Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


போலி வங்கி கணக்குகளில் ரூ.100 கோடி 'டிபாசிட்'

Posted: 09 Dec 2016 08:38 AM PST

புதுடில்லி : டில்லி, ஆக்சிஸ் வங்கி கிளையில், 44 போலி கணக்குகளில், 100 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது, கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் செல்லாது என, நவ., 8ல் அறிவித்தது. செல்லாத நோட்டுகளை, வங்கி கணக்கில் டிபாசிட் செய்ய, டிச., 30 வரை, அவகாசம் தரப்பட்டுள்ளது. இந்நிலையில், டில்லி, சாந்தினி சவுக் பகுதியில் உள்ள, ஆக்சிஸ் வங்கி கிளையில், போலி கணக்குகளில், பல கோடி ரூபாய் டிபாசிட் செய் யப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அந்த ...

எதிர்க்கட்சிகள் கடும் அமளி : இரு சபைகளும் ஒத்திவைப்பு

Posted: 09 Dec 2016 08:44 AM PST

புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை கண்டித்து, எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு சபைகளும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டன.

பார்லி., குளிர்கால கூட்டத்தொடர், நவ., 16ல் துவங்கியது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை கண்டித்து, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால், பார்லிமென் டின் இரு சபைகளும், தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், லோக்சபா நேற்று காலை கூடிய வுடன், 2001 டிசம்பரில், பார்லி., மீது, பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில், வீர மரணம் அடைந்தோருக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. பின், லோக்சபா, காங்., தலைவர், மல்லிகார் ஜுன கார்கே, செல்லாத ...

'பூகம்பம் வெடிக்கும்!' : ராகுல் மிரட்டல்

Posted: 09 Dec 2016 08:46 AM PST

புதுடில்லி: ''செல்லாத ரூபாய் நோட்டு பற்றி, பார்லிமென்டில் என்னை பேச அனுமதித்தால், பூகம்பம் வெடிக்கும்,'' என, காங்., துணைத் தலைவர், ராகுல் கூறினார்.

மத்திய அரசு, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, நவ., 8ல் அறிவித்தது. இதற்கு, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் முடங்கியுள்ளது. தினமும், எதிர்க்கட்சியினர் அமளி செய்வதால், இரு சபைகளும், தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், பார்லி., வளாகத்தில், காங்., துணைத் தலைவர் ராகுல், நிருபர்களிடம் கூறியதாவது: ...

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Posted: 09 Dec 2016 08:47 AM PST

புதுடில்லி: காவிரியில், 15ம் தேதி வரை, வினாடிக்கு, 2,000 கன அடி தண்ணீரை, தமிழகத் திற்கு, கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என, உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், 'நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர, மாநிலங்களுக்கு உரிமை உள்ளது' என்றும் கூறியுள்ளது.

தமிழக - கர்நாடகா இடையே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, நீண்டகாலமாக நிலவும் பிரச்னைக்கு தீர்வு காண, காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.கடந்த, 2007 பிப்., 5ல், காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து, தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.இதற்கிடையே, ...

விமானப்படை முன்னாள் தளபதி தியாகி...கைது!:ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அதிரடி

Posted: 09 Dec 2016 08:48 AM PST

புதுடில்லி:ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி, 71, மற்றும் அவருக்கு உதவிய இரண்டு பேர், சி.பி.ஐ., அதிகாரிகளால் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி. ஐ.பி., க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்க, கடந்த ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது திட்டமிடப்பட்டது. இதற்காக, பிரிட்டனைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன், 3,600 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.இந்த ஒப்பந்தம் கிடைப்பதற்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம், நம் அதிகாரிகளுக் கும், அரசியல்வாதிகளுக்கும் ...

சேகர் ரெட்டி வீட்டில் தொடரும் சோதனையால் மந்திரிகள், அதிகாரிகள்... பீதி! :2வது நாளாக நடந்த 'ரெய்டில்' 7 கிலோ தங்கம், 7 கோடி பணம் சிக்கியது:ரூ.10 கோடிக்கு புதிய நோட்டுகள் மாற்றியது குறித்து பரபரப்பு தகவல்

Posted: 09 Dec 2016 09:35 AM PST

அ.தி.மு.க., பிரமுகரும் கான்ட்ராக்டருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின் வீடுகளில், இரண்டாவது நாளாக நேற்றும், வருமான வரி, 'ரெய்டு' தொடர்ந்தது.

நேற்று மட்டும், ஏழு கோடி ரூபாய் ரொக்கம், ஏழு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனையால், தமிழக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.இதற்கிடையில், வங்கி ஏ.டி.எம்.,களில், மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில், சேகர் ரெட்டி, 10 கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுகள் பெற்றது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர, பதுக்கல்காரர்களுக்கு, ...

எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' விவகாரம்:தி.மு.க., ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு

Posted: 09 Dec 2016 09:47 AM PST

சென்னை:தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 'சஸ் பெண்ட்' செய்யப்பட்ட விவகாரத்தில், சட்ட சபை செயலர், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பதிலளிக்க, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபையில், ஆகஸ்டில் அமளியில் ஈடு பட்டதாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 79 பேர், ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதை எதிர்த்தும், சஸ்பெண்ட் செய்ய அதிகாரம் அளிக்கும், சட்டப்பிரிவை நீக்க கோரியும், உயர் நீதிமன்றத்தில், ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார். அதேபோல,சட்டசபையில் இல்லாத தன்னை, சஸ் பெண்ட் செய்ததை எதிர்த்து, பி.டி.ஆர். பி.தியாக ராஜனும், மனு தாக்கல் ...

அ.தி.மு.க., பொதுச்செயலர் தேர்வு: சசி தொடர் ஆலோசனை

Posted: 09 Dec 2016 09:51 AM PST

அ.தி.மு.க.,வில், பொதுச் செயலர் தேர்வு தொடர்பாக, சென்னை, போயஸ் கார்டனில், 2வது நாளாக, நேற்றும் ஆலோசனை நடந்தது. முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளை அழைத்து, சசிகலா பேசினார்.

முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரில், ஒருவர் பொதுச் செயலராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.ஆனால், ஜெயலலிதா வகித்த அந்தப் பதவிக்கு, அவரது உயிர் தோழியான சசிகலாவை கொண்டு வர, அவரது குடும்பத்தினர் விரும்புகி ன்றனர். அதற்காக, பொதுச் செயலர் பதவியை பெற விரும்புவோர் ...

தயாநிதி மீது குற்ற பத்திரிகை

Posted: 09 Dec 2016 09:52 AM PST

சென்னை:தொலைபேசி இணைப்புகளை முறை கேடாக பயன்படுத்திய வழக்கில், தயாநிதி உள்ளிட்ட, ஏழு பேர் மீது, நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சி.பி.ஐ., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தி.மு.க.,வைச் சேர்ந்த தயாநிதி, மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த போது, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு, 364 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட் டன. அதே போல், 2006 டிச., முதல், 2007 செப்., வரை, சென்னை, போர்ட் கிளப் வீட்டுக்கு, 353 இணைப்புகள் முறை கேடாக நிறுவப்பட்டன. மேலும், ஒரு தனியார், 'டிவி' நிறுவனத்திற்கு, ஒன்பது மொபைல் ...

'டுவிட்டர்' கணக்கு முடக்கம் விஜய் மல்லையா புலம்பல்

Posted: 09 Dec 2016 12:36 PM PST

புதுடில்லி:வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, வெளிநாட்டுக்கு தப்பிய, தொழிலதிபர், விஜய் மல்லையாவின், 'டுவிட்டர், இ - மெயில்' கணக்குகள், மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளன. கர்நாடகாவில், காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநில தலைநகர், பெங்களூரைச் சேர்ந்தவன், விஜய் மல்லையா. மதுபான ஆலை மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் நடத்திய மல்லையா, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, பிரிட்டனுக்கு தப்பியோடினான். தற்போது, லண்டன் நகரில், தலைமறைவாக வாழ்ந்து வருகிறான். மல்லையா, இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக ...

பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின்பெரிய கூட்டாளி இந்தியா

Posted: 09 Dec 2016 02:58 PM PST

வாஷிங்டன்:பாதுகாப்பு துறையில் அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளி என்று இந்தியா அறிவித்து அமெரிக்க செனட்டில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.முன்னதாக, ஒபாமா அரசின் நிர்வாகம் கடந்த ஜூன் மாதமே இதற்கான முடிவுகளை எடுத்த போதும் சட்டபூர்வமாக நேற்று நெறிமுறைப்படுத்தப்பட்டது.அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் அஸ்டான் கர்டெர், இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இந்த மசோதா அந்நாட்டு செனட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள அஸ்டான் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™