Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரிசர்வ் வங்கிக்கு அவகாசம் தரப்பட்டதா? : 'மாஜி' பிரதமர் மன்மோகன் சிங் கேள்வி

Posted: 23 Dec 2016 08:56 AM PST

புதுடில்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் புக்கு முன், அது குறித்து விவாதிக்க, ரிசர்வ் வங்கிக்கு போதிய அவகாசம் தரப்பட்டதா என, முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங் கேள்வி எழுப்பிஉள்ளார்.

செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, பார்லி மென்ட் நிதி நிலைக்குழு ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில், நிலைக்குழு வுக்கு ஆலோசனை வழங்க, நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. பலர், இந்தக் குழுவில் ஆஜராகி தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த,
பார்லிமென்ட் நிதி நிலைக்குழு கூட்டத்தில், காங்., முன்னாள் பிரதமர், மன்மோகன் ...

இன்ஜி., கல்லூரிகளுக்கு பொது நுழைவுத்தேர்வு வருகிறது!:2018 முதல் அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்

Posted: 23 Dec 2016 08:56 AM PST

புதுடில்லி:நாடு முழுவதும், மருத்துவ கல்விக்கு அமல்படுத்தியது போல், இன்ஜி., கல்லுாரிகளுக் கும், ஒரே பொது நுழைவுத் தேர்வை, 2018 முதல் நடத்துவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

தனியார் கல்லுாரிகளில், அதிக கட்டண வசூலை தடுக்க; கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க; பல்வேறு நுழைவுத் தேர்வு களை எழுத வேண்டிய நிலையில் இருந்து, மாணவர்களை மீட்க, மருத்துவக் கல்விக்கு, 'நீட்' எனப்படும், தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.அதே போன்று, புற்றீசல் போல பெருகியுள்ள, இன்ஜி., கல்லுாரிகளை ...

பணம் எடுக்க கட்டணம்: அடுத்த அதிரடி

Posted: 23 Dec 2016 09:17 AM PST

ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையிலும், வங்கிகளில் இருந்து பணம் எடுத் தால், அதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கறுப்பு பணத்தை ஒழிக்க, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட் டது; அதைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், டிஜிட்டல் பரிவர்த்த னைக்கு மாறும்படி வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வங்கிகளில் இருந்து, குறிப் பிட்ட தொகைக்கு அதிகமாக பணம் எடுக்கும் போது, அதற்கு கட்டணம் வசூலிக்கலாம் என, நிதி அமைச்சகமும், 'நிடி ...

தொடரும் அதிகார சிக்கல் ஜி.எஸ்.டி.,யில் இழுபறி

Posted: 23 Dec 2016 09:19 AM PST

புதுடில்லி:ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில், மத்திய - மாநில அரசுகள் இடையிலான, வரி வசூல் அதிகார பிரச்னைக்கு தீர்வு காணப்படாததால், கவுன்சில் கூட்டம், அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையை கொண்டு வருவதில், பிரதமர், நரேந்திரமோடி தலைமையிலான மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு தீவிரமாக உள்ளது.இதற்கான சட்டங்களை இறுதி செய்ய, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி, மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய, ஜி.எஸ்.டி.,கவுன் சில் அமைக்கப்பட்டு உள்ளது.கவுன்சிலின், ஏழாவது கூட்டம், டில்லியில் ...

கருணாநிதி 'டிஸ்சார்ஜ்' ஓய்வெடுக்க 'அட்வைஸ்'

Posted: 23 Dec 2016 09:23 AM PST

உடல் நலக் குறைவு காரணமாக, சென்னை, காவேரி மருத்துவமனையில், எட்டு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று மாலையில், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.

கடந்த, 15ல், கருணாநிதி திடீரென சுகவீனம் அடைந்தார். உடனடியாக, அவர் காவேரி மருத்து மனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை, நுரையீரல் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார்;
அவர் எளிதாக சுவாசிக்க, தொண்டை குழியில் துளையிட்டு, 'டிராக்கி யோஸ்டமி' என்ற சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அவருக்கு, சளி அகற்றும் சிகிச்சையும், நரம்பியல் தொடர்பான
சிகிச்சையும் ...

அரசு ஒப்புதலுக்கு காத்திருக்கும் கோப்புகள்: பன்னீர்செல்வம் பார்வைக்கு வருமா?

Posted: 23 Dec 2016 09:24 AM PST

நிலம் கையகப்படுத்துதல் சட்டம், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டம், அங்கீகார மில்லா மனை, விதிமீறல் கட்டட வரன்முறை உள்ளிட்ட, வீட்டுவசதி துறை தொடர்பான, 10க் கும் மேற்பட்ட கோப்புகள், முதல்வர், தலைமை செயலர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

அரசு திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்து வதை முறைப்படுத்த, மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. தமிழகத்தில் இதை அமல்படுத்த, அறிவிக்கை வெளியிட வேண்டும். இந்த அறிவிக்கை அமலுக்கு வராததால், பல் வேறு துறைகளின் புதிய திட்டங்களுக்கு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதே ...

மணல் மாபியாக்களிடம் விலை போன அதிகாரிகள், அரசியல்வாதிகள்... யார் யார்?: 'உப்பு' தின்றவர்களை தண்ணி குடிக்க வைக்க தயாராகிறது வரித்துறை: ராமமோகன ராவ் வீட்டில் சிக்கியது முக்கிய புள்ளிகள் பட்டியல்

Posted: 23 Dec 2016 09:31 AM PST

தலைமை செயலராக இருந்த, ராமமோகன ராவ் வீட்டில் நடத்திய சோதனையில், மணல் மாபியாக்களிடம் விலை போன உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த பட்டியல் கிடைத்துள்ளது.

லஞ்சம் என்ற, 'உப்பு' தின்றவர்களை தண்ணி குடிக்க வைக்கும் வகையில், இந்த பட்டியலை கையில் எடுத்து, வருமான வரித்துறையும், மத்திய உளவுத்துறையும் ரகசிய விசாரணையை துவக்கி உள்ளன.ஆற்று படுகைகளில் இருந்து, கட்டுமான பணி களுக்கு மணல் எடுக்க, தேசிய பசுமை தீர்ப்பா யம், கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள் ளது. இதனால், கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநி லங்களின் ஆற்று படுகைகளில், புதிய மணல் ...

மத்திய கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் ரூ.51 கோடி டிபாசிட்

Posted: 23 Dec 2016 09:37 AM PST

கடலுார்:கடலுார் மத்திய கூட்டுறவு வங்கியில், அமலாக்க பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ஐந்து நாட்களில், 51 கோடி ரூபாய், 'டிபாசிட்' செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின.'ரூபாய் நோட்டுகள் செல்லாது' என்ற அறிவிப்புக்கு பின், தமிழகத்தில் உள்ள பல கூட்டுறவு வங்கிகளில், அதிகளவில் பணம், 'டிபாசிட்' செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த அமலாக்க பிரிவு துணை இயக்குனர் ராஜசேகர் தலைமை யிலான குழுவினர், நேற்று காலை, 8:30 மணிக்கு, கடலுார் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.நவ., 10ல் இருந்து, புதிதாக துவக்கப்பட்ட ...

மேல்மட்ட தலைவர்கள் தப்ப கூடாது: ஸ்டாலின்

Posted: 23 Dec 2016 09:42 AM PST

சென்னை:'ராமமோகன ராவ் விவகாரத்தில், மேல்மட்டத் தலைவர்கள், எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது' என, தி.மு.க., பொருளாளர், ஸ்டாலின் கூறிஉள்ளார்.அவரது அறிக்கை:

தலைமை செயலகம் என்பது கவர்னர், முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் என, அரசியல் சட்ட அதிகாரம் படைத்த, அனைவரும் பணியாற்றும் இடம். அங்கே சோதனை நடத்தப் பட்டிருப்பது, மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் உகந்தது அல்ல.
சீர்குலைவு
இந்த சோதனையின்போது, துணை ராணுவத்தினர் பாதுகாப்பு அளித்ததன் மூலம், தமிழக போலீஸ் துறையின் மதிப்பு, மரியாதை சீர்குலைந்து விட்டது. ...

திருநாவுக்கரசர் மீது குவியும் புகார்கள்; கச்சை கட்டும் இளங்கோவன்

Posted: 23 Dec 2016 11:54 AM PST

சென்னை: தமிழக காங்கிரசின் குடுமிப்பிடி சண்டை உச்சத்தில் இருக்கிறது. இந்நாள் தலைவர் திருநாவுக்கரசரும் முன்னாள் தலைவர் இளங்கோவனும் முட்டல், மோதலில் இருக்கின்றனர். அ.தி.மு.க.,வை வைத்து, இருவரும் சட்டையை பிடித்து அடித்துக் கொள்ளாத குறையாக மோதிக் கொண்டிருக்க, தூரத்தில் இருந்து, இதைப் பார்த்துக் கொண்டிருக்கும், கதர் சட்டைகள், இது காங்கிரசுக்கு விடப்பட்ட சாபமோ என்று நொந்து சொல்கின்றனர்.
அதிமுக சைடு:
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் அறிவிக்கப்பட்டப் பின், அவர், தி.மு.க., பக்கம் இருந்து விலகி, அ.தி.மு.க., பக்கம் ...

துருக்கி வீரர்களை உயிருடன் எரித்த ஐ.எஸ்., பயங்கரவாதிகள்

Posted: 23 Dec 2016 01:12 PM PST

அங்காரா : கைது செய்யப்பட்ட துருக்கி ராணுவ வீரர்கள் இருவரை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்றனர்.
உச்சகட்ட போர் :
அலெப்போ நகரில் நடைபெற்ற உச்சகட்டப் போரின்போது,, ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் பிடிபட்ட, துருக்கி நாட்டு வீரர்கள் இருவரை, பயங்கரவாதிகள் உயிருடன் எரித்துக் கொல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. துருக்கியை சேர்ந்த 16 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரப்போவதாக துருக்கி கூறிய நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாதிகள் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
உயிருடன் எரிப்பு ...

இந்தியா வளிமண்டலத்தில் அதிகளவில் பரவியுள்ள அமோனியா படலம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Posted: 23 Dec 2016 01:59 PM PST

புதுடில்லி: உலகின் வளிமண்டலத்தில் டிரோபோஸ்பியருக்கு மேலாக அமோனியா வாயு படலம் பரவியிருப்பதை முதன் முதலாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
இந்த அம்மோனியா படலம் இந்தியா மற்றும் சீன நாட்டிற்கு மேல் வளிமண்டலத்தில் உலகின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் அதிக அளவு பரவி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய சீன வளிமண்டலத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 12 கி,மீ., மற்றும் 15 கி.மீ., க்கு இடைப்பட்ட உயரத்தில் இந்த வாயு படலம் பரவி உள்ளது
காரணம்
அம்மோனியா வாயு பரவி இரு்பபதற்கு காரணம் இந்த இரு நாடுகளிலும் ...

வேலூர் அருகே பெண் போலீஸ் மீது ஆசிட் வீச்சு

Posted: 23 Dec 2016 03:08 PM PST

வேலூர் : வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் மர்ம நபர்கள் இருவர் பெண் போலீஸ் மீது ஆசிட் வீசி தப்பினர்;. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

ஆசிட் வீச்சு :
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் என்.ஜி.ஓ., நகரை சேர்ந்தவர் சுரேஷ்,30; இவரது மனைவி லாவண்யா, 28; திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிகிறார். இவர் நேற்று(டிச.,23) இரவு 9.40 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த மர்ம நபர்கள் இருவர், இரண்டு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த ஆசிட்டை லாவண்யா மீது வீசிவிட்டு தப்பி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™