Tamil News | Online Tamil News |
- முலாயம் - அகிலேஷ் சந்திப்பு: கட்சி பிளவை தடுக்க பேச்சு
- வங்கிகளில் 'டிபாசிட்' ஆன கறுப்புப் பணம் ரூ.4 லட்சம் கோடி!:வருமான வரித்துறை ஆய்வில் 'பகீர்' தகவல்
- செல்லாத நோட்டு திட்டத்தை முடிவு செய்தது யார்? பார்லி., குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம்
- வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகம் அறிவிப்பு: அரசு நிவாரண திட்டங்கள் வெளியீடு
- ஜெ., அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் சென்னையில் முகாம்!:அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனை:பேனர்களை அகற்றிய போலீசாருடன் பல இடங்களில் மோதல்
- '32 லட்சம் என்.ஜி.ஓ.,க்களின் கணக்குகளை தணிக்கை செய்யணும்!'
- டிஜிட்டல் பொருளாதார நாடாக மாறும் இந்தியா! முதலீட்டாளர் மாநாட்டில் மோடி பெருமிதம்
- தி.மு.க.,வில் ஸ்டாலின் அதிரடி 13 மா.செ.,க்கள் நீக்கம்
- ஜெ., ஜோதிடருக்கு 'கல்தா' ; சசிக்கு மூன்று பேர் நியமனம்
- கந்தகார் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி; 16 பேர் படுகாயம்
- பழைய நோட்டுகளை அழிக்கும் பணி திடீர் நிறுத்தம்
- காங்., நிர்வாகிகளுடன் ராகுல் தேர்தல் வியூகம்
- ஜல்லிக்கட்டில் எந்த முடிவும் எடுக்க முடியாது: மத்திய அரசு
| முலாயம் - அகிலேஷ் சந்திப்பு: கட்சி பிளவை தடுக்க பேச்சு Posted: 10 Jan 2017 07:30 AM PST லக்னோ:உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், தன் தந்தையும், சமாஜ்வாதி நிறுவனருமான, முலாயம் சிங் யாதவை, நேற்று நேரில் சந்தித்து பேசினார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது, கட்சி உடையாமல் காக்க, சமாதானம் பேசப்பட்டதாக தெரிகிறது. உ.பி.,யில், சமாஜ்வாதியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அடுத்த மாதம், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சமாஜ்வாதி வேட்பாளர்களை தேர்வு செய்வதில், அகிலேஷுக்கும், முலாயம் சிங் யாதவிற்கும் மோதல் ஏற்பட்டது. தன் ஆதரவாளர்கள் புறக்கணிக்கப்பட்டதால், வெகுண்டெழுந்த அகிலேஷ், கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை ... |
| வங்கிகளில் 'டிபாசிட்' ஆன கறுப்புப் பணம் ரூ.4 லட்சம் கோடி!:வருமான வரித்துறை ஆய்வில் 'பகீர்' தகவல் Posted: 10 Jan 2017 07:46 AM PST புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் புக்கு பின், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட பணம் குறித்த ஆய்வை, வருமான வரித்துறை துவக்கியுள்ளது. இதில், வருமான வரிதுறைக்கு கணக்கு காட்டாத கறுப்புப் பணம், 4 லட்சம் கோடி ரூபாய், வங்கிகளில் டிபாசிட் செய்யப் பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை, பிரதமர் மோடி, கடந்த ஆண்டு நவ., 8ல் வெளியிட்டார். செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்ய, கடந்தாண்டு டிச., 30 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ... |
| செல்லாத நோட்டு திட்டத்தை முடிவு செய்தது யார்? பார்லி., குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் Posted: 10 Jan 2017 08:02 AM PST புதுடில்லி:மத்திய அரசு அளித்த ஆலோசனை யின்படியே, விவாதிக்கப்பட்டு, செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டது என, பார்லி மென்ட் குழுவிடம், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரத்தில், ரிசர்வ் வங்கியின் முடிவையே, மத்திய அரசு செயல்படுத்தியதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், இது குறித்து விசாரித்து வரும், காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தலைமையிலான, நிதி துறைக்கான பார்லி மென்ட் குழுவில், ரிசர்வ் வங்கி சார்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டது. 7 பக்க விளக்கம் ஏழு ... |
| வறட்சி பாதித்த மாநிலமாக தமிழகம் அறிவிப்பு: அரசு நிவாரண திட்டங்கள் வெளியீடு Posted: 10 Jan 2017 08:12 AM PST சென்னை:தமிழகத்தை, வறட்சி மாநிலமாக அறிவித்ததுடன், வறட்சி நிவாரண உதவியை யும், முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று அறிவித்தார். தமிழகத்தில், வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க, அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்ற குழுக்களை, முதல்வர் பன்னீர்செல்வம் அமைத்தார். அக்குழுவினர் நேரடி ஆய்வு நடத்தி, நேற்று முன்தினம் அரசுக்கு அறிக்கை அளித்தனர். அது குறித்த ஆலோசனை கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது; முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை, முதல்வர் அறிவித்தார். ... |
| Posted: 10 Jan 2017 08:55 AM PST முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவின் ஆதரவாளர்கள், சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்களுடன் தீபா ஆலோசனை நடத்தி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்கிறார். இதற்கிடையில், தமிழகத்தின் பல பகுதிகளில், தீபா பேனர்களை அகற்றிய போலீசாருடன், அவரது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டதற்கு, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெரும் பாலானோர், தீபாவை அரசியலுக்கு வரும்படி, அழைப்பு விடுத்து வருகின்றனர். தீபா, தன் முடிவை, எம்.ஜி.ஆர்., பிறந்த ... |
| '32 லட்சம் என்.ஜி.ஓ.,க்களின் கணக்குகளை தணிக்கை செய்யணும்!' Posted: 10 Jan 2017 09:21 AM PST 'மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியை பெறும், என்.ஜி.ஓ., எனப்படும், அரசு சாரா அமைப்புகளின் கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. என்.ஜி.ஓ.,க்கள் செயல்பாடுகள் குறித்த வழக்கை, தலைமை நீதிபதி, ஜே.எஸ்.கெஹர் தலைமையிலான, சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில், அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ள தாவது:நாடு முழுவதும், 32 லட்சத்திற்கும் மேற்பட்ட, என்.ஜி.ஓ.,க்கள், தன்னார்வ அமைப்புகள் உள்ளன. இவற்றுக்கு, கடந்த ஐந்து ஆண்டு களில், 11 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய, மாநில அரசுகள் ... |
| டிஜிட்டல் பொருளாதார நாடாக மாறும் இந்தியா! முதலீட்டாளர் மாநாட்டில் மோடி பெருமிதம் Posted: 10 Jan 2017 09:25 AM PST காந்திநகர்:''உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் பொருளாதார நாடாக,இந்தியா மாறி வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 'வைப்ரன்ட் குஜராத்' எனப்படும், நான்கு நாட்கள் முதலீட்டாளர்கள் மாநாடு, குஜராத்தின் காந்தி நகரில் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, கடந்த, 2003ல் துவக்கப்பட்ட,இந்த மாநாடு, இரண் டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.அதன், 8வது முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. பிரபல நோபல் பரிசு பெற்றவர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் துறை யினர், பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் ... |
| தி.மு.க.,வில் ஸ்டாலின் அதிரடி 13 மா.செ.,க்கள் நீக்கம் Posted: 10 Jan 2017 09:42 AM PST கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற் றிக்கு பணியாற்றாமல், உள்ளடி வேலையில் ஈடுபட்ட, 13 மாவட்ட செயலர்களை மாற்ற, செயல் தலைவர் ஸ்டாலின் முடிவு செய்து உள்ளார். கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஒரு தொகுதியில் கூட, தி.மு.க., வெற்றி பெற வில்லை. குறுநில மன்னர் கள் போல செயல் படும், மாவட்ட செயலர்களின் நட வடிக்கை களே, படுதோல்விக்கு காரணமாக கருதப்பட்டது. அப்போது, கட்சியில் மறுசீரமைப்பு ஆய்வு நடத் தப்பட்டது; கட்சி அமைப்பு ரீதியாக இருந்த, 32 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, 65 மாவட்டங் களாக அறிவிக்கப்பட்டன. கடந்த சட்ட சபை ... |
| ஜெ., ஜோதிடருக்கு 'கல்தா' ; சசிக்கு மூன்று பேர் நியமனம் Posted: 10 Jan 2017 09:45 AM PST மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர் நீக்கப்பட்டார். அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்காக, மூன்று ஜோதிடர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது: ஜெ., உயிரோடு இருந்த போது, அவரது முக்கிய நிகழ்ச்சிகள், கட்சி முடிவுகள், வேட்பாளர் பட்டியல் வெளியிடும் தேதி, முதல்வர் பதவி ஏற்பு உள்ளிட்ட அத்தனைக்கும், ஜோதிடர் யோசனைப் படியே செயல்படுவார். அவர் மறைந்த பின்னும், அந்த ஜோதிடர், போயஸ் கார்டன்வந்து சென்றார். ஆனால், அவரை சசிகலா நீக்கி விட்டார். தற்போது, சசிகலாவுக்காக, மூன்று ஜோதிடர் குழுவை, ... |
| கந்தகார் குண்டுவெடிப்பு: 11 பேர் பலி; 16 பேர் படுகாயம் Posted: 10 Jan 2017 11:39 AM PST
கந்தகார் : ஆப்கனில் உள்ள கந்தகாரில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலியாயினர்; 16 பேர் படுகாயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பில் யு.ஏ.இ., தூதர் காயமடைந்துள்ளார். குண்டுவெடிப்பு: ஆப்கானிஸ்தான் நாட்டில் கந்தகார் நகரில் கவர்னர் வீட்டருகில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சின் தூதர் ஜூமா முகமது அப்துல்லா அல் கபி உள்ளிட்டவர்கள் கவர்னர் வீட்டிற்கு வந்தபோது குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் 11 பேர் பலியானதாகவும், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பில் யு.ஏ.இ., ... |
| பழைய நோட்டுகளை அழிக்கும் பணி திடீர் நிறுத்தம் Posted: 10 Jan 2017 01:01 PM PST
புதுடில்லி: வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, செல்லாத, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை அழிக்கும் பணியை, ரிசர்வ் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. அவகாசம்: கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, டிச., 30 வரை அவகாசம் தரப்பட்டது. அந்த நோட்டுகள், அவ்வப்போது அழிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், செல்லாத நோட்டுகளை அழிக்கும் பணியை, ரிசர்வ் வங்கி, திடீரென நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து, ரிசர்வ் வங்கி ... |
| காங்., நிர்வாகிகளுடன் ராகுல் தேர்தல் வியூகம் Posted: 10 Jan 2017 01:44 PM PST புதுடில்லி: வெளிநாட்டு பயணத்தை முடித்து நாடு திரும்பிய, காங்., துணைத் தலைவர் ராகுல், பஞ்சாப் சட்டசபை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வெளிநாட்டு பயணம்: பஞ்சாப்பில், அகாலிதளத்தை சேர்ந்த, முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, அகாலிதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அடுத்த மாதம், மாநில சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டு பயணத்தை முடித்து, நாடு திரும்பிய, காங்., துணைத் தலைவர் ராகுல், நேற்று, பஞ்சாப் மாநில காங்., தலைவர்களை சந்தித்தார். அப்போது, மாநில ... |
| ஜல்லிக்கட்டில் எந்த முடிவும் எடுக்க முடியாது: மத்திய அரசு Posted: 10 Jan 2017 02:43 PM PST புதுடில்லி : 'ஜல்லிக்கட்டு விவகாரம், சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது; இது தொடர்பான வழக்கு, முடிவுக்கு வராமல், இதில், மத்திய அரசால், மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது' என, மத்திய அரசு கூறி உள்ளது. கலாசாரத்துடன் தொடர்பு: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, அனில் மாதவ் தவே கூறியதாவது: ஜல்லிக்கட்டு என்பது, நாட்டின் கலாசாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய விளையாட்டு. இந்த விவகாரத்தில், மக்களின் உணர்வுகளை முழுவதுமாக மதிக்க வேண்டும்.ஆனால், ஜல்லிக்கட்டு தொடர்பான அனைத்து ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜனவரி 11,2017. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |