Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


சண்டிகர் மாநகராட்சி தேர்தல் வெற்றி வாகை சூடிய பா.ஜ.,

Posted: 20 Dec 2016 07:45 AM PST

சண்டிகர்:செல்லதா ரூபாய் நோட்டு விவகாரத் தில், மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், யூனியன் பிரதேச மான சண்டிகரில் நடந்த மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., பெரும் வெற்றி பெற்றுள்ளது.

அசாம், ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில், சமீபத் தில் நடந்த இடைத் தேர்தல்களில், பா.ஜ., அபார வெற்றி பெற்றது. இதைதொடர்ந்து, குஜராத், மஹாராஷ்டிர மாநிலங்களில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களிலும், பா.ஜ., வெற்றி பெற்று அசத்தியது.இந்நிலையில், பஞ்சாப் - ஹரியானா மாநிலங்க ளின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமு மான சண்டிகரில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. ...

முதல்வரை படுத்திய தம்பிதுரை : டில்லியில் முட்டல் மோதல்

Posted: 20 Dec 2016 08:41 AM PST

பிரதமரை சந்திக்க டில்லி சென்ற, முதல்வர் பன்னீர்செல்வம், 'சசிகலா சொல்லியபடி செயல் படவில்லை' என்ற கோபத்தில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, பாதியில் வெளி யேறிய சம்பவம் நடந்துள்ளது.

டில்லியில் நடந்த முட்டல்,மோதல்கள் குறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:ஜெயல லிதா மறைவை தொடர்ந்து, முதல்வராக, எடப் பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பினர். ஆனால், மத்திய அரசு, இரு முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, முதல்வராக நியமிக்க அறிவுறுத்தியது. அதனால், பன்னீர் செல்வம் மீண்டும் முதல்வரானார். ...

'ஸ்மார்ட் கார்டு' இப்போதைக்கு இல்லை: ரேஷன் கார்டுகளில் உள்தாள் ஒட்ட முடிவு

Posted: 20 Dec 2016 08:51 AM PST

தமிழகத்தில், ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, 'ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான பணிகள், 320 கோடி ரூபாய் செலவில் நடந்துவருகின்றன. எனினும், ஸ்மார்ட் கார்டு வழங்க தாமதமாகும் என்பதால், ஆறு மாதங்களுக்கு, பழைய ரேஷன் கார்டில், உள்தாள் ஒட்டி பயன்படுத்த, அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, உணவு வழங்கல் துறை அதிகாரி கள் கூறியதாவது: பழைய ரேஷன் கார்டு களுக்கு பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களின், 'ஆதார்' எண்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.
ஆதார் எண் :
இதுவரை, 47 சதவீத கார்டுதாரர்களின் குடும்ப ...

சளி தொல்லைக்கு தொடருது சிகிச்சை : கருணாநிதி வீடு திரும்புவதில் தாமதம்

Posted: 20 Dec 2016 08:52 AM PST

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, சளித்தொல்லை அதிகமாகி, அதற்கான சிகிச்சை தொடர்வதால், வீடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, சென்னை, ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனை யில், ஆறாவது நாளாக சிகிச்சை பெற்று வரு கிறார். செயற்கை சுவாசத்திற்காக,
'டிராக்கி யோஸ்டமி' சிகிச்சை தரப்படுகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், மருத்துவ மனைக்குசென்று, நலம் விசாரித்து வருகின்றனர்.
நடிகர் விவேக், இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர், திண்டுக்கல் லியோனி உள்ளிட்டோர், மருத்துவ மனைக்கு சென்றனர். முன்னாள் மத்திய அமைச் சர், அழகிரி, மாநில ...

109 டி.எம்.சி., நீர் கர்நாடகா பாக்கி

Posted: 20 Dec 2016 08:56 AM PST

தமிழகத்திற்கு,கர்நாடக அரசு வழங்க வேண்டிய காவிரி நீர் பாக்கி, 109 டி.எம்.சி.,யாக அதிகரித்து உள்ளது.

தமிழகத்திற்கு, ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடகா வழங்க வேண்டும். இதில், மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி நடுவர் மன்றம் இறுதி செய்துள்ளது. ஆனால் காவிரி நீரை, கர்நாடக அரசு முறைப்படி வழங்குவது இல்லை.
2015-16ல், 50 டி.எம்.சி.,பாக்கி வைத்தது.இந்தாண்டு, வழங்க வேண்டிய நீரையும் முறையாக வழங்காத தால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப் பட்டது.
தற்போது, 12 லட்சம்ஏக்கரில் நடந்து வரும் சம்பா சாகுபடிக்கும் நீர் கிடைக்கா ...

ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானமா: மானியம் 'கட்!' : இதுவரை ஏமாற்றியவர்களுக்கு வந்து விட்டது கிடுக்கிப்பிடி

Posted: 20 Dec 2016 08:58 AM PST

ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளோருக்கு, 'காஸ்' மானியம் இனி கிடையாது.

இதற்காக, வருமானம் அதிகம் உள்ளவர்கள் பற்றிய விபரங்களை, வருமான வரித்துறை
யிடம் பெட்ரோலிய அமைச்சகம் கேட்டுள்ளது. இதன் மூலம், இதுவரை ஏமாற்றி, காஸ் மானி யம் வாங்கியவர்களுக்கு கிடுக்கிப்பிடி வந்து விட்டது.
சமையல் காஸ் சிலிண்டர் மானி யத்தை குறைக்க, மத்திய அரசு பல நடவடிக்கை களை எடுத்து வருகிறது. அதன்படி, சிலிண்டர் சப்ளை யில் முறை கேட்டை தடுக்க, வாடிக்கை யாளரின் வங்கிக் கணக்கில், மானிய தொகை நேரடியாக செலுத்தப் படுகிறது. மேலும் ஆண்டுக்கு, 12 ...

'சோலார்' படகு சேவை: கேரளா அசத்தல்

Posted: 20 Dec 2016 09:18 AM PST

திருவனந்தபுரம்: கேரளாவில், முதன் முறையாக, சோலார் எனப்படும் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும், படகுச் சேவை, ஜனவரி, 12ல் துவங்க உள்ளது.
'சோலார்' படகு :
கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். அம்மாநிலத்தில், கோட்டயம், ஆலப்புழா, கொச்சி மாவட்டங்களில் பயணிகள் மற்றும் சுற்றுலா பயன்பாட்டிற்கு படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகுகள், பெரும்பாலும் டீசல் அல்லது பெட்ரோல் மூலமே இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அம்மாநில அரசு, மாற்று எரிசக்தியை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறது. இதன் ...

ரயில் கட்டணம் உயரும் என அமைச்சர் ஜெட்லி சூசகம்!:சேவைக்கு உரிய தொகை செலுத்துவதே சரி என்கிறார்

Posted: 20 Dec 2016 09:24 AM PST

புதுடில்லி:''ரயில் பயணிகள், தாங்கள் பெறும் சேவைகளுக்கு உரிய கட்டணம் செலுத்துவதே முறையானது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். இதன் மூலம், வரும் பிப்ரவரி முதல் தேதியில், தாக்கல் செய் யப்படவுள்ள பட்ஜெட்டில், பயணி கள் ரயில் கட்டணம் உயரும் என, தெரிய வந்துள்ளது.

அடுத்தாண்டு, முதல் முறையாக, பொது பட் ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் டில்லியில் நேற்று, ரயில்வே சீர்திருத்தங்கள் தொடர்பான மாநாடு நடந்தது; இதில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பேசியதாவது:ரயில்வே ...

அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா பதவியேற்க எதிர்ப்பு வலுக்கிறது!அடுத்தடுத்து வழக்கு தொடரப்படுவதால் ஆதரவாளர்கள் கிலி:போர்க்கொடி தூக்குவோரை மிரட்டி பணிய வைக்க உறவுகள் தீவிரம்

Posted: 20 Dec 2016 09:36 AM PST

அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக சசிகலா பதவியேற்க, அக்கட்சியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

அதன் வெளிப்பாடாக, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அடுத்தடுத்து வழக்குகள் தொடரப் பட்டு வருகின்றன; இது, சசிகலா ஆதரவாளர் களிடம், கிலியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், கட்சியில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்குவோரை மிரட்டி பணிய வைக்கும் பணியில், அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.அ.தி.மு.க., விதிகளின்படி, பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர், ஐந்து ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருந் திருக்க வேண்டும். தற்போது, பொதுச்செயலர் பதவிக்கு வர ...

கைதாகிறார் சேகர் ரெட்டி:வங்கி அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ., வழக்கு

Posted: 20 Dec 2016 09:45 AM PST

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி, வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் மீது, சி.பி.ஐ., நேற்று வழக்குப்பதிவு செய்தது.

சென்னை, தி.நகரில் வசிக்கும் சேகர் ரெட்டி; அ.தி.மு.க., பிரமுகர்; அரசு குவாரிகளில் மணல் அள்ளும் உரிமம் பெற்றவர். ஆளுங்கட்சி முக்கிய புள்ளிகளின் நெருக்கம் காரணமாக, அரசு துறைகளின் முக்கிய ஒப்பந்தங்களைப் பெற்று, பணிகளை நடத்தி வந்தார். அவரது வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில், 8ம் தேதி முதல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில், 132 கோடி ரூபாய் மற்றும் 50 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறி முதல் ...

ரூ.10 நாணயம் செல்லும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Posted: 20 Dec 2016 11:17 AM PST

தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
சுற்றறிக்கை :
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 10 ரூபாய் நாணயத்தின் வடிவம், எடை, டிசைன், எந்த ஆண்டில், யார் நினைவாக அச்சடிக்கப்பட்டது போன்ற விபரங்களை அளித்து, வங்கிகள், தங்கள் பகுதி வணிக நிறுவனங்களில் விழிப்புணர்வு நோட்டீசாக ஒட்ட உத்தரவிட்டுள்ளது. மேலும், 2010ல் தான், 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது எனவும், ...

மத்திய அரசு கவனம் கொள்ள வேண்டும்: சந்திரபாபு நாயுடு

Posted: 20 Dec 2016 01:11 PM PST

விஜயவாடா : ரூபாய் நோட்டு வாபஸ் விவகாரத்தில், மக்கள் படும் கஷ்டத்தை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கவனம் தேவை:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தெலுங்கு தேச கட்சியின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.எல்.சி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வரும், தெலுங்கு தேச கட்சியின் தலைவருமாகிய சந்திரபாபு நாயுடு பேசியதாவது: செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியாகி, 40 நாட்கள் கடந்து விட்டது; பிரச்னை தீரவில்லை. வங்கிகளில், மக்கள் மணிக்கணக்கில் ...

ராகுலுடன் சித்து சந்திப்பு; காங்., கட்சியில் இணைய முடிவு?

Posted: 20 Dec 2016 01:50 PM PST

புதுடில்லி : முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான நவ்ஜோத் சிங் சித்து, காங்., துணைத் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார். இதனையடுத்து அவர் காங்., கட்சியில் இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பா.ஜ.,விலிருந்து விலகல் :
பா.ஜ., முன்னாள் எம்.பி., நவ்ஜோத் சிங் சித்து, பா.ஜ., தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி ஆவாஸ்-ஏ-பஞ்சாப் என்ற அமைப்பைத் துவக்கினார். சமீபத்தில் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் காங்., கட்சியில் இணைந்தார். இதனையடுத்து சித்துவும், காங்., கட்சியில் இணையலாம் எனத் ...

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல்: சி.பி.ஐ.,க்கு கால அவகாசம்

Posted: 20 Dec 2016 03:21 PM PST

புதுடில்லி : நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ.,க்கு ஜன.,13ம் தேதி வரை சிறப்பு நீதிமன்றம் கால அவசாகம் அளித்துள்ளது.
நிலக்கரிச் சுரங்க ஊழல் :
கடந்த 2006 முதல் 2008ம் ஆண்டு வரை ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த மது கோடா, மாநிலத்தில் நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில், காங்., மூத்த தலைவரும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என சி.பி.ஐ., குற்றம் சாட்டியது. இவ்வழக்கில், ஜிண்டால், முன்னாள் மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் தாசரி நாராயண ராவ், ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™