Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


புதிய 50, 20 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி... வெளியிடுகிறது!:பழைய நோட்டுகளும் செல்லும் என அறிவிப்பு: சில்லரை தட்டுப்பாட்டை நீக்க அடுத்த அதிரடி

Posted: 04 Dec 2016 09:36 AM PST

புதுடில்லி:சில்லரை தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், விரைவில், புதிய, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வெளியிடப் போவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதே நேரத்தில், தற்போது புழக்கத்தில் உள்ள, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை அடுத்து, நாடு முழுவதும் சில்லரை தட்டுப்பாடு அதிகரித் துள்ளது. வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,கள் முன், மக்கள், நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்ற னர். 'அன்றாட செலவுக்கு கூட, பணம் எடுக்க முடியவில்லை' என, பலரும் புலம்புகின்றனர்.இந்த பிரச்னைக்கு ...

முதல்வர் ஜெயலலிதாவுக்கு...மாரடைப்பு!:அப்பல்லோ டாக்டர்கள் தீவிர சிகிச்சை:இன்று கடைகளை மூட அறிவுறுத்தல்

Posted: 04 Dec 2016 09:57 AM PST

சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 74 நாட்களாக, சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவரை, டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நேற்று மாலை, 6:00 மணி அளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடல்நிலை தொடர்பாக, கடுமையான வதந்திகள் பரவின. உடன், தமிழக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்தனர். போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனர், ஜார்ஜ், கூடுதல் கமிஷனர்கள் சங்கர், ...

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் யாரும்... தப்ப முடியாது!:கடும் விளைவை சந்திக்க நேரிடும் என மோடி எச்சரிக்கை

Posted: 04 Dec 2016 10:21 AM PST

அமிர்தசரஸ்:''பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், அவர் களுக்கு பக்கபலமாக, ஆதரவாக இருப்பவர்கள் கடும் விளைவை சந்திக்க நேரிடும்; நாட்டில் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு, இதுபோன்ற நடவடிக்கைகளே சரியான வழி,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பயங்கரவாத அமைப்பு களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டுள்ள, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக அமைக் கப்பட்டது, 'ஹார்ட் ஆப் ஆசியா' என்ற அமைப்பு. அதன்படி, ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் இணைந்து, அந்த நாட்டில் வளர்ச்சிப் பணிகள் ...

ரிசர்வ் வங்கி கவர்னரின் சம்பளம் எவ்வளவு?

Posted: 04 Dec 2016 10:24 AM PST

புதுடில்லி:ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் மாதச் சம்பளம், 2.09 லட்சம்; மும்பை யில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவருக்கு, உதவியாளர் யாரும் நியமிக்கப்படவில்லை என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம், செப்டம்பரில் முடிந்தது. அதைத் தொடர்ந்து, புதிய கவர்னராக உர்ஜித் படேல் பதவியேற்றார்.கவர்னரின் சம்பளம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது:கவர்னர் உர்ஜித் படேலின் மாதச் ...

ரூ.40 கோடி வாங்கினாரா அமைச்சர்? சி.பி.ஐ., விசாரணையில் 'திடுக்'

Posted: 04 Dec 2016 10:25 AM PST

பெங்களூரு: சி.பி.ஐ., விசாரணையில் சிக்கி யுள்ள கர்நாடகாவைச் சேர்ந்த, வி.ஐ.பி.,க் கள் இருவர், அம்மாநில அமைச்சர் ஒருவருக்கு, 40 கோடி ரூபாய் கொடுத்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது; இங்கு, காவிரி பாசன நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சிக்கராயப்பா, மாநில நெடுஞ்சாலை துறை தலைமை திட்ட அதிகாரி ஜெயசந்திரா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், வரித்துறை அதிகாரிகள், சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், 5.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, புதிய,
2,000 ரூபாய் நோட்டுகள் ...

கட்கரி மகள் திருமணத்திற்கு 50 விமானங்களில் வி.ஐ.பி.,க்கள்?

Posted: 04 Dec 2016 10:29 AM PST

நாக்பூர்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரியின் மகள் திருமணத்திற்கு, 50 தனி விமானங்களில், வி.வி.ஐ.பி.,க்கள் அழைத்து வரப்பட்டதாக வெளியான தகவல், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் இளைய மகள், கேத்கிக்கு, ஆதித்யா என்பவருடன், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நேற்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு, 10
ஆயிரம் பேர் வந்ததாக கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா, தொழிலதிபர் கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சிவசேனா தலைவர் உத்தவ் ...

அரசு தலைமை செயலருக்கு 7 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கடிதம்

Posted: 04 Dec 2016 10:59 AM PST

'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்காக, சென்னை, நெற்குன்றம் பகுதியில் கட்டப்படும் குடியிருப்பு திட்டத்தில், புதிதாக ஒதுக்கப்படும் வீடுகளின் விலையை குறைக்க வேண்டும்' என, ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அரசு தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை, நெற்குன்றத்தில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்காக, 1,056 வீடுகள் கொண்ட குடியிருப்பு வளாகம் கட்டப்படுகிறது. திட்டமிட்ட கால நிர்ணயத்தை தாண்டி, இதற்கான கட்டுமான பணிகள் மந்தகதியில் நடந்து வருகின்றன.வீட்டு வசதி வாரியம், 2011ல், குலுக்கல் நடத்தி, உயர் அதிகாரிகளுக்கு வீடுகள் ஒதுக்கியது. அப்போது, ...

வருமான வரி சோதனை: ஸ்டாலின் கோரிக்கை

Posted: 04 Dec 2016 11:07 AM PST

சென்னை:'அ.தி.மு.க., அமைச்சரின் உறவினர் வீட்டில் நடந்த, சோதனை விபரத்தை, வருமான வரி அதிகாரிகள் வெளியிட வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:

கர்நாடக அரசு அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, ஐந்து கோடி ரூபாய் புதிய ,நோட்டுகள் தொடர்பாக, வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், அ.தி.மு.க., அமைச்சர் ஒருவரின் உறவின ரும்கான்ட்ராக்டருமான, ஈரோடு பிரமுகரின் நிறுவனங்கள் மற்றும் வங்கி கள் மூலம், 1,150 கோடி ரூபாய்க்கு புதிய நோட்டுகள் மாற்றப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.இந்த சோதனை பற்றிய தகவல் எதுவும், ...

அரசு மருத்துவமனைகளில் செவிலியர்கள் பற்றாக்குறை

Posted: 04 Dec 2016 11:18 AM PST

மதுரை:தமிழகம் முழுவதும், அரசு மருத்துவ மனைகளில் போதுமான செவிலியர்களை நியமிக்காததால், சிகிச்சை குறைபாடு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, பொது வார்டில், எட்டு நோயாளிகளுக்கு, ஒரு செவிலியர் பணியாற்ற வேண்டும். ஆனால், மதுரை, தஞ்சை, கோவை, சென்னை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், 80 நோயாளிகளுக்கு ஒரு செவிலியர் மட்டுமே உள்ளனர்.ஐ.சி.யூ., - ஐ.ஆர்.சி.யூ., பிரசவ, அறுவை சிகிச்சை வார்டுகளில், ஒரு நோயாளிக்கு, ஒரு செவிலியர் இருக்க வேண்டுமென விதிகள் உள்ளன. ஆனால், மொத்தமே மூன்று அல்லதுநான்கு செவிலியர்கள் மட்டுமே ...

முதல்வர் ஜெ.,க்கு தொடர் சிகிச்சை

Posted: 04 Dec 2016 12:45 PM PST

சென்னை: சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செயற்கை சுவாசம்
மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இதய, சுவாசவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவ நிபுணர்கள், முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதய செயல்பாட்டிற்காக செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. நுரையீரல் மற்றும் இதயம் சீராக செயல்பட மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர், மருத்துவ ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™