Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரதமர் பயண செலவு விபரங்கள் வெளியிட...முடியாது!:பாதுகாப்பு தொடர்பானதாக இருப்பதாக அறிவிப்பு

Posted: 13 Jan 2017 05:32 AM PST

புதுடில்லி:'பிரதமரின் பயண செலவு குறித்த விபரங்கள், பாதுகாப்பு தொடர்பானவை என்பதால், அதை வெளியிட முடியாது' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமரின் வெளிநாட்டுப் பயணச் செலவு விபரங்களைக் கேட்டு, பிரதமர் அலுவலகம், வெளியுறவு அமைச்சகம் ஆகியவற்றிடம், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்தார்.ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய தகவல் ஆணையத் திடம், அவர் கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து, பிரதமர் ...

மாஞ்சா' நூலுக்கு தடை விலக்க சுப்ரீம் கோர்ட்...மறுப்பு! ':தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவு தொடரும் '

Posted: 13 Jan 2017 07:53 AM PST

புதுடில்லி:'பட்டம் பறக்க விட பயன்படும், 'மாஞ்சா' எனப்படும், கண்ணாடி துாள், ரசாயன பொருட்கள் கலவைபூசப்பட்ட நுாலை பயன் படுத்த, தேசிய பசுமை தீர்பாயம் விதித்த தடையை விலக்க முடியாது' என,சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், பட்டம் பறக்க விடும் திருவிழா மிகவும் பிரபலம்; இதில், பட்டங்கள் விடும் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்பவர்கள், போட்டியாளரின் பட்டத்தை அறுப்பதற்காக, 'மாஞ்சா' நுாலை பயன்படுத்துகின்றனர். மாஞ்சா நுால் அறுத்து, மனிதர்களும், பறவைகளும் உயிரிழக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.இதையடுத்து, மாஞ்சா ...

ஏ.டி.எம்.,களில் பணம் அள்ளலாம்!:விரைவில் வருகிறது அறிவிப்பு

Posted: 13 Jan 2017 08:08 AM PST

புதுடில்லி:ஏ.டி.எம்.,களில் பணத்தை எடுப்ப தற்கு உள்ள கட்டுப்பாடுகள் இம்மாத இறுதி யில் விலக்கி கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ஏ.டி.எம்., மற்றும் வங்கிகளில் இருந்து பணத்தை எடுப்பதற்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. செல்லாத ரூபாய் நோட்டுகளை, 'டிபாசிட்' செய்வதற்கான, 50 நாட் கள் அவகாசம், கடந்த ஆண்டு, டிச., 30 உடன் முடிவுக்கு வந்தது.அதைத் தொடர்ந்து, புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, இந்தக் கட்டுப்பாடுகள் விலக்கி ...

ரூ.150 கோடி பேரம் பேசினர்: சகாயம் அதிர்ச்சி தகவல்

Posted: 13 Jan 2017 08:52 AM PST

நாமக்கல்:''கிரானைட் குவாரி தொடர்பான விசாரணை நடத்திய போது, எனக்கு, 150 கோடி ரூபாய் தருவதாக பேரம் நடந்தது,'' என, சென்னை அறிவியல் நகர துணை தலைவர் சகாயம் கூறினார்.

நாமக்கல் அடுத்த, லத்துவாடி நம்பிக்கை இல்லத்தில், 'விவசாயிகள் வாழ்வு மேம்பட வழிபாடு' என்ற நிகழ்ச்சி நடந்தது.இதில், சென்னை, அறிவியல் நகர துணை தலைவர் சகாயம் பேசியதாவது: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால், தஞ்சை, திருவாரூர் போன்ற பகுதிகளில், சாகுபடி செய்த நிலத்தில் காய்ந்த பயிர்களை பார்த்து, விவசாயிகள் படும் துன்பம், துயரத்தைபோல், நானும், 11 வயதில் அனுபவித்துள்ளேன்.கிரானைட் குவாரி முறைகேடு ...

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கும் தேதி... நீட்டிப்பு?:இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை:ஏராளமானோர் பொருட்கள் வாங்காததால் எதிர்பார்ப்பு

Posted: 13 Jan 2017 09:06 AM PST

பொங்கல் பரிசு வாங்க, நேற்று கடைசி நாள் என்பதால், ரேஷன் கடைகளில், மக்கள் குவிந்தனர். இன்று முதல், மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், 20ம் தேதி வரை, பொங்கல் பரிசு பொருட்களை வாங்க, அவகாசம் அளிக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அரசு பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கும் என, பொருட்கள் வாங்காதவர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தமிழக அரசு, பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலம், கரும்பு துண்டு ஆகியவை அடங்கிய, பரிசு தொகுப்பை அறிவித்துள்ளது. அவற்றை வாங்க, நேற்று கடைசி நாள் என்பதால், ரேஷன் ...

தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் ரஜினியை சீண்டிய ஸ்டாலின்

Posted: 13 Jan 2017 09:23 AM PST

சென்னை:'ரஜினியை சந்திக்கும் மோடி, ஜல்லிக்கட்டுக்காக வந்த, அ.தி.மு.க., - எம்.பி.,க் களை சந்திக்க மறுத்தது ஏன்' என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

ஜல்லிக்கட்டு நடத்த, மத்திய, -மாநில அரசுகளை வலியுறுத்தி, தி.மு.க., சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:- ஜல்லிக்கட்டு நடைபெறும் என, நம்பிக்கையோடு காத்திருந்தோம். அதிர்ச்சியூட்டும் வகையில், ஜல்லிக்கட்டு தடையை நீக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இது, தமிழர் களின் பண்பாட்டுக்கு,கலாசாரத்துக்கு ...

நாளைய முதல்வர் ரஜினி: ரசிகர்கள் பரபரப்பு

Posted: 13 Jan 2017 09:31 AM PST

திருச்சி:'நாளைய முதல்வராக நடிகர் ரஜினி வரவேண்டும்' என, திருச்சியில் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள், அ.தி.மு.க., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ., மறைவை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வராகி விட்டார். அ.தி.மு.க., பொது செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து, முதல்வர் பதவியையும் கைப்பற்ற, சசிகலா துடிக்கிறார்.இந்நிலையில், திருச்சி யில் நேற்று முன் தினம் ரஜினி ரசிகர்கள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், 'நேற்று ஜெயலலிதா, இன்று ஓ.பன்னீர்செல்வம், நாளை ரஜினிகாந்த்' என, மூவரின் முழு உருவப்படமும், தலைமை செயலகம் பின்னணியில் ...

உயிருக்கு ஆபத்து: பயத்தில் ரிசர்வ் வங்கி

Posted: 13 Jan 2017 09:39 AM PST

புதுடில்லி:'செல்லாத ரூபாய் நோட்டுகள் குறித்த தகவல்களை தருவது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக அமைவதுடன், சிலருடைய உயிருக்கு ஆபத்தாகவும் அமையும்' என, ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

பழைய, 500 -1,000 ரூபாய் நோட்டுகள்செல்லாது என்ற அறிவிப்பு, கடந்த ஆண்டு நவ., 8ல் வெளி யானது.இந்த முடிவை யார் எடுத்தது என்பது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. 'ரிசர்வ் வங்கியின் ஆலோசனையின் படியே இந்த முடிவு எடுக்கப்பட்டது' என, மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.அதே நேரத்தில், இது தொடர்பாகவிசாரிக்கும் நிதி துறைக்கான, பார்லி., குழுவுக்கு அளித்துள்ள ...

அ.தி.மு.க., மீது பா.ஜ., பரிவு காட்டுவது ஏன்

Posted: 13 Jan 2017 09:42 AM PST

அடுத்த சில மாதங்களில் நடக்கவுள்ள, ஜனாதிபதி தேர்தல் வரை, அ.தி.மு.க., என்ற, 'தேன் கூடு' கலையாமல் பார்த்துக் கொள்ள, பா.ஜ., முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை, எதிர்த்து வந்தார். ஆனால், அவரது மறைவுக்கு பின், தமிழக அரசு நிர்வாகத்தில், கவர்னர் வித்யாசாகர் ராவ் தலையிட துவங்கினார். அதை தொடர்ந்து, 'உதய்' மின் திட்டம், உணவு மானிய திட்டம் போன்ற, ஜெ., கடுமையாக எதிர்த்து வந்த, மத்திய அரசு திட்டங்களுக்கு, தமிழக அரசு திடீரென பச்சைக் கொடி காட்டியது.ஜெ., போன்ற பெரிய ஆளுமை இல்லாமல், பலவீனமாக இருந்த அ.தி.மு.க.,வை, பா.ஜ., ...

ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை

Posted: 13 Jan 2017 01:31 PM PST

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளிக்காத நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வசதியாக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு 2014 ஆம் ஆண்டு முதல் உச்சநீதி மன்றம் தடை விதித்தது. தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தமிழ் மக்களும் தொடர்ந்து சட்டரீதியாகவும், களத்திலும் போராடி வருகிறார்கள்.
மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இதனிடையே, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில், ...

உ.பி.யில் சைக்கிள் சின்னம் யாருக்கு? ஜன.16-க்கு முடிவு ஒத்திவைப்பு

Posted: 13 Jan 2017 02:52 PM PST

புதுடில்லி:உ.பி.யில் ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணை முடிந்தது. முடிவை தேர்தல் கமிஷன் திங்கட்கிழமைக்கு (ஜன.16)ஒத்திவைத்தது.

உத்தரபிரதேசத்தில், குடும்பச்சண்டை விசுவரூபம் எடுத்ததின் காரணமாக ஆளும் சமாஜ்வாதி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு, அவரது தம்பி சிவபால்சிங் வலது கரமாக இருக்கிறார். அகிலேஷ்க்கு, முலாயம் சிங்கின் மற்றொரு தம்பி ராம்கோபால் யாதவ் பக்க பலமாக உள்ளார்.இந்த நிலையில், அந்த மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 11ந் தேதி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™