Tamil News | Online Tamil News |
- செல்லாத நோட்டு: இனி எங்குமே செல்லாது
- டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஆதாருடன் இணைந்த புதிய ஆப்...'பீம்!' :டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்து வைத்தார்
- சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷ் நீக்கம்
- லண்டனில் சொத்து வாங்கி குவித்தாரா? விவேக்கிடம் 5 மணி நேரம் விசாரணை
- ஜெ., அண்ணன் மகள் தீபா புத்தாண்டில் புது முடிவு
- சசிக்காக போக்குவரத்து நிறுத்தம்; பொதுமக்கள் கடும் அவதி; கார்கள், மந்திரிகள் புடைசூழ சென்று ஜெ., சமாதியில் அஞ்சலி
- முன்னறிவிப்பின்றி நடந்த நியமனம் சசிகலா எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சி
- சசிகலா நியமனத்தில் தொடரும் சர்ச்சைகள்; தேர்தல் மூலமே பொ.செ.,வாக முடியும் என கருத்து
- மன்னார்குடி சொந்தங்கள் தங்களின் மிரட்டல் வேலைகளை ஆரம்பிச்சுட்டாங்க!:மின் வாரிய டெண்டர்களை ஆதரவாளர்களுக்கு கொடுக்க நெருக்கடி:ஒப்பந்ததாரர்களை போலீஸ் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு
- நாளை முதல் ஏ.டி.எம்.,ல் ரூ.4,500 எடுக்கலாம்!
- இந்திய ஒலிம்பிக் சங்கம் 'சஸ்பெண்ட்': விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி
- ரூபாய் நோட்டு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் முன்னேற்றம்: அருண் ஜெட்லி
- மும்பை கூட்டுறவு வங்கிகளில் அதிக ‛டிபாசிட்'; அமலாக்கத்துறை விசாரணை
| செல்லாத நோட்டு: இனி எங்குமே செல்லாது Posted: 30 Dec 2016 09:05 AM PST புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள கொடுக்கப்பட்டு இருந்த, 50 நாட்கள் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அதனால், இந்த ரூபாய் நோட்டுகளை, இனி, எங்குமே பயன்படுத்த முடியாது. கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, நவ., 8ல் பிரதமர், நரேந்திர மோடி அறிவித்தார். அதற்கு பதில், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளை, பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தவும், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யவும், 50 நாட்கள் அவகாசம் ... |
| Posted: 30 Dec 2016 09:26 AM PST புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டுகளை டிபாசிட் செய்வதற்கு கடைசி நாளான நேற்று, டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள, பயன்படுத்த எளிமையான, 'பீம்' எனப்படும் புதிய,' மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கு விக்கும் வகையில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.அடுத்த கட்டமாக, 'பீம்' என்ற பெயரில், புதிய மொபைல் ஆப், பிரதமர், நரேந்திர மோடியால் நேற்று, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ... |
| சமாஜ்வாதி கட்சியில் அகிலேஷ் நீக்கம் Posted: 30 Dec 2016 09:28 AM PST புதுடெல்லி:உத்தர பிரதேச அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் அகிலேஷ் யாதவை, சமாஜ்வாதி கட்சித் தலைவரும், அவரது தந்தையுமான முலாயம் சிங் யாதவ், கட்சியிலிருந்து நீக்கினார். உத்தர பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், சட்ட சபை தேர்தலுக்கு இன்னும், இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில் கோஷ்டி பூசல் அதிகரித்தது. முதல்வர் அகிலேஷுக்கு எதிராக அவர் சித்தப்பாவும், முலாயமின் சகோதரருமான சிவ்பால் யாதவ், போர்க்கொடி துாக்கினார். சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி ... |
| லண்டனில் சொத்து வாங்கி குவித்தாரா? விவேக்கிடம் 5 மணி நேரம் விசாரணை Posted: 30 Dec 2016 09:31 AM PST விசாரணைக்கு வராமல், ஒரு வாரமாக இழுத்தடித்த ராமமோகன ராவின் மகன் விவேக், வருமான வரித்துறை அலுவலகத்தில், நேற்று மாலை திடீரென ஆஜரானார். அவரிடம், ஐந்தரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடந்தது. தமிழக தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் வீடுகளில், டிச., 21ல், வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தினர். சேகர் ரெட்டியுடன் தொடர்பு இருப்பதை அறிந்து, விவேக்கை விசாரணைக்கு வரும்படி, சம்மன் அனுப்பினர். 'தன் கர்ப்பிணி மனைவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், ஆஜராக வில்லை' என, அவ்வப்போது, அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் ... |
| ஜெ., அண்ணன் மகள் தீபா புத்தாண்டில் புது முடிவு Posted: 30 Dec 2016 09:37 AM PST சென்னை:''அரசியலுக்கு வருவது தொடர்பான முடிவை, ஜன., 2ல் அறிவிப்பேன்,'' என, அ.தி.மு.க., தொண்டர்களிடம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா உறுதி அளித்தார். ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப் பட்டவர் சசிகலா; அவரது குடும்பத்தி னரை, ஜெயலலிதா இருந்த வரை, கட்சியில் சேர்க்க வில்லை. சசிகலாவிற்கு எந்த பதவியும் வழங்கவில்லை. ஆனால், ஜெயலலிதா மறைந் ததும், அவரால் விலக்கப்பட்ட சசிகலா குடும்பத்தி னர் அனைவரும் ஒன்றாகினர்.கட்சியை தங்கள்கட்டுப்பாட்டில் கொண்டு வர, தொடர் நடவடிக் கைகள் எடுத்தனர். இதனால், சசிகலா, அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ளார். இது, ஜெயலலிதா ... |
| Posted: 30 Dec 2016 09:43 AM PST அ.தி.மு.க., பொதுச்செயலராக தேர்வு செய்யப் பட்டுள்ள சசிகலா, நேற்று, பல கார்கள் புடைசூழ சென்று தலைவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, போக்குவரத் தும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா, நேற்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து, ஜெ., நினைவிடத்திற்கு புறப்பட்டார். ஜெயலலிதா எப்படி செல்வாரோ, அதேபோல பல கார்கள் புடைசூழ சென்றார்.ஜெயலலிதாவுக்கு அளித்தது போலவே, சசிகலாவுக்கும் அவர் வரும் வழியெங்கும் போலீசார் பாதுகாப்பு ... |
| முன்னறிவிப்பின்றி நடந்த நியமனம் சசிகலா எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சி Posted: 30 Dec 2016 09:46 AM PST அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம், சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்திற்கு, சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினர் கள் மட்டும், அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில், அவரச பொதுக்குழு கூட்டம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் கூட்டப் பொருள் குறித்து, எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. கூட்டத்திற்கு வந்த அனைவரிடமும், கையெழுத்து வாங்கப்பட்டது. அதன்பின் கூட்டத்தில், கட்சி சட்ட திட்ட விதி, 20, பிரிவு இரண்டில் கூறப்பட்டுள்ளபடி, பொதுச் செயலர் தேர்வு செய்யப்படும் ... |
| சசிகலா நியமனத்தில் தொடரும் சர்ச்சைகள்; தேர்தல் மூலமே பொ.செ.,வாக முடியும் என கருத்து Posted: 30 Dec 2016 09:49 AM PST அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா நியமிக் கப்பட்டது சரியா என்ற, கேள்வி எழுந்துள்ளது. கட்சியின் சட்ட விதிகளில், பொதுச்செயலர் நியமனம் பற்றி எந்த விதியும் இல்லை என்பதால், இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. முதல்வராக இருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க., வின் பொதுச் செயலராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு பின், நேற்று முன்தினம், அ.தி.மு.க., வின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், கட்சியின் சட்ட விதி, 20(2)ன்படி, புதிய பொதுச் செயலர் தேர்வு செய்யப்படும் வரை, சசிகலாவை பொதுச் செயலராக நியமித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இடைக்கால ஏற்பாடு மேலும், கட்சியை ... |
| Posted: 30 Dec 2016 09:54 AM PST அ.தி.மு.க., பொதுச் செயலராக, சசிகலா நியமிக்கப்பட்ட அடுத்த நாளே, மன்னார்குடிசொந்தங்கள், தங்களின் மிரட்டல் வேலைகளை ஆரம்பித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. மின் வாரிய டெண்டர்களை, ஆதரவாளர்களுக்கு கொடுக்கும்படி, அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவித்து உள் ளனர். சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று, டெண்டர் படிவம் சமர்ப்பிக்க, மற்ற ஒப்பந்ததாரர்களை போலீசார் அனுமதிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மன்னார்குடி சொந்தங்கள் தலையீட்டால், ஏற்கனவே திட்டமிட்டபடி மின் வாரிய ஊழியர்கள் நியமனத்துக்கான நேர்காணல் ... |
| நாளை முதல் ஏ.டி.எம்.,ல் ரூ.4,500 எடுக்கலாம்! Posted: 30 Dec 2016 10:38 AM PST
புதுடில்லி : நாளை முதல் (ஜனவரி 1) ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. உச்சவரம்பு: பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, நவ., 8ல் அறிவிக்கப்பட்டது; அப்போது, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு, டிச., 30 வரையிலான, 50 நாட்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. வங்கிகளில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும்; ஏ.டி.எம்.,களிலிருந்து, ஒரு நாளில், அதிகபட்சம், 2,500 ரூபாயும் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அறிவித்திருந்த, 50 நாட்கள் கெடு நேற்றுடன்(டிச.,30) ... |
| இந்திய ஒலிம்பிக் சங்கம் 'சஸ்பெண்ட்': விளையாட்டுத்துறை அமைச்சகம் அதிரடி Posted: 30 Dec 2016 12:11 PM PST
புதுடில்லி : கல்மாடி, சவுதாலாவின் நியமனத்திற்கு விளக்கம் தராத, இந்திய ஒலிம்பிக் சங்கத்தை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் 'சஸ்பெண்ட்' செய்தது. நியமனம்: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.,) கவுரவ ஆயுட்கால தலைவர் பதவிக்கு கல்மாடி, அபய்சிங் சவுதாலாவுக்கு நியமிக்கப்பட்டனர். இருவரும் ஊழல் புகாரில் சிக்கியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கல்மாடி பதவியை ஏற்க மறுத்தார். சவுதாலா மட்டும் பதவியை ஏற்பதில் உறுதியாக உள்ளார். பதில் தர கெடு: இதனால் கோபமடைந்த மத்திய விளையாட்டுத்துறை ... |
| ரூபாய் நோட்டு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் முன்னேற்றம்: அருண் ஜெட்லி Posted: 30 Dec 2016 01:55 PM PST
புதுடில்லி: மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் செல்வதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். கறுப்பு பணம் கறுப்புப் பணத்தை ஒழிக்கும் வகையில், '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, நவ., 8ல் பிரதமர், நரேந்திர மோடி அறிவித்தார். அதற்கு பதில், புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பழைய, செல்லாத ரூபாய் நோட்டுகளை, பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தவும், வங்கிகளில், 'டிபாசிட்' செய்யவும், 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் 50 ... |
| மும்பை கூட்டுறவு வங்கிகளில் அதிக ‛டிபாசிட்'; அமலாக்கத்துறை விசாரணை Posted: 30 Dec 2016 03:14 PM PST மும்பை : ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பின் மும்பையில் 13 கூட்டுறவு வங்கிகளில் மட்டும் ரூ.1,596 கோடி ‛டிபாசிட்' செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர். அதிக டிபாசிட்: செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நவ.,8ல் அறிவித்தார். பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய, தரப்பட்ட 50 நாள் கால அவகாசம் நேற்றுடன்(டிச., 30) முடிவடைந்தது. இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அதிக அளவில் தொகை டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |டிசம்பர் 31,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |