Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

Posted: 01 Dec 2016 09:15 PM PST

புதுடில்லி: நடா புயல் வலுவிழந்து போன நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களில் தமிழகம் புதுச்சேரி, ஆந்திராவில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலம் மற்றும் நகரும் திசை :
இது தொடர்பான அறிக்கையில் வரும் டிச.4 ல் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பலம் மற்றும் நகரும் திசை ஆகியன பொருத்து மழை மற்றும் காற்று அளவு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. நேற்றைய நடா புயல் எவ்வித ...

பரிசோதனை மையங்களில் நடந்த சோதனை : அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

Posted: 02 Dec 2016 08:24 AM PST

சென்னை: 'தமிழகத்தில் உள்ள, மருத்துவப் பரிசோதனை மையங்களில், 10 ஆண்டுகளில், எத்தனை முறை சோதனை நடத்தப்பட்டு உள்ளது என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிவித்ததாக, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, டாக்டர் ராமச்சந்திரன் என்பவரை, மருத்துவ தொழில் புரிவதில் இருந்து, 'சஸ் பெண்ட்' செய்து, மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார். இம் மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.மருத்துவக் கவுன்சில் உத்தரவுகளை மீறும் டாக்டர்கள் மீது ...

பத்திரப் பதிவு கட்டணம் குறைக்க அரசுக்கு...யோசனை!:வரிவிதிப்பு முறைகளை எளிமைப்படுத்தவும் ஆய்வு

Posted: 02 Dec 2016 08:31 AM PST

புதுடில்லி:கறுப்புப் பணத்தை ஒடுக்கும் நட வடிக்கையின் அடுத்த கட்டமாக, வரியை தள்ளுபடி செய்வதற்கு,அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரத்தை நீக்குவது குறித்து ஆராயப்படுவ தாக தெரிவித்துள்ள,'நிடி ஆயோக்' துணைத் தலைவர், அரவிந்த் பனகாரியா, 'வரிகள், பத்திரப் பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும்' என்றும் யோசனை தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையில், செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பு வெளியிடப் பட்டது. இந்நிலையில், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும், நிடி ஆயோக் அமைப்பு, கறுப்புப் பணத்தை ஒடுக்குவதற்கான பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.மத்திய அரசின் ...

'ஜி.எஸ்.டி., அமலாகாவிட்டால் சிக்கல்'

Posted: 02 Dec 2016 08:39 AM PST

புதுடில்லி: ''அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத் திற்குள், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புமுறை அமலாகாவிட்டால், வரி விதிப்பு முறையில் சிக்கல் ஏற்படும்,'' என, மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி எச்சரித்துள்ளார்.

நாடு முழுவதும், ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி.,யை, அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1ம் தேதி முதல் அமல்படுத்துவதில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது.மத்திய, மாநில நிதியமைச்சர் கள் அடங்கிய, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், பல்வேறு அம்சங்களில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதால், முடிவுகள் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த வரி விதிப்பு முறை ...

ரொக்க பண புழக்கமே ஊழலுக்கு வித்து: மோடி

Posted: 02 Dec 2016 08:45 AM PST

புதுடில்லி: ''அதிக அளவில் ரொக்க பண புழக் கம், ஊழல் மற்றும் கறுப்பு பணம் அதிகரிக்க வழிவகுக்கும்,'' என, பிரதமர் மோடி கூறி உள்ளார்.

செல்லாத ரூபாய் நோட்டு பிரச்னையில், எதிர்க் கட்சிகள், பிரதமர் மோடியை கடுமையாக விமர் சித்து வருகின்றன. இந்நிலையில், அதுகுறித்து, இணையதளம் ஒன்றில், பிரதமர் மோடி எழுதிய கட்டுரை விபரம்: ஊழலால் நாட்டின் வளர்ச்சி முடங்கி போகிறது. 21ம் நுாற்றாண்டில், ஊழல் இல்லாத நாடாக,
இந்தியா திகழ வேண்டும். இனிமேல், ஊழல் ஒழிந்து, வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். நடுத்தர மற்றும் உயர் நடுத்தர பிரிவு மக்களின் கனவு நனவாக வேண்டும்; இதற்கு ...

டிஜிட்டல் மயமாகும் மருத்துவ சேவைகள்

Posted: 02 Dec 2016 08:47 AM PST

புதுடில்லி: அனைவருக்கும், தரமான மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும் வகையில், மருத்துவ சேவையை டிஜிட்டல் மயமாக்கும் பணி வேகமாக நடந்து வருவதாக, மத்திய சுகாதாரத் துறை இணைஅமைச்சர், பாகன் சிங் குலஸ்தே தெரிவித்தார்.

லோக்சபாவில் நேற்று, பாகன் சிங் குலஸ்தே, எழுத்து மூலம் அளித்த பதில்:மருத்துவசேவை யில்,தகவல் தொழில்நுட்பத்தை அதிகஅளவில் பயன்படுத்தும் முயற்சி ஏற்கனவே துவங்கியுள்ளது. இதனால், கிராமப் பகுதியில் உள்ளோருக்கும்
தரமான சிகிச்சை கிடைக்கும்.'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், மருத்துவத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் ...

வேண்டாம் 'ரேட்டிங்' அரசியல் : மோடிக்கு ராகுல் 'அட்வைஸ்'

Posted: 02 Dec 2016 08:50 AM PST

புதுடில்லி: ''பிரதமர் மோடி, செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக 'டிவி சேனல் ரேட்டிங்' அரசியல் செய்து வருகிறார்,'' என, காங்., துணைத் தலைவர் ராகுல் குற்றஞ் சாட்டியுள்ளார்.

டில்லியில் நேற்று, காங்., - எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது. உடல்நல குறைவால், கட்சித் தலைவர் சோனியா பங்கேற்கவில்லை; அவருக்கு பதில், துணைத் தலைவர் ராகுல், கூட்டத்தில் உரை யாற்றினார். அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி, செல்வாக்கை உயர்த்திக் கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார்; அவர் செல்வாக்கு உயர, மக்கள் கஷ்டப்படுகின்ற னர். 'ரேட்டிங்' வரிசையில் முந்துவதற்காக, பரபரப்பு ...

கவர்னருடன் ஸ்டாலின் திடீர் சந்திப்பு ஏன்?

Posted: 02 Dec 2016 08:52 AM PST

சென்னை: கவர்னர் வித்யாசாகர் ராவை, தி.மு.க., பொருளாளரும்,எதிர்க்கட்சி தலைவரு மான ஸ்டாலின், நேற்று மாலையில் சந்தித்து பேசினார். அப்போது, கோரிக்கை மனு ஒன்றையும் அவரிடம் வழங்கினார்.

அந்த மனுவில், சட்டசபை குழுக்கள் அமைக் கப்படாதது குறித்தும், அவற்றை அமைக்க, நட வடிக்கை எடுக்கும்படியும் கோரிக்கை விடப்பட் டிருந்தது. மனுவில் ஸ்டாலின், சட்டசபை காங்கிரஸ் தலைவர், கே.ஆர். ராமசாமி, முஸ்லிம் லீக் முகமது அபுபக்கர் உட்பட, 10 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட்டு உள்ளனர்.
கருணாநிதி உடல் நலம்:
தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, இரண்டாவது நாளாக ...

புயல் அபாயத்திலிருந்து கடலோர மாவட்டங்கள் தப்பியதால்... நிம்மதி!:வலுவிழந்த 'நடா'வால் நேற்று பல பகுதிகளில் கனமழை:அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு; நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

Posted: 02 Dec 2016 09:25 AM PST

தமிழகத்தை மிரட்டிய, 'நடா' புயல் வலுவிழந்து, நிலப்பகுதிக்குள் நுழைந்ததால், கடலோர மாவட்டங்கள் புயல் அபாயத்தில் இருந்து தப்பின. இதனால், மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வலுவிழந்த புயலால், மாநிலத்தின் பல பகுதி களில், நேற்று கனமழை கொட்டியது.அணை களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதோடு, நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.'வங்கக் கடலில் உருவான, நடா புயல், கடலுார் அருகே, பலத்த காற்றுடன் கரையை கடக்கும்' என, சென்னை வானிலை மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், அந்தப் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, காரைக்காலுக்கு ...

வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் சரியா? பொதுநல வழக்காக விசாரிக்க பரிந்துரை

Posted: 02 Dec 2016 09:35 AM PST

சென்னை:'வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் சொத்து விபரங்களை சரிபார்க்க, மாநில தேர் தல் ஆணையத்திடம் வழிமுறைகள் இல்லை' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. கவுன்சிலர்களின் சொத்து விபரங்கள் குறித்த பிரச்னையை, பொதுநல வழக்காக விசாரிக்க, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்து உள்ளது.

சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த, பொன். தங்கவேலு தாக்கல் செய்த மனு: சென்னை யில், 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளபெருக் கால் பாதிக்கப்பட்டேன்; உடைமைகளை இழந்தேன்.மாநகராட்சியிடம் இழப்பீடு கோரினேன்; பதில் இல்லை. மனுவை பரிசீ லிக்க, மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். ...

ரயில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர்களில் வருகிறது ஸ்வைப் மெஷின் வசதி

Posted: 02 Dec 2016 01:47 PM PST

புதுடில்லி: நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் ஸ்வைப் மெஷின் வர உள்ளது என ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த 500,1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய 500,2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மேலும் பழைய நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் டிபாசிட் செய்து கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்தது.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் டிபாசிட் செய்து ...

சீனக் கப்பல்களின் ஊடுருவல்: தீவிர கண்காணிப்பில் இந்தியா

Posted: 02 Dec 2016 03:11 PM PST

புதுடில்லி:சீனக் கடற்படையின் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் நடமாட்டத்தை இந்தியப் பெருங்கடல் பகுதியில் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இந்தியக் கடற்படை தெரிவித்துள்ளது.

சீன நீர்மூழ்கிக்கப்பல்கள் பதற்றம்
தேசிய கடற்படை தினத்தையொட்டி, டில்லியில் நேற்று(02-12-16) நடைபெற்ற கருத்தரங்கில் இந்தியக் கடற்படையின் தலைமைத் தளபதி சுனில் லாம்பா,
இது குறித்து பேசியதாவது:இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களை சீனக் கடற்படை நிறுத்தி வைத்து, கடற்பகுதியில் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™