Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேரோடு சாய்ந்த மரம்

Posted: 23 Dec 2016 11:10 AM PST

வேரோடு சாய்ந்த மரம் மரம் போனது மனம் மரத்துப் போனது நிழல் போனது நெஞ்சம் நினைத்து வாடுது பசுமை போனது பஞ்சம் பல்லைக் காட்டுது கிளை போனது கிள்ளை கிடந்து வாடுது அடி போனது அரட்டை ஆட்டம் கண்டது உச்சி முறிந்தது   ஊஞ்சல் ஆட்டம் முடிந்தது இலை இறந்தது இயற்கை இனிமை இழந்தது பழம் பறந்தது பசி படுத்தி எடுத்தது கூடு சிதைந்தது கூட்டமாய் பறவை அலைந்தது வேர்கள் வெடித்தது வானம் பொழிய மறந்தது மரம் போனது மனம் மரத்துப் போனது அடுத்த தலைமுறை ஆட்டம் அடங்கிப் ...

தொடத் தொடத் தொல்காப்பியம்(449)

Posted: 23 Dec 2016 09:31 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

இந்தக் குணம் ஏன்?

Posted: 23 Dec 2016 09:28 AM PST


-
மதி ஒளி
கற்பூரக்கனல் - கவிதை தொகுப்பிலிருந்து

வெந்தயம் – வயிற்றுக்கு நண்பன், சர்க்கரைக்கு எதிரி

Posted: 23 Dec 2016 09:27 AM PST

வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற எரிச்சல் குறையும். சீதபேதி, வயிறு இரைச்சல், வயித்துப் பொருமல் மாதிரியான பிரச்னைகள் இருந்தாலும் சரியாகும். இதேபோல தினமும் கொஞ்சம் வெந்தயத்தை சாப்பிட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சுட்டு வந்தா… மஞ்சள், ...

மதுவிலக்கால் சாலை விபத்து 19% குறைந்துள்ளது: நிதிஷ் குமார்

Posted: 23 Dec 2016 08:00 AM PST

பாட்னா: பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுவிலக்கால், கடந்த 7 மாதங்களில் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். பதிலடி : இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள, மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. மேலும், தற்போது வழங்கியுள்ள லைசென்ஸ்களை, 2017 மார்ச்சுக்கு பின் புதுப்பிக்கக் கூடாது எனவும், அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இத்தடை உத்தரவு வரவேற்கத்தக்கது. ...

தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100% வேலை: கர்நாடக அரசு திட்டம்

Posted: 23 Dec 2016 07:46 AM PST

ஐ.டி நிறுவனங்களுக்கு பெயர்பெற்ற கர்நாடகா மாநிலத்தில் பிற மாநில மக்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்குள்ள தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100% இடஒதுக்கீடு என்ற புதிய சட்டத்தை கர்நாடக அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அதன்படி கர்நாடக தொழில் வேலை வாய்ப்பு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கியுள்ளது. இதுதொடர்பான வரைவு சட்டத்திருத்தத்தை மாநில தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது. சட்டத்துறை ஒப்புதல் அளித்ததும் இந்த புதிய சட்டம் அமலுக்கு ...

ரெண்டு வரிலே ரூபாய் நோட்

Posted: 23 Dec 2016 07:36 AM PST

ரெண்டு வரிலே ரூபாய் நோட்






நன்றி கட்செவி

ரமணியன்

மக்களால் நான்! மக்களுக்காக நான்! ஜெயலலிதாவும் நானும்!!

Posted: 23 Dec 2016 06:13 AM PST

மக்களால் நான் மக்களுக்காக நான் மக்களுக்காகவே இந்த அரசு. கடந்த 2016 டிசம்பர் 5 இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறியப்பட்ட, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், சமீபத்தில் தனது அரசியல் பிரச்சார முழக்கமாக பேசிய வார்த்தைகள்தான் மேலே உள்ள வரிகள்!. ஜெயலலிதாவின் இன்றைய அரசியல் வெற்றிக்கு ஆதாரமாக அமைந்ததும் இந்த வரிகள்தான். இன்று, அனைத்து தரப்பினரையும் ஜெயலலிதாவின் மறைவுக்காக கண்ணீர் சிந்த வைத்ததும் இந்த வரிகள்தான். இந்த வரியை வெறும் அரசியல் "பிரச்சார பஞ்ச்" என்று மட்டுமே பலரும் நினைக்கிறார்கள். ...

கூடா நட்பு - நாலடியார்

Posted: 23 Dec 2016 04:50 AM PST

நம்மை விட மிகப்பெரியவருடன் கொள்ளும்  நட்பு என்றும் ஆபத்தை விளைவிக்கும். யானையைப்போல் உள்ளவர்களுடன் உள்ள நட்பு ஆபத்து. நாயைப்போல் உள்ளவர்களின் நட்பு கொளல் வேண்டும். நன்றாக வளர்க்கும் பாகனை யானை நன்கு அறிந்திருந்தாலும் மதம் வந்தால் பாகனை கொல்லும் . ஆனால் நாயை  கொல்ல கூறிய கத்தியை எறிந்தால், அது அதை திரும்ப எடுத்து  வந்து வாலை குழைக்கும். அது போல் நம்மை விட பெரியவரிடம் கொள்ளும் நட்பு, சில காலம் நன்மையை அளித்தாலும், அவர்களுக்கு கோவம் வந்து விட்டால், நம்மை அழிக்க தயங்க மாட்டார்கள். ஆனால் ...

கலிபோர்னியாவில் நகர மேயராக இந்தியர் தேர்வு

Posted: 23 Dec 2016 03:38 AM PST

- வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தென் சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். - இரண்டாவது இந்தியர்: - சென்னை ஐ.ஐ.டி., முன்னாள் மாணவரான பிரதீப் குப்தா என்பவர், தென் சான் பிரான்சிஸ்கோ நகர மேயராக சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்று கொண்டார். இதன் மூலம் மேயராக தேர்வாகும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது. குப்தா மேயராக தேர்வாவதற்கு முன்னர், இந்த தென் சான் பிரான்சிஸ்கோ நகர கவுன்சில் உறுப்பினராக, கடந்த ...

டிரைவர் வங்கி கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட்: அதிகாரிகள் அதிர்ச்சி

Posted: 23 Dec 2016 03:35 AM PST

ஐதராபாத்: ஐதராபாத் நகரில் உபெர் நிறுவனத்தின் கார் டிரைவர் வங்கிக்கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட் செய்யப்பட்டது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. - தங்க நகை வியாபாரி: - இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் நவம்பர் 2வது வாரத்தில் கார் டிரைவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.7 கோடி டிபாசிட் செய்துள்ளார். - இவர் ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத்தில் கணக்கு வைத்துள்ளார். நவம்பர் 8 முன் வரை அவரது வங்கிக்கணக்கு செயல்படாமல் ...

விருந்து

Posted: 23 Dec 2016 02:33 AM PST

திருமணத்திற்கு சென்று வந்த நண்பர் பலமாக ஏப்பம் விட்டார் . " என்ன சார் ! விருந்து பலமா ? இப்படி ஏப்பம் விடறீங்களே ? ' " ஆமாம்யா ! ஏகப்பட்ட ஐட்டம் வைத்துவிட்டார்கள் ! எதை சாப்பிடுவது , எதை விடுவது என்று தெரியவில்லை ! வைத்தது எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன் ! ஒரு இலை 300 ரூபாய் என்று சொன்னார்கள் ! அதை வீணாக்கலாமா ! எனக்கு சர்க்கரை வியாதி வேறு ; என்ன ஆகுமோ தெரியவில்லை ! " " கவலைப்படாதீங்க சார் ! ஒரு மாத்திரை கூடப் போட்டீங்கன்னா எல்லாம் சரியாயிடும் ! " இதுபோன்ற உரையாடல்களை நாம் அடிக்கடிக் ...

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி வங்கிக்கணக்குகள் அம்பலம்

Posted: 23 Dec 2016 02:05 AM PST

சேலம்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடந்த சோதனையில், பல போலி வங்கி கணக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனை: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதிக டிபாசிட் உள்ள வங்கியாக உள்ளது. மாவட்டம் முழுவதும், 64 கிளைகள் உள்ளன. சேலம் மாவட்ட ஜெ., பேரவை தலைவராக உள்ள இளங்கோவன், வங்கி தலைவர் பொறுப்பை வகித்து வருகிறார். செல்லாத நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து, நவ., 15 வரை, பல நூறு கோடி ரூபாய் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளை கணக்குகளில், ...

எப்படித்தான் அழைத்திடுவேன்..

Posted: 23 Dec 2016 01:55 AM PST


-
சுவிஸ்.அருளானந்தம்
உலகமெனும் திரையரங்கில் – கவிதை தொகுப்பிலிருந்து

ஃபீலிங்ஸ் உண்டாக்க போராடும் மத்திய அரசும்! ரிசர்வ் வங்கியும்!

Posted: 22 Dec 2016 11:39 PM PST

மத்திய அரசின் ரூபாய் நோட்டு மாற்றத்தின் விளைவாக பல குழப்பங்கள், பிரச்சினைகள், கலவரங்கள் என்று நாடே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட்டுள்ள மத்திய அரசு அதனை முறையாக மக்களுக்கு வழங்கும் வழிகளை கையாளாமல் அவசரகதியில் பல நடவடிக்கைகளை கையாண்டு ஏதேதோ சமாளிப்புகளுக்கு மத்தியில் தத்தக்கா பித்தக்கா என்று தட்டுத்தடுமாறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.. புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூபாய் நோட்டுக்களில் 2000 ரூபாய் நோட்டு மட்டுமே பலரிடம் புழங்குகிறது. ஆனால், இந்தியாவின் ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 22 Dec 2016 07:57 PM PST


-

-
-

துணிச்சலுக்கு ஒரு விருது!

Posted: 22 Dec 2016 05:42 PM PST

- ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் நெருக்கடியான சூழ்நிலையில் தைரியமாக துணிச்சலாகப் பணிபுரியும் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து கவுரவித்து வருகிறது அனைத்துலக பத்திரிகையாளர் பாதுகாப்புக் குழு (Committe to Protect Journalists) அந்த வகையில், இந்தியா, எகிப்து, துருக்கி மற்றும் எல்சால்வடார் ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த நான்கு பத்திரிகையாளர்களுக்கு, இந்த விருது 2016 நவம்பர் 22-இல் நியூயார்க் நகரில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. – அதில் இந்தியாவின் சார்பாக மனித உரிமை மீறல்களை எதிர்த்து செய்திகளை வெளியிடுவதன் ...

மன்னிப்பு கேட்ட டிரம்ப்பின் மகள்!

Posted: 22 Dec 2016 05:41 PM PST

- அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டிரம்பை நிழலாகத் தொடர்ந்தவர் அவரது மகள் இவான்கா. முப்பத்தைந்து வயதாகும் இவான்கா மூன்று குழந்தைகளுக்குத் தாய். உயரம் ஆறடிக்கு ஒரு அங்குலம் குறைவு. பல நிறுவனங்களை நிர்வகித்து வரும் இவான்காவை அமெரிக்காவின் நிஜமான முதல் பெண்மணி என்கின்றனர். அந்த அளவுக்கு டிரம்பிடம் செல்வாக்கு, உரிமை இவான்காவிற்கு உண்டு. இவான்கா ஒரு சூப்பர் மாடலும் கூட. அம்மா இவானாவிடமிருந்து அட்டகாசமான அழகும், அப்பா டிரம்பிடமிருந்து கணக்கிட முடியாத சொத்தும் கிடைத்த அதிர்ஷ்டமானவர் இவான்கா. இவான்கா ...

படத்துடன் செய்தி - தொடர் பதிவு

Posted: 22 Dec 2016 05:33 PM PST


-
மிஸ் கோல்கட்டா போட்டி மேற்குவங்கத்தில் நடந்தது.
இதில் வெற்றிபெற்ற அழகிகளுடன் பிரபல வங்கமொழி
நடிகை ரிதுபர்னா சென்குப்தா குரூப் போட்டோ எடுத்துக்
கொண்டார்.

.இடம்: கோல்கட்டா.

வீட்டில் மூலிகை செடி வளர்ப்பு 2 நாள் பயிற்சிக்கு ஏற்பாடு

Posted: 22 Dec 2016 05:07 PM PST

சென்னை : மூலிகை செடிகளை வீட்டில் வளர்ப்பது குறித்த இரண்டு நாள் பயிற்சிக்கு, நகர்ப்புற தோட்டக்கலை துறை வளர்ச்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது. அண்ணா நகரில் இயங்கி வரும், நகர்ப்புற தோட்டக்கலை துறை வளர்ச்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:மூலிகை செடிகள் சாகுபடி குறித்த, இரண்டு நாள் சிறப்பு பயிற்சி, வரும், 28 மற்றும் 29ம் தேதிகளில் நடக்கிறது. மாடித்தோட்டம் அமைப்பது குறித்து, 30ல், பயிற்சி நடக்கிறது. காலை, 9:30 மணி முதல், மாலை, 4:30 மணி வரை, பயிற்சி நடக்கும். வீட்டின் பின்பகுதியில் ...

சென்னையில் டிச., 29ம் தேதி 'சிலிகா' தயாரிப்பு பயிலரங்கு

Posted: 22 Dec 2016 05:04 PM PST

சென்னை: அரிசி தவிட்டு சாம்பலில் இருந்து, 'சிலிகா' தயாரித்தல் குறித்த பயிலரங்கு, சென்னையில் வரும், 29ம் தேதி நடக்க உள்ளது. பயிலரங்கில், 'சிலிகா' தயாரிக்கும் இயந்திர உற்பத்தியாளர்கள், சிலிகா வியாபாரிகள் கலந்து கொண்டு, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு, தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர். இத்தொழில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், ஆலோசனை வழங்க உள்ளனர்.ஒரு டன் சிலிகா உற்பத்தித் திறனுள்ள தொழிற்சாலை அமைக்க, 1.50 கோடி ரூபாய் முதலீடு தேவை. தொழில் துவங்க விருப்பம் ...

தகுதிக்கு மீறி சிந்திக்காதீர் - கிறிஸ்துமஸ் சிந்தனை

Posted: 22 Dec 2016 05:02 PM PST

ஒரு சலவைத்தொழிலாளி நான்கைந்து கழுதைகளையும், அவை பொதி சுமந்து செல்லும் போது, ஒழுங்குபடுத்த ஒரு நாயையும் வளர்த்தார். அந்த நாய் மீது அவருக்கு பிரியம் அதிகம். நாயும் அவரை நக்கி விளையாடும். இதைப் பார்த்த கழுதைக்கு பொறாமை வந்து விட்டது. 'இந்த எஜமானுக்கு என்ன ஓரவஞ்சனை... நாம் இவ்வளவு பொதி சுமந்தும் நம்மிடம் என்றாவது கொஞ்சியிருக்கிறானா இவன்' என்று எண்ணியது. தன் அன்பை தானே சென்று வெளிப்படுத்த எண்ணி, எஜமானன் மீது காலை துாக்கிப் போட்டு இஷ்டம் போல் விளையாடியது. அவரது உடல் புண்ணாகி ...

மன்னிப்பு கேட்ட அறநிலைய துறை ஆணையர்

Posted: 22 Dec 2016 05:00 PM PST

சென்னை: கோவில்கள் பராமரிப்பு தொடர்பாக நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு தேவையில்லை எனக்கூறியதால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்திற்கு ஆளாக, அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி, இன்று நீதிபதிகள் முன் ஆஜராகி மன்னிப்பு கேட்டார். - தானாக வழக்கு: - தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் புராதன சின்னங்களை சீரமைப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. மேலும், கோவில்கள் சீரமைப்பு பணிக்கு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி, ...

கழிப்பறை கண்டறிய வந்தாச்சு கூகுள் ‛ஆப்'

Posted: 22 Dec 2016 04:58 PM PST

புதுடில்லி: டில்லி மற்றும் மத்திய பிரதேசத்தில், எங்கெங்கு பொது கழிப்பறைகள் உள்ளன என்பதை, 'கூகுள் டாய்லட் லொக்கேட்டர்' ஆப் மூலம் தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, டாய்லெட்டைக் கண்டறியும், கூகுள் டாய்லட் லொக்கேட்டர் ‛ஆப்'பை வெளியிட்டார். நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது : பிரதமரின் ‛தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ், திறந்த வெளியில் இல்லாமல், பொது கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தை ...

பொய்களை நம்பாதீர்கள்.

Posted: 22 Dec 2016 04:45 PM PST

* பொய்களை நம்பாதீர்கள் புதிய நோட்டுகள் தாராளமாக கிடைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் யாரும் க்யூவில் நிற்பதில்லை யாரும் மயங்கி சாகவில்லை. பொய்களை நம்பாதீர்கள் ஊடகங்கள் தான் ஊருக்குள் நடப்பதை தவறாகப் பொய்யுரைக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் ஊழல் கருப்பு பணம் நிச்சயமாக வெளியே வந்து விடும். யாரும் தப்பவே முடியாது? பொருளாதாரம் வெகு ஸ்திரமாக இருக்கிறது. பொய்களை நம்பாதீர்கள் மக்கள் ரொம்ப நல்லவர்கள் பணபரிமாற்றத் திட்டத்தை மக்கள் பரிபூரணமாக ஏற்றுக் கொண்டார்கள். அரசுக்கு ஆதரவாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™