அமெரிக்க ஒருங்கிணைப்பாளர் கவிதா பாண்டியன் தமிழக எம்.பி.க்களுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார். ரிச்மண்ட், நியூயார்க், பென்டன்வில் நகரங்களைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் தமிழர்கள் ஜல்லிக்கட்டு விழிப்புணர்வு போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். அட்லாண்டா, வாஷிங்டன் டிசி, பால்டிமோர், நியூ ஜெர்ஸி, மினியாபோலிஸ், சியாட்டல் உள்ளிட்ட நகரங்களில் வெள்ளி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி போராட்டங்கள் நடைபெற உள்ளன. ... |
| சசிகலாவை பொதுச் செயலராக ஏற்கக் கூடாது:தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார் சசிகலா புஷ்பா Posted: 14 Jan 2017 01:59 PM PST அ.தி.மு.க., தலைமைக் கழகத்தில் வைத்து, என் கணவரை அடித்து உதைத்து விட்டால், நியாயம் கேட்டு நான் போராட மாட்டேன் என நினைத்து விட்டனர்; அது நடக்காது. எனக்கு நியாயம் கிடைக்கும் கடைசி நிமிடம் வரை போராடுவேன் என, அடித்துச் சொல்லும் சசிகலா புஷ்பா எம்.பி., சசிகலாவை, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமித்ததே செல்லாது. அதை தேர்தல் கமிஷன் ஏற்கக் கூடாது என, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இது குறித்து, சசிகலா புஷ்பா கூறியதாவது:ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்பதை, உலகமே அறிந்து வைத்துள்ளது. கூடவே இருந்து ஜெயலலிதாவைப் பார்த்துக் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 15,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |