Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மாற்றம்?:மத்திய நிதியமைச்சராக பியுஷ் கோயல் நியமிக்கப்பட வாய்ப்பு:பண பிரச்னையை திறம்பட கையாள்வதை கவனிக்கிறார் மோடி

Posted: 03 Dec 2016 05:22 AM PST

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், நாட்டில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டை சீரமைப்பதில், மத்திய நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி தவிர, மற்றொரு அமைச்சருக்கும், பெரிய பணியை கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. அவர், மத்திய மின் துறை அமைச்சர் பியுஷ் கோயல். அவருடைய சுறுசுறுப்பை பார்த்து, அவரை நிதியமைச்சராக நியமிக்கலாமா என, பிரதமர் மோடி சிந்தித்து வருவதாக, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

நவ., 8ல், '500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற மோடியின் அதிரடிக்கு பின், இதனால் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க, தினமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறது, மத்திய அரசு. ...

கருணாநிதிக்கு கட்டாய ஓய்வு:ஸ்டாலினுக்கு முத்தரப்பு எதிர்ப்பு

Posted: 03 Dec 2016 05:27 AM PST

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நலம், மன நலத்தை கருத்தில் கொண்டு, கட்சி பணி களில் இருந்து, அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, புதிய தலைவராக, ஸ்டாலினை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

ஆனால், அன்பழகன், ராஜாத்தி, அழகிரி என, முத்தரப்பில் இருந்தும் முட்டுக்கட்டை போடப் படுவதால், பொதுக்குழு கூடுவதில் குழப்பம் நீடிப்பதாக தெரிகிறது.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கருணாநிதி, கடந்த ஒரு மாதமாக, வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அதில் குணமடையாததால், ...

ரொக்க பணமில்லா பரிவர்த்தனையில் ரயில்வே...வேகம்!: டிக்கெட்களுக்கு மின்னணு முறையில் வசூல்

Posted: 03 Dec 2016 05:40 AM PST

புதுடில்லி:பிரதமர் மோடியின், 'ரொக்க பணமில்லா பரிவர்த்தனை' என்ற இலக்கை அதிரடியாக செயல்படுத்த, ரயில்வே துறை தயாராகி வருகிறது;

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில், 'கிரெடிட்' மற்றும் 'டெபிட்' கார்டுகளை பயன் படுத்த வசதியாக, 15 ஆயிரம் 'ஸ்வைபிங்' இயந்திரங்களை வாங்க, ரயில்வே துறை, 'ஆர்டர்' கொடுத்துள்ளது.ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின், சில்லரை பணமில்லாமல், மக்கள் தவித்து வருகின்றனர்; வங்கிகளிலும், ஏ.டிஎம்.,களிலும், நீண்ட வரிசையில் காத்து இருக்கின்றனர். இந்நிலையில், 'ரொக்க பணமில்லா பரிவர்த் தனைக்கு மக்கள் மாற வேண்டும்; அனைவரும் இதற்கு ...

தலைநகர் அரசியலில் துளிர் விடும் துரோகம் : அ.தி.மு.க., - எம்.பி.,க்களில் அடுத்தது யார்?

Posted: 03 Dec 2016 07:00 AM PST

அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர், கட்சித் தலைமையின் விருப்பத்துக்கு எதிராக, தி.மு.க., வினருடன் நெருக்கம் காட்டிய தகவல் வெளியாகி, அடுத்தடுத்து பல தலைகளை வீழ்த்தி வருகிறது. அடுத்து யாருடைய தலை உருளும் என்று கட்சி வட்டாரத்தில், பரபரப்பான பேச்சு நிலவுகிறது.

தொடர்கதை : அ.தி.மு.க.,வில் மட்டுமே, சாதாரண தொண்டனுக்கும் பெரிய பொறுப்பு கள், எதிர்பாராதவிதமாக வழங்கப்படுகின் றன. இந்த நம்பிக்கையுடனே, வெவ்வேறு கட்சி களில் இருந்து ஏராளமானோர், அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்.
எத்தனை பெரிய பொறுப்பில் இருந்தாலும், சிறு துரோகம் செய்தால், கட்சித் தலைமை காலி செய்து ...

சட்டத்தில் திருத்தம் செய்ய தேர்தல் கமிஷன் விருப்பம்

Posted: 03 Dec 2016 08:26 AM PST

புதுடில்லி: 'ஓட்டுக்கு பணம் கொடுப்பது உள் ளிட்ட, தேர்தல் முறைகேடுகளுக்கு தீர்வு காணும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்த புகாரில், பலர் சிக்கினர். இந்த முறைகேடு தொடர் பாக, வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேர் தல் கமிஷனுக்கு உரிய அதிகாரம் இல்லை; தேர்தல் கமிஷனிற்கு கூடுதல் அதிகாரங் கள் வழங்கும் வகையில், சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்ற, கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் தலைமை ...

'ஜன்தன்' திட்ட கணக்கில் ரூ.1.64 கோடி கறுப்பு பணம்

Posted: 03 Dec 2016 08:41 AM PST

புதுடில்லி: நாடு முழுவதும், 'ஜன்தன்' கணக்கு களில், 1.64 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை அடுத்து, நாடு முழுவதும், 'ஜன்தன்'திட்ட வங்கிக் கணக்கு களில், 'டிபாசிட்'கள் குவியத் துவங்கி உள்ளன.

அதிரடி சோதனை :சந்தேகத்திற்கிடமான இந்த, 'டிபாசிட்'களை கண்
காணித்து வருவதாக,மத்திய அரசும், வருமான வரித்துறையும் கூறியிருந்தன. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா, பீஹார் மாநிலத்தில் உள்ள மிட்னாப்பூர், ஆரா, உ.பி. ,யில், வாரணாசி, கேரளாவில் கொச்சி ஆகிய நகரங்களில், சந்தேகத்திற்கிடமான பல, ஜன்தன் ...

18 நாட்களில் 10 கோடி ரூபாய் கள்ள நோட்டு...சிக்கியது!:வங்கிகளில் மாற்ற முயன்ற தகவல் அம்பலம்

Posted: 03 Dec 2016 08:48 AM PST

புதுடில்லி:செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானதை அடுத்து, 18 நாட்களில், 9.66 கோடி ரூபாய் கள்ள நோட்டுகளை, நாடு முழுவதும் உள்ள வங்கிகளில், பலர், மாற்ற முயன்ற, 'பகீர்' தகவல் அம்பலமாகி உள்ளது.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, நவ., 8ல், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அவற்றை வங்கிகளில் மாற்றவும், 'டிபாசிட்' செய்யவும், அவகாசம் தரப்பட்டது. வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு முடி வடைந்துள்ள நிலையில், ரிசர்வ் வங்கிகளில் மட்டுமே இனி மாற்ற முடியும். இந் நிலையில், மஹாராஷ்டிரா மாநில தலைநகர், ...

'மக்கள் வரிசையில் காத்திருப்பது இதுவே கடைசி!' பிரதமர் மோடி உருக்கம்

Posted: 03 Dec 2016 09:15 AM PST

மொரதாபாத்:''சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை வாங்க, நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. அந்த வரிசைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் கடைசி வரிசையில், மக்கள் தற்போது நிற்கின் றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உ.பி.,யில் அடுத்தாண்டு துவக்கத்தில், சட்ட சபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையொட்டி, மொராதாபாத் நகரில், நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர், நரேந்திர மோடி பேசியதாவது:ஊழல் பேர்வழிகள், பல ஆண்டுகளாக ஏழை களை கொள்ளையடித்து பணம் சேர்த்துள்ளனர். அவர்களால், ஏழைகளுக்கு எந்த வகையிலும் பயன் இல்லை. ஜன்தன் ...

வங்கி கிளைகள், ரிசர்வ் வங்கியில் புதிய ரூபாய் நோட்டுகள்... விற்பனை?:கமிஷன் வாங்கும் கறுப்பு ஆடுகளை கண்காணிக்க கோரிக்கை:செல்லாத நோட்டுகளை முறைகேடாக மாற்றிய 4 பேர் 'டிஸ்மிஸ்'

Posted: 03 Dec 2016 09:27 AM PST

வங்கிகளின் கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியில், புதிய ரூபாய் நோட்டுகள் விற்கப்படுவதாக, பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

பொது மக்களுக்காக வினியோகிக்கப்படும், புதிய ரூபாய் நோட்டுகளை, கமிஷனுக்காக கை மாற்றும் கறுப்பு ஆடுகளை கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இதற்கிடையில், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய, வங்கி மேலாளர் உள்ளிட்ட, நான்கு ஊழியர்களை, எச்.டி.எப்.சி., வங்கி, 'டிஸ்மிஸ்' செய்துள்ளது. பொது மக்களின் தேவை கருதி, நாட்டில், நான்கு இடங்களில் உள்ள அச்சகங்களில் இருந்து, புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று, ரிசர்வ் வங்கி அனுப்பி ...

2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி

Posted: 03 Dec 2016 11:06 AM PST

புதுடில்லி: 2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்திய ரயில்வேயின் அனைத்து பயணிகள் ரயில்களிலும் பயோ டாய்லெட் வசதி செய்யப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரக்கேடு
ரயில்களிலிருந்து வெளியேறும் கழிப்பறை கழிவுகளால் ரயில்வே தண்டவாளங்கள், மற்றும் ரயில் நிலையங்களில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதன்காரணமாக, ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.இதை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட் அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தி செயல்படுத்தி ...

இலங்கை பார்லிமென்ட் முன்பு ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 03 Dec 2016 01:13 PM PST

கொழும்பு: இலங்கையில் பார்லிமென்ட் முன்பு நேற்று ராஜபக்சே ஆதரவு எம்.பி.,க்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளாட்சி தேர்தல்
வருடாந்திர பட்ஜெட் குறித்து விவாதித்தும், உள்ளாட்சி தேர்தலை வலியுறுத்தியும் ராஜபக்சே கட்சி எம். பி., க்கள் 10 பேர் மற்றும் ஆதரவாளர்கள் நேற்று இலங்கை பார்லிமென்ட் வாசலை மணிக் கணக்கில் மறித்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பார்லிமெண்ட் அலுவல்கள் பாதிப்பு அடைந்தது.
கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு:
போராட்டத்தை கலைக்க போலீசார் ...

இலவச ஆன்மிக சுற்றுலா: ஆந்திர அரசு திட்டம்

Posted: 03 Dec 2016 02:53 PM PST

திருப்பதி:திருப்பதி: ஏழை எளிய மக்களுக்கு அரசு சார்பில் ஆன்மிக தலங்களுக்கு செல்வதற்கு இலவசமாக சுற்றுலா அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகிறது ஆந்திர அரசு.இந்த திட்டம் வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

200 ஏழைகள்
ஆந்திர அரசு 'திவ்ய தரிசனம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 200 ஏழை எளிய மக்கள் தேர்தெடுக்கப்பட்டு பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு இலவசமாக அரசு பஸ்களில் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். சுற்றுலா அழைத்துச் செல்லப்படும் ...

மோடியை சந்திப்பாரா பாக். பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீிஸ்

Posted: 03 Dec 2016 03:11 PM PST

அமிர்தசரஸ்: பஞ்சாபில் துவங்கி உள்ள ஆசிய உச்சிமாநாட்டில் பங்கறே்க வந்துள்ள பாக். பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகரை பிரதமர் மோடி சந்தித்து பேச வாயப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆசியாவின் இதயம் என்ற உச்சி மாநாடு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இரண்டு நாட்கள் நடக்கிறது. ஆப்கானிஸ்தானும்,இந்தியாவும் இணைந்து நடத்தும் இந்த மாநாட்டில் 15 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக மாநாட்டில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, நேற்று பஞ்சாப் வந்திருந்தார். பிரதமர் மோடியை சந்தித்து ...Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™