ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தப்பில்லாத ஒரு பொய்!
- எங்கிருந்தோ வந்தாள்
- பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்?
- படித்ததில் பிடித்தது :) -- அன்பளிப்பு கொடுக்க போகிறீர்களா?
- ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1
- இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!!
- ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!
- வருடக்கடைசி வெள்ளியன்று, 8 தமிழ்ப்படங்கள் ரிலீஸ்!
- முதல் பார்வை: துருவங்கள் பதினாறு - நிறைவான த்ரில்லர்!
- கறுப்புப் பண விவகாரத்தில் வங்கி அதிகாரி தற்கொலை
- வறட்சி நிவாரணம் கோரி திருச்சியில் விவசாயிகள் எலிக்கறி உண்டு போராட்டம்
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- குழந்தைகளுக்கான குறும்படம்: நாய்க் குட்டியும் சிறுவனும்!
- வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
- 'விபத்தில்லா புத்தாண்டு': வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம்
- மதுரை நெடுஞ்சாலையில் சத்தமில்லாமல் புதிய டாஸ்மாக் கடை திறப்பு: வருவாய் இலக்கை எட்ட உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் அதிகாரிகள்
- வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி
- தொழில்துறையில் சாதிக்கும் தலைமுறைதான் இந்தியாவுக்கு தேவை: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தகவல்
- உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம்
- தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்!
| Posted: 30 Dec 2016 11:18 AM PST சரவணனுக்கும், அவனது அப்பா செல்வகுமாருக்கும் வியப்பாக இருந்தது. இதுவரை, அவர்களின் சொந்த ஊரிலிருந்து எவரும் வந்ததில்லை. இப்போது வந்து இருக்கின்றனர் என்றால், நிச்சயமாக, ஏதேனும் காரணம் இருக்கக்கூடும். 'என்ன செல்வகுமார் இப்படி முழிக்கிறே... எங்கள தெரியலயா... நான் தான், நமச்சிவாயம்; இது சங்கரபாண்டி. நாம எல்லாரும், ஐஞ்சாம் வகுப்புல ஒண்ணா படிச்சோமே ஞாபகம் இருக்கா...' என்று, வந்தவர்கள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். செல்வகுமாருக்கு, அது எப்படி மறந்து போகும். எல்லாரும், ஒரே வகுப்பில் படித்த போதும், ... |
| Posted: 30 Dec 2016 11:13 AM PST எங்கிருந்தோ வந்தாள் என் அன்னைக்குச் சமமாக எங்கிருந்தோ வந்தாள் தன் அன்னையை விட்டுவிட்டு எனக்காக வந்தாள் நான் தந்தையாய் உருமாற எங்கிருந்தோ வந்தாள் தன் தந்தையை விட்டுவிட்டு எனக்காக வந்தாள் என் பெற்றோர் பணிவிடைக்கு எங்கிருந்தோ வந்தாள் தன் பெற்றோர் விடைபெற்று தங்கமகள் வந்தாள் என் சுற்றம் பேணிடவே எங்கிருந்தோ வந்தாள் தன் சுற்றம் அத்தனையும் தள்ளிவிட்டு வந்தாள் என் ரத்தம் கலந்திடவே எங்கிருந்தோ வந்தாள் தன் ரத்த உறவுகளை தவிர்த்துவிட்டு வந்தாள் நான் கூடப் ... |
| பிறர் கதையை நாம் ஏன் கேட்க வேண்டும்? Posted: 30 Dec 2016 08:46 AM PST யாருக்கு, என்ன விபத்து ஏற்பட்டாலும், அதைப் பற்றி, நான் விலாவரியாக விசாரிப்பது உண்டு. அவர்களும், 'இந்தாள், சொல்லாமல் விட மாட்டார் போலிருக்கிறது...' என்கிற மனநிலைக்கு மாறி, நான் கேட்கிற நுணுக்கமான கேள்விகளுக்கெல்லாம், மனம் சலிக்காமல், பதில் சொல்வர். அதேபோல், நோயில் சிக்கி, பாயில் படுத்தவர்களும், நீண்ட நாள் சிகிச்சையில் இருப்பவர்களும், என்னிடம் சிக்கினால், 'ஏண்டா நமக்கு நோய் வந்தது...' என்று, எண்ணும் அளவிற்கு என் கேள்விகள் இருக்கும். விபத்துகள், வியாதிகள் என்றில்லை; எதிராளி பேசும் எல்லா விஷயங்களும், ... |
| படித்ததில் பிடித்தது :) -- அன்பளிப்பு கொடுக்க போகிறீர்களா? Posted: 30 Dec 2016 08:29 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை ) -1 Posted: 30 Dec 2016 08:28 AM PST ஓலைச் சுவடிகள் தேடிய படலம் புதிய காதை )-1 சமீபத்தில் பெய்த அதிகப்படியான மழையாலும் வேறு காரணங்களாலும் , ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கிளால் பல்வேறு இடங்களில் வீடுகள் வெள்ளக்காடானது . கீழ்தளத்தில் இருந்த வீடுகளில் இருந்த வீடுகளும் , ஒட்டு வீடுகளும் ,குடிசை வீடுகளும் அத்தனையும் வெள்ளத்தால் சூழ்ந்தது . அவைகளில் இருந்த அனைத்து பொருள்களும் அடியோடு நாசமானது . இத்தகைய நிலை சென்னை போன்ற பெரு நகரில் மட்டுமல்லாது தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களிலும் நிகழ்ந்தது . அனைத்து நிலை மக்களும் அவரவர்கள் வாழ்ந்த ... |
| இந்தியாவில் மாற்றத்தை விரும்பும் ஆட்சியாளர்களின் கவனத்திற்கு மக்களின் வேண்டுகோள்!! Posted: 30 Dec 2016 08:21 AM PST கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் பழைய 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்து நாடுமுழுவதும் உள்ள அப்பாவி மக்களின் வெறுப்பையும், அதிருப்தியையும் பெற்றுக்கொண்டது பிரதமர் மோடி அவர்களின் மத்திய அரசு. விளைவுகளை ஆராயாமல் தெளிவான திட்டமிடப்படாததே இதற்கு முக்கிய காரணம் என்பதை எடுத்துச் சொல்லி இந்திய மக்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை விமர்சிக்கத் தொடங்கியவுடன், இதை விசாரித்த உச்சநீதி மன்றமும் இதை கண்டித்து "பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்" ... |
| ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Posted: 30 Dec 2016 08:04 AM PST - என்.எஸ்.ஜி பாதுகாப்புப் படையினர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை, P.P. 27 (Protected Person) என்று அழைப்பார்கள். அதாவது, என்.எஸ்.ஜி.-யால் பாதுகாக்கப்படும் 27-வது வி.வி.ஐ.பி- என்பது அதன் பொருள். N.S.G. எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களாலேயே சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்தும், அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்களைக் கருத்தில் கொண்டும் இதுபோன்றதொரு சிறப்புப் படையை உருவாக்க ... |
| வருடக்கடைசி வெள்ளியன்று, 8 தமிழ்ப்படங்கள் ரிலீஸ்! Posted: 30 Dec 2016 08:01 AM PST பொங்கல் நெருங்கிவிட்டது. அந்தச் சமயத்தில் பைரவாவும் இரு வாரங்கள் கழித்து சூர்யாவின் எஸ் 3-யும் வெளியாகவுள்ளன. இந்நிலையில், அந்தப் படங்களுடன் போட்டி போடுவதைத் தவிர்க்க இன்று ஒரே நாளில் 8 தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன. -- - துருவங்கள் 16, அச்சமின்றி, அதிரன், ஏகனாபுரம், கண்டதை சொல்கிறேன், மியாவ், மோ, தலையாட்டி பொம்மை என 8 படங்கள் இன்று வெளிவந்துள்ளன. இதில் துருவங்கள் 16 நல்ல விமரிசனங்களைப் பெற்றுள்ளது. அ தேபோல அச்சமின்றி, மோ போன்ற படங்களும் கவனம் பெற்றுள்ளன. - ----------------------------------------------- தினமணி |
| முதல் பார்வை: துருவங்கள் பதினாறு - நிறைவான த்ரில்லர்! Posted: 30 Dec 2016 07:57 AM PST - ஒரு கொலை, ஒரு விபத்து, ஒருவர் காணாமல் போவது என எல்லாமே ஒரே நாளில் 16 மணி நேரத்துக்குள் நடந்தால் அதன் கோணங்கள் என்ன என்பதே 'துருவங்கள் பதினாறு'. ஒரு கொலை நடந்த சம்பவம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கும் ரகுமானுக்கு தெரிவிக்கப்படுகிறது. குற்றவாளி யார் என்பதை தன் போலீஸ் குழுவுடன் புலனாய்வு செய்கிறார். அப்போது ஒரு விபத்து நடந்ததும், பெண் ஒருவர் காணாமல் போனதும் தெரிய வருகிறது. சந்தேகப்படுகிற, தெரிந்த எல்லோர் மீதும் விசாரணைப் படலம் தொடர்கிறது. ஆனால், அதற்கான புதிர்களுக்கான விடை ... |
| கறுப்புப் பண விவகாரத்தில் வங்கி அதிகாரி தற்கொலை Posted: 30 Dec 2016 12:42 AM PST பெங்களூரு, விவேக் நகரை சேர்ந்தவர் ரவிராஜ் (55). இவர் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். மத்திய அரசின் பண மதிப்பு நீக்க அறிவிப்புக்கு பிறகு, ரூ20 லட்சம் மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தார். இதற்காக ரவிராஜ் 20 சதவீத கமிஷன் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த இரு வாரங்களுக்கு முன் வங்கியில் சோதனை நடத்தினர். அதில் ரவிராஜ் சட்டவிரோத பணப் பரி மாற்றத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக் கப்பட்டது. ... |
| வறட்சி நிவாரணம் கோரி திருச்சியில் விவசாயிகள் எலிக்கறி உண்டு போராட்டம் Posted: 30 Dec 2016 12:32 AM PST - மழையில்லாமல் பயிர்கள் கருகியதால், விவசாயிகளுக்கு தமிழக அரசு வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட விவசாயிகள், திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) எலிக்கறி உண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாதந்தோறும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் குறைதீர்ப்புக் கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர். காரணம் என்ன? நடப்பாண்டின் வட கிழக்குப் பருவ மழை பொய்த்துப் போனதாலும், நிலத்தடி நீரின் அளவு ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 29 Dec 2016 11:32 PM PST ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| குழந்தைகளுக்கான குறும்படம்: நாய்க் குட்டியும் சிறுவனும்! Posted: 29 Dec 2016 06:50 PM PST - உங்களில் நிறைய பேர் செல்லப் பிராணியாக நாய்க் குட்டியை வளர்த்திருப்பீர்கள். அந்த நாய்க் குட்டி செய்யும் சேட்டைகளைப் பார்த்து குஷியாகியிருப்பீர்கள். அதனுடன் விளையாடவும் செய்திருப்பீர்கள். ஆனால், உங்களைப் போல இல்லாமல், ஒரு சிறுவனுக்கு அவனது அம்மா பரிசாகக் கொடுத்த நாய்க் குட்டியைப் பிடிக்காமல் போகிறது. அந்த நாய்க் குட்டி சிறுவனைத் தன் நண்பனாக்கச் செய்யும் சேட்டையையும் நீதியையும் அனிமேஷன் குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். அந்தக் குறும்படத்தின் பெயர் 'தி பிரெசென்ட்'. எப்போதும் ... |
| வங்கிகள் மூலம் ஊதியம்: அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் Posted: 29 Dec 2016 05:05 PM PST ஊதியத்தை கட்டாயமாக வங்கி அமைப்பு முறை மூலமாக வழங்க வகை செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். அதன்படி, தொழில் - வணிக நிறுவனங்கள் காசோலை மூலமாகவோ அல்லது நேரடியாக தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிலோ ரூ.18,000 வரையிலான மாத ஊதியத்தை, பணியாளர்களின் அனுமதியின்றி வழங்கிட இந்த அவசரச் சட்டம் வழிவகுக்கிறது. ஊதிய வழங்கல் சட்டம், 1936-ல் திருத்தம் மேற்கொள்ளும் வகையில், மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தின்படி, தொழில், வணிக நிறுவனங்கள் ... |
| 'விபத்தில்லா புத்தாண்டு': வாழ்த்து அட்டைகளில் வரும் எச்சரிக்கை; கோவை போலீஸாரின் நூதன திட்டம் Posted: 29 Dec 2016 05:02 PM PST - 2017 புது வருடம் பிறக்க இன்னும் 2 தினங்கள் மட்டுமே உள்ளன. புத்தாண்டை வரவேற்க பலரும் பல விதங்களில் தயாராகி வருகின்றனர். கொண்டாட்டம் என்ற பெயரில், மது அருந்திவிட்டு இரவில் விதிமீறி வாகனங்களை ஓட்டுவதால், ஆண்டின் தொடக்க நாளிலேயே விபத்துகளும், உயிர்ப் பலிகளும் ஏற்படுவது கோவையில் வழக்கமாக உள்ளது. குறிப்பாக, நகரின் முக்கியச் சாலைகளில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் வாகனங்களில் சாகசம் செய்வது, அதிவேகமாக செல்வது என அத்துமீறல்களிலும் ஈடுபட்டு விபத்தில் சிக்குகிறார்கள். 2015-ம் ஆண்டு புத்தாண்டின்போது ... |
| Posted: 29 Dec 2016 04:58 PM PST - தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் சத்தமில்லாமல் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் திறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் 6, 726 டாஸ்மாக் கடைகள் இருந்தன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த சட்டப்பேரவை தேர்தலில், டாஸ்மாக் கடைகள் படிபடியாக அகற்றப்படும் என்றார். வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்ததும் அவர் கூறியபடி முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், குடியிருப்புகள் அருகே இருந்த 500 கடைகளை மூடினார். உயர் நீதிமன்ற நெருக்கடியால் ... |
| வரலாற்றை அறிந்துகொள்ள வழிகாட்டும் அருங்காட்சியகம்: கோவை மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சி Posted: 29 Dec 2016 04:57 PM PST - தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சார்பில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையில் கடந்த 1990-ம் ஆண்டு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. முதலில் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்ட அருங்காட்சியகம் பல்வேறு இடமாறுதல்களுக்குப் பின்னர் 2009-ல் கோவை நகரின் மையப் பகுதியில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா எதிரேயுள்ள கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இங்கு பல்வேறு பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கிடைத்த ... |
| Posted: 29 Dec 2016 04:56 PM PST - தொழில்துறையில் சாதிக்கும் தலைமுறைதான் இந்தியாவுக்கு தேவை. அதற்கான தொடக்கமாகவே பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார். கோவையில் கொடிசியா, இந்திய தொழில்வர்த்தக சபை ஆகியவை இணைந்து 'மின்னணு பணப் பரிவர்த்தனை' குறித்த கருத்தரங்கை நடத்தின. சிறப்பு விருந்தினராக மத்திய தொழில் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பங்கேற்றார். அவர் பேசியதாவது: பிஹாருடன் ஒப்பிடும்போது கோவையில் உண்மையான தொழில் வளர்ச்சியை பார்க்க முடிகிறது. ... |
| உதகையில் அருங்காட்சியகமாக மாறும் ஆங்கிலேயர்கால காவல் நிலையம் Posted: 29 Dec 2016 04:55 PM PST - உதகை நகர மத்திய காவல் நிலையமாக (பி1) செயல்பட்டு வந்த பழமையான கட்டிடம், பாரம்பரிய காவல்துறை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, விரைவில் திறக்கப்பட உள்ளது. உதகையில் அரசுக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட பல்வேறு கட்டிடங்கள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவை. இக்கட்டிடங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாரம்பரிய கட்டிடம் நீலகிரி மாவட்டம் உதகை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது நகர (பி1) காவல் நிலையம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. கடந்த 1921-ம் ஆண்டு, தென்னிந்தியாவில் ... |
| தமிழ் சினிமா 2016: நம்பிக்கை தகர்த்த ஐவர்! Posted: 29 Dec 2016 04:48 PM PST - 2016-ம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் வெளியாகின. இதில் கமல், அஜித் நடித்த படங்களைத் தவிர எல்லா முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகின. மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ், மிஷ்கின், செல்வராகவன் படங்கள் வெளியாகவில்லை. வெளியான படங்களில் அதிகம் எதிர்பார்க்கப் பட்ட நடிகர்கள், இயக்குநர்களில் நம்பிக்கையை தகர்த்தவர்கள் குறித்து பார்க்கலாம். பாலா 'சேது' படத்தின் மூலம் தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தவர். ஆனால், 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் விரும்பிப் பார்த்தவர்களைக் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |