ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை
- ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது
- தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
- தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார்
- பொங்குவதெல்லாம் பொங்கல்
- மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
- பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை
- ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல்
- ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ்
- பொங்கல் - போங்கள்
- tamil books
- புதுக்கவிதை
- வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு
- இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது
- மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி
| தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை: பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை Posted: 14 Jan 2017 10:30 AM PST பாரீஸ் - தமிழகத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு, இதன் எதிர்ப்பையும் மீறி ஸ்பெயினில் காளைச்சண்டை இன்று வரை தொடர்ந்து நடந்து வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காளைச் சண்டை ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில் நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச் சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்களும் மோதும் விளையாட்டு இது. ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதைச் ... |
| ஆள்மாறாட்டத்தை தடுக்க அதிரடி நடவடிக்கை: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது Posted: 14 Jan 2017 04:52 AM PST ரயில்வே தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாகிறது. தேர்வறையில் ஆள்மாறாட்டத்தை தடுக்க விண்ணப்பதாரர்களின் கைவிரல் ரேகை மூலம் வருகைப்பதிவு சரிபார்க்க ரயில்வே தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக கருதப்படுகிறது ரயில்வே துறை. இத்துறையில் குரூப்-ஏ அதிகாரிகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மூலமாக தேர்வுசெய்யப் படுகிறார்கள். அதேபோல், குரூப்-பி அலுவலர்கள் குரூப்-சி பணியாளர்கள் ரயில்வே தேர்வு வாரியம் மூலமாக பணிநியமனம் ... |
| தேசிய பசுமை தீர்ப்பாயம் விதித்த மாஞ்சா நூலுக்கான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு Posted: 14 Jan 2017 04:47 AM PST -- புதுடெல்லி 'பீட்டா' அமைப்பு புகார் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பட்டம் விடுவதற்கு மாஞ்சா நூல் பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடி துண்டுகள் மற்றும் இரும்பு பொடி கொண்ட கலவையை பூசி தயாரிக்கப்படும் இந்த மாஞ்சா நூல் அவ்வப்போது மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிரை பறித்து விடுகிறது. எனவே இந்த மாஞ்சா நூலுக்கு தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியம் (பீட்டா) சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் புகார் செய்யப்பட்டது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக ... |
| தமிழக முன்னாள் கவர்னர் பர்னாலா காலமானார் Posted: 14 Jan 2017 04:46 AM PST -- சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வரும், தமிழக முன்னாள் கவர்னருமான சுர்ஜித் சிங் பர்னாலா, உடல்நலக்குறைவால் சண்டிகர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91. கடந்த 1925ம் வருடம் அக்டோபர் 21ல் பஞ்சாப் மாநிலம் அடேலியில் பிறந்த இவர் லக்னோவில் சட்டம் பயின்றார். சுதந்திர போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். 29 செப்டம்பர் 1985 முதல் 11 ஜூன் 1987 வரை பஞ்சாப் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 1990 முதல் 91 வரையிலும், 2004 முதல் 2011 வரை தமிழக கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். ... |
| Posted: 14 Jan 2017 04:40 AM PST பொங்குவதெல்லாம் பொங்கல் நாளை மட்டுமல்ல எங்கள் வீட்டில் நாள்தோறும் பொங்கல். எப்படி? உலையில் அரிசி போட்டுவிட்டு உத்தமி உறங்கினால் பொங்கல். பானையில் அரிசி போட்டுவிட்டு பாவை பக்கத்து வீடு போனால் பொங்கல். சாதம் கொதிக்கும் போது என்மேல் கோபம் வந்தால் பொங்கல். சமையல் செய்யச் சொல்லி நான் சமைக்காவிட்டால் பொங்கல். இப்படி எங்கள் வீட்டில் நாள்தோறும் பொங்கல். ச. சந்திரசேகரன் |
| மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம் Posted: 14 Jan 2017 04:21 AM PST - கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட் டம், வராபுழா அருகில் உள்ள சிறைக்கு அகம் பகவதி பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்த்தாயி(75). கேரள அரசின் கால்நடைத் துறையில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற இவர், ஓய்வூதியமும் பெறுகிறார். சில ஆண்டுகளுக்கு முன் கண வரையும், மகளையும் பறிகொடுத்த இவர், அதன் பின், உறவினர்களி டமோ, பக்கத்து வீட்டுக்காரர்களிடமோ பேசாமல், தனிமையில் வாழ்ந்து வந்தார். டிவி, வானொலி போன்ற வையும் அவரது வீட்டில் இல்லை. நான்கைந்து மாதங்களுக்கு ஒரு முறை வங்கிக்கு சென்று ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு, தேவையான ... |
| பண தட்டுப்பாட்டால் வந்த சோதனை : வட்டியை குறைத்தும் பலனில்லை கடன் வாங்க ஆளே இல்லை Posted: 14 Jan 2017 04:16 AM PST புதுடெல்லி: கடந்த ஆண்டு நவம்பரில் வாபஸ் பெறப்பட்ட உயர் மதிப்பிலான ₹500, ₹1,000 நோட்டு 95 சதவீதத்துக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. டெபாசிட் மலையளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், வட்டி விகிதங்களும் குறைக்கப்பட்டு விட்டன. இது கடன் வாங்குவோருக்கு ஒரு வகையில் சாதகம்தான் என்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு பலன் தரவில்லை. பண மதிப்பு வாபசுக்கு பிறகு மக்களின் வாங்கும் திறன் வெகுவாக குறைந்து விட்டது. ஆட்டோமொபைல் துறைக்கு இதனால் பேரிடி. 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ... |
| ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ‘சாப்ட்வேர்’ வாங்கியதில் ரூ.225 கோடி ஊழல் Posted: 14 Jan 2017 04:10 AM PST புதுடெல்லி ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 2011–ம் ஆண்டு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் (கணினி மென்பொருள்) வாங்கியதில் ரூ.225 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஏர் இந்தியாவின் தலைமை கண்காணிப்பு அதிகாரி அளித்த அறிக்கைகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் பரிசீலித்தது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு பரிந்துரை செய்தது. அதை சி.பி.ஐ. பரிசீலனை செய்ததில், வழக்கு பதிவு செய்வதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதாக கண்டறிந்தது. எனவே ... |
| ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள் மாட்டிறைச்சி வியாபாரத்தை அனுமதிப்பது சரியா?- சத்குரு ஜக்கி வாசுதேவ் Posted: 14 Jan 2017 03:56 AM PST - ஜல்லிக்கட்டுக்கு தடை கோருபவர்கள், மாட்டிறைச்சி வியாபாரத்தை மட்டும் அனுமதிப்பது சரியா என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண்ணுக்கு அழகு எப்படியோ, ஆணுக்கு வீரம் அப்படி. தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, இளைஞர்கள் தங்கள் ஆற்றலையும், வீரத்தையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருந்தது. உடலுறுதி, திறமை, துரிதமாய் செயல்படும் குணம், ... |
| Posted: 14 Jan 2017 03:37 AM PST அனைவருக்கும் வணக்கம்,இனிய பொங்கல் நாள் வாழ்த்துக்கள். வெகுநாட்கள் கழித்து ஈகரையில் எனது பதிவை பதிவு செய்கிறேன்.காலச்சுழல் மற்றும் தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்னை இவ்வாறு பதிவிடச் செய்கிறது. பொங்கலை ஒட்டியே எனது பதிவு கட்டாயம் படிக்கவும். இன்று தமிழர் திருநாள்/உழவர் திருநாள்/பொங்கல், எனக்கு தெரிந்த வரையில் தமிழர் அனைவரும் மாநில ரீதியாக ஒருங்கிணைந்து மிகப்பெரும் அளவில் பல ஆண்டுகளாக கொண்டாடும் ஒரே ஒரு திருநாள் பொங்கல்.ஆனால் பொங்கலன்று ""பொங்கல் நல்வாழ்த்துகள்"" ... |
| Posted: 13 Jan 2017 08:09 PM PST பாலகுமாரன், இந்திரா சௌந்தர்ராஜன், சாண்டில்யன், ராஜேஷ்குமார் ஆகியோரின் புத்தகங்கள் நல்ல தரமான நிலையில் இருந்தால் தயவு செய்து பதிவு செய்தால் நலம். இதற்கு தமிழ்தேனியையோ,தமிழ்நேசனையோ மேற்கோள் காட்ட வேண்டாம். அதற்கும் மேலாக கலீல் ஜிப்ரானின் கவிதைகளை தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் வாசிப்பது நன்மை பயக்கும். அன்பர்கள் தயை கூர்ந்து தங்கள் பதிவுகளால் எம் தமிழ் உலகினை மகிழ்வுறச் செய்தால் அதுவே இன்பம். அன்புடன் தமிழ்த்தம்பி |
| Posted: 13 Jan 2017 08:05 PM PST நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!! * நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது. எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான் மையக் குழு முடிவு செய்துள்ளது நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள். நிலைமை ரொம்ப மோசமாக இல்லை சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில் வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும் தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம். சமாளித்து ... |
| வறுமைக்கோடு வரையறுக்க கமிட்டி அமைக்க முடிவு Posted: 13 Jan 2017 07:00 PM PST - புதுடில்லி: வறுமைக்கோடு பற்றி வரையறை செய்வதற்காக, விரைவில் கமிட்டி ஒன்றை அமைக்க, 'நிடி ஆயோக்' முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் குறித்து ஆய்வு செய்த, சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி, 2009ல் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தற்போது, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன்படி, நகரங்களில், நாள் ஒன்றுக்கு, தங்கள் சொந்த உணவு உள்ளிட்ட தேவைக்கு, 33.33 ரூபாய்க்கும், கிராமப் ... |
| இந்தியா-இங்கிலாந்து முதல் ஒரு நாள் ஆட்டம்: புணேவில் நாளை நடைபெறுகிறது Posted: 13 Jan 2017 06:44 PM PST - - இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் புணேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகிய நிலையில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. அதனால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷிகர் தவனும், கே.எல்.ராகுலும் தொடக்க வீரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டுள்ள தவன், அணியில் தனது இடத்தைத் ... |
| மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி Posted: 13 Jan 2017 06:40 PM PST - மகாத்மா காந்தி இடத்தில் பிரதமர் மோடி புதுடில்லி: காதி கிராம தொழிற்சாலை கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட காலண்டர் மற்றும் டைரியில், மகாத்மா காந்தி படத்திற்கு பதில், பிரதமர் மோடி படம் இடம் பெற்றுள்ளது. பிரதமர் படம்: இந்த கமிஷனர் அலுவலகம் வருடந்தோறும் காலண்டர் மற்றும் டைரி வெளியிடுவது வழக்கம். இந்த காலண்டரில், மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்றுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருக்கும். கடந்த 1920 ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகாத்மா ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |