ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ரஷ்ய தூதர் கொலையை தில்லாக படம்பிடித்த போட்டோகிராஃபர்
- அறிமுகம் : க.ஜெயக்குமார்
- பெரியவாளின் கருணாகடாக்ஷம்......
- நட்பென்பது!
- 5,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: இந்திய வழியில் பாகிஸ்தான்!!
- சமூக நிகழ்வுகளை தவிர்ப்பதா?
- ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
- மருந்து – ஒரு பக்க கதை
- பெர்லினில் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்; 12 பேர் உடல் நசுங்கி பலி
- எது உலக அதிசயம்
- விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்
- ஸ்கெட்ச் – ஒரு பக்க கதை
- “சோ’ பெயர்க் காரணம்!
- வேலைக்காரி – ஒரு பக்க கதை
- மணிரத்னம் ஹீரோயின் நான்!
- நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
- எத்தனை புயல்கள்
- அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு
- பொம்மை சிறகுகள்!
- சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்!
- இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம்
| ரஷ்ய தூதர் கொலையை தில்லாக படம்பிடித்த போட்டோகிராஃபர் Posted: 20 Dec 2016 11:39 AM PST - துருக்கிக்கான ரஷ்ய தூதர் படுகொலை செய்யப்பட்டதை, போட்டோகிராஃபர் ஒருவர் துணிச்சலாக படம்பிடித்துள்ளார். - துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவை, துருக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த, புகைப்பட கண்காட்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவ் கலந்து கொண்டார். அதில், அவர் பேச துவங்கியபோது துருக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டத்தில் மரணமடைந்தார். ... |
| Posted: 20 Dec 2016 11:27 AM PST வணக்கம் என் பெயர் க.ஜெயக்குமார் .நான் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன் . தமிழ் கதை,கவிதை ,நகைச்சுவை பொழுதுபோக்கு என பல தரப்பட்ட அம்சங்களுடன் வெளியாகும் இந்த இணையதளம் ஒரு தகவல் களஞ்சியம். வாழ்க 'வளர்க . |
| பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Posted: 20 Dec 2016 08:56 AM PST ஒனக்கு இனிமே எந்தக் கொறையும் இருக்காது… பல வர்ஷங்களுக்கு முன்னால், உபன்யாஸ சக்ரவர்த்தி சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீக்ஷதர், ஶ்ரீமடத்தில் இருந்தபோது, நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஸம்பவம். ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஶ்ரீமடத்தில் ஸுவாஸினி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஸாக்ஷாத் பெரியவாளே அங்கே அமர்ந்திருக்க, பல ஊர்களிலிருந்து ஏகப்பட்ட ஸுமங்கலிகள் வந்திருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இவர்களிடையே ஒரு பெண்மணி மட்டும் சற்று வித்யாஸமாக இருந்தாள். ஸுமார் நாற்பது, நாற்பத்தஞ்சு வயஸிருக்கும். ... |
| Posted: 20 Dec 2016 08:51 AM PST ''ஹார்ட் அட்டாக்... தூக்கத்திலேயே உங்க அப்பாவுக்கு உயிர் போயிருச்சு கணேசா... மனசை திடப்படுத்திக்க. எனக்கு தெரியும், நீ நிலை குலைந்து போவன்னு. ஒற்றுமையான, பாசமான குடும்பத்தின் ஆணி வேரா இருந்த அற்புதமான மனுஷர் உங்கப்பா; இனி, அவர் நம்ம கூட இல்லையேங்கிறத குடும்ப டாக்டரான என்னாலேயே தாங்க முடியல. உங்க எல்லாருக்கும் இது ரொம்ப கஷ்டம் தான். என்ன செய்ய... காலம் தான் இதுக்கு மருந்து,'' என்றார், கணேசனின் குடும்ப டாக்டர். அடுத்த ஐந்து நிமிடத்தில் விஷயம் தெரு முழுவதும் பரவி, கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. 'வாத்தியார் ... |
| 5,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை: இந்திய வழியில் பாகிஸ்தான்!! Posted: 20 Dec 2016 08:15 AM PST - கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானிலும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. அந்நாட்டின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, செனட் சபையில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதில் வழக்கத்தில் உள்ள ரூ.5000 நோட்டை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது. இதற்கு ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிக்கே பெரும்பான்மை நிலவி வருகிறது. ... |
| Posted: 20 Dec 2016 06:58 AM PST எந்த நல்லது, கெட்டதுகளிலும் கலந்து கொள்ளாதவர்களை பற்றி, 'எல்லாரும் இருந்தும், ஏன் இப்படி, தங்களை, தனிமைப் படுத்திக் கொள்கின்றனர்...' என, நினைப்போம். நல்லது, கெட்டதுகளில் கலந்து கொள்ளும் நம்பிக்கையற்று, ஏன் இப்படி நடந்து கொள்கின்றனர் என்பது பற்றி சிந்தித்து பார்ப்போம்... தோற்றம், குடும்பம், தொழில் மற்றும் சமூகம் என, ஏதாவது பாதிப்பு தங்களுக்கு நேர்ந்திருந்தால், 'பார்ப்பவர் இது பற்றி கேட்பரே...' என்று தயங்குவது, முதலாவது காரணம். 'உங்க மகனுக்கு, ஏன் இன்னும் திருமணம் ஆகலை... ஏன் இப்படி மெலிஞ்சு, ... |
| ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! Posted: 20 Dec 2016 06:19 AM PST கட்டுரையாளர் கவனத்திற்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம். ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும். அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் ... |
| Posted: 20 Dec 2016 04:57 AM PST - ரவி மித வேகத்தில் இரு சக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்க, கோபி பின்னால் உட்கார்ந்திருந்தான். ராஜ்பவனைக் கடந்து கிண்டி மேம்பாலத்தை நெருங்கும் போது, ஒரு அழகிய இளம் பெண், தனது ஸ்மார்ட் போனில் கொஞ்சிப் பேசியபடி சாலையைக் கடந்து கொண்டிருந்தாள். சாலையை மறந்து அவளது கவனம் மொபைலில் இருந்ததால், வாகனங்களின் ஹாரன் சத்தம் அவளை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அந்தப் பெண்ணின் அருகே வாகனத்தின் வேகத்தைக் குறைத்த ரவி, ''போன் பேசிக்கிட்டுத்தான் ரோட்டை கிராஸ் பண்ணுவியா…'' என்று ஆரம்பித்து, அச்சில் ... |
| பெர்லினில் கூட்டத்திற்குள் புகுந்த டிரக்; 12 பேர் உடல் நசுங்கி பலி Posted: 20 Dec 2016 04:22 AM PST பெர்லின் : ஜெர்மன் தலைநகர் பெர்லினில் மக்கள் கூட்டத்தில் திடீரென டிரக் புகுந்தததில் 12 பேர் பலியாயினர்; 48 பேர் படுகாயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரக் மோதல் : ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள் வாங்கும் பகுதியில் மக்கள் குவிந்தனர். அப்போது கூட்டத்திற்குள் திடீரென டிரக்கை வேகமாக மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாயினர். 48 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ... |
| Posted: 20 Dec 2016 03:05 AM PST எது உலக அதிசயம்?? நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் ... |
| விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் Posted: 20 Dec 2016 02:59 AM PST புதுடில்லி: புதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கறுப்பு பண ஒழிப்பு : கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காக, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கடந்த நவ.,8ம் தேதி அறிவித்தது. மேலும் புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை வெளியிட்டது. இந்த திடீர் அறிவிப்பால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இது குறுகிய கால சிரமம் எனவும், 50 நாட்கள் அவகாசம் வழங்கும் படியும் பொதுமக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக் ... |
| Posted: 20 Dec 2016 02:48 AM PST ''ரவுண்ட்ஸ்ல இருக்கிற ஆறு செக்யூரிட்டிகளையும் மயக்க வைக்க வேண்டியது உன் பொறுப்பு, ரத்னம்!'' என்றான் நாகராஜ். – ''யெஸ் பாஸ்!'' – ''பத்து நிமிஷத்துல பூட்டைத் திறக்கிறது, கன்னையா உன்னோட வேலை!'' ''சரிங்க பாஸ்!'' நாகராஜிடம் லேசான பதற்றம் தெரிந்தது. இருபது வருடத் தொழில் அனுபவம்… – பிளாக் டிக்கெட், பிக் பாக்கெட், பைக் திருட்டு, வழிப்பறி, கடைகளை உடைத்துத் திருடுவது என்று படிப்படியாக முன்னேறி இப்போது சிட்டியிலேயே மிகப் பெரிய தனியார் வங்கிக் கொள்ளைக்கு ரெடி! – ஸ்கெட்ச் போட்ட கையோடு கூட்டாளிகளுக்கு ... |
| Posted: 20 Dec 2016 02:46 AM PST - சத்திய கங்கை ஆசிரியர் பகீரதன் எழுதிய "தேன்மொழியாள்' என்ற நாடகத்தில் "சோ' என்ற கதாபாத்திரத்தில் ராமசாமி நடித்தார். அப்போது முதல் அவர் பெயர் "சோ'வாக மாறியது. சோ கதை-வசனம் எழுதி இயக்கிய முதல் படம் "முகமது பின் துக்ளக்'. இப்படத்தின் டைட்டிலில் "கதை-வசனம் சோ' என்று தனியாக ஒரு கார்டு வரும். இறுதி கார்டில் டைரக்ஷன் "கற்றுக் கொள்ள முயற்சி" சோ என்று தன்னடக்கத்தோடு வித்தியாசமாக கார்டு போட்டிருக்கிறார். சோ கதை வசனம் எழுதிய படங்கள்: நீலகிரி எக்ஸ்பிரஸ், ஆயிரம் பொய், பொம்மலாட்டம், நினைவில் ... |
| Posted: 20 Dec 2016 02:46 AM PST – வீட்டுக்குள் நுழைந்த கணவன் கேசவனிடம் பரபரப்போடு பேசினாள் தங்கம். ''ஏங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம எதிர் வீட்ல இருக்குற கண்ணனுக்கு ஏகப்பட்ட கடனாம்… – பணம் கேட்டு தினமும் ஏகப்பட்ட பேர் வீட்டுக்கு வர்றாங்களாம்! அப்புறம் இன்னொரு விஷயம்ங்க… காலேஜ்ல படிச்சுக்கிட்டு இருந்த நம்ம பக்கத்து வீட்டு பங்கஜத்தோட பொண்ணு ஒரு வாரமா காணோமாம்! யார் கூடவோ ஓடிப் போயிட்டா போலிருக்கு!'' என்றாள். – ''இதெல்லாம் யார் உனக்கு சொன்னது தங்கம்?'' – ''நம்ம வீட்டு வேலைக்காரி வேலம்மா அவங்க வீட்டுலேயும் வேலை ... |
| Posted: 20 Dec 2016 12:24 AM PST - - பெங்களூருவிலிருந்து இன்னொரு க்யூட்டான பொண்ணு, ஸ்வீட் கண்ணு. மணிரத்னம் தமிழுக்கு கொண்டுவரும் நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத், 'இவன் தந்திரன்' படப்பிடிப்பில் பார்த்தோம். - சினிமா எண்ட்ரி? – ஸ்கூல் டேஸ்லயே ஸ்டேஜ் ஏறினவ நான். வக்கில் ஆகணும்னு ஆசை. கல்லூரி நாடகத்தில் என் நடிப்பைப் பார்த்து சினிமா வாய்ப்பு வந்தது. ஷூட்டிங் தொடங்கிய சில நாளிலேயே அந்தப் படம் ட்ராப். மறுபடியும் வக்கீல் படிப்பை கண்டினியூ பண்ணப் போயிட்டேன். முதல் படம் கன்னடமா? – மலையாளத்தில் கோகினூர் என்ற படத்தில் இரண்டாம் ... |
| நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு Posted: 19 Dec 2016 11:59 PM PST ![]() |
| Posted: 19 Dec 2016 11:03 PM PST வார்தாவே ! உன் கரங்களுக்குத்தான் எத்தனை வலிமை ! பச்சைப் பசேலென இருந்த சென்னை மாநகரை பாலைவனம் ஆக்கிட எப்படி மனம் வந்தது ? தென்னை மரங்களை ஒடித்துப் பல் துலக்கினாய் ! ஆலமரங்களை பிடுங்கி முதுகினை சொரிந்துகொண்டாய் ! சென்ற டிசம்பரில் சென்னைக்கு நீரிலே கண்டம் என்றால் இந்த டிசம்பரில் சென்னைக்கு வார்தா என்னும் வாயுவால் கண்டம் ! மொத்தத்தில் டிசம்பர் என்றாலே எல்லோர்க்கும் எமகண்டம் ! நோட்டுக்கள் செல்லாது என்ற மோடிப் புயலால் நாட்டு மக்கள் எல்லோரும் நடுத்தெருவுக்கு வந்தனர் ரொட்டிகளுக்காக ... |
| அமெரிக்க அதிபராக டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வு Posted: 19 Dec 2016 10:46 PM PST வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், தேர்தல் சபை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். டிரம்ப் வெற்றி : அமெரிக்காவில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட, டொனால்டு டிரம்ப், 70, வெற்றி பெற்றார்; ஜனவரியில், அவர் பதவி ஏற்க உள்ளார். அதிபர் தேர்தலில் மக்கள் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுபவர், மாநிலங்களில் உள்ள தேர்தல் சபை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற வேண்டும். அதிகாரப்பூர்வ ... |
| Posted: 19 Dec 2016 10:12 PM PST ''இந்த வயசுல அப்பாவுக்கு புத்தி இப்படி போக வேணாம்,'' உதட்டைச் சுளித்தாள், ஸ்ரீகுமாரின் மகள். ''இப்போ, என்னாச்சுன்னு இப்படி பேசுறே...'' தங்கையை அடக்கினான், மூத்தவன் மாதவன். ''இன்னும் என்னாகணும்... ஆன காலத்துக்கு, இப்போ போயி அப்பாவுக்கு ரெண்டாம் கல்யாணம் தேவையா...'' ''செய்துக்கிட்டா என்ன... அவரும் மனுஷன் தானே!'' ''சம்பந்தமெல்லாம் எடுத்து, பேரன் பேத்திகள பாத்த பிறகு எதுக்கு இந்தக் கண்றாவியெல்லாம்,'' என்றான், இளையவன் கேசவன். ''அதுக்கும், இதுக்கும் என்னடா சம்பந்தம்... நாம சின்ன வயசா இருந்தப்ப, ... |
| சமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்! Posted: 19 Dec 2016 10:04 PM PST சமரசம் என்ற வார்த்தைக்கு, சமாதானம் செய்து வைத்தல் என்கின்றன, அகராதிகள். இதை, நாம் சற்றே வித்தியாசமான கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்ப்போம். எப்படியும் வாழலாம் என்பது பலரது கொள்கை; இப்படித்தான் வாழ வேண்டும் என்று முறையாக வாழ்வோரை, சல்லடை போட்டு அரித்தெடுக்க வேண்டியுள்ளது. எப்படியும் வாழலாம் என்பதை, ஒருவர் தன் மனசாட்சி சொல்வதை, காலடியில் போட்டு மிதிக்கிற செயலாக கருதலாம். உச்ச நீதிமன்றத்திற்கு கூட கிடைக்காத, அருமையான நீதிபதி, நம் மனசாட்சி தான். அதை மதிக்காத, பொருட்படுத்தாத போக்கை பின்பற்றுவோர், ... |
| இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன்?- சிம்பு விளக்கம் Posted: 19 Dec 2016 09:53 PM PST -- சந்தானம் நடித்து வரும் 'சக்கப் போடு.. போடு ராஜா' படத்துக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டது ஏன் என்று சிம்பு தெரிவித்தார். சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்துக்கு 'சக்கப் போடு... போடு ராஜா' என தலைப்பிட்டார்கள். விடிவி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் 'சர்வர் சுந்தரம்' நாயகியான வைபவி ஷாந்தலியா இதிலும் நாயகியாக நடித்து வருகிறார். ரோபோ சங்கர், சம்பத், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் யார் என்பதில் ரகசியம் படக்குழு ரகசியம் காத்து ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
