Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பெர்லின் டிரக் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சுட்டுக் கொலை

Posted: 23 Dec 2016 04:00 PM PST

பெர்லின் : ஜெர்மன் தலைநகர் பெர்லினில், கிறிஸ்துமஸ் சந்தையில் டிரக்கை வேகமாக மக்கள் மீது மோதச்செய்து 12 பேரை கொன்ற நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
டிரக் தாக்குதல் :
ஜெர்மன் தலைநகர் பெர்லினில், கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள் வாங்கும் பகுதியில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்திற்குள் திடீரென டிரக்கை வேகமாக மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாயினர். 48 பேர் படுகாயமடைந்தனர். இதற்கு ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்றது. இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என ஜெர்மன் அறிவித்தது. ...

கிறிஸ்துமஸை முன்னிட்டு தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை அமைச்சர்

Posted: 24 Dec 2016 04:25 AM PST

கொழும்பு:கிறிஸ்துமஸை முன்னிட்டு இலங்கை சிறையில் உள்ள 36 மீனவர்கள் விடுவிக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அமைச்சர் மகிந்த அமரவீரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீனவர்களை மட்டும் விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதாகவும், படகுகள் விடுதலை செய்யப்படாது என தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களை விடுதலை செய்ய இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசு இந்த முடிவு எடுத்துள்ளது. ...

அ.தி.மு.க., தொண்டர்களை சமாளிப்பதில் நிர்வாகிகள்...தவிப்பு!:சசிகலாவை பொதுச்செயலர் ஆக்குவதில் வலுக்கிறது எதிர்ப்பு

Posted: 24 Dec 2016 05:22 AM PST

அ.தி.மு.க., பொதுச் செயலர் பதவிக்கு, சசிகலாவை முன்னிறுத்த தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர்களை சமாளிக்க முடியாமல், நிர்வாகிகள் தவிக்கின்றனர்.

தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க., பொதுச் செயலராகவும் இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, முதல்வராக, நிதிஅமைச்சர், ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார்; கட்சியின் பொதுச் செயலர் யார் என்ற கேள்வி நீடிக்கிறது. ஜெயலலிதாவுடன் வசித்து வந்த சசிகலாவை, அப்பதவியில் அமர்த்த, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். ஜெ., மறைவுக்கு, அரசு அறிவித்த, ஏழு நாட்கள் துக்கம் முடியும் முன், அ.தி.மு.க.,விற்கு தலைமையேற்க, சசிகலா ...

வாடிக்கையாளர்களின் ரகசிய தகவல் காக்க...புது சட்டம்!:ரொக்கமற்ற பரிவர்த்தனை பிரச்னைகளுக்கு தீர்வு

Posted: 24 Dec 2016 05:26 AM PST

நாடு முழுவதும் ரொக்கமற்ற பரிவர்த்த னையை ஊக்குவிக்கும் மத்திய அரசு, நிதி சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் நிதியியல் சார்ந்த ரகசிய தகவல்களை காக்கும் வகையில், சட்டம் இயற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நாட்டில், கறுப்புப் பணம் பதுக்கல் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர, மத்தியில் ஆளும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு, அதிரடி நடவடிக் கைகளை மேற்கொண்டு உள்ளது.
வங்கிகளில் மாற்றலாம்
அதன் ஒரு பகுதியாக, நவ., 8ல் தொலைக்காட்சி மூலம் நாட்டு ...

தே.மு.தி.க.,வில் 50 லட்சம் பேரா? கண்டறிய விஜயகாந்த் முடிவு

Posted: 24 Dec 2016 06:37 AM PST

தே.மு.தி.க.,வில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையை கண்டறிய, அக்கட்சி தலைவர் விஜயகாந்த், உட்கட்சி தேர்தலை அறிவித்துள்ளார்.

கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தனித்து போட்டியிட்டு, 8.38 சதவீத ஓட்டுகளை பெற்றது. பின், 2011 தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட, தே.மு. தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களை பெற்றதால், எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது.
படுதோல்வி
அப்போது, தே.மு.தி.க., ஓட்டு சதவீதம், 7.88 ஆக குறைந்தது.பின், 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., வுடன் கூட்டு சேர்ந்த, தே.மு.தி.க., படு தோல்வி அடைந்தது; ஓட்டு சதவீதம், 5.13 ஆக சரிவடைந் தது. கடந்த சட்டசபை ...

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர்...பதிலடி!:பொருளாதார சீர்திருத்தம் தொடரும் என அறிவிப்பு

Posted: 24 Dec 2016 07:29 AM PST

மும்பை:''கறுப்புப் பண பதுக்கல் மற்றும் ஊழலுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும்; நீண்ட காலத்திற்கு பயன் தரும் பொருளாதார சீர்திருத்தங்களை, பா.ஜ., அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சிகளுக்கு பதிலடி தந்துள்ளார்.

'பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது' என, கடந்த மாதம், பிரதமர்மோடி அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு, எதிர்க்கட்சி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 'பிரதமரின் நடவடிக்கையால், இந்தியா, மிகப் பெரிய பொருளாதார பாதிப்பை சந்திக்கும்' என, விமர்சித்து வருகின்றன. எதிர்க்கட்சிகளின் புகாருக்கு, மோடி, தக்க ...

பொதுச்செயலர் ஓ.பி.எஸ்., அ.தி.மு.க.,வில் புது 'ரூட்'

Posted: 24 Dec 2016 08:59 AM PST

அ.தி.மு.க., பொதுச்செயலராக, சசிகலா முயற் சித்து வரும் நிலையில், அவரது எதிர்ப்பாளர் கள், கட்சியில் புது, 'ரூட்' போடுகின்றனர். முதல் வர் பன்னீர் செல்வத்தையே, பொதுச் செயல ராக்க வேண்டும் என, அவர்கள் ஆதரவு கொடி துாக்கி உள்ளனர்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவி காலியானது. அப்பதவியில், சசிகலாவை அமர ,வைக்க, அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள் ளனர். அதற்கு, அமைச்சர்கள் உள்ளிட்ட, மேல்மட்ட நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.ஆனால், கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் மத்தியில், கடும் எதிர்ப்பு கிளம்பி ...

ராமமோகன ராவுக்கு நெஞ்சு வலி மருத்துவமனையில் திடீர் அனுமதி

Posted: 24 Dec 2016 09:08 AM PST

தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவை, விசாரணைக்கு வரும்படி, வருமான வரித்துறை அழைத்திருந்த நிலையில், நெஞ்சு வலி காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மணல் கான்ட்ராக்டர், சேகர் ரெட்டி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில், வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனை யில், நாட்டிலேயே மிக அதிகமாக, பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், சிக்கிய ஆவணங்கள் மூலம், ராம மோகன ராவ், அவரது மகன் விவேக் ஆகியோருக்கும், சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.அதை தொடர்ந்து, 21ம் தேதி காலையில் இருந்து, ராவ், விவேக், வழக்கறிஞர் அமல ...

சசிகலாவுக்கு பாதுகாப்பு: ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

Posted: 24 Dec 2016 09:22 AM PST

சென்னை:'சென்னை, போயஸ் தோட்டத்தில், போலீசார் மற்றும் உயரதிகாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதை, தடுத்து நிறுத்த வேண் டும்' என, தி.மு.க, பொருளாளர், ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:
மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதா வின் போயஸ் தோட்ட இல்லத்தில், 240 சி.ஐ.டி., பிரிவு, 60 சென்னை மாநகர போலீசார், அதிகாரி கள் இன்றளவில் பணியில் உள்ளனர்.இதற்காக, அவர்களுக்கு பல சலுகைகள் அளிக்கப் படுகின்றன. அவர்கள், முதல்வர் பன்னீர்செல்வம் இல்லம், போயஸ் தோட்டம் என, இரட்டை பணி பார்ப்ப தாக, புகார்கள் வருகின்றன.தனிப்பட்ட நபர் களுக்கு, ...

ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்

Posted: 24 Dec 2016 09:31 AM PST

புதுடில்லி:'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது; வர்த்தக நடவடிக்கையும் முடங்கி வருகிறது. எனவே மக்கள், ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, மத்திய ...

விரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்... மாற்றம்!:ஊழல் நபர்களை நீக்கி நேர்மையானவர்களை நியமிக்க திட்டம்:விடுமுறை நாளிலும் முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை

Posted: 24 Dec 2016 09:40 AM PST

தமிழக அரசு நிர்வாகத்தை,முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் மாற் றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, விடுமுறை நாளான நேற்று, முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோர், கோட்டை யில் அவசர ஆலோசனை நடத்தினர். விடு முறை நாளான, நேற்று காலை, 10:00 மணிக்கு, . புதிய தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன், தலைமை செயலகம் வந்தார்உள்துறை செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து ...

கிறிஸ்துமஸ் கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Posted: 24 Dec 2016 10:59 AM PST

சென்னை: இயேசுபிறந்த நாளான இன்று(25-12-16) கிறிஸ்துமஸ்நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் விழா
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி அனைத்த ஆலயங்களும் வண்ணவிளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு முதல் ஆலயங்களில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டனர். தமிழகத்தில் சாந்தோம், கோவை, மதுரை வேளாங்கண்ணி தூத்துக்குடி பனிமயமாதா உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று ...

மின்னணு பரிவர்த்தனைக்கு பரிசுத் திட்டம்: இன்று முதல் அமலாகிறது

Posted: 24 Dec 2016 12:38 PM PST

புதுடில்லி: ரொக்க பணப் பரிவர்த்தனைக்கு மாற்றாக மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட பரிசுத் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (டிச.25) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக நிதி ஆயோக் எனப்படும் மத்திய கொள்கைக் குழு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
15 ஆயிரம் அதிஷ்டசாலிகள்
மின்னணு பணப் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களில் 15 ஆயிரம் அதிஷ்டசாலிகளை தினமும் தேர்வு செய்து அவர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. மத்திய நிதி அமைச்சர் ...

போராட்டத்தை பலவீனப்படுத்த ராகுல் முயற்சி: பா.ஜ.க.,

Posted: 24 Dec 2016 02:49 PM PST

மும்பை:கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்தை பலவீனப்படுத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் முயற்சிக்கிறார் என பா.ஜ.க .,விமர்சித்துள்ளது.
இது குறித்து மும்பையில் பா.ஜ.க .,மூத்த தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஷா நவாஸ் ஹுசேன் பத்திரிக்கையாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஊழல் இல்லாத நாடு
கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டத்தில் நமது நாடு தற்போது முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிகளே காரணமாகும். நாட்டை காங்கிரசின் ஊழலில் பிடியிலிருந்து அவர் ஏற்கெனவே ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™